என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    அலெக்ஸ் கிரியே‌ஷன்ஸ் சார்பில் அர்வி தயாரிக்கும் ‘ராஜாவும் 5 கூஜாவும்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    அலெக்ஸ் கிரியே‌ஷன்ஸ் சார்பில் அர்வி தயாரிக்கும் படம் ‘ராஜாவும் 5 கூஜாவும்’.

    இதில், அர்வி கதாநாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, பவர்ஸ்டார் சீனிவாசன், ‘நான்கடவுள்’ ராஜேந்திரன், பாலாஜி, ரவிமரியா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு-கார்த்திக்ராஜா, இசை- ரவி விஜய் ஆனந்த், படத்தொகுப்பு-சுரேஷ் அர்ஸ், கலை-சாய்மணி, நடனம்- அட்சய் ஆனந்த்.

    தயாரிப்பு- அர்வி. கதை,திரைக்கதை, வசனம், இயக்கம்-பிரபு ஆதித்யன்.



    வித்தியாசமான நகைச் சுவை படமாக ‘ராஜாவும் 5 கூஜாவும்’ தயாராகி வருகிறது.

    இந்த படத்துக்காக 50 வருடங்களுக்கு முன்பு பிரபலமான ‘உன் அழகை கன்னியர்கள் கண்டதினாலே....’ என்ற பாடலை நவீன தொழில் நுட்ப உதவியுடன் இசை அமைப்பாளர் ரவி விஜய் ஆனந்த் ‘ரீமிக்ஸ்’ செய்துள்ளார். கானாபாலா பாடி இருக்கிறார்.

    இந்த பாடலுக்கான நடன காட்சி ஜெய்ப்பூர்அரண்மனையில் படமாக்கப்பட்டது. இதில் நாயகன் அர்வி, இமான் அண்ணாச்சி, பவர்ஸ்டார் சீனிவாசன், பாலாஜி, ரவிமரியா ஆகியோர் ராஜாக்கள் உடையில் நடனம் ஆடினார்கள். இவர்களுடன் ரஷ்ய பாலே நடன அழகி, 40 நடன கலைஞர்கள் இணைந்து ஆடினார்கள். நடன இயக்குனர் அட்சய் ஆனந்த் அமைத்த இந்த நடனத்தை கார்த்திக் ராஜா படமாக்கினார். இது மிகவும் சிறப்பாக வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

    ஆறுபடை மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘லாலி லாலி ஆராரோ’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    ஆறுபடை மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘லாலி லாலி ஆராரோ’.

    இந்த படத்தில் நடிகர் சரண்ராஜ் மகன் தேஜ் சரண்ராஜ் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக புதுமுகம் ஷிவானி அறிமுகமாகிறார். இவர் களுடன் மனோபாலா, லட்சுமி பிரியாமேனன், ஷினாஜ், ஜீவா ரவி, திவாகர் ஆகியோர் நடிக்கிறார்கள். கே.கே.வில்லனாக நடிக்கிறார்.

    ஒளிப்பதிவு -நாக பூ‌ஷன் , இசை-ராம கோபால கிருஷ்ணன், பாடல்கள் -ராஜகனி, எடிட்டிங் -ஆனந்த்.ஆர்.ஜி, நடனம்- ராபர்ட்சுரேஷ், ஸ்டண்ட்- ஓம் பிர காஷ், கலை- மகிரங்கி. தயாரிப்பு ஆறுபடையப்பன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - லிங்கன் ராஜாளி



    படம் பற்றி இயக் குனரிடம் கேட்ட போது....

    “அம்மாதான் உலகம் என்று வாழும் நாயகன் லாலி. தன் மகனை விட உலகத்தில் சிறந்தது எதுவும் இல்லை என்று நினைக்கும் அம்மா. இவர்களுக்கு இடையில் காதலியாக, மதுரா உள்ளே வர, அதை அந்த குடும்பம் எப்படி எதிர் கொள்கிறது? தன் மகள் தான் தனது ஆதாரம் என்று வாழும் ஒரு அப்பா. அவரைத் தவிர உலகத்தில் உயர்ந் தது இல்லை என்று கருதும் மகள். இவர் களுக்கு இடையே காதலனாக லாலி உள்ளே வர அதை எப்படி அந்த குடும்பம் எதிர் கொள்கிறது? என்பது தான் இந்த படத்தின் கதை.

    இதை சென்டிமென்ட் கலந்து குடும்பத்துடன் பார்க்கும் படமாக உருவாக்கி உள்ளோம்” என்றார். படப்பிடிப்பு நாகர்கோவில், கேரளா பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற தமிழ் புத்தாண்டு தினத்தில் நடைபெறுகிறது.
    ஒளிமார் சினிமாஸ் சார்பாக ஜெ.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பூம் பூம் காளை’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    ஒளிமார் சினிமாஸ் சார்பாக ஜெ.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பூம் பூம் காளை’.

