என் மலர்
கிறித்தவம்
அற்புத அதிசயங்களில் காட்டும் ஈடுபாட்டை விட்டுவிட்டு, உண்மையான பக்தியை அடைவதற்கு முதலில் முடிவு செய்வோம். நமது முடிவுக்கு ஏற்றபடி உண்மை பக்திக்கான வழியை இறைவன் நமக்கு திறந்து தருவார்.
நாம் விரும்பும் காரியமெல்லாம் நடக்க வேண்டுமென்பதற்காக அதிகாரம், அந்தஸ்துள்ள குறிப்பிட்ட சிலரை சார்ந்துவிடுகிறோம். அவர்கள் சொல்லும் நல்லது, கெட்டது எல்லாவற்றையும் செய்துகொடுக்கிறோம். அவரது விசுவாசி என்று சொல்லும் அளவுக்கு நம்மை நாம் அவர்களுக்காக அர்ப்பணித்து விடுகிறோம்.
கொள்கைகளுக்காக மிகச்சிலர் இப்படிப்பட்ட அர்ப்பணிப்பில் இருந்தாலும், பெரும் பாலானோர் சுயநலத்துக்காகவே ‘விசுவாசி’ என்ற பட்டத்தை வைத்துக் கொள்கிறார்கள். எதிர்பார்த்தது கிடைக்காவிட்டால் அவர் களின் விசுவாசமும் விலகிவிடும்.
காலப்போக்கில் கொள்கை, கோட்பாடுகளில் மாறுதல்கள் வரும்போதும் அவர்கள் மீது வைத்த விசுவாசம் அசைக்கப்படுகிறது. ஆக, மனிதர்கள் மீது வைக்கப்படும் விசுவாசம் என்பது சூழ்நிலைகளின் மாற்றத்தின் அடிப்படையிலானவை என்பதும் அவை நிரந்தரமல்ல என்பதும் நிஜம்.
எவ்வளவு பெரிய அந்தஸ்துள்ளவன் என்றாலும் அவன் மீது வைக்கும் விசுவாசத்தை கிறிஸ்தவ மார்க்கம் ஏற்காது. இறைவன் மீது வைக்கும் விசுவாசத்தை மட்டுமே வேதம் வலியுறுத்துகிறது. இந்த விசுவாசத்தின் மூலம்தான் கிறிஸ்தவ பக்தி வாழ்க்கை வாழ முடியும். அதோடு நேர்மையான உலக வாழ்க்கையை வாழ்வதற்கும் அந்த விசுவாசம்தான் வழியைத் திறக்கிறது.
விசுவாசத்தைப் பற்றி வேதம் பல கருத்துகளைக் கூறுகிறது. ஆனாலும் அடிப்படையில் விசுவாசத்தை இரண்டாக வேதம் பிரிக்கிறது. ஒன்று, அற்புத அதிசயங்களைக் கண்டு, அதன் அடிப்படையில் இறைவனை விசுவாசிப்பது. மற்றொன்று, இறைவனின் அற்புத அதிசயங்களை காணாவிட்டாலும், அவரது உபதேசத்தில் உள்ள உண்மைகளை உணர்ந்து அவரை விசுவாசிப்பது. கண்டு விசுவாசிப்பது, காணாமல் விசுவாசிப்பது என்று விசுவாசத்தை இரண்டாக வேதம் பிரித்துக்காட்டுகிறது.
உதாரணமாக, ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக் கிறது. மற்றவர்களை முகம் பார்த்து அடையாளம் காணும் வளர்நிலையை குழந்தை அடையும் முன்பே வேறு நாட்டுக்கு தந்தை போய்விட்டார். மனைவி, குழந்தைக்கு தேவையானதை அவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பிக்கொண்டே இருக்கிறார். அதை சற்று வளர்ந்த அந்தக் குழந்தையிடம் தாய் கூறுகிறாள். மேலும், தந்தை உன்னை நன்றாக படிக்கவும், அம்மாவுக்கு கீழ்ப்படியவும் சொன்னார் என்று அறிவுரையும் கூறு கிறாள்.
இப்போது அந்தக் குழந்தை தன் தந்தையின் உருவத்தை கற்பனையாகக் கண்டு; அவர்தான் தனக்கு தேவையானதை அனுப்பிக்கொண்டிருக்கிறார் என்பதற்கான ஆதாரத்தை பார்க்காமலேயே நம்பி; அவர் சொன்னதாக அம்மா கூறும் அறிவுரையை அப்படியே பின்பற்றினால், அதன் பெயர்தான் விசுவாசம்.
மற்றொரு விசுவாசத்துக்கு உதாரணமாக, பெற்றோருடன் குழந்தை வளர்ந்து; தனக்காக தந்தை வாங்கி வருவதையெல்லாம் குழந்தை தன் கண்ணால் கண்டு; எல்லாவற்றையும் வாங்கித் தருவதால் அவர்தான் தந்தை என்று உணர்ந்து; அதனால் தந்தையின் கண்களுக்கு முன்பு கீழ்ப்படிதலாக குழந்தை நடந்துகொள்வதும் விசுவாசம்தான்.
ஆனால், ‘கண்டு விசுவாசிப்பதைவிட காணாமல் விசுவாசிப்பதே பாக்கியம்’ என்று இயேசு நேரடியாகக் கூறியுள்ளார் (யோவான் 20:29). கண்டு விசுவாசிப்பதையும் அவர் தடுக்கவில்லை. கண்டு விசுவாசிக்கும் பிரிவினரிலும் தன் சித்தமுள்ளவர்களுக்கு அவர் உலக ரீதியான அற்புதங்களை செய்தார்.
அதை வேதம் கூறும் ஒரு சம்பவத்தில் (யோவான் 4:47-53) காணலாம்.
‘இயேசுவை வெளியிடத்தில் ஒருவன் சந்தித்து, வீட்டில் மரணப்படுக்கையில் இருக்கும் தனது மகனை குணமாக்க வேண்டும் என்று கேட்கிறான். இயேசு அற்புதம் செய்து மகனுக்கு சுகம் கிடைத்தால், அதன் பிறகு குடும்பத்தோடு அவரை நம்பலாம் என்ற எண்ணத்தில் அந்த கோரிக்கையை வைக்கிறான்’.
அவனது உள்ளத்தை அறிந்த இயேசு, ‘நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்க மாட்டீர்கள்’ என்றார். அப்படி கடிந்து கொண்டாலும் அற்புதமாக அவனது மகனை இயேசு குணமடையச் செய்கிறார்.
‘மகன் சுகமடைந்து விட்டான்’ என்று இயேசு சொன்னதும், அவன் வீட்டுக்குச் செல்கிறான். வழியில் அவனை அவனது வேலைக்காரர் சந்தித்து, ‘மகன் குணமாகிவிட்டான்’ என்றார்கள்.
வீட்டில் மகன் குணமடைந்ததாக வேலைக்காரர் சொன்ன நேரத்தையும், குணமடைவதாக இயேசு சொன்ன நேரத்தையும் அவன் கணக்கிட்டான். அந்த இரண்டு நேரமும் ஒத்துப்போனதால் அது இயேசு செய்த அற்புதமாகத்தான் இருக்கும் என்று கருதி, இயேசுவை அவனும் அவனது குடும்பத்தினரும் விசுவாசித்தார்கள் என்று வேதம் கூறுகிறது.
கணக்கிட்டு உருவாக்கப்படும் விசுவாசம், நாட்கள் செல்லச் செல்ல நீடிப்பது கடினம். வேறு பிரச்சினைகள் வந்து நெருக்கடி கொடுக்கும்போது, அதில் அற்புத விடுதலை கிடைக்காவிட்டால், விசுவாசம் நீர்த்துப்போகிறது.
இந்த நேரத்தை சாத்தான் பயன்படுத்திக்கொள் கிறான். வேறு பல கருத்துகளை உட்புகுத்தி அவர்கள் மேற்கொண்ட கணக்கீட்டை தவறாக மதிப்பிடச் செய்கிறான்.
‘உன் மகன் மாத்திரை மருந்தினால் தான் குணமானான், ஆனால் நீ நேரத்தை தவறாகக் கணக்கிட்டு அது இயேசுவின் அற்புதம் என்று வீணாக விசுவாசிக்கிறாய்’ என்ற அவிசுவாச கருத்துகளையும் அவனது மனதில் சாத்தான் விதைக்கக் கூடும்.
அற்புத அடையாளங்களை மனதில் வைத்துக்கொண்டு அற்புத கூட்டங்களை நோக்கி ஓடும் மக்கள் உலகம் முழுவதும் உள்ளனர். மற்றவர் களுக்கோ அல்லது தனக்கோ நடக்கும் அற்புதங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து விசுவாசத்தை உருவாக்கிக்கொள்வது தவறு.
அற்புதம் என்பது, பக்தி வாழ்க்கைக்குள் செல்வதற்காக இறைசித்தமுள்ளவர்களுக்காக திறக்கப்படும் வாசல். எனவே அற்புதம் என்ற வாசலிலேயே நின்றுவிடாமல், அதன் வழியாகச் சென்று, ரட்சிப்பை அடைவதுதான் ஞானமாகும்.
10 குஷ்டரோகிகளை குணமாக்கிய இயேசு, ஒருவனுக்கு மட்டுமே ரட்சிப்பு கிடைத்தது என்றார் (லூக்கா 17:19). ஏனென்றால், அந்த ஒருவன் மட்டும்தான் குஷ்டரோகம் சுகமானதுமே, இயேசுவை விசுவாசித்து அவரது போதனைகளை பின்பற்றுவதற்காக மீண்டும் அவரிடம் வந்தான்.
அற்புத சுகம் பெற்ற மற்ற 9 பேருக்கும் இயேசுவின் மீது விசுவாசம் இருந்திருக்கும். ஆனால் அவர்கள் அற்புதத்தை கண்டதோடு நின்றுவிட்டனர். அப்படி நில்லாமல், இயேசுவின் வழியை பின்பற்றுவதற்கு முடிவு செய்ததுதான் உண்மையான விசுவாசம். அதுதான் அவனை ரட்சிப்பை நோக்கி அழைத்துச் சென்றது.
ஆக, இயேசுவை பின்பற்றும் பக்தி மார்க்கத்துக்கு வர முடிவு செய்யாவிட்டால் நீங்கள் பெற்ற அற்புதங்கள் அனைத்துமே வீண்தான். உடல் இருக்கும்வரைதான் உடல் ரீதியாக நடந்த அற்புதமும் நீடிக்கும். பொய், பெருமை, பொறாமை போன்ற இயல்பு குணங்கள் நீங்கி; பகைப்பவனை நேசித்து; அடிக்கும் கைகளுக்கு மறுகன்னத்தை காட்டும் அளவுக்கு ஒருவன் மாற்றப்பட்டிருக்கிறான் என்றால், அதுதான் ரட்சிப்பு. இதைத்தான் நம்மிடம் இயேசு எதிர்பார்க்கிறார். வியாதி நீங்குவது போன்ற உடல் ரீதியான அற்புதங்களைவிட, இயல்பு குணங்களை நீக்கும் அளவுக்கான ஆத்ம ரட்சிப்பை நாடுங்கள். அப்படி இயல்பு நிலை மாறியிருந்தால், நீங்களே உங்களுக்கு அதிசயமாகத் தெரிவீர்கள்.
அற்புத அதிசயத்தினால் மட்டும் இறைவனை விசுவாசிப்பது மற்றொரு ஆபத்தையும் வரவழைத்துவிடுகிறது. இவர்களின் விசுவாசத்தை, அதைவிட பெரிய அதிசய அற்புதங்களினால் வீழ்த்திவிட முடியும். அற்புத அதிசயத்தை சாத்தானும் செய்வான் (வெளி.16:14). இயேசு நிகழ்த்தியதுபோன்ற, நின்ற படியே விண்ணுக்கு ஏறுவது, தண்ணீரில் நடப்பது ஆகிய அதிசயங்கள் மனிதர்களாலும் இன்று நடத்தி காட்டப்படுகிறது. இறுதி நாட்களில் வானத்தில் இருந்து தீயை விழ வைக்கும் அளவுக்கான அற் புதங்களை சாத்தானும் நடத்துவான்(வெளி.13:13).
எனவே அற்புத அதிசயங்களில் காட்டும் ஈடுபாட்டை விட்டுவிட்டு, உண்மையான பக்தியை அடைவதற்கு முதலில் முடிவு செய்வோம். நமது முடிவுக்கு ஏற்றபடி உண்மை பக்திக்கான வழியை இறைவன் நமக்கு திறந்து தருவார்.

