என் மலர்
கிறித்தவம்
பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா நேற்று தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறுகிறது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 6-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பேராலய முகப்பில் இருந்து கொடி ஊர்வலம் தொடங்கியது. இதில் பக்தர்கள் பூண்டி மாதாவின் உருவம் வரையப்பட்ட கொடியை எடுத்து சென்றனர். சிறிய பல்லக்கில் மாதாவின் சிறிய சொரூபம் வைக்கப்பட்டு கொடி ஊர்வலத்தின் பின்னால் பக்தர்கள் சுமந்து வந்தனர்.
கொடி ஊர்வலம் ஜெபமாலை பாடல்களுடன் கோவிலை சுற்றி வந்து கொடிமேடையை அடைந்தது. இதை தொடர்ந்து கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி, கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்தார். பின்னர் மரியா-எளிய வாழ்வால் ஏற்றம் பெற்றவர் என்ற தலைப்பில் சிறப்பு திருப்பலி பிஷப் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குதந்தையர்கள் ஜேம்ஸ், ஜெயன், ஆன்மிக தந்தையர்கள் அருளானந்தம், இருதயம், அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருவிழா நாட்களில் தினமும் மாலையில் சிறு சப்பர பவனியும், சிறப்பு திருப்பலியும் நடைபெறும். 14-ந்தேதி தேர்பவனியும், 15-ந் தேதி சிறப்பு திருப்பலியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

மும்பை பாண்டுப் மேற்கு டெம்பிபாடாவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 60-வது ஆண்டு விழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
மும்பை பாண்டுப் மேற்கு டெம்பிபாடாவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 60-வது ஆண்டு விழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. பின்னர் விழா நாட்களில் தினசரி மாலை ஆங்கிலத்திலும், தமிழிலும் நவநாள் திருப்பலி நடந்தது. மேலும் திருவிருந்து திருப்பலி, தேவாலயத்தில் நற்கருணை ஆடம்பர பவனியும் நடந்தது.
விழாவில் சிகர நிகழ்ச்சியான தேர் பவனி மற்றும் ஆண்டு விழா சிறப்பு திருப்பலி நடந்தது. சிறப்பு திருப்பலியை ஆயர் தேர்மனிக் சாவியோ பெர்னான்டஸ், பீட்டா் ஜெயகாந்தன், பீட்டர் ரெமிஜியுஸ் ஆகியோர் நிறைவேற்றினர். விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அருட்தந்தையர் செபாஸ்டின், தனம், அருட்சகோதரர் ஸ்டீபன் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

புதுவை வில்லியனூரில் பிரசித்திபெற்ற லூர்து மாதா ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
புதுவை வில்லியனூரில் பிரசித்திபெற்ற தூய லூர்து மாதா ஆலயம் உள்ளது. பிரான்சு நாட்டின் லூர்து நகருக்குப்பின் உலகிலேயே லூர்து மாதாவிற்கு என்று கட்டப்பட்ட 2-வது ஆலயம் இந்த ஆலயமாகும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவில் தினமும் காலை, மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, தேர்பவனி போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் 9 நாட்களும் நடைபெற்றது. விழாவில் நேற்று காலை 7-30 மணிக்கு புதுவை - கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து இரவு 8 மணியளவில் ஆடம்பர திருவிழா தேர்பவனி நடந்தது.
இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அயூப் மற்றும் பங்குத்தந்தையர்கள், பங்கு மக்கள், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வில்லியனூர் லூர்து மாதா ஆலய பங்குத்தந்தை பிச்சைமுத்து அடிகளார் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

