என் மலர்

    கிறித்தவம்

    புனித அந்தோணியார்
    X
    புனித அந்தோணியார்

    காமநாயக்கன்பட்டி பதுவை நகர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காமநாயக்கன்பட்டி பதுவை நகர் புனித அந்தோணியார் ஆலயத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) திருவிழா திருப்பலி, சப்பரபவனி, சமபந்தி விருந்தும், மாலை 7 மணிக்கு திருப்பலி, நற்கருணை பவனி நடக்கிறது.
    கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி செவல்பட்டி பதுவை நகர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஆராதனை பெருவிழா நடந்தது. விழா நாட்களில் சிறப்பு திருப்பலி, சமபந்தி விருந்து நடந்தது. நேற்று விளையாட்டு போட்டிகள், மறைக்கல்வி மன்ற விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    இன்று (திங்கட்கிழமை) மாலை 7.30 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட பொருளாளர் எஸ்.ஏ.அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து அந்தோணியர் திருவுருவ சப்பரபவனி, சமபந்தி விருந்து நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலி, சப்பரபவனி, சமபந்தி விருந்தும், மாலை 7 மணிக்கு திருப்பலி, நற்கருணை பவனி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை காமநாயக்கன்பட்டி பங்குதந்தை அந்தோணி அ.குரூஸ், உதவி பங்குதந்தை ஜெனால்டு அமல்ரீகன் மற்றும் பங்கு மக்கள் செய்து உள்ளனர்.
    Next Story
    ×