என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    இந்த 16 வார்த்தைகள் ஜீவாத்மாவின் 16 பகுதிகளோடு சம்பந்தப்பட்டது. இதனை தினமும் சொல்லி வருவது நற்பலன்களை அளிக்கும்.
    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே!
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண
    கிருஷ்ண ஹரே ஹரே!!

    இந்த 16 வார்த்தைகள் ஜீவாத்மாவின் 16 பகுதிகளோடு சம்பந்தப்பட்டது. 
    இத்துதியை புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று ஆரம்பித்து ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பாராயணம் செய்து வந்தால் திருமால் திருவருள் கவசம்போல் நம்மைக் காக்கும்; அனைத்து செயல்களிலும் நாம் வெற்றி காண்போம்.
    நமோ த்வதன்ய: ஸந்த்ராதா த்வதன்யம் ந ஹி தைவதம்
    த்வதன்யம் ந ஹி ஜானாமி பாலகம் புண்யரூபகம்
    யாவத் ஸாம்ஸாரி கோ பாவோ நமஸ்தே பாவனாத்மனே
    தத் ஸித்திதோ பவேத்ஸத்ய: ஸர்வதா ஸர்வதா விபே
    நாராயண ஹ்ருதயம்

    பொதுப்பொருள்:

    திருமாலே, தங்களைக் காட்டிலும் என்னைக் காப்பவர் யாரும் இல்லை. புண்ணியமே உருவானவர் நீங்கள். என் மனதில் திடசித்தமாக விளங்கும் தங்களுக்கு நமஸ்காரம். ஜனன, மரண காலங்களுக்கு இடையே நான் ஈடுபடும் அனைத்து செயல்களிலும் வெற்றியை, தாங்கள் எப்போதும், எல்லா வழிகளிலும் அருளவேண்டும். திருமாலே, நமஸ்காரம்.

    இத்துதியை புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று ஆரம்பித்து ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பாராயணம் செய்து வந்தால் திருமால் திருவருள் கவசம்போல் நம்மைக் காக்கும்; அனைத்து செயல்களிலும் நாம் வெற்றி காண்போம்.

    மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழும் கருப்பசாமிக்கு உகந்த இந்த மந்திரதை கூறி கருப்பசாமியை மனதார தரிசிக்கலாம்.
    மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவர் கருப்பசாமி. கீழ்க்கண்ட மந்திரத்தை கூறி கருப்பசாமியை மனதார தரிசிக்கலாம்.

    ஓம் க்ரூம் அஸிதாங்காய
    மஹாசாஸ்த்ருபரிவாராய நமஹ.

    கல்வி, செல்வம் போன்றவற்றுக்கு அதிபதியான விநாயக பெருமானின் ஸ்லோகங்களை தினமும் வீட்டில் இருந்தவாறே பாடிப் பலன் அடையலாம்.
    ஸ்லோகம் 1 :

    சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
    ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.

    ஸ்லோகம் 2 :

    ஓம் தத்புருஷாய வித்மஹே
    வக்ரதுண்டாய தீமஹி
    தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

    ஸ்லோகம் 3 :

    ஓம் ஏகதந்தாய வித்மஹே
    வக்ர துண்டாய தீமஹி
    தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

    ஸ்லோகம் 4 :

    ஐந்து கரத்தனை யானை முகத்தனை
    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
    நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
    புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

    ஸ்லோகம் 5 :

    மூஷிக வாகன மோதக ஹஸ்த
    சாமர கர்ண விளம்பித சூத்ர
    வாமன ரூப மஹேஸ்வர புத்ர
    விக்ன விநாயக பாத நமஸ்தே.

    ஸ்லோகம் 6 :

    கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
    கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
    கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
    கணபதி என்றிடக் கவலை தீருமே.

    ஸ்லோகம் 7  :

    வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
    நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
    துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
    பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.

    ஸ்லோகம் 8 :

    அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
    தொல்லைபோம் போகாத் துயரம்போம்
    நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில்
    மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.

