என் மலர்
கிறித்தவம்
பேராவூரணி ஆதனூரில் உள்ள புனிதர் செபஸ்தியார் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவில் ஆதனூர் பங்குத்தந்தை லூர்துசாமி அடிகளார் திருப்பலியை நிறைவேற்றினார்.
பேராவூரணி ஆதனூரில் புனிதர் செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா நடைபெற்றது. விழாவில் ஆதனூர் பங்குத்தந்தை லூர்துசாமி அடிகளார் திருப்பலியை நிறைவேற்றினார்.
இதில் தலைமை அருட்சகோதரி ஏஞ்சல்மேரி, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை ராபர்ட்கிளாரா, மருத்துவ பிரிவு அருட்சகோதரி சசிகலா, செயலாளர் பிரான்சிஸ் கண்டாக், பொருளாளர் ஐசக்நியூட்டன் உள்ளிட்ட சபை மக்கள் கலந்துகொண்டனர்.
முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தின் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 2 நாட்கள் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கத்தோலிக்க திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த திருத்தலத்தில் திருவிழா முன்பு செப்டம்பர் மாதம் 10 நாட்கள் நடைபெற்று வந்தது. தேர்பவனி வரும் இடத்தில் மீன்களை உலர வைத்து இருந்ததால் மாதாவின் தேர் பவனி வருவதில் இடையூறு ஏற்பட்டு வந்தது.
இதனால், செப்டம்பர் மாதத்தில் நடைபெற்று வந்த திருவிழா பங்கு மக்களின் வசதிக்காக டிசம்பர் மாதத்திற்கு மாற்றி வைக்கப்பட்டது இருப்பினும் பாரம்பரியமாக நடந்து வந்த செப்டம்பர் மாத திருவிழாவை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 2 நாட்கள் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு இந்த திருத்தலத்தில் தேதி படி திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை, வழிபாடு, நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தது. 2-ம் நாளான இன்று(வியாழக்கிழமை) காலை திருப்பலி, முதல் திருவிருந்து, மாலை 5.30 மணிக்கு தேரோடும் வீதிகளில் நற்கருணை பவனி, தொடர்ந்து அங்குள்ள வளாகத்தில் நற்கருணை ஆராதனை ஆகியவை நடக்கிறது. நற்கருணை ஆராதனை நிகழ்ச்சிக்கு பங்கு தந்தை ஆன்றணி அல்காந்தர் தலைமை தாங்குகிறார். ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை, இணை பங்கு தந்தையர்கள், பங்கு பேரவை துணைத் தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், பொருளாளர் பெனி, துணைச் செயலாளர் தினகரன் மற்றும் பங்கு மக்கள், பங்கு நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

தூத்துக்குடி அருகே தருவைகுளம் அதிதூதா் மிக்கேல் ஆலய பெருவிழாவை முன்னிட்டு தினமும் காலை திருப்பலியும், மாலை ஆராதனை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது.
தூத்துக்குடி அருகே தருவைகுளம் அதிதூதா் மிக்கேல் ஆலய பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற திருப்பலிக்கு சிறுமலர் குருமடம் சகாயஜோசப் தலைமை தாங்கினார். அழகப்பபுரம் உதவி பங்குதந்தை நிலவன் முன்னிலை வகித்தார். தென்மண்டல பள்ளிகளின் கண்காணிப்பாளா் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பங்கு தந்தை வின்சென்ட் ஆகியோர் மறையுரையாற்றினர். விழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும், மாலை ஆராதனை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது. முக்கிய நிகழ்வான 9-ம் திருவிழா அன்று தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் மாலை ஆராதனை நடக்கிறது. 10-ம் திருவிழா அன்று காலையில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைகுரு பன்னீா் செல்வம் தலைமையில் மண்ணின் மைந்தா் குருக்கள் திருப்பலி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை வின்சென்ட், உதவி பங்குத்தந்தை மார்ட்டின் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா நாளை (புதன்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கத்தோலிக்க திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த திருத்தலத்தில் திருவிழா முன்பு செப்டம்பர் மாதம் 10 நாட்கள் நடைபெற்று வந்தது. தேர்பவனி வரும் இடத்தில் மீன்களை உலர வைத்து இருந்ததால் மாதாவின் தேர் பவனி வருவதில் இடையூறு ஏற்பட்டு வந்தது.
