என் மலர்
இஸ்லாம்
துபாய் நாட்டில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் குரான் மனனப் போட்டியில் வங்காளதேசத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் முதல் பரிசை தட்டிச் சென்றான்.
துபாய்:
துபாயில் நடைபெற்ற 21-ம் சர்வதேச திருக்குர்ஆன் உலகளாவியப் போட்டிகளின் விருது நிகழ்வின் நிறைவு நாளில் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அறிவு அறக்கட்டளையின் (Knowledge Foundation) தலைவரான ஷேக் அஹ்மது பின் முஹம்மது பின் ராஷித் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
திருக்குர்ஆன் மனனப் போட்டியில் தவறில்லாமல் ஓதி வெற்றி்பெற்ற முதல் பத்து போட்டியாளர்களுக்கான பரிசுகளையும் மந்திரி ஷேக் அஹ்மது வழங்கி கவுரவித்தார்.

வங்காளதேசத்தைச் சேர்ந்த முஹ்மது தாரிக்குல் இஸ்லாம்(13) முதல் பரிசான இரண்டரை லட்சம் திர்ஹம்களைப் பெற்றான். இரண்டாம் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஹுஸைஃபா சித்தீக்கிக்கும் கிடைத்தன (இவருக்குத்தான் குர்ஆன் இசைப்புப் போட்டிக்கான முதல் பரிசும் கிடைத்தது).
மூன்றாம் பரிசு காம்பியாவைச் சேர்ந்த மொதவ் ஜோப், சவூதி அரேபியாவைச் சேர்ந்த அலோபைதன் அஹ்மது அப்துல் அஜீஸ், துருக்கியைச் சேர்ந்த ராஷித் அல்லானி ஆகிய மூன்று நபர்களுக்கு வழங்கப்பட்டது.

பஹ்ரைனைச் சேர்ந்த முஹானா அஹ்மதுக்கு ஆறாவது பரிசும், லிபியாவைச் சேர்ந்த முகமது அல்ஹாதி அல்பஷீர் நஜியா மற்றும் குவைத்தைச் சேர்ந்த ஒமர் அல்ரெஃபாய் ஆகியோருக்கு ஏழாவது பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒன்பதாவது பரிசு மூரித்தானியாவைச் சேர்ந்த முஹம்மது அபெக்காவிற்கு வழங்கப்பட்டது.
ருவாண்டாவைச் சேர்ந்த ஹபிமானா மக்கீனி மற்றும் எகிப்தைச் சேர்ந்த முகமது நஜெப் கடோ ஆகிய இருவரும் பத்தாம் இடத்திற்கும் தேர்வாகினர்.

இந்நிகழ்ச்சியில், சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான உயர் பரிசு சவூதியில் உள்ள இரு புனித மசூதிகளின் காப்பாளராக விளங்கும் சவூதி அரேபியாவின் மாமன்னர் சல்மானுக்கு வழங்கப்பட்டது.
மாமன்னரின் சார்பாக சவூதி அரேபியா நாட்டின் இஸ்லாமிய விவகாரத்துறை மந்திரி ஷேக் சலே பின் அப்துல் அஜிஸ் இந்தப் பரிசினைப் பெற்றுகொண்டார்.
இந்நிகழ்ச்சியில், உரையாற்றிய சவூதி அரேபியா நாட்டின் இஸ்லாமிய விவகாரத்துறை மந்திரி ஷேக் சலே பின் அப்துல் அஜிஸ், இரு புனித மசூதிகளின் காப்பாளராக விளங்கும் சவூதி அரேபியாவின் மாமன்னர் இந்த ஆண்டுக்கான சிறந்த இஸ்லாமிய ஆளுமை மட்டுமல்ல.

கடந்த மற்றும் எதிர்வரும் அனைத்து ஆண்டுகளுக்குமான ஒட்டுமொத்த இஸ்லாமிய ஆளுமை என்று புகழாரம் சூட்டினார்.
மேலும், அவருக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையான பத்து லட்சம் திர்ஹம் பணத்தையும் உலகளாவிய குர்ஆன் ஆய்வு மையங்களுக்குத் தனது பங்களிப்பாக மாமன்னர் தந்துவிட்டதாகவும் அறிவித்தார்.
அமைப்புக் குழுவின் தலைவர் - கலாச்சார மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான துபாய் ஆட்சியாளரின் ஆலோசகர் இப்ராஹிம் முஹம்மது பூமெல்ஹா பேசுகையில், கடந்த இரண்டு தசாப்தங்களாக நடந்துவரும் இந்த உலகளாவியப் போட்டி திருக்குர்ஆனை மனனம் செய்து ஓதுபவர்களையும் அவர்களைப் பயிற்றுவிப்பவர்களையும் ஊக்கவிக்கும் வகையில் தொடங்கப்பட்டது.

குர்ஆனை மனனம் செய்யும் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்களுக்குச் சர்வதேச அளவிலான இவ்விருது உயர்ந்த அங்கீகாரத்தைப் பெற்றுத் தருகிறது. இப்போட்டியில் பங்குபெற்ற ஒவ்வொருவரும் இறைவனின் அருளைப் பெற்ற வெற்றியாளர்கள் என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் அமீரகத்தின் துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துபாயின் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ராஷீத் அல் மக்தூம் ஆகியோரின் தலைமையின் கீழ் நடைபெற்றதை சுட்டிக்காட்டி அவர்களுக்கும் அமீரகத்தின் அதிபர் ஷேக் கலிஃபா பின் ஸயீத் அல் நஹ்யானுக்கும் நன்றி தெரிவித்தார்.
இப்போட்டி சிறப்பாக நடக்க உறுதுணையாக இருந்த புரவலர்களுக்கும், நிகழ்வுகளை உடனுக்குடன் சிறந்த வகையில் செய்தியாக வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும், ஊழியர்களுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும், ஒருங்கிணைப்புக் குழுவுக்கும் தனது மனமார்ந்த நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார்.
-ஜெஸிலா பானு.

