என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    காட்டுமன்னார்கோவில் அருகே புனித ஆக்னேஷ் அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கோட்டைமேடு கிராமத்தில் பழமை வாய்ந்த புனித ஆக்னேஷ் அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்பவனி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலை நேரத்தில் சிறப்பு பிரார்த்தனையும், கூட்டு திருப்பலி நிகழ்ச்சியும் நடந்து வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்ததும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித ஆக்னேஷ் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடந்தது. கோட்டைமேடு ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கிய பவனியானது கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தது.

    இதில் கோட்டைமேடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை மற்றும் கிறிஸ்தவர்கள் செய்திருந்தனர்.
    சென்னை திருவான்மியூரில் உள்ள அட்வென்ட் கிறிஸ்தவ திருச்சபை நூற்றாண்டு விழாவை இன்று (புதன்கிழமை) கொண்டாடுகிறது.
    சென்னை திருவான்மியூரில் உள்ள அட்வென்ட் கிறிஸ்தவ திருச்சபை நூற்றாண்டு விழாவை இன்று (புதன்கிழமை) கொண்டாடுகிறது. இந்த ஆலயம் அமைந்துள்ள இடத்தை 1917-ம் ஆண்டு அமெரிக்கன் அட்வென்ட் மிஷனரிகள் வாங்கி, 1919-ம் ஆண்டு ஓலைக்குடிசையில் பள்ளிக்கூடம் அமைத்தனர். தமிழ் மொழியில் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அங்கு பாடம் கற்றுக்கொடுத்தனர். வாரத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் அமெரிக்கன் மிஷனரிகளால் இங்கு ஆராதனை நடத்தப்பட்டது.

    இப்போது கம்பீர தோற்றத்தோடு காட்சியளிக்கும் இந்த ஆலயம், அப்போது பள்ளிக்கூடத்துக்கு அருகில் சிறியதாக கட்டப்பட்டு, 1980-ம் ஆண்டில் ஓடு போட்டு ஆலயமாக மாற்றப்பட்டது. பின்னர், 1998-ம் ஆண்டில் கட்டிடமாக கட்டும் பணி தொடங்கி, 2009-ம் ஆண்டில் தான் இப்போதைய தோற்றத்தை பெற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆலயத்தின் வளாகத்தில் இன்றளவும் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது.

    நூற்றாண்டு விழா இன்று காலை 9 மணியளவில் ஆலயத்தில் சிறப்பு ஆராதனையுடன் நடக்கிறது. ஆராதனையை பேராயர் எஸ்.டி.டேவிட் நடத்துகிறார்.

    வட்டார பாதிரியார் ஏ.பிரான்சிஸ் தங்கதுரை, சபை பாதிரியார் பி.பால் எபிநேசர், சபை மூப்பர்கள் கே.எபிநேசர், ஜெ.எஸ்.தானியேல் உள்பட பலர் ஏற்பாடுகளை செய்து இருக்கின்றனர்.
    கேரள மாநிலம் எடத்துவா தூய ஜார்ஜியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருத்தல தலைமை பணியாளர் அருட்பணியாளர் மாத்யூ சூரவடி கொடியேற்றி வைத்தார்.
    தென்னிந்தியாவில் புகழ் பெற்ற கத்தோலிக்க திருத்தலங்களில் மிக முக்கியமானது கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள எடத்துவா தூய ஜார்ஜியார் ஆலயம். இந்த ஆலயத்துக்கு கேரள மாநிலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். மேலும் இங்கு சிறப்பு நேர்ச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

    இந்த ஆலயத்தில் உள்ள தூய ஜார்ஜியாரின் சொரூபம் மற்ற சொரூபங்களை போல் அல்லாமல் பாரசீக சிற்பக்கலையில் பக்தி பூர்வமாக அமைக்கப்பட்டுள்ளது. பிற சொரூபங்களை போல் இல்லாமல் வேறுபட்டு இருப்பதே இதன் சிறப்பு அம்சமாகும்.

