என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    காமநாயக்கன்பட்டி பதுவை நகர் புனித அந்தோணியார் ஆலயத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) திருவிழா திருப்பலி, சப்பரபவனி, சமபந்தி விருந்தும், மாலை 7 மணிக்கு திருப்பலி, நற்கருணை பவனி நடக்கிறது.
    கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி செவல்பட்டி பதுவை நகர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஆராதனை பெருவிழா நடந்தது. விழா நாட்களில் சிறப்பு திருப்பலி, சமபந்தி விருந்து நடந்தது. நேற்று விளையாட்டு போட்டிகள், மறைக்கல்வி மன்ற விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    இன்று (திங்கட்கிழமை) மாலை 7.30 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட பொருளாளர் எஸ்.ஏ.அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து அந்தோணியர் திருவுருவ சப்பரபவனி, சமபந்தி விருந்து நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலி, சப்பரபவனி, சமபந்தி விருந்தும், மாலை 7 மணிக்கு திருப்பலி, நற்கருணை பவனி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை காமநாயக்கன்பட்டி பங்குதந்தை அந்தோணி அ.குரூஸ், உதவி பங்குதந்தை ஜெனால்டு அமல்ரீகன் மற்றும் பங்கு மக்கள் செய்து உள்ளனர்.
    கயத்தாறு புனித லூர்து அன்னை ஆலய திருவிழா தேர் பவனியில் வழிநெடுகிலும் கிறிஸ்தவர்கள் திரண்டிருந்து லூர்து அன்னைக்கு மாலை அணிவித்து, உப்பு, மிளகு வழங்கி வழிபாடு நடத்தினர்.
    கயத்தாறு புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை, மாலை சிறப்பு வழிபாடு, சொற்பொழிவு, ஆராதனை நடைபெற்று வந்தன.

    நேற்று அதிகாலை 6 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை 10 மணிக்கு தேர் பவனி நடந்தது. இந்த தேர் முக்கிய வீதிகளில் சுற்றி வந்தது. வழிநெடுகிலும் கிறிஸ்தவர்கள் திரண்டிருந்து லூர்து அன்னைக்கு மாலை அணிவித்து, உப்பு, மிளகு வழங்கி வழிபாடு நடத்தினர்.

    மதியம் ஒரு மணிக்கு தேர் ஆலயம் முன்பு வந்தடைந்தது. இதில் பங்குத்தந்தைகள் மற்றும் இறைமக்கள் கலந்து கொண்டனர்.
    காளையார்கோவிலில் புனித அருளானந்தர் ஆலய திருவிழாவில் சப்பர பவனி நடந்தது. இதில் காளையார்கோவில் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
    காளையார்கோவிலில் அமைந்துள்ள புனித அருளானந்தர் ஆலய திருவிழா கடந்த 4-ந்் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் நவநாள் திருப்பலி நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் அருட்தந்தை தாமஸ் தலைமையில் ஏராளமான அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினர்.

    அதனைத் தொடர்ந்து புனித அருளானந்தரின் உருவம் தாங்கிய சப்பரபவனி நடைபெற்றது. நேற்று காலை காளை யார்கோவில் பங்குத்தந்தை சூசை ஆரோக்கியம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் காளையார்கோவில் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு செந்தில்குமார் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
    மயிலாடி காமராஜர் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தை ஆயர் நசரேன் சூசை அர்ச்சித்து, திறந்து வைத்தார்.
    மயிலாடி காமராஜர் நகரில் புதிதாக புனித செபஸ்தியார் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. இதில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு ஆலயத்தை அர்ச்சித்து, திறந்து வைத்தார்.

    இதில் சிறப்பு விருந்தினராக கலப்பை மக்கள் இயக்க தலைவரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் கலந்து கொண்டார்.