கல்லறை திருநாளையொட்டி மறைந்தவர்களுக்கு அவர்களது குடும்பத்தினர் கல்லறைகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
உலகம் முழுவதும் ஆண்டு தோறும் நவம்பர் 2-ந் தேதியை கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்தை சேர்ந்த இறந்தவர்களின் கல்லறைக்கு சென்று மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்துவார்கள்.
கல்லறை திருநாள் அனைத்து ஆன்மாக்கள் நாளாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நேற்று கல்லறை திருநாளையொட்டி சிவ்ரியில் உள்ள கல்லறை தோட்டத்தில் திரளான தமிழ் கிறிஸ்தவர்கள் மறைந்த தங்கள் குடும்ப உறுப்பினர்களின் கல்லறையை மலர்களால் அலங்கரித்து, மாலை அணிவித்தும், மலர் வளையம் வைத்தும், மெழுவர்த்தி, ஊதுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். மேலும் மனம் உருகி பிரார்த்தனையும் செய்தனர்.
இதேபோல கல்லறை திருநாளையொட்டி மும்பை, தானே, நவிமும்பையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இயேசு, உலக நாட்டங்களாகிய செல்வம், உடமைகள், ஆடம்பரம், விருந்து, பதவி போன்றவற்றை கடந்து தன்நிலை உணர்ந்து வரும் லேவிக்கு புதிய வாழ்வு கொடுத்தார்.
தவக்காலம் அருளின் காலம். அழைப்பின் காலம். மீட்பின் காலம். சிந்திக்கும் காலம். வேண்டுதலின் காலம். மனமாற்றத்தின் காலம். இன்றைய நற்செய்தியாவது, இயேசு ஒருவரை விரும்பி அழைப்பதை காட்டுகிறது. தினமும், நாம் ஒவ்வொருவரும் துயில் எழுதல் முதல் பல்வேறு அழைத்தலை கேட்கிறோம்.
நம் வாழ்வு முழுவதும் பிறப்பிலிருந்து இறப்பு வரை அழைப்புகளால் நிறைந்தது. அழைத்தலுக்கு பதிலளிக்கும் விதத்தில் தான் நாம் சிறப்படைய முடியும். யார் கூப்பிடுகிறார்? எதற்கு? என்று நாம் செவிமடுக்க வேண்டும்.
லூக்கா நற்செய்தியில், பேதுருவை இயேசு அழைத்ததில் தொடங்கி லேவியை சுங்கத்துறையில் அழைத்ததில் முடிகிறது. சாதாரண மனிதன் இருப்பதும், உழைப்பாளியின் தோற்றமும், செய்யும் தொழிலும் இறைவனுக்கு முக்கியமல்ல. அவர் பார்வை பட்டாலே போதும். அனைத்து நன்மைகளும் கிட்டும்.
ஒருசமயம் தன் வீட்டில் லேவி பெரிய விருந்து கொடுக்கிறார். இயேசுவும் அதை ஏற்கிறார். லேவியின் மீது நல்ல எண்ணம் இல்லாத பரியேசர், மறைநூல் அறிஞர்கள் அதை ஏற்கவில்லை. குறை காண்கின்றனர். பேதுருவும் மீன் பிடிக்கும் வலைகளை விட்டு, விட்டு இயேசுவை பின் தொடர்ந்தார்.
அதுபோல் இன்றும் இந்த தவக்காலத்தில், நோயுற்ற, பாவியான நம்மையும் மனம் மாறி தன்னுடன் இணைத்து கொள்ள இயேசு அழைக்கிறார். உடல் நோய் குணமளித்தலில் மருத்துவராக தன்னை காட்டும் இயேசு, உலக நாட்டங்களாகிய செல்வம், உடமைகள், ஆடம்பரம், விருந்து, பதவி போன்றவற்றை கடந்து தன்நிலை உணர்ந்து வரும் லேவிக்கு புதிய வாழ்வு கொடுத்தார். எனவே, அவரோடு உடனிருந்து, அருளின் அமைதியை அனுபவிப்போம். இயேசுவின் சொல் கேட்போம். அவரின் பின் செல்வோம்.
அருட்சகோதரி. ஆனி, அமலவை சபை,
புனித அந்தோணியார் கல்லூரி, திண்டுக்கல்.

