என் மலர்

  ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

  காளையார்கோவிலில் அமைந்துள்ள புனித அருளானந்தர் ஆலய திருவிழா கடந்த 4-ந்் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை
  X
  காளையார்கோவிலில் அமைந்துள்ள புனித அருளானந்தர் ஆலய திருவிழா கடந்த 4-ந்் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை

  காளையார்கோவிலில் புனித அருளானந்தர் ஆலய சப்பர பவனி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காளையார்கோவிலில் புனித அருளானந்தர் ஆலய திருவிழாவில் சப்பர பவனி நடந்தது. இதில் காளையார்கோவில் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
  காளையார்கோவிலில் அமைந்துள்ள புனித அருளானந்தர் ஆலய திருவிழா கடந்த 4-ந்் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் நவநாள் திருப்பலி நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் அருட்தந்தை தாமஸ் தலைமையில் ஏராளமான அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினர்.

  அதனைத் தொடர்ந்து புனித அருளானந்தரின் உருவம் தாங்கிய சப்பரபவனி நடைபெற்றது. நேற்று காலை காளை யார்கோவில் பங்குத்தந்தை சூசை ஆரோக்கியம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் காளையார்கோவில் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

  விழாவையொட்டி சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு செந்தில்குமார் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
  Next Story
  ×