இதனால், செப்டம்பர் மாதத்தில் நடைபெற்று வந்த திருவிழா பங்கு மக்களின் வசதிக்காக டிசம்பர் மாதத்திற்கு மாற்றி வைக்கப்பட்டது இருப்பினும் பாரம்பரியமாக நடந்து வந்த செப்டம்பர் மாத திருவிழாவை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 2 நாட்கள் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு இந்த திருத்தலத்தில் தேதி படி திருவிழா நாளை(புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நாளை மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை, வழிபாடு, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. 2-ம் நாளான நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி, முதல் திருவிருந்து, மாலை 5.30 மணிக்கு தேரோடும் வீதிகளில் நற்கருணை பவனி, தொடர்ந்து அங்குள்ள வளாகத்தில் நற்கருணை ஆராதனை ஆகியவை நடக்கிறது. நற்கருணை ஆராதனை நிகழ்ச்சிக்கு பங்கு தந்தை ஆன்றணி அல்காந்தர் தலைமை தாங்குகிறார். ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை, இணை பங்கு தந்தையர்கள், பங்கு பேரவை துணைத் தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், பொருளாளர் பெனி, துணைச் செயலாளர் தினகரன் மற்றும் பங்கு மக்கள், பங்கு நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
இதனால், செப்டம்பர் மாதத்தில் நடைபெற்று வந்த திருவிழா பங்கு மக்களின் வசதிக்காக டிசம்பர் மாதத்திற்கு மாற்றி வைக்கப்பட்டது இருப்பினும் பாரம்பரியமாக நடந்து வந்த செப்டம்பர் மாத திருவிழாவை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 2 நாட்கள் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு இந்த திருத்தலத்தில் தேதி படி திருவிழா நாளை(புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நாளை மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை, வழிபாடு, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. 2-ம் நாளான நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி, முதல் திருவிருந்து, மாலை 5.30 மணிக்கு தேரோடும் வீதிகளில் நற்கருணை பவனி, தொடர்ந்து அங்குள்ள வளாகத்தில் நற்கருணை ஆராதனை ஆகியவை நடக்கிறது. நற்கருணை ஆராதனை நிகழ்ச்சிக்கு பங்கு தந்தை ஆன்றணி அல்காந்தர் தலைமை தாங்குகிறார். ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை, இணை பங்கு தந்தையர்கள், பங்கு பேரவை துணைத் தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், பொருளாளர் பெனி, துணைச் செயலாளர் தினகரன் மற்றும் பங்கு மக்கள், பங்கு நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
சிறு தோல்விகளை சுட்டிக்காட்டி, பெரிய வெற்றிகளுக்கு நேராக நாம் போகக்கூடாதபடி தடை செய்ய விரும்பும் சாத்தானுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மோசே கர்த்தருடைய சன்னிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை. பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான். (யாத் 6:12)
பட்டத்து இளவரசன் ஒருவன் எதிரி நாட்டின் மீது போர்த் தொடுக்கப் போகும் பெரிய படைக்கு தலைமை தாங்கி செல்ல ஆயத்தமாகிக் கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக எலி ஒன்று குறுக்கிடவே வாளை எடுத்துக் கொண்டு அதனை வெட்ட துரத்தினான். அவன் எவ்வளவோ முயன்றும் முடியாமல் எலி தப்பியோடிவிட்டது. சோர்ந்து போன இளவரசன், கேவலம் ஒரு எலியை கூட வெட்ட இயலாத நான் எப்படி எதிரி நாட்டோடு சண்டையிட்டு வெற்றி பெற போகிறேன் என்று எண்ணி, யுத்தத்திற்கு போகாமல் பின்வாங்கினான்.