    இந்த ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருத்தல தலைமை பணியாளர் அருட்பணியாளர் மாத்யூ சூரவடி கொடியேற்றி வைத்தார். இதில் அருட்பணியாளர்கள் சின்னப்பன், அம்புரோஸ் ஆகியோர் தமிழில் திருப்பலி நடத்தினார்கள். அடுத்த மாதம் (மே) 7-ந் தேதி வரை நடைபெறும் விழாவின் போது தினமும் தமிழில் திருப்பலி நடக்கிறது. சிறப்பு திருப்பலியை அருட்பணியாளர்கள் சின்னப்பன், அம்புரோஸ், சைமன், இளங்கோ, கிளாசின் ஆகியோர் நடத்துகின்றனர்.

    6-ந் தேதி நற்செய்தி பெருவிழாவில் அருட்பணியாளர் ஜினு தெக்கே தலக்கல் நற்செய்தி வழங்குகிறார்.

    7-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு அருட்பணியாளர் இளங்கோ திருப்பலி நடத்துகிறார். காலை 6 மணிக்கு சங்கனாச்சேரி மறைமாவட்ட துணை பேராயர் மார் தோஸ்தறயில் திருப்பலியை நிறைவேற்றுகிறார். அதைத்தொடர்ந்து 1½ மணி நேரத்துக்கு ஒரு முறை திருப்பலி நடக்கிறது. பிற்பகல் 3 மணிக்கு பாளையங்கோட்டை ஆயர் ஜீடு பால்ராஜ் திருப்பலியை நடத்தி வைக்கிறார். மாலை 4 மணிக்கு திருப்பவனி நடைபெறுகிறது. இதை தொடர்ந்து கேரள மாநிலத்தை சேர்ந்த மலையாள மொழி பேசும் மக்களுக்காக 8 நாட்கள் விழா நடக்கிறது,

    பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து, தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி, சிறப்பு பஸ்கள், ரெயில், படகு வசதிகளை திருத்தலத்தின் தமிழக குழு ஒருங்கிணைப்பாளர்களான அருட்பணியாளர் ஜினு தெக்கே தலக்கல் நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தல அதிபர் தோமஸ் பவத்து பரம்பில் ஆகியோர் செய்துள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தலத்தின் தலைமை பணியாளர் அருள்தந்தை மாத்யூ சூரவடி தலைமையில் ஒருங்கிணைப்பாளர் பில்பி மாத்யூ, துணை ஒருங்கிணைப்பாளர்கள் பினோ மோன் தேவசியா, மீனு சோபி மற்றும் ஜார்ஜ் குட்டி தாமஸ், மத்தாயி ஜோஸப், லோனப்பன் தாமஸ் ஆகியோர் செய்துள்ளனர். 
    எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசை தூய செல்வநாயகி ஆலய திருவிழா நடந்தது. இதையொட்டி ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.
    எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசை தூய செல்வநாயகி ஆலய திருவிழா நடந்தது. இதையொட்டி ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உலகமீட்பர், அருளப்பர், ஜெபஸ்தியர், தூயசெல்வநாயகி சொரூபங்கள் வைக்கப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மேளதாளம் முழங்க ஆலயத்தை சுற்றி ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்தின் முன்பு வாணவேடிக்கை நடத்தப்பட்டது. தேருடன் திரளான கிறிஸ்தவர்கள் பாடல்களை பாடியவாறு வந்தனர். இதைத்தொடர்ந்து சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயர் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடத்தப்பட்டது.
    மணப்பாறை அருகே உள்ள மலையடிப்பட்டி புனித தோமையார் ஆலய தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில், பழமை வாய்ந்த புனித தோமையார் ஆலயம் உள்ளது. மலைமீது அமைந்துள்ள இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பாஸ்கா திருவிழா நடைபெறும். அதேபோல இந்த ஆண்டும் கடந்த 22-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் பாஸ்கா திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த 25-ந் தேதி ஆண்டவர் ஏசுவின் பாடுகளை சித்தரிக்கும் வகையில் தூம்பா பவனியும், 26-ந் தேதி ஆண்டவர் ஏசுவின் உயிர்ப்பு பெருவிழா மற்றும் ரத பவனி நடைபெற்றது.

