என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் - ரெஜினா கசாண்ட்ரா - சிருஷ்டி டாங்கே இணைந்து நடித்திருக்கும் ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து வழங்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’.

    இதில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருக்கிறார். ரெஜினா நாயகியாக நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார். இவர்களுடன் சூரி, லிவிங்ஸ்டன், மனோபாலா, ரவிமரியா, மன்சூர் அலிகான், யோகிபாபு, மதுமிதா, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    இசை- டி.இமான், ஒளிப்பதிவு- கே.ஜி.வெங்கடேஷ், பாடல்கள்- யுகபாரதி, படத்தொகுப்பு- கே.ஆனந்த லிங்ககுமார், நடனம்- பிருந்தா, தினேஷ், தினா, ஸ்டண்ட்- திலீப் சுப்பராயன், கலை- ருத்ரகுரு, எழுத்து, இயக்கம்- எஸ்.எழில்.



    இதில், உதயநிதி ஸ்டாலின் நண்பனாக யோகிபாபு நடித்திருக்கிறார். சூரி மாறுபட்ட வேடத்தில் நடித்து இருக்கிறார். காதல், நகைச்சுவை கலந்த படமாக ‘சரவணன் இருக்க பயமேனே’ உருவாகி இருக்கிறது.

    படம் பற்றி கூறிய இயக்குனர் எழில்........

    ‘‘இந்த படத்துக்கு டி.இமான் இசையில் சூப்பர்ஹிட் பாடல்கள் கிடைத்து இருக்கிறது. இந்த படம் வித்தியாசமான கதை களத்தில் உருவாகி இருக்கிறது. ரசிகர்கள் விரும்பும் எல்லா அம்சங்களும் இருக்கும்’’ என்றார்.

    வருகிற 12-ந் தேதி ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் திரைக்கு வருகிறது.

    புதுமுகங்கள் நடிப்பில் உருவாகிவரும் ‘மங்களாபுரம்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.

    ஸ்ரீ அங்காளம்மன் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘மங்களாபுரம்’. யாகவன், சிவகுரு, இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் அஜெய்ரத்னம், டெல்லி கணேஷ், பெஞ்சமின், போண்டா மணி, பேபிதர்ஷினி, பேபிமகதி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு-திருஞான சம்மந்தம், இசை-கார்த்திகேயன் மூர்த்தி, பாடல்கள்- கோ.சேஷா, கலை- சின்னா,நடனம்- எஸ்.எல்.பாலாஜி, ராம்முருகேஷ் ,எடிட்டிங் - ராஜ் கீர்த்தி, வசனம் -சிவா, கதை-ஸ்ரீ அங்காளம்மன் மூவீஸ். திரைக்கதை, இயக்கம்- ஆர்.கோபால், இணை தயாரிப்பு- சித்ராதேவி செழியன், தயாரிப்பு- புதுவை.ஜி.கோபாலன்சாமி


    படம் பற்றி கூறிய இயக்குனர் ....

    “புதிதாக திருமணம் செய்து கொண்ட ஒரு இளம் தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான ஜமீன் பங்களாவில் குடியேறுகிறார்கள். அவர்களை ஒன்று சேர விடாமல் ஒரு அமானுஷ்ய சக்தி தடுக்கிறது.

    அந்த சக்தி யார் ? வென்றது இளம் காதலர்களா ? அமானுஷ்ய சக்தியா? என்பது கதை. மது என்கிற அரக்கன் ஒரு குடும்பத்தை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதுதான் படத்தின் மையக் கரு” என்றார். ‘மங்களபுரம்’ இந்த மாதம் வெளியாகிறது.

    விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம்-தமன்னா இணைந்து நடித்து வரும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ ஸ்கெட்ச் “

    இந்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா நடிக்கிறார். இவர்களுடன் சூரி, ஆர்.கே. சுரேஷ், அருள் தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், ரவி கி‌ஷன், விஷ்வாந்த், மாலி ஆகியோர் நடிக்கிறார்கள்.

