என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    தினமும் இம்மந்திரத்தை 108 முறை ஜெபித்து சாய் பாபாவை வழிபட, உங்களின் மனதிலிருந்த இருந்த இனம் புரியாத பயங்கள் மற்றும் கவலைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
    ஒருவரின் மனதில் உள்ள தேவையற்ற கவலைகள் மற்றும் பயங்களை போக்கும் வல்லமை கொண்ட சாய் பாபாவின் பதம் பணிந்து அவருக்கான இந்த சாய் பாபா மந்திரம் அதை ஜெபிப்பதன் மூலம் நமது கவலைகளும் துன்பங்களும் காற்றில் கரையும்.

    மந்திரம்:

    “ஓம் சாய் குருவாயே நமஹ
    ஓம் ஷீரடி தேவாயே நமஹ
    ஓம் சர்வ தேவ ரூபாயே நமஹ”

    இம்மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்த பின்பு இறைவனை வணங்கி “ஸ்ரீ சாய் பாபாவை” மனதார நினைத்து இம்மந்திரத்தை 9 முறை கூறவேண்டும். மேலும் வியாழக்கிழமைகளில் சாய் பாபா கோவிலுக்கு சென்றோ அப்படி முடியாதவர்கள் வீட்டில் சாய்பாபா படமிருந்தால், அந்த படத்திற்கு முன்பு சிறிது முந்திரி பருப்புகளையோ அல்லது கற்கண்டுகளையோ நிவேதனமாக வைத்து இம்மந்திரத்தை 108 முறை ஜெபித்து சாய் பாபாவை வழிபட, உங்களின் மனதிலிருந்த இருந்த இனம் புரியாத பயங்கள் மற்றும் கவலைகளிலிருந்து விடுபடுவீர்கள். உங்கள் மனத்திலும் குடும்பத்திலும் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகி உங்கள் மனம் சாந்தம் அடையும்.
    அஸ்வினி நட்சத்திரத்தின் தேவதைகளான அஸ்வினி குமாரர்களுக்குரிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் 27 வரை துதிப்பது நல்லது.
    அஸ்வினி தேவதே ஸ்வேத வர்நொவ்
    தாவஸ்விநௌ து மஹ
    சுதா சம்பூர்ண கலச கராலஜெள
    அஸ்வ வாசு கநௌ

    அஸ்வினி நட்சத்திரத்தின் தேவதைகளான அஸ்வினி குமாரர்களுக்குரிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் 27 வரை துதிப்பது நல்லது. மாதத்தில் வருகின்ற அஸ்வினி நட்சத்திர தினத்தன்று அஸ்வினி தேவர்களை மானசீகமாக வழிபட்டு, இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிப்பதால் உங்கள் உடலில் இருக்கின்ற எப்படிப்பட்ட நோய்களும் நீங்கும். விபத்துக்கள், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படாமல் காக்கும். தீய எண்ணம், நடத்தை கொண்ட மனிதர்கள் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடாமல் தடுக்கும்.
    சபரிமலை ஐயப்பனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது ஐயப்பனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் விருப்பங்கள் நிறைவேறும்.
    த்யானச் லோகம்
    ஸனிக் தாரவ விஸார குந்தல பராம்
    ஸிம்ஹா ஸனாத் யாஸினம்
    ஸபூர் ஜத் பத்ர ஸுக் லுப்த குண்டல
    மஹேஸ் விஸ் வாஸப் ருயோர் யுகம்
    நீல கௌம வஸம் நவீன் ஜலத
    ஸயாமம் ப்ரபா ஸ்த்யகா
    பாயாத் பார்ஸ்வ யுகம் ஸுசரக்தா ஸகலா
    கல்பம் ஸ்மரேத் ஆர்யுகம்

    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகங்களை சொல்லி சனி பகவானை வழிபடுபவர்களுக்கு எல்லாத் துன்பங்களையும் சனிபகவான் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார்.
    நவக்கிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனி பகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை; சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்பர். எனவே சனிக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யக் கூடிய முக்கியத்தலமாகத் திகழ்வது திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம்.
     
