என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

புனித அந்தோணியார்
பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
ஈத்தாமொழி அருகே உள்ள பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது.
ஈத்தாமொழி அருகே உள்ள பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது. முதல் நாளில் மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடைபெறும். தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது.
19 -ந் தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், சிறப்பு மாலை ஆராதனையும் நடக்கிறது. 20-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு திருவிழா திருப்பலியும், 7 மணியில் இருந்து தொடர்ந்து திருப்பலிகளும், மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பங்குதந்தை பிரான்சிஸ் பேர்ஜியா, பங்கு பேரவையினர் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகிறார்கள்.

Next Story