    கலை-மாயபாண்டி, இசை -எஸ்.எஸ்.தமன், ஒளிப்பதிவு- சுகுமார், எடிட்டிங்-ரூபன், நடனம்-ஷோபி, பிருந்தா, ஸ்டண்ட் -ரவி வர்மன், தயாரிப்பு-மூவிங் பிரேம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- விஜய்சந்தர். இந்த படத்திற்காக விஜய்சந்தர் எழுதிய “கனவே கனவே புது கனவே” என்ற பாடலை நடிகர் விக்ரம் பாட தமன் இசையில் பதிவு செய்யப்பட்டது.



    இந்த படத்திற்காக சென்னையில் மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டது. முப்பது நாட்களுக்கு மேல் அதில் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது.

    படம் பற்றி கூறிய இயக்குனர் விஜய் சந்தர்....

    வட சென்னையை பின்னணியாக கொண்டு உருவாகும் இந்த படம் புது மாதிரியான ஒரு உணர்வை ஏற்படுத்தும். வட சென்னையில் பாமரர்கள், ஏழைகள் மட்டுமல்ல, படித்த டாக்டர்கள், வக்கீல்கள் என்று உயர்மட்ட மக்களும் இருக்கிறார்கள் என்கிற ஸ்டைலிஷ் படமாக ‘ஸ்கெட்ச்‘ உருவாகி வருகிறது. பரபரப்பான ஆக்‌ஷன் படமாகவும் ‘ஸ்கெட்ச்’ தயாராகி வருகிறது” என்றார்.
    பண்பாட்டை மையப்படுத்தும் திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘சிலந்தி-2’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    தென்னிந்திய திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமான ‘சிலந்தி’ படத்தை எழுதி இயக்கியவர் ஆதிராஜன். இவர் தனது டிஜிட்டல் தியேட்டர்ஸ் பட நிறுவனம் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘சிலந்தி-2’.

    இதில் விஜய ராகவேந்திரா நாயகனாக நடித்திருக்கிறார். இவர் பிரபல கன்னட ஹீரோ.

    ஹரிப்பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு குத்துப்பாடலுக்கு மேக்னா நாயுடு ஆடி இருக்கிறார். இவர்களுடன் சத்யஜித், ரங்கா உள்பட பலர் நடித்துள்ளனர்.

    இசை-பெ.கார்த்திக், ஒளிப்பதிவு-ராஜேஷ் யாதவ், எடிட்டிங் - ஸ்ரீகாந்த், வி.ஜே.சாபு, பாடல்கள்-சினேகன், நெல்லைபாரதி, ஆதிராஜன், நடனம் - ராதிகா, கலைக் குமார், ஸ்டண்ட் - மாஸ் மாதா.



    படம் பற்றி இயக்குனர் ஆதிராஜன் சொல்கிறார்...

    கை நிறைய சம்பாதிக்கும் வேகத்தில் நாகரீக மோகத்தில் நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காற்றில் பறக்கவிட்டு.. சுதந்திரம் என்ற பெயரில் எல்லை மீறி சொல்லும் பெண்களால் ஏற்படும் விபரீத விளைவுகளும் அதனால் உருவாகும் ஆபத்துக்களையும் சொல்லும் கதை.

    ரசனையான காதல்.. நாகரீகமான நகைச்சுவை.. அதிரடி சண்டைக் காட்சிகளுடன்.. அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத திரைக்கதையுடன் உருவாகியிருக்கும் திரில்லர் படம் இது.

    தமிழ்,கன்னட மொழிகளில் உருவான ‘ரணதந்திரா’ தமிழில்’ அதர்வனம்’ என பெயரிடப்பட்டிருந்தது. தற்போது ‘சிலந்தி-2’ என்ற பெயரில் வருகிறது” என்றார்.

    ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் உலக அரசியலை சொல்லும் ‘ஜெட்லி’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘ஜெட்லி’. ஆடு,மாடு, கோழி, நாய், ஈ, குரங்கு, பூனை, யானை, கழுதை ஆகியவற்றை வைத்து படங்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் வெள்ளைப் பன்றியை மையப்படுத்தி உருவாகி உள்ள படம் ‘ஜெட்லி’.

    உலகளவில் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு வித்தியாசமான படமாக ‘ஜெட்லி’ உருவாகி வருகிறது.

    இதில், முக்கிய நாயகர்களாக கண்ணன் பொன்னையா, ஜெகன்சாய் இருவரும் நடிக்கிறார்கள். தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் சலீம்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எத்திராஜ்பவன், நைப் நரேன், நிப்பு, ஆகியோரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகள் யார் என்பதை சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளனர். ஒளிப்பதிவு- துலிப்குமார், இசை-சி.சத்யா பாடல்கள்- வைரமுத்து, கலை- குருராஜ், ஸ்டண்ட் - நைப் நரேன், எடிட்டிங்-பால்ராஜ் .



    கதை, திரைக்கதை, வசனம்,இயக்கம்- ஜெகன்சாய். படம் பற்றி கூறிய அவர்...,

    “இது காமெடி படம் மட்டுமல்ல.. உலக அரசியலை சொல்லும் படம். அண்டை நாடுகள் எதுவும் பக்கத்து நாடுகளின் மீதுள்ள அக்கறையால் மட்டும் அன்புக்கரம் நீட்டுவதில்லை.. அது அவர்களது வியாபாரச் சந்தையை விரிவுப்படுத்தும் நோக்கமே என்பதை இதில் சொல்லி இருக்கிறோம்.

    சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற உள்ளது” என்றார்.
    எப்.சி.எஸ் கிரியே‌ஷன்ஸ் துவார் ஜி.சந்திரசேகர், தயாரிப்பில் உருவாகியுள்ள 5-வது படமான ‘பாக்கணும் போல இருக்கு’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    எப்.சி.எஸ் கிரியே‌ஷன்ஸ் துவார் ஜி.சந்திரசேகர், தயாரித்துள்ள 5-வது படம் ‘பாக்கணும் போல இருக்கு’.

    பரதன், அன்சிபா நாயகன், நாயகியாக நடித்துள்ள இதில், கஞ்சா கருப்பு, சூரி, சிங்கப்பூர் துரைராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    காமெடி கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தை எஸ்.பி. ராஜ்குமார் இயக்கியுள்ளார்.

    படம் பற்றி கூறிய இயக்குனர்....

    இந்த படத்தில் ரசிகர்கள் மறக்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு போட்டி ஒன்று இடம் பெற்றுள்ளது. அருள்தேவின் இசையில் பாடல்கள் ஹிட். அதில் “உன் ரெட்டை சடை கூப்பிடுது முத்தம்மா...” என்ற பாடல் பிரபலமாகி உள்ளது.



    கஞ்சா கருப்பு, சூரியின் கலக்கல் காமெடி, பரதன், அன்சிபா ஜோடியின் காதல், தாளம் போட வைக்கும் பாடல்கள், பரவசமடைய செய்யும் பிரம்மாண்ட காட்சிகள் என்று நூறு சதவீத பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் ஆதரவை பெறும் படமாக இருக்கும்” என்றார்

    ஏற்கனவே ரிலீஸ் ஆவதாக இருந்த இந்த படம் திரையரங்குகள் கிடைக்காததால் வெளியாகவில்லை.

    இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷால், இந்த படத்தை ரிலீஸ் செய்ய தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார். இதையடுத்து, இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இதனால் உற்சாகம் அடைந்த தயாரிப்பாளர் தொடர்ந்து 5 படங்களை தயாரிக்க போவதாக கூறி இருக்கிறார்.
    ஜாக்கி ஷெரப், சந்தீப் கி‌ஷன், லாவண்யா திரிபாதி நடிப்பில் திரில்லர் கதையாக உருவாகி உள்ள ‘மாயவன்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் ‘அட்டகத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’ படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவர், கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து இயக்கும் படம் ‘மாயவன்’.