    இங்கே கோவில் கொண்டு அருள் புரியும் சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி கிடைக்கப் பெற்று எல்லாத் துன்பங்களையும் சனிபகவான் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார்.
     
    சனி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சனி தசை அல்லது சனி அந்தர் தசையின் போது: சனியின் கடவுளான அனுமனைத் தினமும் வழிபடவேண்டும். தினசரி அனுமன் சாலிசா அல்லது அனுமான் ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
     
    சனி மூலமந்திர ஜபம்:

    "ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ", - 40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும்.
     
    சனி ஸ்தோத்திரம்:

    நீலாஞ்ஜன ஸமாபாஸம்
    ரவிபுத்ரம் யமாக்ரஜம்!
    ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
    தம் நமாமி சனைச்சரம்!!
     
    தமிழில்:

    சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
    மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
    சச்சரவின்றிச் சாகா நெறியில்
    இச்சகம் வாழ இன்னருள் தா தா!!
     
    சனி காயத்ரி மந்திரம்:


    காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
    தந்நோ மந்த: ப்ரசோதயாத்||
     
    சனி தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் பாலா காண்டத்தின், 30-வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும். அனைத்து சனி தொடர்பான பிரச்சனைக்கும் தசரத சனி ஸ்தோத்திரம் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.
    செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் வீரலட்சுமியை இந்த ஸ்லோகத்தை சொல்லி வணங்கினால் மனம் திடப்படும்.
    உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும், பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும். செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மனஉறுதியுடன் வீரலட்சுமியை வணங்கினால் மனம் திடப்படும்.

    தைரியம் தரும் வீரலட்சுமி ஸ்லோகம்
    யாதேவீ ஸர்வபூதேஷு த்ருதிரூபேண
    ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

    அனைத்து உயிரினங்களிலும் தைரிய வடிவினளாய்த் திகழும் வீரலட்சுமியே, நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
    சிவபெருமானுக்கு உகந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் தீர்க்காயுள் கிடைக்கும்.
    ஹஸ்தாப்யாம் கலசத்வயாம்ருத ரஸைராப்லாவயந்தம் சிரோ
    த்வாப்யாம் தெள தத்தம் ம்ருகாக்ஷவலயே த்வாப்யாம் வஹந்தம் பரம்
    அங்கந்யஸ்தகரத்வயாம்ருத்தரம் கைலாசகாந்தம் சிவம்
    ஸ்வச்சாம்போஜகதம் நவேந்துமகுடம் தேவம் த்ரிநேத்ரம் பஜே,

    – ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்

    பொதுப் பொருள்: இரண்டு கைகளில் அம்ருதத்தை ஏந்திய வரும், மற்ற இரு கைகளில் மான் மற்றும் ருத்ராக்ஷ மாலையை ஏந்தியவாறு மேலிரண்டு கைகள் மேலே ஆகாயத்தை நோக்கியும், கீழிரண்டு கைகளும் தொடையில் வைத்தவாறு தலையில் பிறை சந்திரனை அணிந்தவரும், வெள்ளை மேகம் போல் காட்சியளிக்கும் கைலாயத்தில் வசிப்பவருமான அந்த முக்கண்ணனை வணங்குகிறேன்.
    அனைத்து திருமண தடைகளையும் தகர்த்து, திருமணம் விரைவில் நடப்பதற்கான ஒரே மந்திரம். கணவன் மனைவி ஒற்றுமைக்கும், குழந்தை பாக்கியம் அருளவும் வல்லது.
    அனைத்து திருமண தடைகளையும் தகர்த்து, திருமணம் விரைவில் நடப்பதற்கான ஒரே மந்திரம். மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கும், அந்நியோன்யம் வளரவும், குழந்தை பாக்கியம் அருளவும் வல்லது. காயத்ரி மந்திரத்திற்கு இணையானது.

    ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி
    யோகேஸ்வரி யோக பயங்கரி
    ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய
    முக ஹ்ருதயம் மம வசம்
    ஆகர்ஷ ஆகர்ஷய நமஹ
    சொல்லும் முறை

    ஒரு வெள்ளி அல்லது திங்கட்கிழமையில் சாயங்கால வேளையில் சங்கல்பம் செய்து கொண்டு மந்திர வழிபாட்டுப் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். தினமும் அதே நேரத்தில் செய்து வர வேண்டும். 90 நாட்கள் தொடர்ந்து செய்து வர சௌபாக்கிய விருத்தி ஏற்பட்டுவாழ்வு வளம் பெறும்.
    இந்த ஸ்லோகத்தை தினந்தோறும் அல்லது எப்போது வேண்டுமானாலும் 108 முறை துதித்து வர உயர்ந்த சிந்தனைகளும், எண்ணங்களும் மனதில் தோன்றும். உங்களிடமிருக்கும் எதிர்மறை குணங்கள் நீங்கும்.
    பாரதத்தில் மீண்டும் சனாதன தர்மத்தை நிலைநாட்டிய “ஸ்ரீ ஆதிசங்கரர்” பகவான் கண்ணனின் மீது இயற்றிய “கிருஷ்ணாஷ்டகம்” என்கிற பாடல் தொகுப்பில் இடப்பெற்றிருக்கும் கண்ணனின் சுலோகம் இது. “

    ஸமஸ்த கோபநதனம் ஹ்ருதம்புஜைகமோஹனம்
    நமாமி குஞ்ஜமத்யகம் ப்ரஸன்ன பானுசோபனம்
    நிகாமகாம தாயகம் த்ருகந்தசாருஸாயகம்
    ரஸாலவேணுகாயகம் நமாமி குஞ்ஜநாயகம்

    பொதுவான பொருள்: “தாமரை போன்ற இதயத்தால் அனைவரையும் வசீகரிப்பவரும், சூரியனை போன்று பிரகாசிப்பவரும், பக்தர்களுக்கும் இன்ன பிற மக்களுக்கும் அனைத்தையும் தந்து, அருள்புரியும் கண்ணா, உன் கடைக்கண் பார்வையால் எங்கள் அனைவரையும் கடைதேற்றுவாயாக” என்பது இந்த கண்ணன் ஸ்லோகத்தின் பொதுவான பொருளாகும்.

    அனைத்து அம்சங்களையும் தன்னுள் முழுமையாக கொண்ட திருமாலின் ஒன்பதாவது அவதாரமான கண்ணனை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினந்தோறும் எப்போது வேண்டுமானாலும் 108 முறை துதிப்பது நல்லது. புதன், சனிக்கிழமைகளிலும், மாதத்தில் வரும் ஏகாதசி தினங்களிலும் காலையில் எழுந்து குளித்து முடித்தவுடன் உங்கள் பூஜையறையில் இருக்கும் கண்ணனின் படத்திற்கு சில துளசி இலைகளை சமர்ப்பித்து, இந்த ஸ்லோகத்தை 27 முறை அல்லது 108 முறை துதித்து வர உயர்ந்த சிந்தனைகளும், எண்ணங்களும் மனதில் தோன்றும். உங்களிடமிருக்கும் எதிர்மறை குணங்கள் நீங்கும். ஆக்கபூர்வமான ஆற்றல்கள் பெருகும்.

    நீங்கள் வேண்டும் வரங்களை எல்லாம் நிறைவேற்றும் இந்த சண்முகன் மந்திரம். பலன் தரும் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நினைத்தவை நிறைவேறும்.
    பவாய பர்காய பவாத்மஜாய
    பஸ்மாய மாநாத்புத விக்ரஹாய
    பக்தேஷ்ட காமப்ரதகல்பகாய
    பகாரரூபாய நமோ குஹாய

    பொருள் :

    மங்கள வடிவினனும் பாவங்களைப் போக்குகிறவனும் பரமசிவனின் மனதுக்குகந்த புத்திரனும் விபூதியைத் தரித்த பேரழகுத் திருவுரு கொண்டவனும் பக்தர்கள் கோரியவற்றை நிறைவேற்றும் கற்பக விருட்சம் போன்றவனும் ‘ப’ என்ற (சரவணபவ) அட்சரத்தின் வடிவாய்த் திகழ்பவருமான முருகப்பெருமானே, நமஸ்காரம்.
    நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய 108 போற்றி பார்க்கலாம்.
    ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி
    ஓம் திருமாமகள் கேள்வா போற்றி
    ஓம் யோக நரசிங்கா போற்றி
    ஓம் ஆழியங்கையா போற்றி
    ஓம் அங்காரக் கனியே போற்றி
    ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி
    ஓம் எக்காலத் தேந்தாய் போற்றி
    ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி
    ஓம் சங்கரப்ரியனே போற்றி
    ஓம் சார்ங்க விற்கையா போற்றி