மணிகண்டம் அருகே புனித உபகார அன்னை ஆலய தேர்பவனி நடைபெற்றது. இந்த தேர்த்திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
மணிகண்டத்தை அடுத்த நாகமங்கலம் அருகே யாகப்புடையான்பட்டியில் புனித உபகார அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலய தேர்த்திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் நவநாள் திருப்பலி நடந்தது. இதைதொடர்ந்து தினமும் மறையுரை மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி அன்று இரவு 9 மணிக்கு திருச்சி மறைமாவட்ட குருகுல முதல்வர் யூஜின், கார்மெல் சபை மாநிலத்தலைவர் அருள்ராஜ், நாகமங்கலம் பங்குத்தந்தை அல்போன்ஸ்ராஜ்பிரபு ஆகியோர் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.
பின்னர் நள்ளிரவு 12 மணி அளவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்கள் பவனி வந்தன. முதல் தேரில் ஏசுவும், 2-வது தேரில் சூசையப்பரும், 3-வது தேரில் புனித உபகார அன்னையும் எழுந்தருளினர். வாணவேடிக்கை முழங்க மேளதாளம் இசைக்க தேர்கள் வலம் வந்தன. அப்போது, கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளுக்கு முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர்.
தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தன. இதை தொடர்ந்து நேற்று காலை பாதிரியார் வின்சென்ட் லாரன்ஸ் தலைமையில் திருவிழா நிறைவு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.
இந்த தேர்த்திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

ராயபுரம் புனித ஜெர்மேனம்மாள் ஆலய தேர்பவனி நடைபெற்றது. அப்போது ஆலயத்தில் இருந்து மாதா, சூசையப்பர், இயேசு மற்றும் புனித ஜெர்மேனம்மாள் எழுந்தருளிய தேர்களை இழுத்து கிறிஸ்தவர்கள் பாடல்களை பாடி பவனி வந்தனர்.
சோழவந்தானை அடுத்து ராயபுரத்தில் பழமை வாய்ந்த புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் உள்ளது. மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஜெர்மேனம்மாள் ஆலயமும் ஒன்று. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு திருப்பலி நடந்து வந்தது.
இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடைபெற்றது. அப்போது ஆலயத்தில் இருந்து மாதா, சூசையப்பர், இயேசு மற்றும் புனித ஜெர்மேனம்மாள் எழுந்தருளிய தேர்களை இழுத்து கிறிஸ்தவர்கள் பாடல்களை பாடி பவனி வந்தனர். வாணவேடிக்கையும், தாரை தப்பட்டையுடன் கிராமத்தில் தேர்கள் வலம் வந்து, அதிகாலை மீண்டும் ஆலயம் வந்து சேர்ந்தது. இந்த விழாவில் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இயேசு சபை குடும்பம் மற்றும் பங்கு இறைமக்கள், கிராமமக்கள் செய்திருந்தனர்.