சில நேரங்களில் இந்த இளவரசனை போல நாமும் சிறு, சிறு தோல்விகளை கண்டு சோர்ந்து போய், நம்மை நாமே எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று முடிவு செய்துவிடுகின்றோம். இஸ்ரவேல் மக்களை விடுவிக்கும்படி எகிப்து சென்ற மோசேக்கு தொடக்கத்தில் அந்த மக்களே செவி கொடுக்கவில்லை. எனவே சோர்ந்து போன அவன், இவர்களே எனக்குச் செவி கொடுக்காதபோது, எகிப்தின் ராஜா எனக்கு எப்படிச் செவிகொடுப்பான் என்று தயங்கி நின்றான். ஆனாலும் அதே மோசேயின் முன்னால் தேவன் அந்த நாட்டு மன்னனையே அடங்கிப் போகவைத்தார்.
நாம் பெரிய பலசாலிகளாக இருந்தாலும், சில நேரங்களில் சில சின்ன விஷயங்களில் நாம் தோற்றுப் போய் விடக்கூடும். நாம் மிகப்பெரிய திறமை சாலிகளாக இருந்தாலும், சாதாரண சில காரியங்களில் அந்தத் திறமை நமக்கு கை கொடுக்காமல் போக முடியும். மிக வலிமையான ஆவிக்குரிய நிலைகளை உடைய பலர் சில சின்னக்காரியங்களில், சாதாரண மனிதன் அடையும் வெற்றியைக் கூட அடைய முடியாமல், தோல்வி அடையும் வேளைகள் உண்டு. ஆனாலும் இந்தச் சின்ன தோல்விகள், பெரிய வெற்றிகளுக்கு நாம் தகுதியானவர்கள் அல்ல என்பதை முடிவு செய்துவிட முடியாது.
ஏசுவை சிலுவையின் பாதையில் பின்பற்ற விரும்பிய பேதுருவால் அது கூடவில்லை. ஆனாலும் கர்த்தருடைய வேளை வந்தபோது, பேதுரு அதை விட மிகக்கடுமையான சூழ்நிலைகளிலும் கர்த்தருடைய பலத்தில் மிகப்பெரிய சாதனைகளை புரிந்தான். முதல் தோல்வி, முற்றிலும் தோல்வி என்ற நிலை ஏற்படவில்லை.
சிறிய சபை கூடுகையில் சில நிமிடங்கள் சில வார்த்தைகளை பிரசங்கிக்க வலுவின்றி நின்ற பலர், பிற்காலத்தில் லட்சம் பேர்களுக்கு முன்னால் நின்று பவுலைப் போல தைரியமாகப் பிரசங்கித்திருக்கிறார்கள். ஆம், சிறு தோல்விகளை சுட்டிக்காட்டி, பெரிய வெற்றிகளுக்கு நேராக நாம் போகக்கூடாதபடி தடை செய்ய விரும்பும் சாத்தானுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
– சாம்சன் பால்
கடவுளுக்கு தூரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அகற்றி விட்டு, கடவுளை நேசிக்க நாம் நெருங்கி வர வேண்டும் என்ற உணர்வை பெற வேண்டும்.
“நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப்போல, மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக்கொண்ட பேரினம் ஏதாகிலும் உண்டா?“ நம் தந்தையாகிய கடவுள் மனித உயிர்கள் ஒவ்வொன்றையும் நேசிக்கின்றவர். அவர் எப்போதும் தன்னுடைய நெருங்கிய உறவில் வாழ வேண்டும் என்று விரும்புகின்றவர். (இணைச்சட்டம் 4:7)
இதனை, தொ.நூல் 2:15 வசனம் இவ்வாறு எடுத்துக்கூறுகிறது; மனித குலத்தை படைத்த கடவுள், அவர்களை ஏதோன் தோட்டத்தில் குடியிருக்க செய்தார். கடவுளோடு நெருக்கமான உறவில் வாழ வேண்டிய மனிதன் சாத்தானின் சூழ்ச்சியில் வீழ்ந்து, பாவம் செய்து கடவுளுக்கு தூரமாக போனான் (தொ.நூல் 3:9-10). பாவத்தினால் கடவுளை விட்டு தூரமாக போக வேண்டும், அவரிடம் நெருங்கி வரக்கூடாது என்ற உணர்வு மனிதனை இன்னும் வாட்டி வதைக்கிறது.
