என் மலர்
கிறித்தவம்
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா செங்குடி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நிறைவடைந்ததையடுத்து கொடியிறக்கம் நடைபெற்றது.
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா செங்குடி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு திருப்பலி, செமாலை, பாவமன்னிப்பு வழிபாடு, தேர்பவனி, சப்பரபவனி நடைபெற்றது.
தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்குத்தந்தைகள் திரவியம், பிரிட்டோஜெயபால், மரியஅந்தோனி, அம்புரோஸ், ஜான் பிரிட்டோ, ஜோசப்செங்கோல், ராஜஜெகன், யூஜீன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை வின்சென்ட்அமல்ராஜ் மற்றும் கிராம நிர்வாகிகள் தலை மையில் செங்குடி பங்கு மக்கள் செய்திருந்தனர்.

செட்டிச்சார்விளை குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம் அர்ச்சிப்பு விழா நடந்தது. விழாவில் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்து கொண்டு ஆலயத்தை அர்ச்சித்து வைத்தார்.
செட்டிச்சார்விளை தூய குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம் புதுப்பித்து அர்ச்சிப்பு விழா மற்றும் கொடியேற்றம் நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் கோட்டார் மறை மாவட்ட முன்னாள்ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி புதுப்பிக்கப்பட்ட புதிய ஆலயத்தை ஜெபித்து அர்ச்சித்து திறந்து வைத்தார்.
அதைதொடர்ந்து வியாகுலமாதா புதிய குருசடியையும் அர்ச்சித்து திறந்து வைத்து திருப்பலி நிறைவேற்றினார். பங்குத்தந்தை டேவிட் மைக்கேல் முன்னிலை வகிக்தார். குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் இயேசு ரத்தினம், மறை மாவட்ட செயலர் ரசல்ராஜ், அருட்பணி கிலாரி ஆகியோர் சிற்பக் கலைஞர் ஜான் குமாருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து நினைவுபரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் ரதி ஏஜென்சி உரிமையாளரும், தி.மு.க. மேற்கு மாவட்ட துணை செயலாளருமான ஜான் கிறிஸ்டோபர் உள்பட பங்கு மக்கள், பங்கு பேரவையினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவானது அரசு வழிகாட்டிதலின்படி அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, பங்கு பேரவை துணைத் தலைவர் மனோகரன், செயலாளர் ததேசாள், துணை செயலாளர் ஜஸ்டின் தாஸ், பொருளாளர் செல்வன் கபரியல் மற்றும் பங்கு மக்கள், பங்கு பேரவையினர் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

ஆத்தூர் அருகே புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாதா தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
ஆத்தூர் அருகே புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய திருவிழா நடந்தது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. கடந்த 1-ந்தேதி மணப்பாடு மறைவட்ட குரு இருதயராஜ் தலைமையில் நடந்த திருப்பலியில் சிறுவர்களுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. மாலையில் நற்கருணை பவனி, மாலை ஆராதனை நடைபெற்றது. நேற்று முன்தினம் காலையில் திருப்பலி, தூய ராஜகன்னி மாதாவுக்கு மகுடம் அணிவித்தல், மதியம் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இரவில் ராஜகன்னி மாதா தேர் பவனி நடைபெற்றது.
விழாவின் சிகர நாளான நேற்று காலையில் ராஜகன்னி மாதா தேரின் முன்பாக திருப்பலி நடைபெற்றது. காலையில் திருவிழா திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து தூய ராஜகன்னி மாதா தேர் பவனி நடைபெற்றது. ஏற்பாடுகளை பங்குதந்தை பிராங்கிளின் தலைமையில், ஊர் கமிட்டியினர் செய்து இருந்தனர்.

காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசா ஆலய திருவிழாவை முன்னிட்டு வண்ண பூக்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித குழந்தை தெரசா தேர்பவனி ஆலய வளாகத்தில் நடந்தது.
காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசா ஆலய திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக விழா நாட்களில் தினமும் மாலை திருப்பலி மட்டும் நடத்தப்பட்டது.
விழாவின் இறுதி நாளான நேற்று காலை 7 மணிக்கு ஆலய பங்குதந்தை பெஞ்சமின் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடந்தது. மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு பங்குதந்தை ஜெயப்பிரகாஷ் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. தொடர்ந்து வண்ண பூக்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித குழந்தை தெரசா தேர்பவனி ஆலய வளாகத்தில் நடந்தது.
இதில் குறைவான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து திருவிழா கொடி இறக்கத்துடன் நிறைவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு பேரவை மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

