
“பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய சத்ய தர்ம
ரதாயச பஜதாம் கல்பவ்ருக்ஷாய
நமதாம் ஸ்ரீ காம தேநுவே”
என்று சொல்லிக்கொண்டே படத்தையும், விளக்கையும் பதினோரு தடவை வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறை வலம் வரும்போது, சுலோகத்தைச் சொல்ல வேண்டும். கையில் வைத்திருக்கும் துளசி இலையை படத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும். முழு நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தபின், தரையில் விழுந்து வணங்க வேண்டும். இவ்வாறு நாம் பிரார்த்தனை செய்யும்போது நமது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். ஸ்ரீராகவேந்திரரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.