இன்றைய காலசூழ்நிலையில், போதை பழக்கத்திற்கு அடிமையாகி மீளமுடியாமல் தவிப்பது, ஆடம்பர வாழ்க்கையில் உண்மை ஆன்மிகத்தை தொலைத்திருப்பது, பணப்பேராசையால் வீழ்ந்து கிடப்பது, மனித சமூகத்தில் நீதி, நியாயங்களை கண்டு பிடிக்கமுடியாமல் திணறிக்கொண்டிருப்பது, இவைகள் யாவுமே கடவுளை விட்டு தூரமாகவே இருக்க வேண்டும் என்ற பாவ அடிமைத்தனத்தை காட்டுகிறது.
எனவே, கடவுளுக்கு தூரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அகற்றி விட்டு, கடவுளை நேசிக்க நாம் நெருங்கி வர வேண்டும் என்ற உணர்வை பெற வேண்டும். இயேசுவின் சிலுவைப்பாதைகளை தியானிக்க, தியானிக்க கடவுள் நம்மோடு கொண்டுள்ள நெருக்கமான உறவு புரியும். அதனால் தான் தவக்காலத்தில் ஜெபத்தில் ஈடுபடுவது தலையானது.
மேலே கூறிய இணைச்சட்ட நூல் வசனம் என்பது, நம் உள்ளத்தில் பதிக்கப்பட வேண்டிய வசனம். தவக்காலம் உண்மையான மாற்றத்தை கொண்டுவர, கடவுளின் நெருக்கமான அன்புறவை அதிகமாக தியானிப்போம். இடைவிடாது ஜெபத்தில் நிலைத்திருப்போம். இறைவனோடு நெருக்கமான உறவில் வாழ ஆசைப்படுவோம்.
அருட்திரு. வே.பீட்டர்ராஜ், பங்குத்தந்தை, ஆத்தூர்.

இங்கு பல அற்புதங்களும், அருள் அடையாளங்களும் மக்களுக்கு கிடைக்கிறது. இப்போது ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் அற்புதம் நிகழ்த்தும் சிறப்பு ஜெப வழிபாடுகள் காலை 10.30 மணி முதல் நடைபெறுகிறது.
குழித்துறை மறைமாவட்டத்தில் அமைந்துள்ள முளகுமூடு தூய மரியன்னை ஆலயம் முன்பு கோட்டார் மறை மாவட்டத்தின் கீழும், அதற்கு முன்னதாக கொல்லம் மறை மாவட்டத்தின் கீழும் இருந்தது. இது பழமையும், பாரம்பரியமும் மிக்க கார்மல் மறைபரப்புப்பணி மையங்களுள் ஒன்று.
1847-ம் ஆண்டிற்கு முன்பே முளகுமூடு பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்தவ சமூகமும், ஆலயமும் இருந்துள்ளது என்று இயேசு சபையினரின் மறைப்பணி செயல்பாட்டு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில் 1860-ல் மறைப்பணியாற்ற கார்மல் சபை துறவியாக இந்தியா வந்த அருட்தந்தை விக்டர் வெல்யுர் பங்குதந்தையாக நியமிக்கப்பட்டு முளகுமூடு பங்கு உருவாக்கப்பட்டது. 19-ம் நூற்றாண்டில், குறிப்பாக பங்கு நிறுவப்பட்டு 1860-ம் ஆண்டளவில், முளகுமூடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நிகழ்ந்த கொடுமைகளை, ஒடுக்கு முறைகளை கடுமையாக எதிர்த்து போராடினார் அருட்தந்தை விக்டர். அதோடு நில்லாமல் மக்கள் ஓட்டுக்கூரை வீடுகளை கட்ட வலியுறுத்தியதோடு, ஓட்டு தொழிற்சாலை ஒன்றையும் முளகுமூட்டில் நிறுவினார்.
ஓட்டுத்தொழிற்சாலை மூலம் பெறப்பட்ட வருமானத்தை ஆதரவற்ற அனாதை குழந்தைகளின் வாழ்வுக்காக செலவிட்டார். அந்த வகையில் ஏறத்தாழ ஆயிரம் ஆதரவற்றோரை பேணி பாதுகாத்து வந்தார். அந்த ஓட்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஓடுகளை பத்மநாபபுரத்திலுள்ள திருவிதாங்கூர் அரண்மனை கூரைகளில் இன்றும் நாம் காணலாம்.