‘உண்ண அனுமதிக்கப்பட்டுள்ள மிருகங்களில்கூட வேறு வழியில்லை என்றால் அன்றி இன விருத்தி செய்கின்ற பெண் இனத்தை அறுத்து புசிக்கலாகாது’ என்பது நபிமொழி.
பிற உயிர்கள் மீதும் கருணை காட்டுமாறு கூறும் சன்மார்க்கமே இஸ்லாம். இருந்தபோதிலும் மனித இனத்தின் தேவை கருதி, படைப்பினப் பெருக்கத்தின் சமநிலை கருதி, சில உயிரினங்களை உரிய முறையில் அறுத்து உண்பதை அனுமதித்துள்ளது.
ஹஜ்ஜுப் பெருநாளன்று ஆடு, மாடு, ஒட்டகங்கள் போன்ற உயிர் பிராணிகளை அறுத்து ஏழைகளுக்கும், உறவினர் களுக்கும் உண்பதற்காக வழங்குவதை வணக்கமாகக்கூட இஸ்லாம் கருதுகிறது. “உம் இறைவனுக்கு நீர் தொழுது (குர்பானியும்) பலியும் கொடுப்பீராக” (108:2) என்று தொழுகை என்ற வணக்க வழிபாட்டுடன் இணைத்து திருக்குர்ஆனில் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.
இதைக் கருத்தில் கொண்டு இஸ்லாத்தில் ஜீவகாருண்யத்திற்கு இடம் இல்லை என்ற கருத்து முன் வைக்கப்படு கிறது. ஜீவ காருண்யம் என்பது உயிர்களிடத்தில் பரிவு கொள்ளல், இரக்கம் காட்டுதல் என்று பொருள்.
ஜீவகாருண்யம் என்பது விலங்குகளையோ, பறவை களையோ தேவையற்ற வகையில் வதைப்பதையும், துன்புறுத்தித் தொல்லை கொடுப்பதையும், அவற்றின் சக்திக்கு மீறி வேலை வாங்குவதையும், அவை பசியோடும் தாகத்தோடும் இருக்கும்போது உணவும் நீரும் கொடுத்து பாதுகாக்காமல் இருப்பதையும் குறிக்குமேயல்லாமல் வேறு பொருள் தருவதாகக் கொள்ளலாகாது.
ஜீவகாருண்யம் என்பது வேறு; புலால் உண்ணல் என்பது வேறு. இரண்டுமே பிரித்து வைத்துப் பார்க்க வேண்டியவை.
“கால்நடைகளையும் அவனே படைத்தான். அவற்றில் உங்களுக்கு கதகதப்பு(ள்ள ஆடையணிகளு)ம், இன்னும் பல பலன்களும் இருக்கின்றன. அவற்றில் இருந்து நீங்கள் புசிக்கவும் செய்கிறீர்கள். மேலும் மிக்க கஷ்டத்துடனன்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன. நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன். இன்னும் குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும் (அவனே படைத்துள்ளான்)”. (16:5) என்று திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
இந்த வசனத்தின் அடிப்படையில் மிருகங்கள், பறவைகள் மனிதப் பயன்பாட்டுக்குரியவை என்பது தெளிவாகிறது. பயணம் செய்ய, சுமைகளைச் சுமக்க, வயல்களில் உழுவதற்காக, ஆடைக்காக, போர்வைக்காக, காலணிகளுக்காக, உணவுக்காக என்று அவற்றின் பயன்பாடுகள் நீண்டு கொண்டே செல்கின்றன.
அனைத்து உயிர்களிடத்தும் இஸ்லாம் அன்பு காட்டச் சொல்கிறது. “பூமியில் உள்ளவை மீது அன்பு காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது அன்பு காட்டுவான்” என்பது நபிமொழி.
‘தாகத்தோடு இருந்த நாயொன்றுக்கு நீர் புகட்டியதற்காக முன் சென்ற சமூகத்தில் ஒருவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அருகில் இருந்த தோழர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகள் விஷயத்திலும் எங்களுக்கு பலன் கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபிகளார், ‘ஆம். உயிருள்ள பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதி பலன் கிடைக்கும்’ என்றார்கள்.
உயிரினங்களிடம் அன்பும் பரிவும் காட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தும் ஏராளமான நபிமொழிகளை நாம் பார்க்கலாம்.
அன்றைய அரேபியர்களிடம் காணப்பட்ட ஜீவகாருண்யத்திற்கு எதிரான அனைத்து செயல்களையும் நபிகளார் தடுத்தார்கள்.
‘அன்று அரேபியர்கள் அம்பெறிந்து பழகுவதற்கு உயிரினங்களையே இலக்காகக் கொண்டனர். இந்தச் செயலை நபிகளார் தடுத்ததுடன், இவ்வாறு செய்பவர்களைச் சபிக்கவும் செய்தார்கள்’ (புகாரி-5515)
விருந்தினர்கள் வந்தால் முழு ஒட்டகத்தையும் அறுக்க முடியாது; குறைந்த அளவு மாமிசம் வாங்க முடியாது என்ற நிலையில் அன்றைய அரேபியர்கள் உயிருடன் உள்ள ஒட்டகத்தில் ஒரு துண்டு இறைச்சியை வெட்டி எடுத்துச் சமைப்பார்கள். வெட்டப்பட்ட இடத்தில் மருந்து தடவி கட்டுப் போட்டு விடுவார்கள். அந்த ஒட்டகம் வலியையும் வேதனையையும் தாங்கிக் கொண்டு கண்ணீர் சிந்தும். இந்தச் செயலை நபிகளார் வன்மையாகக் கண்டித்ததோடு, இவ்வாறு பெறப்பட்ட மாமிசத்தைப் புசிப்பதும் ‘ஹராம்’ (விலக்கப்பட்டது) என்றார்கள்.
எந்த ஓர் உயிரையும்- அது மூட்டைப் பூச்சியாக இருந்தாலும் நெருப்பிலிட்டுப் பொசுக்கக் கூடாது என்றும், எந்த உயிரையும் தண்ணீரில் மூழ்கச் செய்து, மூச்சு முட்ட வைத்து சாகடிக்கக் கூடாது என்றும் இஸ்லாம் வழிமுறைகளை வகுத்துள்ளது.
‘உண்ண அனுமதிக்கப்பட்டுள்ள மிருகங்களில்கூட வேறு வழியில்லை என்றால் அன்றி இன விருத்தி செய்கின்ற பெண் இனத்தை அறுத்து புசிக்கலாகாது’ என்பது நபிமொழி. வேறு வழி இல்லாத நிலையில் மட்டுமே பெண்ணின விலங்குகளின் இறைச்சியை உண்ணலாம் என்பதை இதன் மூலம் அறியலாம்.
இன்று கூட இஸ்லாமிய திருமணங்களிலோ, விருந்து நிகழ்ச்சிகளிலோ கிடாய்களே அறுக்கப்படுகின்றன. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஊர்களில், பெண் ஆட்டை அறுக்கத் தடை உள்ளது.
ஆடு, மாடுகளை அறுப்பதில்கூட இஸ்லாம் பல கட்டுப் பாடுகளை விதித்துள்ளது. பிராணிகளை அறுக்கும்போது நன்கு கூர்மையான கத்தியைக் கொண்டு, அல்லாஹ்வின் பெயர் கூறி விரைவாக அறுத்தல் வேண்டும். கத்தியை அந்தப் பிராணி காணும்படி வைத்துக் கொள்ளவோ அல்லது அது பார்க்கும்படி கத்தியைத் தீட்டுவதோ கூடாது. வேறு மிருகங்கள் பார்த்திருக்கும் நிலையில் அதை அறுக்கக் கூடாது.
- பாத்திமா மைந்தன்.

துபாயில் நடைபெறும் 21ஆம் சர்வதேச புனித குர்ஆன் ஓதும் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த போட்டியாளர் ஹுஸைஃபா சித்தீகி முதல் இடத்தைப் பிடித்தார்.
துபாயில் நடைபெறும் 21ஆம் சர்வதேச புனித குர்ஆன் ஓதும் போட்டியுடன் இணைந்து நடத்தப்பட்ட அழகிய குரல் வளத்துடன் இனிமையாக தவறில்லாமல் ஓதும் போட்டியில் பங்கேற்ற 90 பேரில் “டாப் டென்” எனப்படும் பத்து பேரும் திருக்குர்ஆனை அழகாக ஓதியதை அமைப்புக் குழுவினர் நுட்பமாகக் கவனித்தனர்.
அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேரும் புனித திருக்குர்ஆனை தங்களது இனிய குரலால் மிகச் சிறப்பாக புனித திருக்குர்ஆனை ஓதி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தனர்.
பலத்த போட்டிகளுக்கு இடையில், அமெரிக்காவைச் சேர்ந்த போட்டியாளர் ஹுஸைஃபா சித்தீகி புனித திருக்குர்ஆன் இசைப்புப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றார். இனிய இசைபோன்ற குரலுடன் தெள்ளத் தெளிவான உச்சரிப்புடன் திருக்குர்ஆனை ஓதிய அவர் முதலிடத்தை பிடித்தார்.

அல்ஜீரியாவைச் சேர்ந்த யூசுப் ஹமாம் இரண்டாம் இடத்தையும், மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சலா-எடின் ஹரரௌயி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
இலங்கையைச் சேர்ந்த தமிழர் முஹம்மது அர்கம், வங்காள தேசத்தைச் சேர்ந்த முஹம்மது தாரிகுல் இஸ்லாம், இந்தோனேசியாவைச் சேர்ந்த ரஹ்மத் அப்துர் ரஹீம், சவுதி அரேபியாவைச் சேர்ந்த அஹ்மது அப்துல் அஜீஸ், டென்மார்க்கைச் சேர்ந்த அப்துல்லாஹி ஹுசைன், துருக்கியைச் சேர்ந்த இரன் பில்கிர், சாட் நாட்டைச் சேர்ந்த தாவூத் ஹஜர் இவர்களே பரிசு பெறாத மற்ற ஏழு பேர். இவர்களும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தனர்.

உலகளாவிய இந்தப் போட்டியின் நிறைவு நாளில் அமைப்புக் குழுவின் அனைத்து உறுப்பினர்கள், மூத்த அலுவலர்கள், மரியாதைக்குரிய பெரியவர்கள் ஆகியோர் முன்னிலையில் அவர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.
அமைப்புக் குழுவின் தலைவர் - கலாச்சார மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான துபாய் ஆட்சியாளரின் ஆலோசகர் மாண்புமிகு இப்ராஹிம் முஹம்மது பூமெல்ஹா விழாவின் புரவலர்களையும் நிகழ்வுகளை உடனுக்குடன் சிறந்த வகையில் செய்தியாக வெளியிட்ட ஊடகவியலாளர்களையும் சிறப்பித்தார்.