இயேசு பெருமான் வேறோர் இடத்தில் குறிப்பிட்டதைப்போல, ‘பிறரை குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்காதீர்கள். அப்படியிருந்தால்தான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.
புனித லூக்கா என்ற நற்செய்தியாளரின், நற்செய்தியை எண்ணிப் பார்ப்போம்.
அக்காலத்தில், பரிசேயருள் ஒருவர், இயேசு பெருமானை தம்மோடு உணவு உண்பதற்கு வீட்டிற்கு அழைத்திருந்தார். அவரும், பரிசேயருடைய இல்லத்திற்குச் சென்று பந்தியில் அமர்ந்தார். அந்நகரத்தில், பாவியான பெண் ஒருத்தி இருந்தாள். இயேசுவானவர், பரிசேயர் ஒருவருடைய வீட்டில் உணவு உண்ணச் செல்கிறார் என்று அவளுக்குத் தெரிய வந்தது.
உடனே நறுமணம் கொண்ட தைலத்தின் சிமிழோடு அங்குச் சென்றாள். இயேசு பெருமானுக்குப் பின்னால், கால் மாட்டிற்குச் சென்று அழுது கொண்டே நின்றாள். அவருடைய காலடிகளைத் தம்முடைய கண்ணீரால் நனைத்தாள். தம் கூந்தலால், காலைத் துடைத்தாள். தொடர்ந்து அவருடைய கால்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். பிறகு, அக்காலடிகளில், தான் கொண்டு வந்த நறுமணத்தைப் பூசினாள். அவரை உணவு உண்ண அழைத்த பரிசேயர், இச்செயலைக் கண்டார்.
‘இவர் ஓர் இறைவாக்கினர் என்று சொன்னால், தம்மைத் தொடுகிற இவள் யார்? எப்படிப்பட்டவள்? என்று அறிந்திருப்பார். இவள் பாவியாயிற்றே’ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.
இயேசு பெருமான் பரிசேயராகிய சீமோனைப் பார்த்து, ‘சீமோனே! நான் உமக்கு ஒன்று சொல்ல வேண்டும்’ என்று கூறினார். அதற்கு மறுமொழியாக சீமோன், ‘போதகரே! சொல்லும்’ என்றார்.
அப்பொழுது அவர், ‘கடன் கொடுப்பவர் ஒருவரிடம், ஒருவர் ‘ஐந்நூறு தெனாரியமும்’ மற்றவர் ‘ஐம்பது’ தெனாரியமுமாக இருவரும் கடன்பட்டு இருந்தனர். கடனைத் தீர்க்க அவர்கள் இருவராலும் இயலவில்லை. இருவருடைய கடனையும், அவர் தள்ளுபடி செய்து விட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?’ என்று கேட்டார்.
சீமோன் மறுமொழியாக, ‘அதிகமான கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என்று நினைக்கிறோம்’ என்றார்.
இயேசு பெருமான் அவரிடம், ‘நீர் சொன்னது சரியானது’ என்று கூறினார்.
பிறகு அப்பெண்ணின் பக்கம் திரும்பினார். சீமோனை நோக்கி, ‘இவளைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்கு வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை. இவளோ தன் கண்ணீரால், என் காலடிகளை நனைத்தாள். அவற்றைத் தன் கூந்தலால் துடைத்தாள். நீர் எனக்கு முத்தம் தரவில்லை. இவளோ, நான் உள்ளே வந்தது முதல், என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக் கொண்டே இருந்தாள். நீர் என் தலையில் எண்ணெய் பூசவில்லை. இவளோ, என் காலடிகளில் நறுமண மிக்க தைலத்தைப் பூசினாள். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன். இவள் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனென்றால், இவளே மிகுதியாக அன்பு கூர்ந்தாள். குறைவாக மன்னிப்புப் பெறுவோர், குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்’ என்று கூறினார்.