தூத்துக்குடி அருகே தருவைகுளம் மிக்கேல் அதிதூதா் ஆலய பெருவிழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி மட்டும் முக்கிய வீதிகளில் நடந்தது.
தூத்துக்குடி அருகே தருவைகுளம் மிக்கேல் அதிதூதா் ஆலய பெருவிழா, கடந்த 20-ந் தேதி சிறுமலர் குருமடம் சகாயஜோசப் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஆராதனை, நற்கருணை ஆசீர் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான 9-ம் திருவிழா அன்று தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் மாலை ஆராதனை நடந்தது.
10-ம் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைகுரு பன்னீா் செல்வம் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு பாடற்திருப்பலி நடந்தது. விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேர் ஆலயத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. சப்பர பவனி மட்டும் முக்கிய வீதிகளில் நடந்தது. நிகழ்ச்சியில் பாதிரியார்கள் மரியஅரசு, தோமாஸ், ஞானப்பிரகாசம், சூசைராஜா, பனிமயம், சர்ச்சில், மார்ட்டின், தினேஷ் மற்றும் திரளான பங்கு மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை வின்சென்ட், உதவி பங்கு தந்தை மாா்ட்டின் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.

செட்டிச்சார்விளை தூய குழந்தை இயேவின் தெரசாள் ஆலய அர்ச்சிப்பு விழா இன்று நடக்கிறது. தொடர்ந்து 10-ந் தேதிவரை திருவிழா நடைபெறுகிறது.
செட்டிச்சார்விளை தூய குழந்தை இயேவின் தெரசாள் ஆலய அர்ச்சிப்பு விழா மற்றும் ஆலய திருவிழா கொடியேற்றம் இன்று (வியாழக் கிழமை) நடக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு புகழ் மாலை, தொடர்ந்து திருக்கொடி பவனி, மாலை 6 மணிக்கு கொடியேற்றம் போன்றவை நடைபெறுகிறது. பின்னர் கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் புதுப்பிக்கப்பட்ட புதிய ஆலயத்தை ஜெபித்து அர்ச்சித்து திறந்து வைக்கிறார்.
பங்குத்தந்தை டேவிட் மைக்கிள் முன்னிலை வகிக்கிறார். தொடர்ந்து திருப்பலி நடக்கிறது. ஆலய திருவிழா அடுத்த மாதம் 10-ந் தேதி வரை நடக்கிறது.
8-ம் நாள் விழாவில் காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியை குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஏசு ரத்தினம் தலைமை தாங்கி நிறைவேற்றுகிறார். பங்குத்தந்தை மார்ட்டின் மறையுரை யாற்றுகிறார். 9-ம் நாள் விழா மாலை 6 மணிக்கு முள்ளூர்துறை பங்குத்தந்தை ஜக்ஸஸ் இளங்கோ திருப்பலி நிறைவேற்றுகிறார்.
10-ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் சகாய தாசு மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடக்கிறது.
அடுத்த மாதம் 10-ந் தேதி திருவிழா நிறைவு நாளில் காலை 8 மணிக்கு அருட்பணியாளர் மரிய அற்புதம் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் டேவிட்மைக்கேல் மறையுரையாற்றுகிறார். திருவிழா நிகழ்ச்சிகள் அரசின் வழிகாட்டுதல் படி நடைபெறும் என பங்கு தந்தை மற்றும் பங்குபேரவையினர் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை டேவிட் மைக்கேல், பங்கு பேரவை துணைத் தலைவர் மனோகரன், செயலாளர் ததேசாள், துணைச் செயலாளர் ஜஸ்டின் தாஸ், பொருளாளர் செல்வன் கபிரியல் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசா ஆலய திருவிழாவின் இறுதி நாளான இன்று (வியாழக்கிழமை) திருவிருந்து பங்கு தந்தை பெஞ்சமின் தலைமையில் நடக்கிறது.
காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசா ஆலய ஆண்டு திருவிழா கடந்த 27-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஆலய பங்கு தந்தை பெஞ்சமின், புதுக்கடை ஆலய பங்குதந்தை ஜீஸ் ரைமண்ட், வெள்ளையம்பலம் பங்கு தந்தை எட்வின் ஆகியோர் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து புதுக்கடை பங்கு தந்தை ஜீஸ் ரைமண்ட் தலைமையில் முதல் நாள் திருப்பலி நடந்தது.
பின்னர் விழா நாட்களில் தினமும் மாலையில் மட்டும் திருப்பலி நடத்தப்பட்டு வந்த நிலையில் விழாவின் இறுதி நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து பங்கு தந்தை பெஞ்சமின் தலைமையில் நடக்கிறது. மாலை 5 மணிக்கு ஜெபமாலை, 5.30 மணிக்கு திருப்பலி, 6 மணிக்கு ஆலய வளாகத்தை சுற்றி தேர்பவனி நடக்கிறது. பிறகு திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா முடிவடைகிறது.