    ஆயர் நசரேன் சூசை பேசும் போது, ‘காமராஜர்நகர் மக்களுக்காக, 13 ஆண்டுகளாக யாராலும் செய்ய முடியாத இந்த இறை பணியை, தனது சொந்த செலவில் செபஸ்தியார் ஆலயத்தைகட்டி கொடுத்த கலப்பை மக்கள் இயக்க தலைவரும், இயக்குனருமான பி.டி.செல்வகுமாருக்கு பங்கு மக்கள் சார்பில்பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

    அதைத்தொடர்ந்து பி.டி.செல்வகுமாருக்கு நினைவு பரிசு மற்றும் நற்சான்றிதழை ஆயர் நசரேன் சூசை வழங்கி, கவுரவித்தார்.

    அதைத்தொடர்ந்து ஆலயத்தில் ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பங்கு மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் சமபந்தி விருந்து நடைபெற்றது.

    விழாவில் ஊர் முன்னாள் தலைவர் ஜான்சன், மயிலாடி ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை தலைவர் சுப்பிரமணியம், மயிலாடி தொழில் வர்த்தகர் நல சங்க தலைவர் சுதாகர், மயிலாடி பேரூராட்சி முன்னாள் தலைவர் சாய்ராம், அழகப்பபுரம் பங்கு பேரவை துணை தலைவர் விக்டர் நவாஸ், ஸ்பெல்மன், கிங்ஸ்டன், வேதமணி, மூர்த்தி, தங்கம் நடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஜான்கென்னடி, ஊர்தலைவர் முத்துகணேசன், செயலாளர் சகாயஅஜிஸ், பொருளாளர் சகாய சுபின்சன் மற்றும் நிர்வாகிகள், பங்கு மக்கள் செய்து இருந்தனர்.
    வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இந்த திருவிழா 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    திருவிழாவையொட்டி வியாழக்கிழமை புனித செபஸ்தியார் தத்துக்கிராம நற்செய்தி பணித்திட்டம் சார்பில் நற்செய்தி கூட்டம் நடந்தது.

    நேற்று மாலை பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு ஜெரால்டு பால்ராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி, குழந்தைகளுக்கான திருமுழுக்கு வழங்குதல், மாலை 5 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது.

    14-ந் தேதி கத்தோலிக்க சேவா சங்கம் சிறப்பிக்கும் பவளவிழா கொண்டாடும் திருப்பலியும், 17-ந் தேதி இரவு 9 மணிக்கு தேர்ப்பவனியும் நடைபெறும். 18 -ந் தேதி காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி ஆகியவை நடைபெறும்.

    19-ந் தேதி காலை 6 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு செபமாலை, சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு தேர்ப்பவனியும், வாணவேடிக்கையும் நடக்கிறது.

    20-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு குடும்பவிழாவான திருவிழா நிறைவு முதல் திருப்பலியும், காலை 8.30 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலியும், மதியம் 1 மணிக்கு தேர்ப்பவனியும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை ஜி.ஜெயக்குமார், இணைப்பங்குத்தந்தை அ.அஜின் ஜோஸ், அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள், துணைத்தலைவர் சகாய பால் ததேயுஸ், செயலாளர் புஷ்பாஸ், துணைச் செயலாளர் ஆக்னல் வினு, பொருளாளர் பபியோன் ராஜ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    மயிலாடி காமராஜர் நகரில் புதிதாக புனித செபஸ்தியார் ஆலய அர்ச்சிப்பு விழா இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது.
    மயிலாடி காமராஜர் நகரில் புதிதாக புனித செபஸ்தியார் ஆலயம் கட்டப்பட்டு உள்ளது. இந்த ஆலய அர்ச்சிப்பு விழா இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. புதிய ஆலயத்தை கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை அர்ச்சித்து திறந்து வைக்கிறார். சிறப்பு விருந்தினராக திரைப்பட தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி. செல்வகுமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். தொடர்ந்து இரவு 7 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜான் கென்னடி, ஊர் தலைவர் முத்து கணேசன், செயலாளர் சகாய சஜிஷ், பொருளாளர் சுபின் சன் மற்றும் நிர்வாகிகள் பங்கு மக்கள் செய்துள்ளனர்.
    வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    திருவிழாவையொட்டி நேற்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை புனித செபஸ்தியார் தத்துக்கிராம நற்செய்தி பணித்திட்டம் சார்பில் நற்செய்தி கூட்டம் நடந்தது.