பிறகு அப்பெண்ணைப் பார்த்து, ‘உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன.’ என்றார். ‘பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?’ என்று, அவரோடு பந்தியில் அமர்ந்தவர்கள், தங்களுக்குள்ளே சொல்லிக் கொண்டார்கள்.
இயேசு பெருமான் மீண்டும் அப்பெண்ணை நோக்கி, ‘உமது நம்பிக்கை, உம்மை மீட்டது. அமைதியுடன் செல்வாயாக’ என்றார்.
இந்நற்செய்தியில் நாம் அறிய வேண்டிய செய்தி என்ன? என்பதை எண்ணிப் பார்ப்போம். இயேசு பெருமானின் பார்வை வேறு மாதிரியும், சீமோனின் பார்வை வேறு மாதிரியும் இருக்கிறது என்பதை, நாம் முதலில் உணர வேண்டும்.
‘இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், இவரைத் தொடுகிற இவள் யார்? எத்தகையவள் என்பதை அறிந்திருப்பார். இவள் பாவியாயிற்றே’- இது, உணவருந்த அழைத்த பரிசேயரின் பார்வையாகும். பரிசேயர் எதையும் கூறவில்லை. ஆனால் இப்படி எண்ணுகிறார். இயேசு பெருமான் இதை உணராமல் இல்லை. உடனே ஒரு கேள்வியைத் தொடுக்கிறார். வினா தொடுத்து சிந்திக்க வைப்பதும், விடையை அவர்களின் வழியே அறிய முற்படுவதும், இயேசு பெருமானின் வாழ்க்கையில் பல இடங்களில் நாம் அறிந்த ஒன்று.
சீமோன் மூலமாகவே, பதிலைப் பெறுகிறார். அதிகமாக அன்பு செலுத்துபவர் யார்? என்ற வினாவில், ஏனையோரால், ‘பாவி’ என்று கருதப்பட்ட, அப்பெண்ணின் செயல்பாடுகளை, அதிலும் முக்கியமாக, உணவு உண்ணும் இடத்தில் நடந்த செயல்பாடுகளை வெளிப்படையாக அப்படியே விவரிக்கிறார்.
இறுதியாக, அவர் கூறும் வார்த்தையை நுட்பமாக அறிந்து, தெளிவு பெறுவதில்தான், இந்நற்செய்தியின் சிறப்பு வெளிப்படுகிறது.
‘இவள் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில், மிகுதியாக இவளே அன்பு கூர்ந்தாள். குறைவாக மன்னிப்புப் பெறுவோர், குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்’ என்கிறார்.
அப்பெண்ணுடைய வெளிப்புற வாழ்க்கையையும், வெளிப்புறச் செயல்பாட்டையும் சீமோன் பார்க்கிறார். இயேசு பெருமான், வெளிப்புற வாழ்க்கையைப் பார்க்கவில்லை. அவளுடைய உள் மனதையும், உண்மையான ஈடுபாட்டையும் கவனிக்கிறார்.
ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்பதை இயேசு பெருமான் பிரித்துப் பார்க்கவில்லை. பிற யூத ஆண்களைப் போல், அவர் செயல்படவில்லை. புதிய ஏற்பாட்டை உருவாக்கும் செயலில் அவர் இறங்கி, வழிகாட்டுகிறார். பெண்களை அடிமைப்படுத்தி, அவள் தவறானவள் என்று, ஒரு பாலினப் பகுதியை மட்டும் சுட்டிக் காட்டும் நிலையில் இருந்து மாறுபடுகிறார். நேர்மையும் உண்மையும், இருபாலருக்கும் பொதுவானது என்பதை இயேசு பெருமானின் வழியே நாம் உணர வேண்டும்.
இத்தூயவரைக் கண்ட அப்பெண், என்ன எதிர்பார்க்கிறாள் என்பதை, அவர் உணர்ந்ததால் தான், மற்றவர்கள், தத்தமக்குள்ளே பேசியதை மட்டும் எண்ணாமல், அவளைப் பார்த்து, ‘உமது நம்பிக்கை உம்மை மீட்டது. அமைதியுடன் செல்க’ என்கிறார்.
இயேசு பெருமான் வேறோர் இடத்தில் குறிப்பிட்டதைப்போல, ‘பிறரை குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்காதீர்கள். அப்படியிருந்தால்தான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.
‘ஏதிலார் குற்றம் போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு’
அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல், தம் குற்றத்தையும் காணவல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ? என்ற திருக்குறளையும், நற்செய்தியோடு இணைத்துப் பார்த்து திருந்தி வாழ நாமும் முனைவோம்.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதியை இறந்தவர்கள் நினைவு நாளாக கடைப்பிடிக்கிறார்கள்.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதியை இறந்தவர்கள் நினைவு நாளாக கடைப்பிடிக்கிறார்கள். அன்றைய தினம் இறந்து போன தங்களின் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்துவார்கள்.
அதன்படி இந்த ஆண்டு வருகிற 2-ந் தேதி (வியாழக்கிழமை) அனைத்து ஆன்மாக்கள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அனைத்து கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களிலும் புல், பூண்டுகள் வெட்டி அகற்றப்பட்டு சுண்ணாம்பு தெளித்து சீரமைக்கப்படும். பின்னர், தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் மாலைகள் அணிவித்து மெழுகுவர்த்தி, ஊதுபத்தி எரியவிட்டு அஞ்சலி செலுத்துவார்கள்.
அன்றைய தினம் காலை முதல் மாலை வரை கிறிஸ்தவர்கள் திரளாக சென்று கல்லறை தோட்டங்களில் அஞ்சலி செலுத்துவதால் அந்த நாள் ‘கல்லறை திருநாள்’ என அழைக்கப்படுகிறது. அதன்படி வருகிற 2-ந் தேதி காலையில் கிறிஸ்தவ ஆலயங்களிலும், மாலையில் கல்லறை தோட்டங்களிலும் திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அப்போது, பங்கு அருட்பணியாளர்கள் கல்லறைகளை புனித நீரால் அர்ச்சிப்பார்கள். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள்.