அருட்தந்தை விக்டர், வாழ்வு குறித்து அருட்பணியாளர் ஆன்ட்ரு, 1923-ம் ஆண்டு ‘அருட்தந்தை விக்டர் தென்னிந்தியாவின் அப்போஸ்தலர்’ என்ற பெயரில் புத்தகம் எழுதி வரலாற்று பதிவு செய்துள்ளார்.
150-ம் ஆண்டு ஜூபிலி
முளகுமூடு பங்கு பழைய ஆலயமானது, 1910-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. மீண்டும் 1981-ம் ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதி கான்கிரீட் கூரையாக மாற்றப்பட்டது. மீண்டும் பங்கின் 150-ம் ஆண்டு ஜூபிலியை தொடர்ந்து 5-9-2014 அன்று புதுபொலிவுடன் புதுப்பிக்கப்பட்டது.
இத்தகைய சிறப்புமிக்க தூய மரியன்னை ஆலய பீடத்தின் இருபுறமும் முறையே 300 ஆண்டு பழமையான, பெல்ஜியத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அன்னை மரியின் திருஉருவ வரைபடமும், நமது மறைமாவட்ட பாதுகாவலர் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் அங்கீகரிக்கப்பட்ட முதல் வரை படமும் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு பல அற்புதங்களும், அருள் அடையாளங்களும் மக்களுக்கு கிடைக்கிறது. இப்போது ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் அற்புதம் நிகழ்த்தும் சிறப்பு ஜெப வழிபாடுகள் காலை 10.30 மணி முதல் நடைபெறுகிறது.
பசிலிக்காவாக...
14-1-2016 அன்று போப் ஆண்டவரின் சிறப்புத்தூதர் முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்துக்கு வந்த போது இங்கு நம்பிக்கை ஆழமாய் வேரூன்றியுள்ளதாக பாராட்டினார். தொடர்ந்து முளகுமூடு பங்குத்தந்தை அருட்பணியாளர் டொமினிக் கடாட்ச தாஸ், முளகுமூடு பங்கை பசிலிக்காவாக அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இது குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயர் ஜெரோம் தாஸ் வறுவேலால் ஏற்கப்பட்டது.
மறைமாவட்ட ஆயர் அதனை சிறப்பு வேண்டுகோளாக மதுரை பேராயர், தமிழ்நாடு ஆயர் பேரவைத்தலைவர், இந்திய ஆயர் பேரவை தலைவர் ஆகியோருக்கு அனுப்பி, அதற்கான தடையில்லா சான்றினை கோரினார். அதன்படி அவர்களால் அச்சான்று போப் ஆண்டவரின் தூதரிடம் வழங்கப்பட்டு, ரோம் நகரில் போப் ஆண்டவர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.
இறுதியாக வத்திக்கானிலிருந்து ஜூன் 9-ந் தேதி முளகுமூடு தூய மரியன்னை ஆலயம், மைனர் பசிலிக்காவாக உயர்த்தி ஆணை வழங்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இவ்வாணையால் நமது தூய மரியன்னை பசிலிக்கா, தமிழகத்தின் 7-வது பசிலிக்காவாக உயர்த்தப்பட்டுள்ளது.
அன்னையின் அருள் நிறைந்த முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா, பங்கு மக்களின் நம்பிக்கைக்கு உயிரூட்டும் தலமாக மட்டுமல்லாது, அன்னையின் அருளாசிகளை வேண்டும் அனைத்து மக்களுக்கான திருப்பயண ஆன்மிக தலம் ஆகட்டும்.
முளகுமூடு தூய மரியன்னை ஆலயமானது 9-6-2020 அன்று போப் ஆண்டவரால் தமிழகத்தின் 7-வது பசிலிக்காவாக உயர்த்தப்பட்டது.
பேரருட்தந்தை டொமினிக் எம்.கடாட்ச தாஸ், தூய மரியன்னை பசிலிக்கா அதிபர்,
முளகுமூடு.