    இதன்தொடர்ச்சியாக நேற்று முன்தினம் நள்ளிரவு தூய தோமையார் சொரூபம் தோமையார் மலையில் இருந்து கீழே கொண்டு வரப்பட்டு மலையடிப்பட்டி நடு வீதியில் உயிர்த்த ஆண்டவர், தூய தோமையார் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

    கோவில் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் உயிர்த்த ஆண்டவர் ஏசு மற்றும் தோமையார் சொரூபங்கள் வைக்கப்பட்டு தேர் மந்திரிக்கப்பட்டது. பின்னர், திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மலையடிப்பட்டி கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர், மீண்டும் நிலையை வந்தடைந்தது.

    வையம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
    புதுவை வில்லியனூர் மாதா ஆலய பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
    புதுவை வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்து அன்னை திருத்தலம் வரலாற்று சிறப்புமிக்கதாகும். பிரான்ஸ் நாட்டின் லூர்து நகருக்கு அடுத்து உலகிலேயே லூர்து மாதாவிற்கென கட்டப்பட்ட 2-வது ஆலயம் வில்லியனூர் மாதா ஆலயமாகும்.

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிவடைந்த வாரத்தில் சனிக்கிழமை அன்று ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான பெருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 5.30 மணிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள அருள்நிறை ஆலயத்தில் உதகை மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் பாதிரியார்கள் இணைந்து கூட்டு திருப்பலி நிறைவேற்றினர்.

    இதனைத் தொடர்ந்து மாதா குளத்தை சுற்றி திருக்கொடி பவனி நடைபெற்றது. அதன் பிறகு ஆலய முற்றத்தில் உள்ள கொடிமரத்தில் ஆயர் அமல்ராஜ் கொடியேற்றி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, நவநாள் மற்றும் சிறிய தேர்பவனி நிகழ்ச்சிகள் 9 நாட்கள் நடைபெற உள்ளன.

    அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி முதல் சனிக்கிழமை கோவை மாதாவின் மணிகள் நடத்தும் ஜெபமாலை கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜெபமாலைகள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

    5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற உள்ளது. அன்று இரவு 7.30 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடைபெறுகிறது.

    மாதா சொரூபத்துக்கு வைர கிரிடம் சூட்டப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பவனி வருகிறது. அப்போது ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பூக்களை தேரில் தூவி வழிபடுவார்கள். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்கிறார்கள்.

    மறுநாள் காலை 6-ந் தேதி காலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு பின்னர் கொடி இறக்கத்துடன் ஆண்டு திருவிழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை வில்லியனூர் திருத்தல பங்கு தந்தை பிச்சைமுத்து தலைமையில் உதவி பங்குத்தந்தை, விழா குழுவினர், பங்கு பேரவை, இளைஞர் இயக்கம், தன்னார்வ குழுவினர் மற்றும் திருத்தல பக்தர்கள் செய்து வருகின்றனர். 
    வில்லியனூர் லூர்து மாதா ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.
    வில்லியனூர் லூர்து அன்னை திருத்தல பங்குத்தந்தை பிச்சைமுத்து அடிகளார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை வில்லியனூரில் உள்ள தூய லூர்து மாதா திருத்தலம் (வில்லியனூர் மாதா) வரலாற்று சிறப்பு மிக்கதாகும். பிரான்சு நாட்டின் லூர்து நகருக்குப்பின் உலகிலேயே லூர்து மாதாவிற்கு என்று கட்டப்பட்ட 2-வது ஆலயம் இந்த ஆலயமாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிவடைந்த சனிக்கிழமை ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான பெருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி அன்று காலை 5-30 மணிக்கு புதியதாக கட்டப்பட்டுள்ள அருள்நிலை ஆலயத்தில் உதகை மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. இதனை தொடர்ந்து மாதா குளத்தை சுற்றி திருக்கொடி பவனி நடைபெறும். அதன்பின் ஆயர் கொடியேற்றி திருவிழாவினை தொடங்கி வைக்கிறார்.

    திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, தேர்பவனி போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் 9 நாட்களும் நடைபெறும். மே மாதம் 4-ந்தேதி ஜெபமாலை கண்காட்சியும், 5-ந்தேதி காலை 7-30 மணிக்கு புதுவை - கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற உள்ளது.

    அன்றைய தினம் இரவு 7-30 மணிக்கு ஆடம்பர திருவிழா தேர்பவனி நடக்கிறது. மறுநாள் காலை 6-30 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு பின்னர் கொடியிறக்கத்துடன் ஆண்டு திருவிழா நிறைவடைகிறது.

    இவ்வாறு பிச்சை முத்து அடிகளார் கூறினார்.
    நாகர்கோவில் வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நேற்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    நாகர்கோவில் வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நேற்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. அதனை தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 28-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனியும் நடக்கிறது. வருகிற 1-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருப்பலியை தொடர்ந்து சமபந்தி விருந்து நடக்கிறது.

    4-ந் தேதி காலை 6.30 மணிக்கு முதல்திருவிருந்து திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு 8.30 மணிக்கு தேர் பவனி போன்றவை நடைபெறும். நற்கருணை ஆசீர் நிகழ்ச்சியில் மறைமாவட்ட செயலாளர் அருட்பணியாளர் இம்மானுவேல் தலைமை தாங்குகிறார்.

    விழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு அருட்பணியாளர் ஜெரேமியாஸ் தலைமையில் திருவிழா திருப்பலி, மாலை 4 மணிக்கு தேர் பவனி, 5 மணிக்கு நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர். 
    சுங்கான்கடை புனித அந்தோணியார் திருத்தலத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அருட்பணியாளர் ஆல்பர்ட் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
    சுங்கான்கடை தூய அந்தோணியார் திருத்தல திருவிழா நேற்று மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா அடுத்த மாதம் 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. அதனை தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது திருப்பலிக்கு திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரி பேராசிரியர் அருட்பணி ஆல்பர்ட் தலைமை தாங்கினார். குழித்துறை மறைமாவட்ட கூட்டாண்மை மேலாளர் காட்வின் செல்வ ஜஸ்டஸ் மறையுரை ஆற்றினார்.

    28-ந் தேதி காலை 9.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள், திருப்பலி நடக்கிறது. ரொனால்டு ரெக்ஸ் திருப்பலிக்கு தலைமை தாங்குகிறார். ஜெகி வின்சென்ட் மறையுரையாற்றுகிறார். மதியம் 12 மணிக்கு அன்பு விருந்து நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டுவிழா மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது.

    2-ந் தேதி மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, நவநாள், திருப்பலி நடக்கிறது. திருப்பலிக்கு அருட்பணி ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்குகிறார். பிரான்சிஸ் சேவியர் மறையுரையாற்றுகிறார். 4-ந் தேதி மாலை 6.30 மணிக்குஆராதனையும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. மாலை ஆராதனைக்கு குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜேசுரெத்தினம் தலைமை தாங்குகிறார். மார்ட்டின் மறையுரையாற்றுகிறார். ஸ்டீபன் ஜெபிக்கிறார். இரவு 9 மணிக்கு புனிதரின் அலங்கார தேர் பவனி நடக்கிறது.

    5-ந் தேதி காலை 8.30 மணிக்கு ஆடம்பர திருவிழா கூட்டுத்திருப்பலி மற்றும் முதல் திருவிருந்து நடக்கிறது. திருப்பலிக்கு ஜேசுமரியான் தலைமை தாங்கி ஜெபிக்கிறார். பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரையாற்றுகிறார். திருப்பலியை தொடர்ந்து திருக்கொடியிறக்கம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை அருட்பணி பெஞ்சமின், திருத்தல அதிபர் பிரிம்மஸ்சிங், பங்கு இறைமக்கள், பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள் இணைந்து செய்து வருகின்றனர். 
    நாகர்கோவில் அருகே புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் அருகே புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று காலை நவநாள் திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடக்கிறது. நிகழ்ச்சியில் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்குகிறார்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் திருப்பலி, ஜெபமாலை, புகழ்மாலை, மறையுரை, பொதுக்கூட்டம் போன்றவை நடைபெறும். 28-ந் தேதி இரவு 8.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா நடக்கிறது.