    இதில் நாயகனாக சந்தீப் கி‌ஷன், நாயகியாக லாவண்யா திரிபாதி நடிக்கிறார்கள். இவர்களுடன் டேனியல் பாலாஜி, இந்தி நடிகர் ஜாக்கி‌ஷரப், பகவதி பெருமாள், மைம்கோபி, ஜே.பி,சிறப்பு தோற்றத்தில் அக்ஷாரா கவுடா உள்பட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு- கோபி அமர்நாத், இசை-ஜிப்ரான், எடிட்டிங்- லியோஜான்பால், கலை- கோபி ஆனந்த்,ஸ்டண்ட்-ஹரிதினேஷ், தயாரிப்பு- சி.வி. குமார், கே.ஈ.ஞானவேல் ராஜா, திரைக்கதை, வசனம், நலன் குமாரசாமி, கதை, இயக்கம்- சி.வி.குமார்.



    இது ஒரு சீரியல் கில்லர் தொடர்பான கதை. நாயகன் சந்தீப் ஒரு சைகோ கொலையாளியை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாகவும், நாயகி லாவண்யா கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்கும் உளவியல் நிபுணராகவும் நடிக்கிறார்கள். இந்தி நடிகர் ஜாக்கி‌ஷரப் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார்.

    படம் பற்றி கூறிய சி.வி.குமார், “பல வெற்றிப்படங்களை தயாரித்துக் கொண்டு இருந்தேன். இந்த கதை என்னை கவர்ந்ததால் இயக்குனர் ஆகிவிட்டேன்.

    இது அனைவரும் விரும்பும் படமாக இருக்கும்” என்றார்.
    ‘ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் தமிழ் - ‘கயல்’ ஆனந்தி - யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘என் ஆளோட செருப்பக்காணோம்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    ‘ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் படம் ‘என் ஆளோட செருப்பக்காணோம்’.

    இதில் அறிமுக நாயகனாக தமிழ் நடிக்கிறார். கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, பாலசரவணன், லிவிங் ஸ்டன், ரேகா, சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ், தளபதி தினேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு- சுக செல்வன்,இசை (பாடல் கள்)-இஷான்தேவ், பின்னணி-தீபன் சக்கரவர்த்தி, படத் தொகுப்பு-மணிகண்டன் சிவகுமார், கலை-என்.கே.பால முருகன், பாடல்கள்- விஜயசாகர், நடனம்- பாலகுமார் ரேவதி, ‘மெட்டி ஒலி’ சாந்தி, தினா, சண்டை பயிற்சி-ஸ்டண்ட் ஜிஎன், தயாரிப்பு- வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- ஜெகன்நாத்.



    படம் பற்றி கூறிய இயக்குனர்...

    ஒரு அடைமழை மாதத்தில் தொலைந்த நாயகியின் செருப்புகளை தேடி நாயகன் குடையுடன் தன் பய ணத்தை ஆரம்பிக்கிறான். 30 நாட் கள் நடக்கும் இந்த தேடல் பயணத்தில் அவன் சந்திக்கும் வித விதமான மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழ்வில் அந்த செருப்புகளால் ஏற்படும் நிகழ்வுகளின் தொகுப்பே இந்த படம்.

    தொலைந்த ஜோடி செருப்புகள் நாயகியை சென்றடைந்ததா? நாயக னையும், நாயகியையும் அவை ஒன்று சேர்த்ததா? என்பதை நகைச் சுவையுடனும், சுவாரசியத்துடனும் சொல்வதே ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ படத்தின் கதை” என்றார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
    ஒரே சம்பவத்தால் 16 பேருக்கு ஏற்படும் சிக்கலை சொல்லும் படமான ‘எய்தவன்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    பிரண்ட்ஸ் பெஸ்ட்டிவெல் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘எய்தவன்’.