    ஸ்லோகம் 9 :

    கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
    கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம்
    உமாஸுதம் சோக விநாச காரணம்
    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.

    ஸ்லோகம் 10 :

    பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
    நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம் செய்
    துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச்
    சங்கத் தமிழ்மூன்றும் தா.

    ஸ்லோகம் 11 :

    விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்!
    விநாயகனே வேட்கை தணிவிப்பான்! விநாயகனே
    விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
    தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து.

    ஸ்லோகம் 12 :

    வக்ரதுண்டாய ஹீம்
    ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
    மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
    ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

    தீய சக்திகளை அழிக்கும் சக்தி படைத்த முனீஸ்வரனின் இந்த மூல மந்திரத்தை துதிப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    ஓம் ஹம் ஜடா மகுடதராய
    உக்ர ரூபாய துஷ்ட மர்தனாய
    சத்ரு சம்ஹாரனாய ஜடா
    முனீஸ்வராய நமஹ

    இந்த துதியை தினமும் காலை 3 முறை துதித்து வெளியே செல்வது நல்லது. செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அருகிலுள்ள கிராம கோயிலுக்கு சென்று முன்பாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, இத்துதியை 27 முறை அல்லது 108 முறை துதித்தால் உங்களுக்கு எதிரிகளால் செய்யப்பட்ட செய்வினை ஏவல்களின் கடுமையான பாதிப்புகள் நீங்கும்.

    வீட்டில் அண்டியிருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் வெளியேறும். உடல் நலக்குறைவு, மனகுழப்ப நிலை நீங்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும். ஊரில் முனீஸ்வரர் கோயில் இல்லாதவர்கள் வீட்டிலேயே முனீஸ்வரை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை துதித்து வழிபடலாம்.
    கடன் பிரச்சனையால் அவதிப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் ருண ஹரண கணபதிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வரலாம்.
    நமது நாட்டில் 90 சதவீதம் பேர் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க பலரும் படும்பாடு மிகவும் வேதனையானது.

    கடனை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் எப்போது தோன்றுகிறதோ அப்போதே அந்த கடன் சிறிது சிறிதாய் அடைந்து விடும். அந்த எண்ணம் வர நாம் விநாயகரை வணங்க வேண்டும்.

    இரண்டு கரங்களால் நீ பட்ட கடனை நான்கு கரங்களுடன் ஓடி வந்து காப்பாற்ற வடிவம் கொண்டவர் ருண ஹரண கணபதி. வெண்பளிங்கு நிறம் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் இவரிடம்,

    “ஓம் கணேசாய ருணம்
    சிந்தி வரேண்யம்
    ஹூம் நம்; பட்ஸ்வாஹா”

    என்று கடன் நிவர்த்தி அடைய தினமும் ஒன்பது முறை கூறி வழிபட வேண்டும்.

    “ஓம் க்லௌம் க்ரோம்
    கணேசாய ருணம் சிந்தி
    வரேண்யம் ஹூம் நம், பட் ஸ்வாஹா”

    என எல்லா கடன்களுக்கும் ருண ஹரண கணபதியை வணங்கிட வேண்டும்.

    சனிக்கிழமைகளில் சதுர்த்தி வரும் நாளில் முதலில் கடன் கொடுக்க வேண்டிய தொகையில் இருந்து சிறிதளவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். கடன் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் முழுவதும் விரைவில் தீர்ந்து விடும்.

    மூல நட்சத்திரம் வரும் நாளில் அருகம்புல் மாலை அணிவித்து வில்வத்தால் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டால் கடனை திருப்பி கொடுத்தல் தடையின்றி நிறைவேறும்.