போட்டிகளில் நடுவர்களாக இருந்த சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஷேக் இப்ராஹிம் பின் சைத் பின் ஹமத் அல் தோஸரி, அமீரகத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லாஹ் முஹம்மது சயீத் பெம்ரான், யமன் நாட்டைச் சேர்ந்த ஷேக் முஹம்மது அஹ்மத் சுலைமான் அல் ஜிலானி, பஹ்ரைனைச் சேர்ந்த ஷேக் ஜாஃபர் யூசுப் முகமது மஹ்மூத், எகிப்த் நாட்டைச் சேர்ந்த ஷேக் தாஹெர் முகமது சயீத் அல் அஸ்ஸியுத்தி, சிரியாவைச் சேர்ந்த ஷேக் முஹம்மது ஃபாஹ்த் அப்துல் வஹாப் கரூஃப், அமீரகத்தைச் சேர்ந்த ஷேக் ஒசாமா அல் சஃபி, ஷேக் அப்துல் அஸீஸ் ஹுசைன் அல் ஹோஸ்னி மற்றும் இராக்கைச் சேர்ந்த ஷேக் அப்துல் ரஸாக் அப்தன் அல் துளைமி ஆகியோரும் நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டனர்.
போட்டிகளுக்கு நடுவர்களாக இருந்தவர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், தன்னார்வத் தொண்டர்கள், புரவலர்கள், ஊடகவியலாளர்களுக்கு அமைப்புக் குழு மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டது.
- ஜெஸிலா பானு.

புனித ரமலானில் அதிகமான பலன்களை அறுவடை செய்து, மகசூலை பெறுவதற்கு பாவமன்னிப்பை ஒரு கேடயமாக உலக முஸ்லிம்கள் பயன்படுத்தி முழுப்பயன்களையும் ஒன்றுவிடாமல் பெற்றிட வல்ல இறைவன் கிருபை செய்வானாக, ஆமீன்.
மகத்துவம் நிறைந்த புனித ரமலானுக்கு ‘பாவமன்னிப்பு தேடப்படும் மாதம்’ என்ற சிறப்பும் உண்டு.
ஒரு நோன்பாளி தான் அறிந்தோ-அறியாமலோ, தெரிந்தோ-தெரியாமலோ, வெளிப்படையாகவோ- மறைமுகமாகவோ, மனம் விரும்பியோ-விரும்பாமலோ செய்த சிறிய, பெரிய தவறுகளுக்கும், பாவங்களுக்கும் கண்டிப்பாக பாவமன்னிப்பு கோர வேண்டும்.
மேலும் முஸ்லிம்களாக இறந்து போன பெற்றோர், உற்றார், உறவினர், அண்டை அயலார், சகோதர - சகோதரியர், தற்காலத்தில் வாழும் உலக முஸ்லிம்கள், காலம் கடந்து சென்ற முஸ்லிம்கள் என அனைவருக்கும் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேட வேண்டும்.
பாவமன்னிப்புத் தேடுவதற்கு நேரமோ, காலமோ, கிழமையோ, மாதமோ குறிக்கப்படவில்லை. பாவமன்னிப்பு எப்பொழுதும் தேடலாம். எனினும் புனித ரமலான் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், பாவமன்னிப்பு வேண்டுவதற்கும் ஒரு விசேஷமான மாதமாகும். எனவே இந்த புனித ரமலானில் கூடுதலாக கவனம் செலுத்தி அதிகமாக பாவமன்னிப்பு கேட்க வேண்டும்.
“எவர் ரமலான் மாதம் (அல்லாஹ்வின் நற்கூலி கிடைக்கும் என்ற அவனின் வாக்குறுதியை) நம்பியும், நன்மையை நாடியும் நோன்பிருக்கிறாரோ, அவருக்காக அவர் முன்செய்த (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஹசரத் அபூஹுரைரா (ரலி) (புகாரி)
ரமலானின் நடுப்பகுதியாக அமைந்துள்ள ‘இரண்டாவது பத்து’ பாவமன்னிப்பு கேட்கும் பகுதியாகவும், பாவங்கள் மன்னிக்கப்படும் பகுதியாகவும் அமைந்துள்ளது. எனவே ரமலான் காலத்தில் முடிந்தளவு நோன்பாளிகள் பாவங்களிலிருந்து விடுதலை பெற்று புண்ணியங்கள் தேடி புறப்பட்டு, புது மனிதர்களாகவும், புனிதர்களாகவும் மாற்றம் பெற வேண்டும்.
‘லைலத்துல் கத்ர் இரவிலும் பாவங்கள் மன்னிக்கப்படும்’ என்பது நபிமொழியாகும்.
“யார் லைலத்துல் கத்ர் இரவில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ, அவர் (அதற்கு) முன் செய்த (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஹசரத் அபூஹுரைரா (ரலி) (நூல்: புகாரி)
ஒருமுறை ஹசரத் ஆயிஷா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! ‘லைலத்துல் கத்ர்’ எது? என்று நான் அறிந்து கொண்டால், அதிலே நான் என்ன கூற வேண்டும் என தாங்கள் நினைக்கிறீர்கள்?” என கேட்டபோது, “இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பை நேசிப்பவன், எனவே எனது பாவத்தை நீ மன்னித்து விடு!” என்பதை நீ ஓதி வா என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி)
“எனது சமுதாயத்திற்கு ரமலான் மாதத்தில் ஐந்து அருட்பாக்கியங்கள் பிரத்தியேகமான முறையில் வழங்கப்பட்டிருக் கிறது. அவற்றில் ஒன்று ரமலானின் கடைசி இரவில் நோன்பாளிகளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்படுகிறது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஹசரத் அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மது)

புனித ரமலான் மாதம் முழுவதும் பாவமன்னிப்பு தேடுவதற்குரிய நாட்களாக உள்ளது. இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
“பயபக்தியாளர்கள் விடியற்காலங்களில் (ஸஹர் நேரம்) மன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பார்கள்” (51:18),
“அவர்கள் (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பார்கள்” (3:17)
இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்கும்போது கீழ்க்கண்ட வாசகங்களை கூறி தனது பாவங்களை மன்னிக்கும்படி இறைவனிடம் கேட்கவேண்டும்:
“மன்னிப்பாளனே! என்னை நீ மன்னிப்பாயாக! கருணையாளனே! எனக்கு நீ கருணைகாட்டு!”
“நான் இறைவனிடம் பாவமன்னிப்பு வேண்டுகிறேன்”
“எனது இறைவா! என்னை நீ மன்னித்தருள் புரிவாயாக!”
“வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் நித்திய ஜீவன். அத்தகையை இறைவனிடம் நான் பாவ மன்னிப்புக் கோரி, அவன் பக்கமே நான் பாவமீட்சி பெறுகிறேன்”
“இறைவா! எனக்கு நானே அநீதம் செய்து கொண்டேன். எனவே நீ என்னை மன்னித்து விடு! உன்னைத்தவிர மன்னிப்பவன் யாரும் இல்லை.”
“எனது இறைவா! என்னை நீ மன்னித்துவிடு! என்னை நீ பாவத்திலிருந்து மீட்சிபெற செய்வாயாக! நீ கருணையாளன், மன்னிப்பாளன்”.
“இறைவா! எனக்கு நானே அதிகம் அநீதம் செய்து விட்டேன். உன்னைத் தவிர பாவங்களை மன்னிப்பாளன் யாரும் இல்லை. உன்னிடம் மன்னிப்பு கிடைக்கிறது. எனவே என்னை நீ மன்னித்துவிடு! நீ எனக்கு கருணை காட்டு, நீயே மன்னிப்பவனாகவும், கருணையாளனாகவும் இருக்கின்றாய்”.
பாவமன்னிப்பு வேண்டுவது பாவம் செய்யும் பாமரர்களின் செயல் மட்டும் அல்ல. பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட நபிமார்களும், ஆதி நபி ஹசரத் ஆதம் (அலை) அவர்களிலிருந்து, இறுதி நபி ஹசரத் முஹம்மது (ஸல்) அவர்கள் வரைக்கும் பாவமன்னிப்பு வேண்டியுள்ளார்கள்.
அனைத்து நபிமார்களும் பாவம் செய்தார்களா? என்ற கேள்வி எழுகிறது. அவர்கள் பாவமன்னிப்பு வேண்டியது அவர்கள் செய்த பாவத்திற்காக அல்ல. பாவம் செய்யும் மனிதன் இறைவனிடம் எப்படி பாவமன்னிப்பு கோர வேண்டும் என்பதை கற்றுத் தருவதற்காகவே அன்றி வேறு இல்லை.
“என் மனதிலே ஒரு விதமான நெருடல் உள்ளது. நான் ஒரு நாளைக்கு நூறு தடவை அல்லாஹ்விடம் பாவ மீட்சி தேடு கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஹசரத் அஃகர் அல்முஃஇனீ (ரலி), முஸ்லிம்)
பாவமன்னிப்புத் தேடுவதை நாம் உதாசீனப்படுத்தக் கூடாது. புனித ரமலானில் அதிகமான பலன்களை அறுவடை செய்து, மகசூலை பெறுவதற்கு பாவமன்னிப்பை ஒரு கேடயமாக உலக முஸ்லிம்கள் பயன்படுத்தி முழுப்பயன்களையும் ஒன்றுவிடாமல் பெற்றிட வல்ல இறைவன் கிருபை செய்வானாக, ஆமீன்.
மவுலவி அ. சைய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.