ஏசு கிறிஸ்து அவரவர் பாவத்தை பரிசுத்த ஆவியினால் கண்டித்து உணர்த்தி நாம் பாவத்தை விட்டு விலகி ஓடுவதற்கான கிருபையையும் ஆற்றலையும் அருளுகின்றார்.
“அவர் வந்து பாவத்தை குறித்து கண்டித்து உணர்த்துவார் - யோவான் 16:8”
மதுபான பழக்கம் உடையவர்கள் சில நேரங்களில் போதையின் விளைவாக தேவையில்லாத பிரச்சினைகளை விலைக்கு வாங்குவார்கள் மறுநாள் இவ்வளவு மோசமாக நடந்துகொண்டோமே என்று மிகவும் குற்ற உணர்வு அடைவார்கள். ஆனால் அந்த குற்ற உணர்வு இனி மதுபானம் அருந்துவதில்லை என்ற தீர்மானத்தை எடுக்க தூண்டாது. மறுபடியும் மதுபானத்தை நாடவே தூண்டுதல் தரும்.
விபசார பாவங்களை செய்கின்றவர்கள் பின்னர் இப்படி தவறாக நடந்துகொண்டோமே என்று குற்ற உணர்வடைவார்கள்.
ஆனால் அந்த குற்ற உணர்வு இனி இவ்விதம் பாவம் செய்வதில்லை என்று முடிவு செய்ய தூண்டாது. மறுபடியும் அதுபோன்ற பாவத்தை செய்வதற்கே தூண்டுதல் கொடுக்கும். எனவேதான் ஒருபுறம் இதுபோன்ற தவறுகள் மனிதனை குற்ற உணர்வினால் பாரம் மடையச்செய்துவிட்டு மறுபடியும் அந்த பாவச்சேற்றிலேயே சிக்க வைத்துவிடுகிறது.
குற்றம் செய்தலும், குற்ற உணர்வும் தொடர்கதையாவதால்தான், சிலர் குற்றங்களுக்கு அடிமைகளாகி விடுகின்றனர். ஆம். குற்ற உணர்வு என்பது வேறு, பாவ உணர்வு என்பது வேறு. குற்ற உணர்வு மீண்டும் ஒரு குற்றம் செய்வதற்கான தூண்டுகோல். பாவ உணர்வு என்பது இனி இவ்விதம் நான் வாழக்கூடாது என்ற முடிவுக்குநேராக கொண்டு செல்லும் ஆவிக்குரிய தூண்டு விசை.

ஒரு மருத்துவர் நோயாளி ஒருவரின் வியாதியின் நிலையைக் கண்டறிந்து சொல்லும்போது, அந்த வியாதியாளன் ஒரு உடனடி சிகிச்சையை விரும்புகிறான். அதுபோல பரிசுத்த ஆவியானவர் பாவ உணர்வு அடையச் செய்யும்போது அந்த பாவத்திலிருந்து வெளியே போகும் ஆசையும், அந்த பாவத்தைக்குறித்த ஒரு வெறுப்புணர்வும் தோன்றும். அது கர்த்தருடைய கிருபையை நாடுவதற்கான நல்ல தூண்டுதலைத் தரும்.
குற்ற உணர்வு என்பது பாவத்தினால் பழுதுபட்ட மனசாட்சியின் ஓசை. மனசாட்சியின் ஓசை பாரத்தை உருவாக்கும்,ஆயினும் மனமோ அந்த ஓசையை அடக்க மறுபடியும், பாவத்தை நோக்கி ஓடும். இந்த நிர்ப்பந்தமான நிலையில் இருந்து நமக்கு விடுதலை தருகின்றவரே கர்த்தராகிய ஏசு கிறிஸ்து.
அவர் பாவத்தை பரிசுத்த ஆவியினால் கண்டித்து உணர்த்தி நாம் பாவத்தை விட்டு விலகி ஓடுவதற்கான கிருபையையும் ஆற்றலையும் அருளுகின்றார். எனவே அவருடைய சத்தத்தை கேட்கும்போது இருதயத்தை கடினப்படவிடாமல் மனந்திருந்தி நல்ல நிலை அடைய தேவகிருபையை தேடவேண்டும். “ இறைவனைப் பயத்துடன் வழிபடுகிறவனாக அல்ல அன்புடன் அவர் வழியில் நடக்கிறவனாக இரு. அதுவே பக்தி.”
-- சாம்சன் பால்

பலவிதமான வியாதிகளினாலும், வேதனைகளினாலும், பலவீனங்களினாலும் கலங்கிக் கொண்டிருக்கிற உங்கள் வாழ்வில் நிச்சயம் ஆண்டவர் ஒரு புதிய சக்தியைத் தந்து உங்களை ஆசீர்வதிப்பார்.
அன்பானவர்களே! இயேசுவின் நாமத்தில் மிகவும் அன்புடன் வாழ்த்துகிறேன். நம் தேவன் உங்களைப் பெலப்படுத்தி உங்களை ஆசீர்வதிப்பாராக! பலவிதமான வியாதிகளினாலும், வேதனைகளினாலும், பலவீனங்களினாலும் கலங்கிக் கொண்டிருக்கிற உங்கள் வாழ்வில் நிச்சயம் ஆண்டவர் ஒரு புதிய சக்தியைத் தந்து உங்களை ஆசீர்வதிப்பார். நம்மைப் பலப்படுத்த தேவன் ஒருவரால் தான் முடியும்.
வேதம் சொல்லுகிறது, “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு”. பிலிப்.4:13
தேவனுடைய பெலனை நாம் எப்படி பெற்றுக்கொள்ள முடியும் என்று இச்செய்தியின் மூலமாக உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்.
“...கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்.” நெகே.8:10
‘நமக்கு எவ்வளவு வேதனைகள், பலவீனங்கள் வந்தாலும் கர்த்தர் பார்த்துக் கொள்வார்’ என்கிற விசுவாசத்தோடு நாம் கர்த்தருக்குள் சந்தோஷமாயிருக்க வேண்டும். இரட்சிப்பின் சந்தோஷத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்.
பிசாசு சோர்வுகளைக் கொண்டு வந்து உங்கள் இருதயத்தைக் கவலைப்பட வைக்கும்போது, கர்த்தர் மேல் உங்கள் பாரங்களை வைத்து விட்டு சந்தோஷமாயிருங்கள். கவலைகள், வேதனைகள் உங்களைத் தாக்கும்போது உங்கள் சரீரமும் தானாகவே பலவீனமாகிவிடும். அப்படிப்பட்ட வேளைகளில் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள். தேவனுடைய பெலன் நிச்சயம் உங்களை அளவில்லாமல் நிரப்பும்.
‘அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்’. 1 பேதுரு 5:7
‘கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்’. ஏசா.40:31
பிரியமானவர்களே! நம் சரீரம் பலவீனமாயிருக்கும் நேரத்தில் நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான காரியம் கர்த்தருக்குக் காத்திருக்க வேண்டும். கர்த்தரை நோக்கி அதிகமாக ஜெபிக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு நாம் அதிகமதிகமாய் ஜெபிக்கிறோமோ அந்த அளவுக்கு தேவ பெலனை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
வேதனை நேரங்களில் மனிதர்களைத் தேடி ஓடி அவர்களுக்காக காத்திருப்பதனால் எந்த பயனும் கிடையாது. மாறாக தேவனை நம்பி, அவரை நோக்கி ஜெபித்து அவருக்காக காத்திருக்கும் போது, கர்த்தர் உங்கள் வியாதிகளை குணமாக்கி, உங்களுக்கு நல்ல சுகத்தையும், பெலனையும் தந்து உங்களை ஆசீர்வதிப்பார். சோர்ந்து போகாமல் கர்த்தரையே சார்ந்து, அவர் ஒருவருக்கே காத்திருங்கள். விரைவில் அற்புதங்களை எதிர்பாருங்கள். ஒருபோதும் முணுமுணுக்காதீர்கள். பொறுமையோடு காத்திருங்கள்.
‘ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்: அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்’. மல்.4:2
‘என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி, என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய், அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக, அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள், அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்’. நீதி.4:20,21,22