    அஸ்த நட்சத்திர நாளில் அரிசி மாவு கொண்டு அரச மரத்தடி விநாயகரை அபிஷேகம் செய்து கடன் கொடுக்க ஆரம்பித்தால் கடன் அடைய வாய்ப்புகள் அதிகம் உருவாகும்.
    இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு 108 முறை சொல்லி வந்தால் திடீர் விபத்துக்கள், ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும்.
    ஆவ்ம் ஐம் ப்ரீம் ஹனுமதே
    ஸ்ரீ ராமா தூதாய நமஹ்

    சிரஞ்சீவியாக இருக்கின்ற ஸ்ரீ அனுமனின் சக்தி வாய்ந்த பீஜ மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு 108 உரு ஜெபிப்பது நல்லது. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் உடல் மற்றும் மன சுத்தியுடன், வீட்டில் சிறிய அளவில் இருக்கும் ஆஞ்சநேயர் படத்திற்கு சிவப்பு நிற மலர்களை சாற்றி, இம்மந்திரத்தை 1008 முறை உரு ஜெபித்து வழிபடுவதால் நீங்கள் ஈடுபடும் எத்தகைய காரியங்களிலும் தடை, தாமதங்கள் ஏற்படாது.

    திடீர் விபத்துக்கள், ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும். சோம்பல் குணம் நீங்கும். எதிர்மறை சக்திகள், தீய எண்ணம் கொண்ட மனிதர்கள் போன்றவை உங்களையும், உங்களை சார்ந்தவர்களும் அணுகாமல் காக்கும் கவசமாக இம்மந்திரம் இருக்கும்.
    சிவனின் தொண்டரும் சித்த புருஷரான நந்தி பகவானின் இந்த மந்திரத்தை தினமும் காலை எழுந்து, குளித்து முடித்து விட்டு 108 முறை 48 தினங்கள் துதித்து வந்தால் நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் ஈடேறும்.
    ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச
    சித்த ஸ்வாமியே போற்றி

    சிவனின் தொண்டரும் சித்த புருஷரான நந்தி பகவானின் இந்த மந்திரத்தை தினமும் காலை எழுந்து, குளித்து முடித்து விட்டு 108 முறை 48 தினங்கள் துதித்து வந்தால் நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் ஈடேறும். உங்கள் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்கள், கஷ்டங்கள் அனைத்தும் தீரும். சிவபெருமானின் அருளாசிகள் முழுமையாக கிடைக்க வழிவகை செய்யும். சிறந்த வாக்குவன்மை மற்றும் மனோதிடம் உருவாகும். வாழ்வில் ஏற்படுகின்ற தடைகள், தாமதங்கள் போன்றவை நீங்கி அனைத்திலும் வெற்றி உண்டாகும். பிரதோஷ தினங்களில் இந்த மூல மந்திரத்தை துதித்து நந்தி பகவானை வழிபடுவதால் பலன் விரைவில் கிட்டும்.
    பரமேஸ்வரி அம்மனுக்குரிய மிகவும் சக்தி வாய்ந்த இந்த மூல மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் பரமேஸ்வரி தேவியை மனதில் நினைத்தவாறே 27 முறை உரு துதித்து வழிபடுவது நல்லது.
    ஓம் ஐம் க்லீம் சௌம் ஹ்ரீம்
    ஸ்ரீம் பரமேஸ்வர்யை நமஹ

    பரமேஸ்வரி அம்மனுக்குரிய மிகவும் சக்தி வாய்ந்த இந்த மூல மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் பரமேஸ்வரி தேவியை மனதில் நினைத்தவாறே 27 முறை உரு துதித்து வழிபடுவது நல்லது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் படத்திற்கு முன்பு நெய் தீபம் ஏற்றி, இம்மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை துதித்து வணங்குவதால் உங்கள் வாழ்வில் துரதிஷ்டங்கள் நீங்கி அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.