    ஓம் உலகமுண்ட வாயா போற்றி
    ஓம் உலப்பில் கீர்த்தியம்மா போற்றி
    ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி
    ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
    ஓம் தாமரைக்கண்ணா போற்றி
    ஓம் காமனைப் பயந்தாய் போற்றி
    ஓம் ஊழி முதல்வா போற்றி
    ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி
    ஓம் இராவணாந்தகனே போற்றி
    ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி

    ஓம் பெற்ற மாளியே போற்றி
    ஓம் பேரில் மணாளா போற்றி
    ஓம் செல்வ நாரணா போற்றி
    ஓம் திருக்குறளா போற்றி
    ஓம் இளங்குமார போற்றி
    ஓம் விளங்கொளியே போற்றி
    ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
    ஓம் வந்தெனையாண்டாய் போற்றி
    ஓம் எங்கள் பெருமான் போற்றி
    ஓம் இமையோர் தலைவா போற்றி
    ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி

    ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி
    ஓம் வேதியர் வாழ்வே போற்றி
    ஓம் வேங் கடத்துறைவா போற்றி
    ஓம் நந்தா விளக்கே போற்றி
    ஓம் நால் தோளமுதே போற்றி
    ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி
    ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி
    ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி
    ஓம் வாமதேவனுக்களித்தாய் போற்றி

    ஓம் மூவா முதல்வா போற்றி
    ஓம் தேவாதி தேவா போற்றி
    ஓம் எட்டெழுத்திறைவா போற்றி
    ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி
    ஓம் வரவரமுனிவாழ்வே போற்றி
    ஓம் வடதிருவரங்கா போற்றி
    ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி
    ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி
    ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி
    ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி

    ஓம் மாலே போற்றி
    ஓம் மாயப் பெருமானே போற்றி
    ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி
    ஓம் அருள்மாரி புகழே போற்றி
    ஓம் விண் மீதிருப்பாய் போற்றி
    ஓம் மண் மீதுழல்வோய் போற்றி
    ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
    ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி
    ஓம் முந்நீர் வண்ணா போற்றி
    ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி

    ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி
    ஓம் முற்றவிம் மண்ணளந்தாய் போற்றி
    ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
    ஓம் அரவிந்த லோசன போற்றி
    ஓம் மந்திரப் பொருளே போற்றி
    ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி
    ஓம் குரும்பரம்பரை முதலே போற்றி
    ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி
    ஓம் பின்னை மணாளா போற்றி
    ஓம் என்னையாளுடையாய் போற்றி

    ஓம் நலம்தரும் சொல்லே போற்றி
    ஓம் நாரண நம்பி போற்றி
    ஓம் பிரகலல்லாதப்ரியனே போற்றி
    ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி
    ஓம் பேயார் கண்ட திருவே போற்றி
    ஓம் ஏழு மாமுனிவர்க்கருளே போற்றி
    ஓம் ஏமகூட விமானத்திறைவா போற்றி
    ஓம் ஆணையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி
    ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
    ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி

    ஓம் வில்லியறுத்த தேவா போற்றி
    ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி
    ஓம் இனியாய் போற்றி
    ஓம் இனிய பெயரினாய் போற்றி
    ஓம் புனலரங்கா போற்றி
    ஓம் அனலுருவே போற்றி
    ஓம் புண்ணியா போற்றி
    ஓம் புராணா போற்றி
    ஓம் கோவிந்தா போற்றி
    ஓம் கோளரியே போற்றி

    ஓம் சிந்தாமணி போற்றி
    ஓம் ஸ்ரீதரா போற்றி
    ஓம் மருந்தே போற்றி
    ஓம் மாமணி வண்ணா போற்றி
    ஓம் பொன் மலையாய் போற்றி
    ஓம் பொன்வடிவே போற்றி
    ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி
    ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி
    ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி
    ஓம் தயரதன் வாழ்வே போற்றி

    ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி
    ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி
    ஓம் வள்ளலே போற்றி
    ஓம் வரமருள்வாய் போற்றி
    ஓம் சுதாவல்லி நாதனே போற்றி
    ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி
    ஓம் பத்தராவியே போற்றி
    ஓம் பக்தோசிதனே போற்றி 
    பெண்கள், தினமும் அதிகாலை நேரத்திலும், மாலை நேரத்திலும் இல்லங்களில் அவசியம் விளக்கேற்ற வேண்டும். விளக்கேற்றும் போது பாட வேண்டிய பாடலை பார்க்கலாம்.
    “விளக்கே! திருவிளக்கே, வேந்தன் உடன்பிறப்பே
    சோதிமணி விளக்கே! ஸ்ரீதேவிப் பொன்மணியே!
    அந்தி விளக்கே! அலங்கார நாயகியே!
    காந்தி விளக்கே! காமாட்சி தாயாரே!
    பசும்பொன் விளக்குவைத்து பஞ்சுத் திரி போட்டு
    குளம்போல் எண்ணெய் விட்டு கோலமுடன்
    ஏற்றிவைத்தேன்!
    ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடிவிளங்க
    வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான் விளங்க”

    விளக்கின் முன்வைக்கும் தேங்காய் மற்றும் பழ வகைகளை, சுமங்கலிக்கு கொடுத்து, நாமும் சாப்பிடலாம். திருவிளக்கு பூஜையை வெள்ளி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் செய்து வழிபட்டால் அஷ்டலட்சுமியின் அருட்பார்வை முழுமையாக கிடைக்கும்.

    வீடுகளில் விளக்கு பூஜை செய்ய இயலாத சுமங்கலிப் பெண்கள், ஆண்டிற்கு ஒரு முறையாவது ஆடி மாதங்களில் கோவில்களில் நடைபெறும் விளக்கு பூஜையில் கலந்துகொண்டால் சுமங்கலி பாக்கியம் அமையும். வாழ்வில் சுகங்களும், சந்தோஷங்களும் நிறையும்.

    இத்துதியை தினமும் அல்லது கிருத்திகை தினத்தன்றும் பாராயணம் செய்து வந்தால் ரத்த சம்பந்தமான நோய்கள் விலகும். கடன்கள் நிவர்த்தியாகும். மனக்கவலைகள் ஓடிப்போகும்.
    பாகாராதி ஸுதாமுகாப்ஜமதுபம் பாலேந்து மெளலீஸ்வரம்
    லோகாநுக்ரஹ காரணம் ஸிவஸுதம் லோகேஸ தத்வப்ரதம்
    ராகாசந்த்ர ஸமானசாருவதனம் ரம்போருவல்லீஸ்வரம்
    ஹ்ரீங்கார ப்ரணவர ஸ்வரூபலஹரீம் ஸ்ரீகார்த்திகேயம் பஜே.
    ஸுப்ரமண்ய பஞ்சகம்.

    பொதுப்பொருள்:

    பாகன் என்ற அசுரனை வதைத்து உலகத்திற்கு நன்மையருளிய சுப்ரமண்யரே, நமஸ்காரம். இந்திரனின் மகளான தேவசேனையின் முகமாகிய தாமரைக்கு வண்டு போன்று விளங்குபவரே, பாலசந்திரனை தலையில் ஆபரணமாய்த் தரித்தவரே, நமஸ்காரம். உலகமனைத்தையும் பாதுகாப்பவரே, பரமசிவனின் புதல்வரே, சிருஷ்டி கர்த்தாவாகிய பிரம்மதேவனுக்கு பிரணவப்பொருளை உபதேசித்தவரே, நமஸ்காரம். பவுர்ணமி நிலவைப் போன்ற பிரகாசமான அழகிய திருமுகத்தையுடையவரே, வள்ளிமணாளரே, ஹ்ரீங்காரத்துடன் கூடிய பிரணவ வடிவாக விளங்குபவரே, கார்த்திகேயா, நமஸ்காரம்.
    ×