நத்தம் வட்டம் செந்துறையில் உள்ள பிரசித்தி பெற்ற புனித சூசையப்பர் ஆலய திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நத்தம் வட்டம் செந்துறையில் உள்ள பிரசித்தி பெற்ற புனித சூசையப்பர் ஆலய திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதையொட்டி கொடிபவனி ஆலயத்தில் தொடங்கி நேதாஜிநகர், பாத்திமாநகர், சந்தைப்பேட்டை, குரும்பபட்டி வழியாக மீண்டும் ஆலயத்திற்கு வந்தது. இதைத்தொடர்ந்து பங்குத்தந்தையர்கள் ஆரோக்கியம், ஜான்ஜெயபால், பிரிட்டோ, அருட்சகோதரர் ரூபன் ஆகியோர் கொடியேற்றி திருப்பலியை நடத்தினார்கள். இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
இன்று(திங்கட்கிழமை) காலை புனித விருந்து திருப்பலியும், மாலையில் சப்பர பவனியும் நடக்கிறது. நாளை மாலை பங்குத்தந்தை இன்னாசிமுத்து தலைமையில் திருப்பலியும், இரவு அன்பின் விருந்தும், அதைத்தொடர்ந்து இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.
8-ந்தேதி அலங்கரிக்கப்பட்ட மின்ரதத்தில் புனித சூசையப்பர், செபஸ்தியார் உள்ளிட்ட புனிதர்களின் தேர்பவனி குரும்பபட்டியில் தொடங்கி நேதாஜிநகர், பாத்திமாநகர், சந்தைப்பேட்டை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடக்கிறது. அதைத்தொடர்ந்து திருப்பலி, கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செந்துறை பங்குத்தந்தையர்கள், பங்கு பேரவை மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா கொடியேற்றம் கோட்டார் ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலி, மாலை 5 மணிக்கு ஜெபமாலை, தொடர்ந்து கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு திருவிழா கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார். இரவு 9 மணிக்கு அன்பியங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு 9 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
6-ந் தேதி மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். 9-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருவிருந்து திருப்பலி, மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி, 10-ந் தேதி இரவு 9 மணிக்கு தேர் பவனி, 11-ந் தேதி காலை 6 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆராதனை, இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.
12-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி, பகல் 12 மணிக்கு ஆடம்பர தேர் பவனி, இரவு 7 மணிக்கு தேரில் திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ரால்ப் கிராண்ட் மதன், இணை பங்குதந்தை சகாய ஆன்றனி, பங்கு அருட்பணி பேரவை துணைத்தலைவர் கிளாட்சன், செயலாளர் வின்ஸ்டன் லாரன்ஸ், துணை செயலாளர் கலா மேரி, பொருளாளர் ஜார்ஜ் சகாய ஜோஸ், மற்றும் பங்கு இறைமக்கள், அருட்சகோதரிகள் செய்துள்ளனர்.

உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. இதனை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு புதுவை-கடலூர் மறைமாவட்ட முதன்மை குரு அருளானந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் தினமும் காலை 6.30 மணிக்கு சிறப்பு திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு திருப்பலி மற்றும் தேர்பவனி நடக்கிறது. வருகிற 12-ந் தேதி காலை 5 மணிக்கு திருப்பலியும், அதனை தொடர்ந்து 7 மணிக்கு வேலூர் மறைமாவட்ட பேராயர் சவுந்தரராஜூ தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடைபெற உள்ளது. அன்று மாலை 5 மணிக்கு திருப்பலியும், தொடர்ந்து ஆடம்பர தேர்பவனியும், திவ்ய நற்கருணை ஆராதனையும் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை ஆரோக்கியநாதன் மற்றும் விழாக்குழுவினர், உழவர்கரை பங்கு மக்கள் செய்து வருகின்றனர்

கல்லக்குடியில் உள்ள புனித சவேரியார் ஆலய பொன்விழா ஆண்டையொட்டி ஆடம்பர சப்பர பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.
கல்லக்குடியில் உள்ள புனித சவேரியார் ஆலயம் 1968-ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது பொன்விழா ஆண்டையொட்டி ஆலயம் புனரமைக்கப்பட்டது. இதையடுத்து, புதிய ஆலயம் திறப்பு விழா, பொன்விழா மற்றும் நற்கருணை வழங்கும் விழா என முப்பெரும்விழா நடைபெற்றது. 1-ந்தேதி மாலை 6.30 மணியளவில் குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தை புனிதப்படுத்தி திறந்து வைத்து, பெருவிழா திருப்பலியை நிறைவேற்றினார்.
தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. அன்று இரவு 8.30 மணிக்கு ஆடம்பர சப்பர பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. பின்னர் திவ்விய நற்கருணை ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. நேற்று மாலை 6.30 மணிக்கு திருப்பலியும் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற்றது.
விழாவில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பங்குமக்கள் திரளாக கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் அருட்தந்தை அடைக்கலராஜ் மற்றும் திருச்சிலுவை கன்னியர்கள், பட்டையதாரர்கள், இளைஞர்கள், பொன்விழா குழுவினர் செய்திருந்தனர்.