குறைழா இன யூதர்கள் தங்களது உடன்படிக்கையை முறித்தது மட்டுமல்லாமல் முஸ்லிம்களை அழிக்க வேண்டுமென்பதற்காகப் பல விதமான ஆயுதங்களைச் சேகரித்து வைத்திருந்தனர்.
அகழ்ப் போரின்போது ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களது கை நரம்பில் குறைஷியரில் ஒருவனான இப்னுல் அரிகா எனப்படுபவன் அம்பெய்துவிட்டான். அருகில் இருந்து, அவரது உடல் நலத்தை விசாரித்து அறிவதற்கு வசதியாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலிலேயே அவருக்காகக் கூடாரமொன்றை அமைத்தார்கள். அகழ்ப் போரை முடித்துவிட்டு வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள்.
அப்போது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது தலையிலிருந்த புழுதியைத் தட்டிய வண்ணம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மனித உருவில் வந்து, "நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டீர்களா? வானவர்களாகிய நாங்கள் ஆயுதத்தைக் கீழே வைக்கவில்லை. எதிரிகளை நோக்கிப் புறப்படுங்கள்" என்று கூறினார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இப்போது எங்கே?" என்று கேட்டார்கள். உடனே ஜிப்ரீல் (அலை) அவர்கள் பனூ குறைழா குலத்தாரின் வசிப்பிடம் நோக்கி சைகை செய்தார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ குறைழா குலத்தாரை நோக்கிச் சென்று அவர்களுடன் போரிட்டார்கள். யூதர்கள் பெருமளவு உணவுகளையும் தேவையான பொருட்களையும் சேகரித்து வைத்திருந்தனர்.
கிணறுகளும் பலமிக்கக் கோட்டைகளும் அவர்களிடம் இருந்தன. ஆனால், முஸ்லிம்களோ யூதர்களின் கோட்டைக்கு வெளியே திறந்த வெளியில் கடுங்குளிரால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். உணவுப் பற்றாக்குறையால் கடுமையான பசிக்கு ஆளாகி, துன்பத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர். போரில் தொடர்ந்து ஈடுபட்டிருந்ததால் அதிகமான களைப்புற்றிருந்தனர். ஆக, இந்தச் சூழ்நிலையில் முஸ்லிம்களின் மீது முற்றுகையை நீடித்தாலும் அதைத் தாங்கும் சக்தி யூதர்களிடம் இருந்தும் அவர்கள் அதற்குத் துணியவில்லை. அவர்களுடைய உள்ளத்தில் அல்லாஹ் பயத்தை ஏற்படுத்தினான்.
அவர்கள் நிலைகுலைந்தனர். அலி இப்னு அபூதாலிப் (ரலி), ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி) இருவரும் முஸ்லிம்களுக்கு முன் நின்று வீரமூட்டினர். முஸ்லிம்களின் உணர்வுகளையும் வீரத்தையும் ஆவேசத்தையும் யூதர்கள் புரிந்துகொண்டனர். ஆகையால் நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பை பனூ குறைழா குலத்தார் ஏற்றுக் கொள்வதற்குத் தீவிரம் காட்டினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ குறைழா தொடர்பான முடிவை பனூ குறைழா குலத்தாரின் நட்புக் குலத் தலைவரான ஸஅத் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அப்போது ஸஅத் (ரலி) “எனது தீர்ப்பு யூதர்கள் மீது செல்லுபடி ஆகுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மற்றவர்கள் “ஆம்! செல்லுபடியாகும்” என்றனர். பிறகு ஸஅத் (ரலி) “முஸ்லிம்களின் மீது எனது தீர்ப்பு செல்லுபடியாகுமா?” என்று கேட்டார்கள்.
மக்கள் “ஆம்!” என்றனர். அப்போது நபியவர்களைச் சுட்டிக்காட்டி “எனது தீர்ப்பு செல்லுபடியாகுமா?” என்று கேட்டார்கள். அப்போது நபியவர்கள் “ஆம்! நானும் உங்களுடைய தீர்ப்பை ஏற்றுக் கொள்வேன்” என்றார்கள். இதற்குப் பின் ஸஅத் (ரலி) அந்த யூதர்கள் விஷயத்தில் தீர்ப்புக் கூறினார்கள், "பனூ குறைழாக்களில் போர் வீரர்கள் கொல்லப்பட வேண்டும்; குழந்தைகளும் பெண்களும் போர்க் கைதிகளாக ஆக்கப்பட வேண்டும்; அவர்களின் சொத்துக்கள் பங்கிடப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன்" என்றார்கள்.
இத்தீர்ப்பைக் கேட்ட நபியவர்கள், ஸஅத் (ரலி) கூறிய தீர்ப்பு முற்றிலும் நேர்மையானது என்றார்கள். காரணம் குறைழா இன யூதர்கள் தங்களது உடன்படிக்கையை முறித்தது மட்டுமல்லாமல் முஸ்லிம்களை அழிக்க வேண்டுமென்பதற்காகப் பல விதமான ஆயுதங்களைச் சேகரித்து வைத்திருந்தனர், அவற்றையெல்லாம் முஸ்லிம்கள் அவர்களுடைய இல்லங்களை வெற்றிக் கொண்ட பின் கைப்பற்றினர்.
ஸஹீஹ் முஸ்லிம் 32:3628, அர்ரஹீக் அல்மக்தூம்

அழியாத செல்வமான கல்வி ஞானத்தை நமக்கும், நம் குடும்பத்தாருக்கும், உலக மக்களுக்கும் அதிகப்படுத்தும்படி எல்லாம் வல்ல இறைவனை நாம் பிரார்த்தனை செய்வோம், ஆமீன்.
இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆன் அரபி மொழியில் அருளப்பட்டுள்ளது. இறைவனின் இந்த வேதம் ’வஹி‘ மூலம் நபிகள் (ஸல்) நாயகத்திற்கு அருளப்பட்டது. திருக்குர்ஆன் மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்ட வந்த வேதம். இதை அதன் மூல மொழியான அரபி மொழியில் கற்றுக்கொள்வதே சிறந்தது. அதனால் தான் மார்க்க கல்வியை இஸ்லாம் முக்கியமாக வலியுறுத்துகறது.
இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
’அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமா(கிய அல்லாஹ்வா)ல் இது இறக்கப்பட்டுள்ளது‘. (41:2)
’இது (குர்ஆன் என்னும்) வேதமாகும். அறிவுள்ள மக்களுக்காக இதன் வசனங்கள் அரபி மொழியில் விவரிக்கப்பட்டுள்ளன‘. (41:3)
’(நல்லோருக்கு இது) நற்செய்தி கூறுகின்றதாகவும், (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றதாகவும் இருக்கின்றது‘. (41:4)
இத்தகைய சிறப்பு மிக்க திருக்குர்ஆன் இந்த புனித ரமலான் மாதத்தில் தான் இறக்கியருப்பட்டது. இதுகுறித்து திருக்குர் ஆனில் (2:185), ’ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர் ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது‘ என்று குறிப்பிடுகிறது.
’எவருக்கு அல்லாஹ் நன்மையை அளிக்க நாடுகின்றானோ அவருக்கு தன் மார்க்கத்தைப்பற்றிய ஞானத்தை வழங்குகிறான்‘ என்பது நபிமொழியாகும். அறிவிப்பாளர்: முஆவியா (ரலி), புகாரி (முஸ்லிம்).