மேற்கண்ட வேத வசனங்கள் நம் உடலுக்கெல்லாம் ஆரோக்கியத்தையும், பெலனையும், ஜீவனையும் கொடுக்கிறது என வாசிக்கிறோம். உண்மையாகவே வேத வசனங்களை நாம் வாசிக்கும் போது ஒரு விஷேசித்த பெலன் நம்மை நிரப்பும். பெலவீனமாயிருக்கும் போது நாம் அதிகமாக வேதத்தை சத்தமாக வாசிக்க, வாசிக்க அந்த வசனத்திலிருக்கிற வல்லமை நமக்குள் இறங்கி வந்து நம்மைப் பெலப்படுத்துகிறது.
பிரியமானவர்களே! வேதத்தை வாசிக்க அதிக நேரத்தை ஒதுக்குங்கள். அதை தியானியுங்கள். அதன்படி வாழுங்கள். நிச்சயம் உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் தேவ பெலனால் நிரப்பப்படும்.
‘அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்’. சங்.107:20
பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்
‘பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்’. அப்.1:8
பரிசுத்த ஆவியின் வல்லமையை நாம் பெற்றுக்கொள்ளும்போது நாம் பெற்றுக் கொள்கிற முக்கியமான ஆசீர்வாதங்களுள் ஒன்று பெலன். பரிசுத்த ஆவியில் நிறைந்து நாம் ஜெபிக்க இயற்கைக்கும் அப்பாற்பட்ட ஒரு தேவ வல்லமை நம்மை நிரப்புகிறது. அந்த வல்லமையில் நிரம்ப, நிரம்ப ஒரு விஷேசித்த பெலன் நம்மை நிரப்பும். அநேக வேளைகளில் பெலவீனம் என்னைத் தாக்கும் போதெல்லாம் ஆவியில் நிரம்பி ஜெபிக்கிற அந்த வேளையில் தானே தேவ வல்லமை என்னை நிரப்புகிறதை நான் உணர்ந்திருக்கிறேன்.
பிரியமானவர்களே! பெலவீனத்தினால் வேதனையோடு காணப்படுகிறீர்களோ? மனம் கலங்காதிருங்கள். நீங்கள் அபிஷேகம் பெற்றவர்களானால் இப்பொழுதே ஆவியில் நிரம்பி ஜெபிக்கத் துவங்குங்கள். ஒருவேளை நீங்கள் அந்த அபிஷேகத்தைப் பெறாதவர்களானால் இப்பொழுதே என்னை நிரப்பும் ஆண்டவரே என்று கேட்கத் துவங்குங்கள்.
‘கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்’ என்ற வேத வசனத்தின்படி தேவன் உங்களை தம் ஆவியினால் நிரப்புவார். அந்த ஆவியானவர் தாமே உங்களைப் பெலப்படுத்தி ஆசீர்வதிப்பார்.
சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54

புதிய ஏற்பாடில் மத்தேயு 6- ம் அதிகாரத்தின் சுவிசேஷ செய்திகள் தரப்பட்டுள்ளன. கடவுளிடம் எப்படி பிரார்த்தனை செய்யவேண்டும் என்னும் பிரார்த்தனை வடிவமும் இதில் இடம் பெற்றுள்ளது.

மத்தேயு 6
* மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.
* ஆகையால் நீ தர்மஞ்செய்யும் போது மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
* நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறது உன் இடது கை அறியாதிருக்கக்கடவது.
* அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.
* அன்றியும் நீ ஜெபம் பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்க வேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

* நீயோ ஜெபம் பண்ணும் போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.
* அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும் போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.
* அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
* நீங்கள் ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது;
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே,
ஆமென், என்பதே.

உங்களை ஒரு கன்னத்தில் அறைகின்றவர்களுக்கு, மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.’ என்ற வாசகத்தைப் பலர் வேடிக்கையாகவும், கிண்டலாகவும் பேசுவதைக் காண்கிறோம்.
நற்செய்தியாளர் புனித லூக்கா எழுதிய நற்செய்தியைக் கேட்போம்.
இயேசு பெருமானார், இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், அவர் தம் சீடர் களுக்குப் போதித்த நற்செய்திகள் மிகுதி என்பதை நாம் அறிவோம். மீண்டும் மீண்டும் அவர் தம் சீடர்களுக்குப் போதிக்கும் அடிப்படைக் கருத்துகளை, உற்று நோக்குவோம்.
இயேசு பெருமகனார், தம் சீடர்களை நோக்கி இவ்வாறு கூறினார்.
“நான் சொல்கின்றவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும், உங்களுக்குக் கூறுகின்றேன். நீங்கள் உங்கள் பகைவர்களிடம் அன்பாக இருங்கள். உங்களை வெறுக்கின்றவர்களுக்கு, நன்மையைச் செய்யுங்கள். உங்களைச் சபிக்கின்றவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உங்கள் ஆசியைக் கூறுங்கள். உங்களை இகழ்ச்சியாகப் பேசுகின்றவர்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
உங்களை ஒரு கன்னத்தில் அறைகின்றவர்களுக்கு, மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்களின் மேலாடையை எடுத்துக் கொள்பவர், உங்கள் அங்கியை எடுத்துக் கொள்ளப் பார்த்தால், அவரைத் தடுக்காதீர்கள்.
உங்களிடம், எவரும் எதைக் கேட்டாலும் கொடுத்து விடுங்கள். உங்கள் பொருட்களை எடுத்துக் கொள்வோரிடம் இருந்து, அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள்.
பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். உங்களிடம் அன்பு செலுத்துபவர்களிடமே, நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு அதனால் வரும் நன்மை என்ன?
பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம், அன்பு செலுத்து கிறார்களே!
உங்களுக்கு நன்மையைச் செய்பவர்களுக்கே, நீங்கள் நன்மை செய்தால், உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார் களே!
திரும்பவும் பெற்றுக் கொள்ளலாம் என்று எதிர்பார்த்து, நீங்கள் கடனைக் கொடுத்தால், உங்களுக்கு வரும் நன்மை என்ன?
ஏனென்றால், முழுவதையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நோக்கத்துடன், பாவிகளும், பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே. உங்கள் பகைவரிடமும், நீங்கள் அன்பு செலுத்துங்கள். அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
திரும்பக் கிடைக்கும் என்று, எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்பொழுது உங்கள் கைம்மாறு மிகுதியாக இருக்கும். நீங்கள் உன்னதக் கடவுளின் மக்களாக இருப்பீர்கள்.
ஏனென்றால், அவர் நன்றி கெட்டோருக்கும், பொல்லாதவருக்கும் நன்மை செய்கிறார்.
உங்கள் தந்தையானவர், இரக்கம் உள்ளவராக இருப்பதைப்போல, நீங்களும் இரக்கம் உள்ளவர்களாக இருங்கள். பிறரைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள். அப்போதுதான், நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள். அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள்.
மன்னியுங்கள். மன்னிப்பைப் பெறுவீர்கள். கொடுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்படும். நன்றாக அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி, நன்றாய் அளந்து, உங்கள் மடியில் போடுவார்கள்.
நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்.”
நீண்டதொரு பிரசங்கமாக, இந்நற்செய்தி அருளப்பட்டிருக்கிறது. இந்நற்செய்தி, மனித சமுதாயத்திற்குத் தேவையான ஒன்று.
இந்நற்செய்தியை மிகவும் ஆழமாகவும், நுட்பமாகவும் உணர்ந்து மனித சமுதாயம் தெளிவடைய வேண்டும்.
இவ்வுலகக் கண்ணோட்டத்தில், இவைகள் அத்தனையும், பைத்தியக் காரத்தனமாகத் தோன்றலாம். காரணம், இவ்வுலகம் நிலைத்தது, நாம்தான் எல்லாமே. நம்மை யாரும் அசைத்து விட முடியாது என்றெல்லாம் எண்ணுபவர்கள், முதன் முதலில் இந்நற்செய்தியின் உண்மைத் தன்மையை உணர வேண்டும்.
இயேசு பெருமகனாரின், எல்லா நற்செய்திகளின் சாரம்தான் இந்நற்செய்தி என்பதைப் படிப்போர் உணரலாம்.