என் சகோதர சகோதரிகளே, நீங்கள் சோதனைகளுக்கு உள்ளாகும் போது, நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல, கடவுள் நம்பிக்கைக்குரியவர்.
ஒரு சிறுவன் தன் தோட்டத்தில் பட்டுப்புழு ஒன்றை வளர்த்து வந்தான். அது தன்னை சுற்றிலும் பட்டு நூலால் கடினமான கூட்டைக்கட்டி உள்ளே இருந்தது. சில நாட்களுக்கு பின் அது பட்டுப்பூச்சியாக மாறி வெளியே வர முயற்சி எடுத்தது.
கூட்டிலிருந்து வெளிவருவது அவ்வளவு எளிதாக இல்லை. பல மணி நேரங்கள் பொறுமையோடு போராடி தான் வெளியே வர வேண்டும்.
ஆனால் அந்த சிறுவனுக்கோ பொறுமையில்லை. பட்டாம்பூச்சி படும் கஷ்டத்தையும் அவனால் தாங்க முடியவில்லை. ஆகவே ஒரு கூரிய சிறு கத்தியினால் மெதுவாக கூட்டை வெட்டி, பட்டுப்பூச்சியை எளிதாக வெளியே எடுத்துவிட முயற்சித்தான். ஆனால் அந்த பட்டுப்பூச்சியினால் பறக்க முடியவில்லை. அதனுடைய சரீரம் பெரிதாக இருந்தபடியால் கீழே விழுந்து மரித்துவிட்டது. முடிவில் எறும்புகள் அதை இழுத்துச் சென்றன.
இதை உற்று நோக்கிக்கொண்டிருந்த அச்சிறுவனின் தகப்பன், ‘மகனே அந்த பட்டுப்பூச்சி கூட்டிலிருந்து வெளிவர பொறுமையோடு எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அதன் தசைநார்களையும், நரம்புகளையும் பெலப்படுத்தும். பல மணி நேரங்கள் அது வெளிவர பாடுபடுவதால் அதன் உடல் எடை குறைந்து பறந்து செல்ல வசதியாக இருக்கும். அது அனைத்து முயற்சியும் செய்து, தானாகவே வெளியே வந்திருந்தால் நிறைவான வளர்ச்சியடைந்திருக்கும். நீயோ இப்பொழுது அதன் வாழ்க்கையையே கெடுத்துவிட்டாயே’ என்றார்.
இதுபோலத் தான் மானுட வாழ்வில் வருகின்ற சோதனைகள் மனிதனை நன்கு புடமிட்டு பேராற்றலுடைய மாமனிதனாக மாற்றுகிறது. யோபு ‘என்னை அவர் புடமிட்டால், நான் பொன்போல் துலங்கிடுவேன்’ (யோபு 23:10) என்கிறார்.
கடவுள் மனிதர்களை எக்காலமும் நேசிக்கிறார். எனினும் மனிதன் கடவுள் மீது வைத்திருக்கும் அன்பு முழுமையானதா? அல்லது ஆதாயத்திற்கானதா? என்பதை அறிந்துணரவும், இறையுறவிலும், தளராத பற்றுறுதியிலும் வலுப்பெறவே கடவுள் சோதிக்கிறார். கடவுள் மனிதரை சோதித்ததின் ஒரு சில சான்றுகளைக் காணலாம்.
1.ஆபிரகாமை சோதித்த கடவுள்:
‘கடவுள் ஆபிரகாமை சோதித்தார்’ (தொ.நூ 22:1). கடவுள் ஆபிரகாம் சாராளுக்கு முதிர்வயதில் ஒரு புதல்வனைக் கொடுத்தார். ஒரே தவப்புதல்வனையும் ஆபிரகாமிடம் பலியிட கேட்கின்றார். ஆபிரகாம் தன் மகனை பலியிட அழைத்துச் சென்றார். பலியிடப் போகும் வேளையில் கடவுள் தடுத்தவராய், ‘நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்து கொண்டேன்’ (தொ.நூ 22:12) என்றார்.
சோதனையில் வென்ற ஆபிரகாமுக்கு கடவுள் ஆசி பொழிந்து ‘உன் வழி மரபைப் பலுகிப் பெருகச் செய்வேன், உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர், உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்’ என அவர் தம் வழிமரபினருக்கு மூன்று வாக்குறுதியினை அளித்துள்ளார்.
2.யோபுவை சோதிக்க அனுமதித்த கடவுள்:
ஊசு என்ற நாட்டில் மாசற்றவரும், நேர்மையானவருமாய் இருந்தவர் யோபு. பத்து பிள்ளைகள், பல்வேறு பணியாளர்கள், திரளான செல்வங்கள் என கீழைநாட்டு மக்கள் எல்லாரிலும் மிகப்பெரியவராக இருந்தார். சாத்தான் இவரைச் சோதிப்பதற்கு அனுமதி கேட்கின்றார். கடவுளும் அனுமதிக்கவே, யோபு தன் பிள்ளைகளையும், அனைத்துச் செல்வங்களையும் இழந்தார். அதோடு, உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை எரியும் புண்களால் வாட்டி வதைக்கப்பட்டார். ஓடொன்றை எடுத்துத் தம்மைச் சொறிந்து கொண்டு சாம்பலில் உட்கார்ந்தார். அவரின் மனைவியும், தோழர்களும் நிந்தித்தனர். ‘ஆண்டவர் அளித்தார், ஆண்டவர் எடுத்துக்கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக’ என்று அவர் தன் மாசின்மையில் உறுதியாக நிலைத்திருந்தார். இவை அனைத்திலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, கடவுள் மீது குற்றஞ்சாட்டவும் இல்லை.
யோபு சோதனையில் வென்றிட, இழந்த செல்வங்கள் எல்லாவற்றையும் கடவுள் மீண்டும் நல்கினார். மேலும் அவர் யோபுவுக்கு இருந்தனவற்றையெல்லாம் இரண்டு மடங்காக்கினார். நான்காம் தலைமுறைவரை கண்டு, முதுமையடைந்து, பல்லாண்டு வாழ்ந்து இறந்தார்.
3. சோதிக்கப்பட்ட இறைமகன் இயேசு:
ஆண்டவர் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூயஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார். பசியுற்ற அவரிடம், ‘கற்கள் அப்பமாகும்படி செய்யும்’ என வேண்டினான். இறையுறவைச் சோதித்திட, ‘இறைமகன் என்றால் கீழே குதியும்’ என்றான். உலகத்தைக் காண்பித்து, ‘என்னை வணங்கினால் அனைத்தையும் உமக்குத் தருவேன்’ என்றான். ‘அகன்று போ, சாத்தானே’ என்று அலகையை விரட்டி சோதனையில் வென்றார். உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.
என் சகோதர சகோதரிகளே, நீங்கள் சோதனைகளுக்கு உள்ளாகும் போது, நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல, கடவுள் நம்பிக்கைக்குரியவர். ‘அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார், சோதனை வரும்போது அதைத்தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார், அதிலிருந்து விடுபட வழி செய்வார்’. (1 கொரி 10:13).
அருட்பணி. ம.பென்னியமின்,
தூய பவுல் லுத்தரன் ஆலயம், உண்ணாமலைக்கடை.

பணகுடி புனித சூசையப்பர் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனியும் நடைபெற்றது. இதில் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் பணகுடி புனித சூசையப்பர் ஆலய திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை திருப்பலியும், மாலை மறையுரை நற்கருணை ஆசியும் நடந்தது.
நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடி பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் மாலை ஆராதனையும் தேர் பவனியும் நடைபெற்றது. நேற்று காலை சிறப்பு பாடல் திருப்பலியும், தேர்பவனியும் நடந்தது.
இதில் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பங்குகுரு நெல்சன்ராஜ் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.

ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நாளை அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலி, மாலை 5 மணிக்கு ஜெபமாலை, தொடர்ந்து கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு திருவிழா கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். இரவு 9 மணிக்கு அன்பியங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.