கல்வியின் சிறப்பு குறித்து திருக்குர் ஆனில் (20:114) இறைவன் கூறும்போது, ’இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக‘ என்று நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளையிடுகின்றான்.
அதுபோல, ’கல்வியை தேடிப்பயணம் செய்பவர் இறைவனின் பாதையில் இருக்கிறார்‘ என்பதும் நபி மொழியாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ’நான் கல்வியின் பட்டணம், ஹசரத் அலி (ரலி) அதன் தலைவாசல்‘. இதையடுத்து நபித்தோழர்கள் சிலர் தனித்தனியாக அலி (ரலி) அவர்களை சந்தித்து, ’கல்வி சிறந்ததா? செல்வம் சிறந்ததா?‘ என்று கேட்டனர். இதற்கு அலி (ரலி) அவர்கள் தனித்தனியாக இவ்வாறு பதில் கூறினார்கள்.
’கல்வி உன்னை காப்பாற்றும், செல்வத்தை நீ காப்பாற்ற வேண்டும்‘. ’கல்வி செலவழிக்க செலவழிக்க வளரும். செல்வம் செலவழிக்க செலவழிக்க குறையும்‘. ’கல்வி தயாள குணத்தை தரும். செல்வம் கருமித்தனத்தை ஏற்படுத்தும்‘. ’கல்வியை திருடர்கள் திருடிக்கொண்டு போக முடியாது, செல்வத்தை திருடர்கள் கொள்ளையடிக்க முடியும்‘.
மேலும் அவர்கள் கூறும்போது, இறுதி தீர்ப்பு நாள் வரை கேட்டாலும், நான் இந்தப்பதிலைத்தான் கூறுவேன்‘ என்றார்கள். இதில் இருந்தே கல்வியின் சிறப்பை நாம் அறிந்துகொள்ள முடியும்.
எனவே அழியாத செல்வமான கல்வியை நாம் பெறுவதன் மூலம் இறையச்சத்தையும், இறைஞானத்தையும் அதிகமாக பெறமுடியும். அந்த கல்வி ஞானத்தை நமக்கும், நம் குடும்பத்தாருக்கும், உலக மக்களுக்கும் அதிகப்படுத்தும்படி எல்லாம் வல்ல இறைவனை நாம் பிரார்த்தனை செய்வோம், ஆமீன்.
மவுலவி எம். எம். அப்துல் கனி, திருநெல்வேலி சந்திப்பு.

முஹம்மது நபியவர்கள் எழுந்து “அல்லாஹ் மிகப் பெரியவன். முஸ்லிம்களே! அல்லாஹ்வுடைய வெற்றியும் உதவியும் உங்களுக்குண்டென நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார்கள்.
மதினாவைத் தாக்க வந்த பெரிய படையைப் பற்றி அறிந்து, எதிரிகள் வந்து சேரும் முன் பாரசீக நாட்டில் அகழ் தோண்டிக் கொள்வதுபோல் அரேபியர்களுக்குத் தெரியாத புதிய திட்டத்தைச் செயல்படுத்தினர். நபிகளாரின் கட்டளைக்கிணங்க விரைவாக மதீனாவாசிகள் அகழ் தோண்டினர். எதிரிகளை அகழின் பக்கம் நெருங்கவிடாமல் முஸ்லிம்கள் அம்பு மழை பொழிந்து எதிரிகளைத் தாக்கினர். அகழ் போர் பல நாட்களாக நீடித்தது ஆனால் இரு படைகளுக்கும் இடையில் அகழ் இருந்ததால் நேரடியான பலத்த சண்டை எதுவும் இருக்கவில்லை.
முஸ்லிம் வீரர்களைக் குறுக்கு வழியில் எதிர்க்க அவர்களின் குடும்பத்தைத் தாக்க யூதர் ஒருவரை அனுப்பி வைத்தனர். அவனை நபிகளாரின் தந்தையின் சகோதரி ஸஃபிய்யா (ரலி) எதிர்த்து போராடி கொன்றார். திரும்பி வராத யூதரின் நிலையைக் கண்ட இணைவைப்பாளர்கள், வீரர்களின் குடும்பத்தினரும் பாதுகாப்பு நிலையிலுள்ளதை அறிந்து மற்றொரு முறை அதுபோலத் துணிய அஞ்சினர். முஸ்லிம்களுக்கு எவ்விதத் தடையும் எதிர்ப்பும் தங்கள் தரப்பிலிருந்து இருக்காது என்று முன்னர் யூதர்கள் ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால் மறைமுகமாகப் பல தீங்குகள் செய்துவந்தனர். போரில் ஈடுபட்டுள்ள இணை வைப்பாளர்களுக்கு உணவுகள் அனுப்பி உற்சாகப்படுத்தினர். மறைமுகமாக யூதர்கள் வஞ்சகம் செய்வதை முஸ்லிம்கள் அறிந்து கொண்டனர்.
அது முஸ்லிம்களுக்குப் பெரும் இக்கட்டை தந்தது. யூதர்கள் பின்புறத்திலிருந்து தாக்குதல் நடத்தினால் அதைத் தடுக்க முடியாது, ஏனெனில் எதிர்ப்புறத்தில் மிகப் பெரிய படை. அதை விட்டு எங்கும் செல்ல முடியாத நிலை. துரோகம் இழைத்த யூதர்களுக்கு அருகில்தான் முஸ்லிம் வீரர்களின் பெண்களும் குழந்தைகளும் எவ்வித பாதுகாப்புமின்றி இருந்தனர். இவர்களது நிலையை அல்லாஹ் குர்ஆனில் கூறினான்:
“உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் படையெடுத்து வந்த போது, உங்களுடைய இருதயங்கள் தொண்டைக் குழி முடிச்சுகளை அடைந்து, நீங்கள் திணறி அல்லாஹ்வைப் பற்றிப் பலவாறான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்த சமயம் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருள்கொடையை நினைவு கூறுங்கள்.
அவ்விடத்தில் முஸ்லிம்கள் பெருஞ்சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, இன்னும் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டார்கள். மேலும் அச்சமயம் நயவஞ்சகர்கள், எவர்களின் இருதயங்களில் நோயிருந்ததோ அவர்களும், “அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நமக்கு ஏமாற்றத்தைத் தவிர வேறு எதையும் வாக்களிக்கவில்லை” என்று கூறிய சமயத்தையும் நினைவு கூறுங்கள்.

மேலும், அவர்களில் ஒரு கூட்டத்தார் மதீனாவாசிகளை நோக்கி “யஸ்ரிப் வாசிகளே! பகைவர்களை எதிர்த்து உங்களால் உறுதியாக நிற்க முடியாது, ஆதலால் நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்” என்று கூறியபோது, அவர்களில் மற்றும் ஒரு பிரிவினர்: “நிச்சயமாக எங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றன” என்று - அவை பாதுகாப்பற்றதாக இல்லாத நிலையிலும் - கூறி, போர்க்களத்திலிருந்து சென்றுவிட நபியிடம் அனுமதி கோரினார்கள் - இவர்கள் போர்க்களத்திலிருந்து தப்பி ஓடுவதைத் தவிர வேறெதையும் நாடவில்லை.”
முஹம்மது நபியவர்கள் எழுந்து “அல்லாஹ் மிகப் பெரியவன். முஸ்லிம்களே! அல்லாஹ்வுடைய வெற்றியும் உதவியும் உங்களுக்குண்டென நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார்கள். நிலைமையைச் சமாளிப்பதற்கு முதல் கட்டமாக மதீனாவிலுள்ள பெண்களும் குழந்தைகளும் தாக்கப்படாமல் இருப்பதற்காக அங்கு பாதுகாப்புப் பணிக்கு சில வீரர்களை அனுப்பினார்கள். முஸ்லிம்கள் அல்லாஹ்விடம், “அல்லாஹ்வே! எங்களுடைய பயங்களைப் போக்கி அபயம் அளி” என்று வேண்டினர். நபி (ஸல்) அவர்களும், “வேதத்தை இறக்கியவனே! விரைவாகக் கணக்கு தீர்ப்பவனே! இப்படையினரைத் தோற்கடிப்பாயாக! இவர்களை ஆட்டம் காணச் செய்வாயாக!” என அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.
முஸ்லிம்களின் இந்த இறைநம்பிக்கையையும், உறுதியையும், நிலை குலையாமையையும், துணிவையும், பொறுமையையும், தியாகத்தையும், முஸ்லிம்களின் இறைஞ்சுதலையும், அல்லாஹ் தனது தூதரின் வேண்டுதலையும் ஏற்றுக் கொண்டான். அல்லாஹ் எதிரிகளை விரட்ட பலத்த காற்றை அனுப்பினான். அக்காற்று எதிரிகளின் கூடாரங்களைக் சுழற்றி வீசியது. அவர்களின் பாத்திரங்களைத் தலைகீழாகப் புரட்டியது. கூடாரத்தின் கயிறுகளை அறுத்தது. எதிரிகள் நிலை தடுமாறினர். அல்லாஹ் வானவர்களின் படையை இறக்கினான். வானவர்கள் எதிரிகளின் உள்ளங்களில் பயத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தி நிலை குலைய வைத்தனர்.
அல்லாஹ்வின் உதவியால் எதிரிகள் மறுநாள் காலை விடிவதற்குள் தங்களின் இடங்களைக் காலி செய்து கொண்டு ஓடி விட்டனர். இப்போரின் மூலம் இணைவைப்பாளர்கள் விரும்பிய எந்த நோக்கத்தையும் அடைய முடியவில்லை. அல்லாஹ் நபியவர்களின் வாக்கை உண்மை படுத்தினான். இஸ்லாமியப் படைக்கு உதவி செய்து கண்ணியத்தையும் வெற்றியையும் வழங்கினான். நபியவர்கள் தங்களது படையுடன் மதீனா திரும்பினார்கள்.
ஆதாரம்: திருக்குர்ஆன் 33:10-13, ஸஹீஹ் புகாரி 3:56:2933, அர்ரஹீக் அல்மக்தூம்