தலைவரின் விருப்பத்தை அறிந்தும், அதன்படி செயல்படாத முதன்மை பணியாளரை கொடுமையாக தண்டித்து, நம்பிக்கை துரோகிகள் இடத்தில் நிறுத்தப்படுவர்.
கீழ் இருக்கும் உவமையை யூதேயாவில் மக்களிடத்திலும், ஒலிவ மலையில் சீடரிடத்திலும் இயேசு கூறுகிறார்.
“உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது, உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும், மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாகஇருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.
எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.”
அப்பொழுது பேதுரு, “ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?” என்று கேட்டார். அதற்கு இயேசு கூறியது, “தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்க தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார்?, தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியை செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர், அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந்தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும், மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில், அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து, அவனைக் கொடுமையாகத் தண்டித்து, நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.
தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும், அவர் விருப்பப்படி செயல் படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான். ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல், அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன், அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்’’ என்றார்.
இயேசுவின் இரண்டாம் வருகையை இந்த உவமை விளக்குகிறது. இயேசுவின் இரண்டாம் வருகை முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இறை மக்கள் அதில் நாட்டம் கொண்டவர்களாய் நடந்து கொள்ளவில்லை என்பதையும், அப்படி நடந்து கொள்ளாதவர்களுக்கு எத்தகைய தீர்ப்பு வழங்கப்படும் என்பதையும் விளக்குகிறது. தகுந்த தயாரிப்புடன், இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்பார்ப்பவர்களுக்கு இறுதிநாள் தீர்ப்பில் கரிசனமும், உரிய மரியாதையும் கிடைக்கும். அதுவே, தயாரிப்பின்றி இருப்பவர்களுக்கு வாதைகளும், அவஸ்தைகளுமே மிஞ்சும். அதேபோல, இயேசுவின் இரண்டாம் வருகை, யாரும் எதிர்பார்க்காத நேரத்திலே நிகழும் என உவமை வழியாக விளக்குகிறார்.
தலைவரின் விருப்பத்தை அறிந்தும், அதன்படி செயல்படாத முதன்மை பணியாளரை கொடுமையாக தண்டித்து, நம்பிக்கை துரோகிகள் இடத்தில் நிறுத்தப்படுவர், என்பதன் வாயிலாக மக்களை நல்வழிப்படுத்தக்கூடிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு வலுவான எச்சரிக்கை வழங்கப்பட்டிருக்கிறது.

ஆலஞ்சி தூய சவேரியார் ஆலயத்தில் அருட்பணியாளர் குருசு எம். எரோணிமுஸ் 100-வது நாள் நினைவு திருப்பலி நடந்தது. இதில் 5 ஆயர்கள் கலந்து கொண்டனர்.
அருட்பணியாளர் குருசு எம். எரோணிமுஸ் -ன் 100-வது நாள் நினைவு திருப்பலி அவரது சொந்த ஊரான ஆலஞ்சி தூய சவேரியார் ஆலயத்தில் நடந்தது. அருட்பணியாளரின் மருமகனும் மீரட் மறைமாவட்ட ஆயருமான பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றினார். கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் முன்னுரை வழங்கினார். சிவகங்கை முன்னாள் ஆயர் சூசைமாணிக்கம் மறையுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியையொட்டி அருட்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன் “மனநல ஆற்றுப்படுத்துதல் கையேடு” என்ற நூலை படைத்து அருட்பணியாளருக்கு அர்ப்பணமாக்கினார்.
கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அருட்பணியாளர் எல்பின்ஸ்டன் ஜோசப் நிறைவுரை ஆற்றினார்.
இதில் அகமதபாத் ஆயர் ரெத்தினசுவாமி, மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மா பாவுலோஸ், பாளையங்கோட்டை ஆயர் அந்தோணிசாமி, முன்னாள் ஆயர் ஜீடு பால்ராஜ் ஆகியோர் பங்கேற்று ஜெபித்தனர்.
