என் மலர்
நீங்கள் தேடியது "jebamalai matha"
மதுரை டவுன்ஹால் ரோடு புனித செபமாலை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை டவுன்ஹால் ரோடு புனித செபமாலை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. தமிழ் மறை மாநில அதிபரும் அருட்தந்தையுமான ஜோசப்செங்கோல் சிறப்பு திருப்பலியுடன் கொடியேற்றி வைத்தார். பங்கு தந்தை பிரிட்டோ பாக்கியராஜ், உதவி பங்கு தந்தை அற்புதஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் பிரேம், செயலாளர் ராஜன், துணை செயலாளர் ஜெயராணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த திருவிழா அடுத்த மாதம் 7-ந்தேதி வரை நடக்கிறது. தினமும் மாலையில் பல்வேறு பங்கு தந்தையர்கள் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலிகள் நிகழ்த்துகின்றனர். இதுபோல் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ந்தேதி மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி நிகழ்த்துகிறார். அன்றைய தினம் மாலையில் செபமாலை அன்னையின் திருவுருவ தேர்பவனி நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.