    இன்று மாலை 5.45 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி, குழந்தைகளுக்கான திருமுழுக்கு வழங்குதல், மாலை 5 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது.

    14-ந் தேதி கத்தோலிக்க சேவா சங்கம் சிறப்பிக்கும் பவளவிழா கொண்டாடும் திருப்பலியும், 17-ந் தேதி இரவு 9 மணிக்கு தேர்ப்பவனியும் நடைபெறும். 18 -ந் தேதி காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி ஆகியவை நடைபெறும்.

    19-ந் தேதி காலை 6 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு செபமாலை, சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு தேர்ப்பவனியும், வாணவேடிக்கையும் நடக்கிறது.

    20-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு குடும்பவிழாவான திருவிழா நிறைவு முதல் திருப்பலியும், காலை 8.30 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலியும், மதியம் 1 மணிக்கு தேர்ப்பவனியும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை ஜி.ஜெயக்குமார், இணைப்பங்குத்தந்தை அ.அஜின் ஜோஸ், அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள், துணைத்தலைவர் சகாய பால் ததேயுஸ், செயலாளர் புஷ்பாஸ், துணைச் செயலாளர் ஆக்னல் வினு, பொருளாளர் பபியோன் ராஜ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    ஈத்தாமொழி அருகில் உள்ள பெரியகாடு புனித அந்தோணியார் திருத்தல திருவிழா கொடியேற்றுடன் தொடங்கியது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பங்குத்தந்தை பிரான்சிஸ் போர்ஜியா, பங்கு அருட்பணி பேரவையினர் மற்றும் பங்குமக்கள் கலந்து கொண்டனர்.
    ஈத்தாமொழி அருகில் உள்ள பெரியகாடு புனித அந்தோணியார் திருத்தல திருவிழா கொடியேற்றுடன் தொடங்கியது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பங்குத்தந்தை பிரான்சிஸ் போர்ஜியா, பங்கு அருட்பணி பேரவையினர் மற்றும் பங்குமக்கள் கலந்து கொண்டனர். இந்த விழா வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது. தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது.

    19-ந்தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், சிறப்பு மாலை ஆராதனையும் நடக்கிறது. 20-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு திருவிழா திருப்பலியும், 7 மணியில் இருந்து தொடர்ந்து திருப்பலிகளும், மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பங்குதந்தை பிரான்சிஸ் பேர்ஜியா, பங்கு பேரவையினர் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகிறார்கள்.
    மெஞ்ஞானபுரம் பரிசுத்த பவுலின் ஆலய 175-வது பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசன விழா இன்று இரவு 7 மணிக்கு கலைநிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
    பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான மெஞ்ஞானபுரம் பரிசுத்த பவுலின் ஆலய 175-வது பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசன விழா இன்று இரவு 7 மணிக்கு கலைநிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 9-ந்தேதி நாகர்கோவில் இரட்சிப்பார் ஊழியங்கள் நடத்தும் பார்வையற்றோர் கிறிஸ்தவ இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 10, 11-ந்தேதி இரவில் நற்செய்தி கூட்டங்கள் நடைபெறுகிறது. 12-ந்தேதி மதியம் 3 மணிக்கு திடப்படுத்தல் ஆராதனையை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் நடத்துகிறார். இரவு 7.30 மணிக்கு பொதுமகமை சங்கத்தாரின் அமலிபால் வழங்கும் கிறிஸ்தவ இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