    உங்கள் வாழ்வில் அனைத்து வளங்களும் ஒவ்வொன்றாக கிடைக்க பெறுவீர்கள். தொழில், வியாபாரங்களில் சக வியாபாரிகளின் நேரடி மற்றும் மறைமுக சதிகளை தவிடுபொடியாக்கும். மேலும் அந்த தொழில், வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். வீட்டில் தெய்வ கடாட்சம் உண்டாகும்.
    கிருஷ்ண ஜெயந்தி அன்று, குழந்தை கண்ணனை வரவேற்கும் விதத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 108 முறை கூறி கண்ணனை வழிபாடு செய்ய வேண்டும்.
    கிருஷ்ண ஜெயந்தி அன்று, குழந்தை கண்ணனை வரவேற்கும் விதத்தில் மாக்கோலமிட வேண்டும். வாசல் முதல் வீட்டுக்குள் இருக்கும் பூஜையறை வரை பிஞ்சுக் கண்ணனின் பாதத்தை வரைய வேண்டும். இதனால், கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம். ஆயர்பாடியில் கண்ணனை வரவேற்க சித்திரகோலம், மலர் அலங்காரம், பூக்கோலம் போடுவார்கள்.

    அதை நமது இல்லங்களிலும் செய்யலாம். அன்று காலை லட்சுமியின் அம்சமான பசுவுக்கு உணவு அளிக்க வேண்டும். கண்ணனுக்கு மிகவும் பிரியமான பால், தயிர், வெண்ணெய், சீடை, முறுக்கு, நாவல்பழம், அவல் படைக்க வேண்டும். துவாதச மந்திரமான

    'ஓம் நமோ பகவதே வாசுதேவாய'

    என்னும் மந்திரத்தை 108 முறை ஜெபித்து, மலர்களை அவரது படத்திற்கு தூவ வேண்டும்.

    தூப தீபம் காட்ட வேண்டும். பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும்.

    சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடுவர். கிருஷ்ணன் கோவில்களில் உறியடித்தல், வழுக்குமரம் ஏறுதல் போன்ற விளையாட்டுகள் நடக்கும்.
    ஸ்ரீராகவேந்திரருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி பிரார்த்தனை செய்யும்போது நமது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். ஸ்ரீராகவேந்திரரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
    ஸ்ரீராகவேந்திரர் படத்திற்கு தீப, தூபம் காட்டி, தேங்காய் உடைத்தபின் கற்பூர ஆரத்தி எடுத்தும் கையில் துளசி இலைகளை வைத்துக்கொண்டும் எழுந்து நின்று,

    “பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய சத்ய தர்ம
    ரதாயச பஜதாம் கல்பவ்ருக்ஷாய
    நமதாம் ஸ்ரீ காம தேநுவே”

    என்று சொல்லிக்கொண்டே படத்தையும், விளக்கையும் பதினோரு தடவை வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறை வலம் வரும்போது, சுலோகத்தைச் சொல்ல வேண்டும். கையில் வைத்திருக்கும் துளசி இலையை படத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும். முழு நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தபின், தரையில் விழுந்து வணங்க வேண்டும். இவ்வாறு நாம் பிரார்த்தனை செய்யும்போது நமது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். ஸ்ரீராகவேந்திரரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
    சாகம்பரி தேவிக்கு உகந்த இந்த மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதிப்பதால் உங்கள் வீட்டில் நிலவுகின்ற வறுமை நிலையை விரைவில் போக்கும்.
    ஓம் சாகம்பர்யை வித்மஹே
    சதாக்ஷ்யை ச தீமஹி
    தன்னோ தேவி ப்ரசோதயாத்

    சாகம்பரி தேவிக்குரிய சக்தி வாய்ந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும் உடல் மற்றும் மன சுத்தியுடன் 108 முறை துதிப்பது நல்லது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டில் இருக்கும் பூஜையறையில் அம்பாளின் படம் முன்பாக பழம் அல்லது கற்கண்டுகள் போன்றவற்றை நைவேத்தியம் வைத்து, இந்த மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதிப்பதால் உங்கள் வீட்டில் நிலவுகின்ற வறுமை நிலையை விரைவில் போக்கும். உணவு, உடை, தண்ணீர் போன்றவற்றிற்கு எப்போதும் குறைவு உண்டாகாது. தீராத கடன் பிரச்சினைகள் தீரும். நீங்கள் விரும்பிய காரியங்கள் அனைத்தும் நடைபெறும்.
    ×