என் மலர்
ஆன்மிகம்

சாத்தான்குளம் அருகே உலக ரட்சகர் ஆலயத்தில் திருவிழா கொடியேற்றம்

சாத்தான்குளம் அருகே நெடுங்குளம் உலக ரட்சகர் ஆலய திருவிழா 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் முன்னாள் பங்கு தந்தை ஸ்டாலின் தலைமை தாங்கி கொடியேற்றினார்.
சாத்தான்குளம் அருகே நெடுங்குளம் உலக ரட்சகர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் முன்னாள் பங்கு தந்தை ஸ்டாலின் தலைமை தாங்கி கொடியேற்றினார்.
இதையடுத்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஆரோக்கிய அமல்ராஜ் மறையுரை நடத்தினார். இதில் பங்கு தந்தை சேவியர் கிங்ஸ்டன் உள்ளிட்ட பங்கு மக்கள் பலர் பங்கேற்றனர். விழா நாட்களில தினமும் காலை திருப்பவனி, ஜெபமாலை, திருப்பலி, மாலை மறையுரை, நற்கருணை ஆசீர் உள்ளிட்டவை நடைபெறுகிறது. நிறைவு நாளில் உலக ரட்சகரின் சப்பர பவனி, தொடர்ந்து திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை சேவியர் கிங்ஸ்டன் தலைமையில் பங்குமக்கள், ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Next Story