    இந்த படத்தில் நாயகனாக கலையரசன், நாயகியாக சாதனா டைட்டஸ் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஆடுகளம் நரேன், வேலா ராமசாமி, கிருஷ்ணா, ராஜ்குமார், வளவன், விநோத், சவுமியா, ராதா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - சி.பிரேம்குமார், இசை - பார்த்தவ் பார்கோ, எடிட்டிங் - ஐ.ஜே.அலன், கலை - எம்.லட்சுமி தேவ், பாடல்கள் - நா.முத்துகுமார், ஞானவிநோத், ஸ்டண்ட் - ராக் பிரபு, நடனம் - தினா, பாபி ஆண்டனி,

    வசனம் - சக்திராஜ சேகரன், சதீஷ் சவுந்தர்.

    தயாரிப்பு - எஸ்.சுதாகரன், இயக்கம் - சக்தி ராஜசேகரன்.



    நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சாதாரண இளைஞன் கிருஷ்ணா. ஒட்டு மொத்த குடும்பமும் தங்கையின் மேல் படிப்புக்காக சென்னைக்கு புலம் பெயர்கிறது. தங்கையின் உயர் படிப்பு கனவை நிறைவேற்றுவதில் ஏற்படும் சிக்கல்களும் அதனால் உருவாகும் பிரச்சினைகளும், கிருஷ்ணா சந்திக்கும் அரசி யல் சூழ்ச்சி களும், அதை எதிர் கொள்ள அவர் எடுக்கும் முடிவுகளுமே ‘எய்தவன்’ படத்தின் கதை.

    படம் பற்றி சக்தி ராஜசேகரனிடம் கேட்ட போது...

    “நகரின் முக்கிய இடத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது. இதில் 16 பேர் பாதிக்கப்படுகிறார்கள். எல்லோரும் அந்த சம்பவத்தில் இருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். ஆனால் நாயகன், அந்த சம்பவத்துக்கான அம்பை எய்தவன் யார் என்று தேடுகிறான். கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகளையும் சொல்லி இருக்கிறோம்.

    காதல், காமெடி, ஆக்‌ஷன் கலந்து கமர்சியல் படமாக ‘எய்தவன்’ உருவாகி இருக்கிறது” என்றார்.
    சமூக விரோதிகளாக மாறும் இளைஞர்கள் வாழ்க்கையை சொல்லும் ‘பிச்சுவா கத்தி’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிக்கும் படம் ‘பிச்சுவா கத்தி’.

    இதில் இனிகோ பிரபாகரன், செங்குட்டுவன், ஸ்ரீபிரியங்கா, அனிஷா, யோகிபாபு, நான் கடவுள் ராஜேந்திரன், பாலசரவணன், காளிவெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர்.

    இசை-என். ஆர். ரகுநந்தன், ஒளிப்பதிவு- கே.ஜி. வெங்கடேஷ், எடிட்டிங்- எஸ்.பி. ராஜசேதுபதி, பாடல்கள்- யுகபாரதி, ஸ்டண்ட்- ஹரிதினேஷ், ‘சுப்ரிம்’சுந்தர், தயாரிப்பு- சி.மாதையன், இயக் கம்- ஐயப்பன்,



    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

    கிராமத்தில் மகிழ்ச்சி யாக சுற்றித்திரியும் 3 இளை ஞர்கள் விளையாட்டாக ஒரு தவறு செய்கின்றனர். அதற்கான தண்ட னையை அனுபவிக்க காவல் நிலை யம் செல்கின்றனர். காவல் நிலையத்திலுள்ள அதிகாரி இவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக கேட்கிறார். இவர்கள் மறுக்கவே, அவர் மிரட்டுகிறார். இதனால் தங்களை காப்பாற்றிக் கொள்ள கெட்ட வழியில் ஈடுபட்டு பணத்தை தருகின்றனர்.