“மக்கள் ரமலான் மாதத்தின் சிறப்புகளை முழுமையாக அறிவார்களேயானால், வாழ்நாள் முழுவதும் ரமலானாகவே இருக்கக் கூடாதா என்று ஏங்குவார்கள்” என்பது நபிமொழியாகும்.
ஹிஜ்ரி மாதங்களில் ஒன்பதாவது மாதமான ரமலான் நன்மைகளைத் தன்னுள் பொதிந்து வைத்துள்ளது. மனிதர்களை நல்வழிப்படுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட தித்திக்கும் திருமறை குர்ஆன் விண்ணில் இருந்து இறங்கிய மாதம். “ரமலான் மாதம் எத்தகையது என்றால் அந்த மாதத்தில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், நேர்வழியில் தெளிவான அறிவுரைகள் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக் கூடியதுமான குர்ஆன் அருளப்பட்டது” (2:185) என்று திருமறை தெரிவிக்கிறது.
ரமலான் மாதம் வந்து விட்டால் நபிகளார் அதிகளவு வழிபாடுகளில் மிகுந்த அளவு ஈடுபடுவார்கள். முந்தைய மாதமான ஷஅபான் மாதத்திலேயே அதற்குத் தயாராகி விடுவார்கள்.
ஷஅபான் மாதத்தின் இறுதியில் நபிகளார் மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தும்போது, “மக்களே! மகத்துவம் நிறைந்த ரமலான் மாதம் நெருங்கி விட்டது. இந்த மாதத்தின் ஓர் இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. இந்த மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் நமக்குக் கடமை ஆக்கியுள்ளான். இது பொறுமையின் மாதமாகும். மேலும் இந்த மாதம் சமுதாயத்தில் உள்ள ஏழைகள், தேவையுள்ளோர் மீது அனுதாபமும் பரிவும் காட்ட வேண்டிய மாதமாகும்” என்று கூறினார்கள்.
ஐம்பெரும் கடமைகளில் நோன்பைத் தவிர்த்து மற்ற இறைவழிபாடுகள் எல்லாம் ஏதேனும் ஒருவிதத்தில் பகிரங்கமாக அதன் செயல்களைக் கொண்டு அறியப்படும். குனிவது, நிமிர்வது, அமர்வது, சிரம் பணிவது போன்ற உடல் அசைவுகளை வைத்து தொழுகையை அறிந்து கொள்ளலாம். ஒருவர் கொடுக்கிறார்; இன்னொருவர் பெறுகிறார். இதன் மூலம் ‘ஜகாத்’ அறியப்படும். முன்னேற்பாடு, நீண்ட பயணம் இவைகளைக் கொண்டு ‘ஹஜ்’ அறியப்படும். இந்த இறை வணக்கங்கள் மற்றவர்களின் பார்வைக்கு மறையாதவை. நாம் நிறைவேற்றுகிற அந்த நேரம் மற்றவர் களுக்குத் தெரிந்து விடுகிறது. நாம் நிறைவேற்றவில்லை என்றாலும் மற்றவர்களால் அறியப்படுகிறது.
ஆனால் நோன்பு இவற்றுக்கெல்லாம் நேர் எதிரான மாறுபட்ட இறை வணக்கம் ஆகும். ஒருவர் நோன்பு வைத்திருக்கிறாரா இல்லையா என்பது நோன்பாளியையும், இறைவனையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஒருவர் எல்லோர் முன்னிலையிலும் ‘சஹர்’ சாப்பிட்டு நோன்பு வைக்கிறார். நோன்பு திறக்கும் வரை வெளியில் தெரியும்படி, உணவருந்தாமலும், பருகாமலும் இருக்கலாம். ஆனால் ஒளிந்து மறைந்து தண்ணீர் குடித்தால் அல்லது சாப்பிட்டால் இறைவனைத் தவிர வேறு எவரும் அறிய முடியாது. இந்த நிலையில் இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற இறையச்சமே நோன்புக்கு அடித்தளமாக இருக்கிறது.

நோன்பு என்பது ஓர் அடியான், அல்லாஹ்வுடன் இணைந்த ரகசிய வணக்கமாகும். இறைவனுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் நோன்புக்கு இறைவன் நேரடியாகவே கூலி கொடுப்பான். “எனக்காகவே நோன்பாளி தனது உணவையும், பானத்தையும், ஆசையையும் கைவிடுகிறார். எனவே நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்” என்று இறைவன் கூறியதாக நபிகளார் நவின்றார்கள்.
புனித ரமலான் மாதத்தில் இறைவழிபாடுகளில் ஈடுபட பெரிதும் ஆர்வம் காட்ட வேண்டும். கடமையான தொழுகைகளைத் தவிர நபில்- உபரித் தொழுகை களையும் தவறாது தொழ வேண்டும். இது மகத்தான நற்பேறுகள் நிறைந்த மாதமாகும்.
“எவர் ரமலான் மாதத்தில் ஒரு கடமையான செயலை நிறைவேற்றினாரோ (அதற்கு) மற்ற மாதங்களில் 70 கடமைகளை நிறைவேற்றுவதற்கான நற்கூலியை இறைவன் வழங்குவான்” என்று நபிகளார் கூறினார்கள்.
நபிமொழிகளில் நோன்பின் நற்கூலி குறித்து மிகவும் அதிகமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
“நோன்பாளிகள் சொர்க்கத்தில் ஒரு சிறப்பான வாசல் வழியே நுழைவார்கள். அதற்கு ‘ரய்யான்’ என்று பெயராகும். நோன்பாளிகள் அதன் வழியே நுழைந்து விட்டால், பிறகு அந்தக் கதவு மூடப்படும். பிறகு அந்த வாயில் கதவு வழியாக எவரும் சுவனத்தில் நுழைய முடியாது”.
“மறுமை நாளில் நோன்பு பரிந்துரை செய்யும்: ‘இறைவா! நான் இந்த மனிதனைப் பகலில் உண்பதில் இருந்தும் பருகுவதில் இருந்தும் மற்ற இன்பங்களில் இருந்தும் தடுத்து வைத்திருந்தேன். இறைவா! இந்த மனிதருக்காக நான் செய்யும் பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக!’. மேலும் இந்தப் பரிந்துரையை இறைவன் ஏற்றுக்கொள்வான்”.
இப்படி நோன்பின் மகத்துவத்தை உணர்த்தும் பல நபிமொழிகள் உள்ளன.
முத்தாய்ப்பாக, “மக்கள் ரமலான் மாதத்தின் சிறப்புகளை முழுமையாக அறிவார்களேயானால், வாழ்நாள் முழுவதும் ரமலானாகவே இருக்கக் கூடாதா என்று ஏங்குவார்கள்” என்பது நபிமொழியாகும்.
- மவுலவி எஸ்.பெரோஸ்கான் அல் புகாரி,
ஜெய்ஹிந்த்புரம், மதுரை.