நிகழ்ச்சியில், அருட்பணியாளர் குருசு எம். எரோணிமுஸ் நிறுவிய வௌ்ளமடம் அகத்தியர் முனி குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனையின் தலைவர் அருட்பணியாளர் லியோண் கென்சன், மேலாண்மை இயக்குனர் பேட்ரிக் சேவியர், மருத்துவமனை பணியாளர்கள், கோட்டார் மற்றும் குழித்துறை மறை மாவட்டங்களில் இருந்து அருட்பணியாளர்கள், பாளையங்கோட்டை, தூத்துக்குடி போன்ற பிற மறைமாவட்டங்களை சேர்ந்த அருட்பணியாளர்கள், ஆலஞ்சி பங்குத்தந்தை. மரிய சூசை வின்சென்ட், பங்குப்பேரவையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பலியை தொடர்ந்து அருட்பணியாளரின் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை அருட்பணியாளரின் தம்பி ஜோசப் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

சிறப்புத் திருப்பலியை தொடர்ந்து பல சமயத்தவரும் இணைந்து பங்கு இறை மக்கள் முன்னிலையில் பங்குத்தந்தை அற்புதஅரசு அடிக்கல் நாட்டினர்.
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா முத்துப்பட்டணம் கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் ஆலயம் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்றது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும் எல்லா சமயத்தவரும் வந்து வழிபட்டுச் செல்லும் தலமாகவும் விளங்குகிறது.
இங்கு மக்களுக்குப் பயன்படுகின்ற வகையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.தற்போது புதிதாக ஆரோக்கியமாதா கெபியும், மணிக்கூண்டு கோபுரமும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.புதிய கட்டிடத்திற்கான பணிகள் அனைத்து மக்களின் பொருளுதவியோடும் நடைபெறுகிறது.
காலையில் சிறப்புத் திருப்பலியை தொடர்ந்து பல சமயத்தவரும் இணைந்து பங்கு இறை மக்கள் முன்னிலையில் பங்குத்தந்தை அற்புதஅரசு அடிக்கல் நாட்டினர். விழாவிற்கான ஏற்பாட்டை கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

சாத்தான்குளம் அருகே நெடுங்குளம் உலக ரட்சகர் ஆலய திருவிழா 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் முன்னாள் பங்கு தந்தை ஸ்டாலின் தலைமை தாங்கி கொடியேற்றினார்.
சாத்தான்குளம் அருகே நெடுங்குளம் உலக ரட்சகர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் முன்னாள் பங்கு தந்தை ஸ்டாலின் தலைமை தாங்கி கொடியேற்றினார்.
இதையடுத்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஆரோக்கிய அமல்ராஜ் மறையுரை நடத்தினார். இதில் பங்கு தந்தை சேவியர் கிங்ஸ்டன் உள்ளிட்ட பங்கு மக்கள் பலர் பங்கேற்றனர். விழா நாட்களில தினமும் காலை திருப்பவனி, ஜெபமாலை, திருப்பலி, மாலை மறையுரை, நற்கருணை ஆசீர் உள்ளிட்டவை நடைபெறுகிறது. நிறைவு நாளில் உலக ரட்சகரின் சப்பர பவனி, தொடர்ந்து திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை சேவியர் கிங்ஸ்டன் தலைமையில் பங்குமக்கள், ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், டீக்கடைகள், ஓட்டல்கள் மற்றும் பலசரக்கு கடைகள் கடந்த மாதம் 27-ந் தேதி முதல் மூடப்பட்டன.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த பேராலய ஆண்டு பெருவிழா கடந்த மாதம்(ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. கொரோனா பரவலை தடுக்க இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
மேலும் கலெக்டர் உத்தரவின் பேரில் வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், டீக்கடைகள், ஓட்டல்கள் மற்றும் பலசரக்கு கடைகள் கடந்த மாதம் 27-ந் தேதி முதல் மூடப்பட்டன. இந்த நிலையில் ஆண்டு பெருவிழா முடிவடைந்ததையொட்டி 17 நாட்களுக்கு பிறகு வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்ய நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் வெளியூர்களில் இருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலம் வந்திருந்த பக்தர்கள் பேராலயத்திற்குள் சென்று பிரார்த்தனை செய்தனர். பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்பட்டதால் வேளாங்கண்ணியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.