    ருசி கண்ட பூனைப்போல தீய செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். ஒரு கட்டத்தில் சமூக விரோதிகளாகவே மாறிப்போகின்றனர்.

    இறுதியில் அவர்கள் வாழ்க்கை மீண்டதா? இவர்களின் வாழ்வை திசை திருப்பிய அந்த அதிகாரி என்னவானார்? என்பதையும், ஒரு சிறு தவறு அவர்களை எப்படி திசை மாற்றியது என்பதையும் விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்லி இருக்கிறோம்” என்றார். படப்பிடிப்பு கும்ப கோணம் பகுதியிலும் சென்னையிலும் நடந்தது.

    ‘அப்சலூட் பிக்சர்ஸ்’ சார்பில் மால்காம் தயாரித்து வரும் ‘அதி மேதாவிகள்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    ‘அப்சலூட் பிக்சர்ஸ்’ சார்பில் மால்காம் தயாரித்து வரும் படம் ‘அதி மேதாவிகள்’.

    இந்த படம் நட்பையும், நகைச்சுவையையும் மையமாக கொண்டு உருவாகி இருக்கிறது. அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கி இருக்கிறார்.

    இந்த படத்தில் சின்னத்திரை தொகுப்பாளர் சுரேஷ் ரவி நாயகனாக நடிக்கிறார். நாயகி இஷாரா நாயர். இவர்களுடன் தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், ரேணுகா, மது, கல்லூரி வினோ முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.



    படம் பற்றி கூறிய நாயகன் சுரேஷ் ரவி....

    “நானும் ஒரு அரியர்ஸ் மாணவன் என்பதால், இந்த படத்தின் கதையை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எல்லா அரியர்ஸ் மாணவர்களுக்கும் எங்களின் அதி மேதாவிகள் திரைப்படம் ஓர் சமர்ப்பணம். இதை படமாக்கிய தயாரிப்பாளருக்கு நன்றி” என்று கூறினார்.

    “பெற்றோர்களின் வற்புறுத்தலால் இரண்டு மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து, படிக்க முடியாமல் அரியர்ஸ் மேல் அரியர்ஸ் வைக்கின்றனர். அதை சரி செய்வதற்கு அவர்கள் என்னென்ன முயற்சிகள் எடுக்கிறார்கள் என்பது தான் ‘அதி மேதாவிகள்’ படத்தின் கதை. இந்த படம் விரைவில் திரைக்கு வரும்” என்றார்.
    விஜய் சேதுபதியின் 25ஆவது படமாக உருவாக உள்ள `சீதக்காதி' படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    குறுகிய காலத்தில் சிறந்த நடிகர், வர்த்தக ரீதியாக நம்பகத்தன்மை கொண்ட நடிகர் என புகழ்பெற்றவர் விஜய் சேதுபதி. இவரது 25-ஆவது படம் `சீதக்காதி'. இப்படத்தை `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கவிருக்கிறார். விஜய் சேதுபதியும், பாலாஜி தரணிதரனும் இணையும் இரண்டாவது படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் என்கிற பட நிறுவனத்தின் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், மற்றும் அருண் வைத்தியநாதன் தயாரிக்கின்றனர். இதுகுறித்து இயக்குநர் பாலாஜி தரணிதரம் பேசியதாவது,



    `சீதக்காதி' படத்தின் கதைக்கு விஜய் சேதுபதி மிக மிக பொருத்தமானவர். நாங்கள் இணையும் இரண்டாவது படம் இது என்பதையும் தாண்டி, இந்த கதாப்பாத்திரத்துக்கு விஜய் சேதுபதி உயிர் வடிவம் கொடுக்க போகிறார் என்பதே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. நாங்கள் மீண்டும் இணைய இருக்கும் `சீதக்காதி' பெரும் எதிர்ப்பார்ப்பை கூட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இந்த படம் இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று இயக்குனர் பாலாஜி தரணிதரன் கூறினார்.
    ×