கல்விச்செல்வத்தை நாம் அனைவரும் பெற்று சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம், ஆமீன்.
‘கல்வி என்பது இறைவனின் பேரொளிகளில் ஒன்று, அதை இறைவன் பாவிகளுக்கு கொடுப்பதில்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு முறை சுலைமான் நபி அவர்களிடம் இறைவன், ‘சுலைமானே, உமக்கு கல்வி வேண்டுமா? அல்லது அரசாட்சி வேண்டுமா?’ என்று வினவினான். அதற்கு நபி சுலைமான் அவர்கள் ‘கல்வி வேண்டும்’ என்றார்கள். உடனே இறைவன், ‘சுலைமானே, நீர் நல்லதை தேர்ந்தெடுத்தீர்கள்’ என்று கூறி, ‘நாம் உமக்கு கல்வியையும், அரசாட்சியையும் சேர்த்து கொடுத்து உம்மை கண்ணியப்படுத்தினோம்’ என்றான்.
உலகத்தில் உள்ள நல்லது கெட்டது போன்றவற்றை பிரித்து அறியக்கூடிய பகுத்தறிவு சக்தியைத்தருவது கல்வி. அந்தக்கல்வி ஞானமே ஒருவருக்கு மேன்மையைத்தரும் என்பதை சுலைமான் நபி அவர்களது வாழ்க்கையில் இருந்து நாம் அறியலாம்.
கல்வியின் சிறப்பு குறித்து ஏராளமான திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க நபிமொழிகள் இவை:
‘மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1. நிலையான அறக்கொடை, 2. பயன்பெறப்படும் கல்வி, 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை’.

மற்றொரு நபி மொழியில், ‘கல்வி பறிக்கப்படும் வரை, பூகம்பங்கள் அதிகமாகும் வரை, காலம் சுருங்கும் வரை, குழப்பங்கள் தோன்றும் வரை, கொலை செய்தல் அதிகமாகும் வரை, உங்களிடம் செல்வம் செழிக்கும் வரை மறுமை நாள் ஏற்படாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அபூ ஹூரைரா (ரலி) அறிவித்தார்.
இன்னொரு நபி மொழி குறித்து அபூ ஹூரைரா இவ்வாறு அறிவிக்கிறார்:
‘யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக் கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங் களில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவு கூருகிறான்’.
இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘பயனுள்ள கல்வியைத்தருமாறு இறைவனிடம் கேட்டார்கள். மேலும் பயனற்ற கல்வியை விட்டும் இறைவனிடம் பாதுகாப்பு தேடினார்கள்’.
திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் எந்த அளவுக்கு கல்வியின் அவசியம், சிறப்புகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக மார்க்க கல்வி கற்பதில் நாமும் நம் குடும்பத்தாரும் ஆர்வம் காட்டவேண்டும். அத்தோடு இந்த உலக வாழ்க்கைக்கு தேவையான கல்வியையும் கற்றுக்கொள்ள முன்வரவேண்டும்.
செல்வங்களில் ஒரு போதும் அழியாத செல்வம், யாராலும் திருடப்பட முடியாத செல்வம் கல்விச்செல்வம். அத்தகைய கல்விச்செல்வத்தை நாம் அனைவரும் பெற்று சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம், ஆமீன்.

துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச திருக்குர்ஆன் விருதில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றவர்களில் ஒரே தமிழர் முஹம்மது அர்கம் முஹம்மது ஹுசைன்.
துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச திருக்குர்ஆன் விருதில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றவர்களில் ஒரே தமிழர் முஹம்மது அர்கம் முஹம்மது ஹுசைன் (வயது 15). இவர் இலங்கையில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கண்டி நகரத்தைச் சேர்ந்தவர்.
தனது பன்னிரெண்டாவது வயதில் திருக்குர்ஆனை மனனம் செய்ய ஆரம்பித்து, ஒருநாளில் மூன்று பக்கங்கள் வீதம் மனனம் செய்ய ஆரம்பித்து ஒரே வருடத்தில் மொத்த குர்ஆனையும் மனனம் செய்து முடித்தவர். தனது பள்ளிப் படிப்பையும் கைவிடாமல் அதிலும் கவனம் செலுத்தி இப்போது 9 ஆவது வகுப்பில் படிக்கிறார்.
குர்ஆன் மனனம் மீதான ஆர்வத்தைப் பற்றி முஹம்மது அர்கத்திடம் கேட்ட போது, தான் பள்ளிக்கு செல்லும்போது அங்கு இமாம் வழிநடத்த மற்றவர்கள் தொழுவதைப் பார்த்து, தானும் இமாம் இடத்தில் நின்று தொழுகை நடத்த வேண்டுமென்ற உந்துதலால்தான் தனக்குக் குர்ஆன் மனனம் செய்வதில் ஆர்வம் ஏற்பட்டது என்றவர்.
தான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது ஆசிரியர் ஒவ்வொருவரையும் தாங்கள் பெரியவனானதும் என்னவாக விருப்பமென்று கேட்டுக் கொண்டிருந்தபோது, ஒவ்வொருவரும் மருத்துவர், பொறியாளர் என்று சொல்ல, முஹம்மது அர்கம் தான் ஒரு மௌலவி ஆக வேண்டுமென்று சொன்னாராம். ஆசிரியருக்கு அப்படியென்றால் என்னவென்று விளங்காமல் மற்ற ஆசிரியரிடம் இது குறித்து கேட்டிருக்கிறார். மௌலவி என்றால் இஸ்லாமிய மத அறிஞர் என்று விளக்கிய ஓர் இஸ்லாமிய ஆசிரியர் முஹம்மது அர்கத்தின் ஆர்வத்தை அவரது பெற்றோரிடம் சொல்லியுள்ளார்.

மகனின் விருப்பத்தை அறிந்த தந்தை ஹுசைன் இவரை ‘ஹக்கானியா’ என்ற திருக்குர்ஆனைப் பயிலும் பள்ளியில் சேர்த்துள்ளார். திருக்குர்ஆனுடன் தொடர்பு வைத்துக் கொள்வது தனக்கு மிகவும் விருப்பமானது நெருக்கமானது என்றார் முஹம்மது அர்கம்.
என்னைப் பார்த்து வளர்ந்த என் தங்கைகளும் தம்பிகளும் குர்ஆனை மனனம் செய்யத் தொடங்கியுள்ளனர். என்னுடைய ஒன்பது வயது தம்பி முவாஸும் குர்ஆனை மனனம் செய்து முடித்துவிட்டார்” என்று பெருமிதம் கொள்ளும் முஹம்மது அர்கம் சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் பார்வையாளர்களையும் நடுவர்களையும் கவரும் வகையில் மிகவும் அழகான குரலில் குர்ஆனை வாசித்த போது ஒரேயொரு இடத்தில் மட்டும் தவறு இழைத்தார்.
அவருடைய தந்தை ஹுசைனும் தன் மகனை உற்சாகப்படுத்தி மனனம் செய்யும் பயணத்தில் துணையாக உள்ளார். பரிசு பணம் முக்கியமல்ல தவறில்லாமல் மனனம் செய்து வாசித்து வெற்றி பெறுவதுதான் முக்கியமென்கின்றனர் தந்தையும் மகனும்.
ஹக்கானியா பள்ளியில் பயன்றவர் வெற்றி பெற்றுத் தம் நாட்டுக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்க்க விரும்புவதாகத் தெரிவித்தார். அவரது வருங்காலத் திட்டம் குறித்துக் கேட்ட போது, மார்க்க சட்ட திட்டங்களைச் சரியாகக் கற்க வேண்டும்; மனனம் செய்த திருக்குர்ஆன் வசனங்களின் விளக்கத்தையும் மனனம் செய்ய வேண்டும்; அரபி மொழியில் தேர்ச்சி பெற வேண்டும்; மௌலவியாக வேண்டும் என்று சொன்னவர், கற்றதை மற்றவர்களுக்குக் கற்பிக்க வேண்டுமென்பதே தமது தலையாய லட்சியம் என்றார்.
இவர் இப்போட்டியில் வெற்றி பெறுவாரா தம் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பாரா என்று இன்னும் சில தினங்களில் இப்போட்டியின் முடிவில் தெரிந்துவிடும்.
- ஜெஸிலா பானு.
முஹம்மது அர்கம் ஓதுவதை இக்கானொளியில் காணலாம்:
https://youtu.be/89VCJLeUPXM

இறைவனுக்கு நன்றியுடன் நடந்துகொண்டு அதிகமாக இறைவனை புகழ்வோம். சோதனை வரும்போது பொறுமையுடன் வாழ்ந்து இறைவனின் அருளைப்பெற முயற்சிசெய்வோமாக, ஆமீன்.
நாம் எந்த நிலையில் இருந்தாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். இறைவன் நன்மைகளை வாரிவழங்கும்போது அதை அமைதியாக ஏற்றுக்கொண்டு இறைவனுக்கு தொடர்ந்து நன்றி செலுத்த வேண்டும். அதுபோல இறைவனின் சோதனை நம்மை நெருக்கடியில் தள்ளினால் அப்போது பொறுமை காக்கவேண்டும்.
நன்மைகள் கிடைக்கும்போது நன்றி செலுத்தினால் அதிகமாக நன்மைகளை வழங்குவதும், சோதனைகளின் போது பொறுமையைக் கடைப்பிடித்தால் அந்த வேதனையை நீக்குவதும் இறைவனின் பண்பு. ஏன்என்றால் இந்த உலகில் உள்ள அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தி உள்ளவன் இறைவன்.
இதையே திருக்குர்ஆன் (2:284) இவ்வாறு கூறுகிறது: ‘வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான்;
இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான், அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்’.
மற்றொரு திருக்குர்ஆன் வசனத்தில் கூறும்போது, ‘நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர் களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்’ (2:172) என்று குறிப்பிடுகின்றான்.