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்”
என்பது பிற்காலத்தில் எழுந்த திருக்குறளின் உயரிய சிந்தனை. இயேசு பெருமான் இதைவிட ஒருபடி மேலாக, “உங்களை வெறுக்கின்றவர்களுக்கு நன்மையைச் செய்யுங்கள்” என்கிறார்.
இந்நற்செய்தியில், ஒவ்வொரு வாசகமும், ஆழமானது. நம்மை நாமே நெறிபடுத்திக் கொள்ள அருளப்பட்டது.
ஆழ்ந்து நுண்ணறிவோடு படிக்கின்றபொழுது, நம்மிடமுள்ள ‘கடினத்தன்மை’ மெல்ல மெல்லக் குறையத் தொடங்கும். எல்லாவற்றையும் எடுத்து ஆராய்வதை விட, மூன்று கருத்துகளை மட்டும் ஆராய்வோம்.
‘நீங்கள் உங்கள் பகைவர்களிடம் அன்பாய் இருங்கள்’
அடுத்தடுத்து, அவர் கூறும் கருத்துகளுக்கு, இக்கருத்து முத்தாய்ப்பாய் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.
பகைவர்களிடம் அன்பாய் இருப்பது, அவ்வளவு எளிதல்ல. பக்குவப்பட்ட மனம் இருந்தால்தான் இதைச் செய்ய இயலும். இயேசு பெருமான் இவ்வுலகில் இதைத்தான் செய்து காட்டினார்.
‘உங்களை ஒரு கன்னத்தில் அறைகின்றவர்களுக்கு, மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.’ என்ற வாசகத்தைப் பலர் வேடிக்கையாகவும், கிண்டலாகவும் பேசுவதைக் காண்கிறோம். ‘கன்னம்’ மட்டுமே நமக்கு மேலோட்டமாகத் தெரிகிறது. இதற்குப் பொருள் இது அன்று. அந்த அளவுக்கு, உன் பகைவனை நேசி என்கிறார். பகைவனை நேசித்து விட்டால், பகைக்கும் தன்மை உடையவன், என்றாவது ஒருநாள் பகை உள்ளத்தை மாற்றிக் கொண்டுதான் வாழ்வான். பகைவனை வெறுத்து ஒதுக்குகின்றபொழுது, மேலும் மேலும் வெறுப்பைத்தான் கக்குவான். இது இயல்பானது.
உங்களிடம் அன்பு செலுத்துவோரிடம், நீங்கள் அன்பு செலுத்துவது இயல்பானது. அதைச் செய்வதால் என்ன நன்மை? என்ற கேள்வியைக் கேட்டு விட்டு பாவிகளும் அப்படித்தானே செய்கிறார்கள் என்று கூறுகிறார்.
அதைப்போல, உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே, நன்மையைச் செய்தால், உங்களுக்கு வரும் நன்மை என்ன? என்ற வினாவையும் தொடுக்கிறார்.
இப்படி ஒவ்வொரு வினாவாக இந்நற்செய்தியில் தொகுத்து விட்டு, இறுதியில் ஒரு கருத்தைக் கூறுகிறார்.
“நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்”
‘நான் இப்படி ஆகி விட்டேனே’ என்று அங்கலாய்ப்பவர்களுக்கு, தன்னைத்தானே உணராதவர்களுக்கு, மேற்கண்ட வாசகம்தான், சரியான பதிலாக இருக்கிறது என்பதை உணர்ந்து, இந்நற்செய்தி வழியாகத் தெளிவடைவோம். நம்மை நாமே சீர்படுத்திக் கொள்வோம்.

சோதனைகள் பலவிதம். என் சோதனைகள் எவ்விதம் என ஆராய்வோம். சோதனைகளை வெல்வோம். இறையாசீரோடு தவக்காலத்தை பயன்படுத்தி புனித பாதையின் வழி நடப்போம்.
இன்றைய இறை வார்த்தையின் படி இறைவன், படைப்பில் நன்மையே கண்டார். தன் உயிர் மூச்சினை மனிதனுக்கு பகிர்ந்தளித்தார். மனித பலவீனமோ பாவத்தில் விழச்செய்கிறது. பாவச்சேற்றிலிருந்து நம்மை தூய்மைப்படுத்த, மீண்டும் எழ ஏற்ற காலமிது. பாவத்திலிருந்து விடுதலை பெறுவோம். இறைவனின் அன்பை உணர்வோம். (தொ.நூல் 2:7-9, 3:1-7)
அலகையை வென்ற இயேசுவின் செயல்பாடுகளை தியானித்து அவரிடம் விளங்கிய இறை தந்தை மட்டில் நம்பிக்கை, திருவுளத்துக்கு பணிவு, லட்சிய பார்வை, தூய ஆவிக்கு மனதை திறந்து நன்மை, தீமையை அறிதல், சோதனைகளை வெல்லும் ஆற்றல் பெறுவோம். புனிதனாக, மனிதனாக வாழ முயல்வோம். (மத் 4:1-11)
சோதனைகளை மனத்துணிவுடன் ஏற்று, விடாமுயற்சியோடு போராடுவோம். விடுதலை பெற இறையருளை வேண்டி, பாவவழிகளை எதிர்த்து வாழ தவக்காலத்தை நன்கு பயன்படுத்துவோம். நன்மை, தீமை, பாவம், புண்ணியம், வாழ்வு, சாவு, பிறர்நலம், தன்னலம் போன்ற போராட்டங்களை ஒன்று இணைத்து செல்ல இயலாது. சோதனைகளிலிருந்து விடுதலை பெற நாம் பலவற்றை இழக்க தயாராக இருக்க வேண்டும்.