    வருகிற 4-ந் தேதி காலை 6 மணிக்கு, முதல்திருவிருந்து திருப்பலி நடக்கிறது. ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு ஆடம்பர மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு தேர்ப்பவனியும் நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறும். இதில் அருட்பணியாளர் ஹிலாரியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 5 மணிக்கு நற்கருணை ஆசீர் தொடர்ந்து பொதுக்கூட்டம் போன்றவை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை சாலமோன், பங்கு அருட்பணிப்பேரவை, இறை மக்கள் செய்துள்ளனர்.
    சுங்கான்கடை தூய அந்தோணியார் திருத்தல திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    சுங்கான்கடை தூய அந்தோணியார் திருத்தல திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருக்கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. அதனை தொடர்ந்து திருப்பலி நடைபெறுகிறது. திருப்பலிக்கு திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரி பேராசிரியர் அருட்பணி ஆல்பர்ட் தலைமை தாங்குகிறார். குழித்துறை மறைமாவட்ட கூட்டாண்மை மேலாளர் காட்வின் செல்வ ஜஸ்டஸ் மறையுரை ஆற்றுகிறார்.

    28-ந் தேதி காலை 9.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள், திருப்பலி நடக்கிறது. ரொனால்டு ரெக்ஸ் திருப்பலிக்கு தலைமை தாங்குகிறார். ஜெகி வின்சென்ட் மறையுரையாற்றுகிறார். மதியம் 12 மணிக்கு அன்பு விருந்து நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டுவிழா மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது.

    2-ந் தேதி மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, நவநாள், திருப்பலி நடக்கிறது. திருப்பலிக்கு அருட்பணி ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்குகிறார். பிரான்சிஸ் சேவியர் மறையுரையாற்றுகிறார். 4-ந் தேதி மாலை 6.30 மணிக்குஆராதனையும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. மாலை ஆராதனைக்கு குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜேசுரெத்தினம் தலைமை தாங்குகிறார். மார்ட்டின் மறையுரையாற்றுகிறார். ஸ்டீபன் ஜெபிக்கிறார். இரவு 9 மணிக்கு புனிதரின் அலங்கார தேர் பவனி நடக்கிறது.

    5-ந் தேதி காலை 8.30 மணிக்கு ஆடம்பர திருவிழா கூட்டுத்திருப்பலி மற்றும் முதல் திருவிருந்து நடக்கிறது. திருப்பலிக்கு ஜேசுமரியான் தலைமை தாங்கி ஜெபிக்கிறார். பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரையாற்றுகிறார். திருப்பலியை தொடர்ந்து திருக்கொடியிறக்கம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை அருட்பணி பெஞ்சமின், திருத்தல அதிபர் பிரிம்மஸ்சிங், பங்கு இறைமக்கள், பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள் இணைந்து செய்து வருகின்றனர்.
    பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளைநகர் அண்ணா தெருவில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளைநகர் அண்ணா தெருவில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மாலை 6-30 மணிக்கு கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது

    கொடியை சேவியர் கல்லூரி முதல்வர் வின்சென்ட் பிரிட்டோ, பங்குதந்தை ஜேம்ஸ் ஆகியோர் ஏற்றினர். இதைத்தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    3-ந்தேதி மதியம் 12 மணிக்கு அசன விருந்தும், மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலியும், 6-30 மணிக்கு சப்பரபவனியும் நடக்கிறது. 4-ந்தேதி மாலை 6 மணிக்கு கல்வெட்டான்குழி பங்குதந்தை அந்தோணிகுரூஸ் தலைமையில் திருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது.
    ×