தூத்துக்குடி தாளமுத்துநகா் தூய மடு ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகா் தூய மடு ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட குரு ரோலிங்டன், வடக்கலூர் பங்குதந்தை ஜேம்ஸ் அமிர்தராஜ், தாளமுத்துநகர் துணை பங்குதந்தை பிபின் ஆகியோர் கலந்து கொண்டு திருப்பலி நடத்தினர். நிகழ்ச்சியில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தினமும் மாலையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 10-ம் திருவிழா அன்று விடிவெள்ளி குடிநோய் மருத்துவ ஆலோசனையகம் இயக்குனா் ரெக்ஸ் தலைமையில் மாலை ஆராதனை நடக்கிறது. மறைமாவட்ட நூற்றாண்டு விழா பொறுப்பாளா் ஜேம்ஸ் விக்டா் மறையுரையாற்றுகிறார். 11-ம் திருவிழா அன்று காலை 6 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலி மற்றும் முதல் திருவிருந்து திருப்பலி மறைமாவட்ட முதன்மைக்குரு பன்னீா்செல்வம் தலைமையில் நடக்கிறது. மறைமாவட்ட பொருளாளா் சகாயம் மறையுரையாற்றுகிறார். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை நெல்சன், துணைப்பங்கு தந்தை பிபின் மற்றும் திரு இருதய சகோதரிகள், ஊா் நிர்வாகிகள், அன்பியங்கள், பங்கு மக்கள் செய்து உள்ளனர்.

திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் அற்புதநகர் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா தொடங்கியது. 6-ந்தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆரோக்கிய அன்னையின் சப்பர பவனி வீதி உலா நடக்கிறது.
திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் அற்புதநகர் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு சூசை அறநிலையம் இயக்குனர் அருட்தந்தை பிரமில்டன் தலைமை தாங்கினார். நிதி நிர்வாகி அருட்தந்தை பிரதீப் மறையுரையாற்றினார். முன்னதாக சூசை அறநிலைய ஆன்மிக இயக்குனர் அருட்தந்தை செட்ரிக் பிரிஸ் தலைமையில் ஜெபமாலை பவனி நவநாள் திருப்பலி நடந்தது.
விழாவின் 2-ம் நாளான இன்று (புதன்கிழமை) ஆலந்தலை துணை பங்குத்தந்தை அமல்ராஜ் தலைமையில் திருப்பலியும், நற்கருணை ஆசிரும் நடக்கிறது. 3-ம் நாள் முதல் 8-ம் நாள் வரையில் அருட்தந்தைகள் ஜான்சன், வளன் அரசு, மைக்கேல் ராயப்பன், பீட்டர் பாஸ்டின், அருமைநாதன், பபிஸ்டன் ஆகியோர் தலைமையில் திருப்பலி நடக்கிறது.
9-வது நாளான 6-ந்தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆரோக்கிய அன்னையின் சப்பர பவனி வீதி உலா நடக்கிறது. அன்றைய தினம் காலை தூத்துக்குடி பேராயர் ஸ்டீபன் தலைமையில் ஜெபமாலை, உறுதி பூசுதல் நிகழ்வும், மாலை திருவிழா, மாலை ஆராதனையும் நடக்கிறது. இதில் அருட்தந்தைகள் சேவியர் அருள்ராஜ், ராயப்பன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். 10-ம் திருநாளான 7-ந் தேதி காலை 6 மணிக்கு அருட்தந்தை கிளாட்வின் தலைமையில் கூட்டு திருப்பலியும், மாலை அருட்தந்தை ரவீந்திரன் தலைமையில் நற்கருனை பவனியும் நடக்கிறது.
8-ந் தேதி காலை 11 மணிக்கு சூசை அறநிலைய துணை இயக்குனர் அருட்தந்தை ஷீபாகர் தலைமையில் நன்றி திருப்பலி நடக்கிறது. பின்னர் அசன விருந்து நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அடைக்கலாபுரம் பங்குத்தந்தை பீட்டர் பால் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர்.

தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி புனித தேவசகாயம் பிள்ளை திருத்தல புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. விழா நாளை (புதன்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.
தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி புனித தேவசகாயம் பிள்ளை திருத்தல புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாளை (புதன்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது. திருவிழாவின் முதல் நாளான நேற்று மாலை செட்டிச்சார் விளை புனித குழந்தைஏசு தெரசாள் ஆலய பங்குத்தந்தை டேவிட் மைக்கேல் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். திருத்தல அதிபர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் தாமஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார்.
3-ம் நாள் திருவிழா திருப்பலி நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதற்கு குழித்துறை மறை மாவட்ட செயலாளர் ரசல் ராஜ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றி வைக்கிறார். தொடர்ந்து தேர் பவனி நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை திருத்தல அதிபரும், வட்டார முதல்வருமான மரிய ராஜேந்திரன், அருட்பணியாளர் மரியதாசன், பங்கு பேரவை உதவித் தலைவர் புரோடி மில்லர், செயலாளர் ஜெகதா, பொருளாளர் ஜான் பென்னட், துணைச் செயலாளர் கண்ணதாசன், வின்சன்ட் ராஜா மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள், பங்கு மக்கள் செய்துள்ளனர். திருவிழா 3 தினங்களிலும் அரசு வழிகாட்டுதல் முறைப்படி, சமூக இடைவெளியுடன், மறைமாவட்ட விதிமுறைப்படி நடைபெறுமென பங்கு திருத்தல அதிபரும், பங்கு பேரவை நிர்வாகிகளும் தெரிவித்தனர்.

கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாத கடைசியில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி 11 நாட்கள் நடப்பது வழக்கம்.
கண்டன்விளையில் புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலயம் உள்ளது. இந்த ஆலயமானது குழந்தை இயேசு தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்கிய உடன் கட்டிய முதல் ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்புமிக்க ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாத கடைசியில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி 11 நாட்கள் நடப்பது வழக்கம்.
இந்த நிலையில் இந்த வருட திருவிழாவானது இன்று (27-ந் தேதி) மாலை 6 மணிக்கு திருக்கொடி பவனியுடன் தொடங்கி 6.30 மணிக்கு சென்னை செலஸ்டின் மல்டி மீடியா இயக்குனரும், அருட்பணியாளருமான எல்பின்ஸ்டன் ஜோசப் தலைமையில் கொடியேற்றமும் நடைபெறுகிறது. முன்னதாக காலையில் முன்னோர்கள் நினைவு திருப்பலி, கல்லறை மந்திரிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து நடைபெறும் திருப்பலியில் கோட்டார் மறை மாவட்ட மறைக்கல்வி பணிக்குழு இயக்குனர் வின்சன்ட் எட்வின் அருளுரை நிகழ்த்துகிறார். விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலியும், 6-ம் நாள் மாலையில் திருப்பலியின் போது குழந்தைகளுக்கு திருமுழுக்கு சடங்கும் நடைபெறுகிறது.
11-ம் திருவிழா நிறைவு நாளன்று அதிகாலை 5 மணிக்கு கல்லுவிளை பங்கு பணியாளர் அமலதாஸ் தலைமையில் முதல் திருப்பலியும், காலை 8 மணிக்கு பாளை மறை மாவட்ட பணி நிறைவு ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலியும், 10 மணிக்கு திருவனந்தபுரம் மறை மாவட்ட அருட்பணியாளர் இஞ்ஞாசி ராஜசேகர் தலைமையில் மலையாள திருப்பலியும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீருடன் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் சகாய ஜெஸ்டஸ், இணை பணியாளர் ஸ்டாலின், பங்கு பேரவை துணை தலைவர் ஜெஸ்டஸ், செயலாளர் எச்.ஐசக், பொருளாளர் வறுவேலாள், துணை செயலாளர் லில்லி மலர், அருட்சகோதரிகள் மற்றும் பேரவையினர், பங்கு மக்கள் செய்துள்ளனர்.
இந்த ஆலய திருவிழா அரசு மற்றும் மறை மாவட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும். ஆலயத்துக்கு வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணி வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று ஆலயம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா நடந்தது. விழாவில் முதல்நாள் ஜெபமாலை, ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆராதனை ஆகியவை நடந்தது.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலய திருவிழா ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 10 நாட்கள் நடைபெறும். இந்த மாதத்தில் மீன்கள் அதிகமாக கிடைத்து வந்ததால் தேர் திருவிழா நடத்துவதில் சிரமம் இருந்தது. இதன் காரணமாக பொதுமக்களின் வசதிக்காக டிசம்பர் மாதத்துக்கு திருவிழா மாற்றப்பட்டது.
இருப்பினும் பாரம்பரியமாக நடந்து வந்த செப்டம்பர் மாத திருவிழாவை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதத்தில் 2 நாட்கள் மட்டும் “தேதிப்படி“ திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது.
விழாவில் முதல்நாள் காலை 6.30 மணிக்கு ஜெபமாலை, ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆராதனை ஆகியவை நடந்தது. 2-ம் நாளான நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி, முதல் திருவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு நற்கருணை பவனி, மறையுரை நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தது.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை ஆன்டனி அல்காந்தர், இணை பங்குத்தந்தையர்கள் ஜெபமெர்ஜின், கிங்ஸ்லி சாஜூ, துணை பங்கு தந்தை ஜேக்கப் ஆஸ்லின், பேரவை தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், பொருளாளர் ஆன்டரின் செல்வகுமார், துணைச்செயலாளர் தினகரன் ஆகியோர் செய்திருந்தனர்.