என் மலர்
கிறித்தவம்

மயிலாடி காமராஜர் நகரில் புனித செபஸ்தியார் ஆலய அர்ச்சிப்பு விழா இன்று நடக்கிறது
மயிலாடி காமராஜர் நகரில் புனித செபஸ்தியார் ஆலய அர்ச்சிப்பு விழா இன்று நடக்கிறது
மயிலாடி காமராஜர் நகரில் புதிதாக புனித செபஸ்தியார் ஆலய அர்ச்சிப்பு விழா இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது.
மயிலாடி காமராஜர் நகரில் புதிதாக புனித செபஸ்தியார் ஆலயம் கட்டப்பட்டு உள்ளது. இந்த ஆலய அர்ச்சிப்பு விழா இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. புதிய ஆலயத்தை கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை அர்ச்சித்து திறந்து வைக்கிறார். சிறப்பு விருந்தினராக திரைப்பட தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி. செல்வகுமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். தொடர்ந்து இரவு 7 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜான் கென்னடி, ஊர் தலைவர் முத்து கணேசன், செயலாளர் சகாய சஜிஷ், பொருளாளர் சுபின் சன் மற்றும் நிர்வாகிகள் பங்கு மக்கள் செய்துள்ளனர்.
விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜான் கென்னடி, ஊர் தலைவர் முத்து கணேசன், செயலாளர் சகாய சஜிஷ், பொருளாளர் சுபின் சன் மற்றும் நிர்வாகிகள் பங்கு மக்கள் செய்துள்ளனர்.
Next Story