    13, 14-ந்தேதிகளில் இரவு 7.30 மணிக்கு பஜனை பிரசங்கம் நடக்கிறது. 15-ந்தேதி இரவு 7.30 மணிக்கு ஸ்தாபனங்களின் கலைநிகழ்ச்சி நடக்கிறது. 16-ந்தேதி தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் தலைமையில் பிரதிஷ்டை பண்டிகை நடக்கிறது. காலை 9 மணிக்கு எலியட் டக்ஸ்போர்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கணம் ரேனியஸ் சிற்றாலயத்தில் திருவிருந்து ஆராதனை நடக்கிறது. காலை 11 மணிக்கு அசன வைபவ மங்களகால் நடுதல், மாலை 4 மணிக்கு பரிசுத்த ஞானஸ்நான ஆராதனையும், இரவு 7 மணிக்கு ஆயத்த பண்டிகை ஆராதனையை கன்னியாகுமரி திருமண்டல பேராயர் செல்லையா நடத்துகிறார்.

    வருகிற 17-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை ஆராதனையை நெல்லை திருமண்டல பேராயர் பர்னபாஸ் நடத்துகிறார். காலை 8 மணிக்கு கணம் ஜான் தாமஸ் ஐயர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துதல், 6.15 மணிக்கு உலை ஏற்றும் வைபவம், மதியம் 3 மணிக்கு அசன வைபவம், இரவு 8.30 மணிக்கு வாணவேடிக்கையும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை மெஞ்ஞானபுரம் பொதுமகமை சங்க தலைவர் ஜெயபோஸ், துணை தலைவர் ஜெரால்டு ஜான்சன், செயலாளர் நவமணி ராபர்ட், இணை செயலாளர் செல்வின், பொருளாளர் சொர்ணராஜ், தலைமை குருவானவர் கோல்டுவின், உதவி குருவானவர் ஐசக்துரை ஜோயல், திருப்பணிவிடையாளர் எட்வின் ஜெபராஜ், சபை ஊழியர் பிளசிங் ஜிம்ரோஸ் மற்றும் சபைமக்கள் செய்து வருகின்றனர்.
    ஈத்தாமொழி அருகே உள்ள பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது.
    ஈத்தாமொழி அருகே உள்ள பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது. முதல் நாளில் மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடைபெறும். தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது.

    19 -ந் தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், சிறப்பு மாலை ஆராதனையும் நடக்கிறது. 20-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு திருவிழா திருப்பலியும், 7 மணியில் இருந்து தொடர்ந்து திருப்பலிகளும், மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பங்குதந்தை பிரான்சிஸ் பேர்ஜியா, பங்கு பேரவையினர் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகிறார்கள்.
    காளையார்கோவில் புனித செபஸ்தியார் ஆலயத்தில் பங்குத்தந்தை சூசை ஆரோக்கியம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்தும் சப்பர பவனி நடைபெற்றது
    காளையார்கோவில் அருகே வளையம்பட்டியில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கடந்த 28-ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் நவநாள் திருப்பலி நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் மாலை திருவிழா சிறப்பு திருப்பலி அருட்தந்தை ஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து செபஸ்தியாரின் உருவம் தாங்கிய சப்பரபவனி கிராம வீதிகளின் வழியாக நடைபெற்றது.நேற்று காலை காளையார்கோவில் பங்குத்தந்தை சூசை ஆரோக்கியம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்தும் சப்பர பவனி நடைபெற்றது. இதில் காளையார்கோவில் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
    கும்பகோணம் புனித அந்தோணியார் ஆலயத்தில் திருத்தேர் பவனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 15-ந் தேதி வாணவேடிக்கையுடன் திருத்தேர் பவனி நடைபெறுகிறது.
    கும்பகோணம் அருகே உள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட முல்லை நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் 9-ம் ஆண்டு திருத்தேர் பவனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 15-ந் தேதி இரவு 7 மணிக்கு வாணவேடிக்கையுடன் திருத்தேர் பவனி நடைபெறுகிறது.
    ×