search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுங்கான்கடை புனித அந்தோணியார் திருத்தலத்தில் அருட்பணியாளர் ஆல்பர்ட் கொடியேற்றி வைத்த போது எடுத்த படம்.
    X
    சுங்கான்கடை புனித அந்தோணியார் திருத்தலத்தில் அருட்பணியாளர் ஆல்பர்ட் கொடியேற்றி வைத்த போது எடுத்த படம்.

    சுங்கான்கடை தூய அந்தோணியார் திருத்தல திருவிழா தொடங்கியது

    சுங்கான்கடை புனித அந்தோணியார் திருத்தலத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அருட்பணியாளர் ஆல்பர்ட் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
    சுங்கான்கடை தூய அந்தோணியார் திருத்தல திருவிழா நேற்று மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா அடுத்த மாதம் 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. அதனை தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது திருப்பலிக்கு திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரி பேராசிரியர் அருட்பணி ஆல்பர்ட் தலைமை தாங்கினார். குழித்துறை மறைமாவட்ட கூட்டாண்மை மேலாளர் காட்வின் செல்வ ஜஸ்டஸ் மறையுரை ஆற்றினார்.

    28-ந் தேதி காலை 9.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள், திருப்பலி நடக்கிறது. ரொனால்டு ரெக்ஸ் திருப்பலிக்கு தலைமை தாங்குகிறார். ஜெகி வின்சென்ட் மறையுரையாற்றுகிறார். மதியம் 12 மணிக்கு அன்பு விருந்து நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டுவிழா மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது.

    2-ந் தேதி மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, நவநாள், திருப்பலி நடக்கிறது. திருப்பலிக்கு அருட்பணி ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்குகிறார். பிரான்சிஸ் சேவியர் மறையுரையாற்றுகிறார். 4-ந் தேதி மாலை 6.30 மணிக்குஆராதனையும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. மாலை ஆராதனைக்கு குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜேசுரெத்தினம் தலைமை தாங்குகிறார். மார்ட்டின் மறையுரையாற்றுகிறார். ஸ்டீபன் ஜெபிக்கிறார். இரவு 9 மணிக்கு புனிதரின் அலங்கார தேர் பவனி நடக்கிறது.

    5-ந் தேதி காலை 8.30 மணிக்கு ஆடம்பர திருவிழா கூட்டுத்திருப்பலி மற்றும் முதல் திருவிருந்து நடக்கிறது. திருப்பலிக்கு ஜேசுமரியான் தலைமை தாங்கி ஜெபிக்கிறார். பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரையாற்றுகிறார். திருப்பலியை தொடர்ந்து திருக்கொடியிறக்கம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை அருட்பணி பெஞ்சமின், திருத்தல அதிபர் பிரிம்மஸ்சிங், பங்கு இறைமக்கள், பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள் இணைந்து செய்து வருகின்றனர். 
    Next Story
    ×