இயேசு தன்னையே இழந்தார். கையளித்தார். முழுவதும் பலியாக்கினார். முடிவில் விண்ணகப்பேறு என்னும் நிலைவாழ்வை பெற்று தந்தையின் வலப்புறம் வீற்றிருக்கின்றார். அதுபோல் நாமும் நம்மையே இழப்போம். நம்மிடமுள்ளதை பிறரோடு, குறிப்பாக தேவையில் இருப்பவரோடு பகிர்வோம். நற்செயல்களால் தீமைகளை விலக்கி வாழ்வோம். நேர்மறை எண்ணங்களால் மனதினை, சிந்தனையை நிரப்புவோம்.
சோதனைகள் பலவிதம். என் சோதனைகள் எவ்விதம் என ஆராய்வோம். குறுக்கு வழியில் பணக்காரன் ஆகுதல், பதவி, புகழுக்காக பிறரை அடக்கி ஆள்தல், சிற்றின்ப நாட்டங்களை நாடி செல்லுதல், பொறாமை, பேராசை வழியில் சுயநலத்தோடு வாழ்தல் என பல்வேறு சோதனைகள் நம்மில் எழலாம். என்னில் எழும் சோதனை எது? என சிந்திப்போம். தியானிப்போம். உணர்வோம். சோதனைகளை வெல்வோம். இறையாசீரோடு தவக்காலத்தை பயன்படுத்தி புனித பாதையின் வழி நடப்போம்.
அருட்சகோதரி. ஜெயராணி, அமலவை சபை, திண்டுக்கல்.

“சோதனைகள் உன்னை தொய்ந்து போகச் செய்தால் வேதவார்த்தைகளின்மேல் சாய்ந்து இளைப்பாறக் கற்றுக்கொள்”.
“அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனை முத்தஞ் செய்தான்- லூக்கா 15:20”
அவன் சிறுவனாய் இருந்தான். அவனுடைய பெற்றோர்கள் போயும் போயும் நீ எங்களுக்கு பிள்ளையாய் பிறந்தாயே என்றனர். அவன் பள்ளிக்கூடம் சென்றான். ஏண்டா நீயெல்லாம் மாடு மேய்க்கப் போயிருக்கலாமே இங்கு வந்து இடத்தை அடைத்துக்கொண்டிருக்கின்றாயே என்றனர் ஆசிரியர்கள். அவன் வேலைக்கு போனான் நீ எங்காவது சாமியாராக போய் சம்பாதிக்காமலே சாப்பிட்டிருக்கலாமே இங்க வந்து என் உயிரையும் வாங்குறியே என்றார் முதலாளி.
அவன் திருமணம் செய்தான் நான் செய்த பாவம் நீ எனக்கு கணவனாக வந்திருக்கிறாய் என்றாள் மனைவி. வேறு எங்கும் போக வாய்ப்பில்லாமல் இறுதியாக கடவுளிடம் போய் நின்றான். இவ்வளவு பேரும் வேண்டாம் என்ற பிறகுதான் உனக்கு என்னைத் தேடும் உணர்வு வந்ததா. நீ மட்டும் அப்பொழுதே வந்திருந்தால் உன்னை எவ்வளவோ உயரமாய் வைத்திருப்பேன் என்று கடவுள் சொன்னாராம்.
சில நேரங்களில் இந்த உலகமும் மனிதர்களும் சூழ்நிலைகளும் ஏன் நம்முடைய சொந்த மனதும் நம்மை எதற்கும் லாயக்கில்லை என்று சொல்லவே முந்திக்கொள்ளும். நீ ஏன் வாழ்கின்றாய். நீ வாழ்வதால் என்ன பயன் நீ வாழ்வது யாருக்குத் தேவை என்ற சத்தங்கள்தான் நம்முடைய காதுகளில் தொனிக்கும்.
கெட்ட குமாரன் கெட்டு சீரழிந்து திரும்பி வந்தபோது இப்படிப்பட்ட ஒருவனை தகப்பன் ஏன் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றுதான் சொந்த சகோதரன் சிந்தித்தான். ஆனால் அந்த தகப்பன் மட்டும்தான் மகனே, நீ எவ்வளவு கெட்டுப் போனாலும் நீ எனக்கு வேண்டும் என்று சொல்ல முடிந்தது. அதுதான் தகப்பனின் மனம். அதுதான் தகப்பன் பார்வை.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய இளம் வயதுகளில் மும்பை பட்டணத்தின் ஆரவார சூழ்நிலையின் நடுவில் நான் நின்றேன். உலகமும் உறவுகளும், நண்பர்களும் ஏன், என் சொந்த மனமும் “ வேணடாம் வேண்டாம் நீ யாருக்கும் தேவையில்லை” என்று சொல்லுவதை நான் உணர்ந்தேன். இளம் வயதில் எவருக்கும் தேவையில்லாதவன் ஆகிவிட்டேனோ என்று கண்ணீர்விட்டு அழுதேன். அந்தக் கண்ணீர் யாருடைய மனதையும் இளக வைக்கவில்லை.
அங்கே கர்த்தராகிய ஏசு ஒரு வேதாகமத்தின் வாயிலாக” வேண்டும் வேண்டும் நீ எனக்கு வேண்டும் “என்றார்.” உன் கண்ணீருக்கு என்னிடம் மதிப்பு உண்டு” என்றார். இன்று என்னை வேண்டும் வேண்டும் என்று சொல்ல அநேகர் உண்டு. அதற்கு ஒரே காரணம் அன்று ஏசு “ நீ எனக்கு வேண்டும்“ என்று சொன்னதுதான்.
“சோதனைகள் உன்னை தொய்ந்து போகச் செய்தால் வேதவார்த்தைகளின்மேல் சாய்ந்து இளைப்பாறக் கற்றுக்கொள்”
- சாம்சன் பால்

குமரி பேராயம் குலசேகரம் சேகரம் தூய யோவன் ஆயர்மண்டல சபை சி.எஸ்.ஐ. தோட்டம் ஆலய அர்ப்பண விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

சபை போதகர் ஜான் ரெத்தினமணி மற்றும் சுந்தரராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பேராயர் தேவகடாட்சம் கலந்துகொண்டு ஆலயத்தை அர்ப்பணம் செய்துவைக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை சபைக்குழுவினர் செய்து வருகிறார்கள்.