அதேபோல பொறுமையுடன் இருந்தால் தன்னுடைய அருள் கிடைக்கும் என்பதையும் திருக்குர்ஆன் வசனம் மூலம் கூறுகிறான் அல்லாஹ். மேலும் பொறுமையுடன் தொழுகையில் யார் ஈடுபடுகிறார்களோ அவர்களுடன் தான் இருப்பதாகவும் இறைவன் உறுதி கூறுகிறான். இதையே திருக்குர்ஆன் (2:153) இவ்வாறு கூறுகிறது:
‘நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்’.
நல்லடியார்கள் எந்த நிலையிலும் தங்கள் மனஉறுதியை தவறவிடுவதில்லை. இறைவனின் அருள்மழை தங்கள் மீது பொழியும்போது மேலும்மேலும் தங்களை தாழ்த்திக்கொண்டு இறைவனை அதிகமாக புகழ்ந்தனர். இறைவன் தங்களுக்கு அளித்த மிகச்சிறிய நன்மைகளுக்கும் அதிகமாக நன்றி செலுத்துபவர்களாக இருந்தனர்.
அதுபோல துன்பங்களும், வேதனைகளும் தங்களை வாட்டும்போதும் இறைச்சிந்தனை தங்களை விட்டு விலகாமல் இருந்தனர். இறைவன் கூறியபடி பொறுமையுடன் இருந்து பிரார்த்தித்தனர். அதுவே அவர்களுக்கு நன்மையாகவும் முடிந்தது. வேதனை தீர்ந்து நன்மைகள் பெருகியது.
எனவே நாம் அனைவரும் செழிப்பான நிலையில் இறைவனுக்கு நன்றியுடன் நடந்துகொண்டு அதிகமாக இறைவனை புகழ்வோம். சோதனை வரும்போது பொறுமையுடன் வாழ்ந்து இறைவனின் அருளைப்பெற முயற்சிசெய்வோமாக, ஆமீன்.

நபி (ஸல்) அவர்களின் மாமி ஸஃபிய்யா (ரழி) அவர்கள் செய்த இந்த வீரச்செயலினால் பெண்களும், சிறுவர்களும் பாதுகாக்கப்பட்டார்கள்.
மதீனாவைக் காத்துக் கொள்ள அகழைத் தோண்டி வைத்திருப்பார்கள் என்று எதிரிப்படையினர் எதிர்பார்த்திருக்கவில்லை. இப்படியான திட்டத்திற்கெதிரான எவ்வித முன்னேற்பாடுகளையும் அவர்கள் செய்திருக்கவில்லை.
அகழின் பக்கத்தில் கூட நெருங்கவிடாமல் இறைமறுப்பாளர்களை நோக்கி முஸ்லிம்கள் அம்பு மழை பொழிந்தனர். இறைமறுப்பாளர்கள் தெறித்து ஓடினர். ஆழமில்லாத இடமாகப் பார்த்து அகழினுள் சிலர் இறங்கி, மதீனாவிற்குச் செல்லும் பாதை அருகே ஏறினர். அவர்களைக் கண்ட மாத்திரத்தில் அலி (ரலி) அவர்கள், இறைமறுப்பாளர்கள் உள்நுழைந்த பாதையைத் தடுத்து அவர்கள் மீண்டும் அவ்வழியாக வெளியேற முடியாதவாறு முற்றுகையிட்டபோது, எதிரிப்படையைச் சேர்ந்த அம்ர் இப்னு அப்துஉத், முஸ்லிம்களின் பலம் அறியாமல் “யார் என்னுடன் நேருக்கு நேர் மோத விரும்புவது?” என்று கேட்க, அலி (ரலி) பாய்ந்து வாளைச் சுழற்றி சில நொடிகளில் எதிரிப்படையைச் சேர்ந்த அம்ரைத் தாக்கி வீழ்த்தினார். இதைக் கண்டு மற்றவர்கள் ஓடிச் சிதறினர். இப்படி குறைஷிகள் அகழில் இறங்குவதற்கும், அதன் மீது பாதை அமைப்பதற்கும் முயன்று தோற்றனர்.
இதற்கிடையில் உமர்(ரலி) குறைஷிக்குல இறைமறுப்பாளர்களை ஏசிக் கொண்டே நபிகள் நாயகத்திடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையப் போகிறது. ஆனால், இன்னும் நான் அஸ்ர் தொழவில்லை” என்றார். அதற்கு நபிகளாரும் “நானும் அஸ்ர் தொழவில்லை. நம்மை நடுத் தொழுகையைத் தொழவிடாமல் சூரியன் மறையும் வரை எதிரிகள் தாமதப்படுத்திவிட்டார்கள்.
அல்லாஹ் அவர்களின் புதை குழிகளையும் 'வீடுகளையும்' அல்லது அவர்களின் 'வயிறுகளையும்' நெருப்பால் நிரப்புவானாக” என்று கூறினார்கள். பின்பு அந்த இடத்திலேயே முஸ்லிம்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களுடன் சென்று உழுச் செய்து சூரியன் மறைந்த பின் அஸ்ரை முதலில் தொழுது பிறகு மக்ரிப் தொழுகையைத் தொழுதனர்.

எதிரிகள் அகழைக் கடக்க முயற்சி செய்ததும், முஸ்லிம்கள் அதை எதிர்த்ததும் பல நாட்களாக நீடித்தது. இடையில் அகழ் தடையாக இருந்ததால் நேரடியான சண்டைக்கு வழியில்லாமல் இருந்தது. இரு தரப்பினரும் மாறி மாறி அம்பெறிந்து தாக்குதல் நடத்தினர். ஆகவே பலத்த சேதங்களேதும் ஏற்படவில்லை.
முஸ்லிம் பெண்களும் சிறுவர்களும் பாதுகாக்கப்பட்டிருப்பது ஹஸ்ஸான் இப்னு ஸாபித்தின் கோட்டையென்று அறிந்து, முதலில் அதைத் தாக்க ஒரு யூதன் அக்கோட்டையைச் சுற்றி வந்தான். ஆனால் கோட்டையின் உள்ளே என்ன வகையான பாதுகாப்புப் பணிகள் உள்ளன என்று தெரியாததால் தயங்கியபடி சுற்றிக் கொண்டிருந்தான்.
ஹஸ்ஸானைத் தவிர வேறு எந்தப் பாதுகாப்புமில்லாத நிலையில் நபிகளாரின் மாமி ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப்(ரலி) அவர்கள் “ஹஸ்ஸானே! இந்த யூதன் கோட்டையைச் சுற்றி வருகிறான். நபியவர்களும் நபித் தோழர்களும் நமது நிலையை அறிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். நாம் பாதுகாப்பின்றி இருப்பதை நமக்குப் பின்னால் இருக்கும் மற்ற யூதர்களுக்கு இவன் சொல்லிவிட்டால்? அதற்கு முன் நீ இறங்கி சென்று அவனைக் கொன்றுவா!” என்றார்கள்.
அதற்கு ஹஸ்ஸான் தன்னால் அது முடியாத காரியமென்று மறுத்துவிட்டார். ஸஃபிய்யா(ரலி) அவர்களே ஒரு தடியைக் கையில் எடுத்துச் சென்று அந்த யூதனை கைத்தடியால் அடித்துக் கொன்றார்கள். நபி (ஸல்) அவர்களின் மாமி ஸஃபிய்யா (ரழி) அவர்கள் செய்த இந்த வீரச்செயலினால் பெண்களும், சிறுவர்களும் பாதுகாக்கப்பட்டார்கள்.
ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி 4:64:4112, 5:65:4533, இப்னு ஹிஷாம்