    இந்த படத்தின் நாயகனாக நடிகை அனுராதாவின் மகன் கெவின் நடித்துள்ளார். கதாநாயகியாக சாரா தேவா நடித்துள்ளார். இவர் ‘சிவலிங்கா’ படத்தின் நாயகிகளில் ஒருவர். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், அப்புக் குட்டி, ‘காதல்’ அருண், சச்சு, கிரேன் மனோகர், அபிநயாஸ்ரீ உட்பட பலர் நடிக் கின்றனர்.

    ஒளிப்பதிவு- கே.பி.வேல் முருகன், இசை- பி.ஆர்.ஸ்ரீநாத், பாடல்கள்- எஸ். ஞானகரவேல், படத் தொகுப்பு- யுவராஜ், இயக்கம்- ஆர்.டி. குஷால்குமார்.



    படம் பற்றி கூறிய இயக் குனர்....

    “காதல் பொய்.. காமம் தான் நிஜம் என்று சொன் னால் உடனே பல பேர் எதிர் குரல் கொடுப்பார்கள். ஆனால் நிதானமாக யோசித்து பார்த்தால் உண்மை புரியும். ‘பூம் பூம் காளை’ படத்தின் மையக் கருத்து இது தான்.

    நாயகன், நாயகி இருவரும் திருமணம் முடித்து தேனிலவு செல்கிறார்கள்.. நாயகியோ கணவனுடன் அன்பாக பழகி, அதன்பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபட விரும்புகிறாள்.. நாயகனோ திருமணம் முடிந்த உடனே அது நடப்பது எப்போது என ‘பூம் பூம் காளை’யாக அலை பாய்கிறான்.

    இப்படி எதிர்கருத்து கொண்டவர்களின் தேனிலவு நடந்ததா? இல்லையா? என்பதை நகைச்சுவை கலந்து சொல்லும் படம் இது” என்றார்.
    மோரா பிக்சர்ஸ் தயாரிப்பில் நகைச்சுவை சரவெடியாக உருவாகி உள்ள ‘மோகனா’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    மோரா பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘மோகனா’.

    இதில் மொட்டை ராஜேந்திரன், பவர் ஸ்டார் சீனிவாசன், கல்யாணிநாயர், உமா ஹரீஷ், மோரா, மும்பை சீனுஜி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    இசை-எல்.ஜி.பாலா, பாடல்கள்- மோரா, சீனி வாசன், நடனம்- கவுசல்யா, சண்டைபயிற்சி- ‘ஸ்டண்ட்’ விஜய், இணைதயாரிப்பு- பிரபாவதி, தயாரிப்பு- மோரா, கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம்- ஆர்.ஏ.ஆனந்த். இவர் ‘செவிலி’ படத்தை இயக்கியவர்.



    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

    “நாடகத்துறையிலுள்ள கலைஞர்களின் வாழ்க்கை பற்றி கூறுவதே இந்த படம். மோகனா எனும் நாடக நடிகையை நடிகராக வரும் பவர் ஸ்டார் ஒரு தலையாக காதலிக்கிறார். அதே சமயம் பண்ணையார் மொட்டை ராஜேந்திரனும் அவள் மேல் உயிரையே வைத்திருக்கிறார். அதில் சிக்கித் தவிக்கும் மோகனாவின் நிலை என்ன என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் முழு நீள நகைச்சுவை படம் இது” என்றார்.

    மொட்டை ராஜேந்திரனின் கனவில் வந்து கதாநாயகி முத்தம் கொடுப்பது போன்ற காட்சியை எடுப்பதற்காக இயக்குனர் தயாரானார். முத்தக்காட்சி வேண்டும் என்று ‘பவர்ஸ்டார்’ சீனிவாசனும் கேட்க கதாநாயகி மறுத்துவிட்டார். இந்த நிலையில், கதாநாயகியை திடீரென காணவில்லை. படப்பிடிப்பை சிறிது நேரம் நிறுத்திவிட்டு தேடிய போது, அங்குள்ள ஒரு அறையில் நடிகை தேம்பி, தேம்பி அழுது கொண்டிருந்தார். முத்தக்காட்சியே இல்லை என்று அவரிடம் சொன்ன பிறகு தான் நடிகை வந்தார். படப்பிடிப்பு மீண்டும் நடந்தது.
    விபிஎம் கிரியே‌ஷன்ஸ் தயாரிப்பில் வீரஇளைஞனின் கதையாக உருவாகியுள்ள ‘வதம்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    இதில் பிரவின், வின்ஸ்லி ஆகிய இருவர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். சுவப்னா நாயகியாக அறிமுகமாகிறார். பாலாசிங், ராஜேந்திரநாத், இயக்குனர் ஜேப்பி, ஆசைத்தம்பி, ராதாகிருஷ்ணன், நவீன் சீதாராமன், விஷ்வா, கம்பம் மீனா ஆகியோர் நடிக்கின்றனர்.

    இளையராஜாவின் அக்காள் மகன் ரவிவிஜய் ஆனந்த் இசை அமைக் கிறார். ஒளிப்பதிவு- ஹார்முக், பாடல்கள் -மோகன்ராஜன், ரவிவிஜய் ஆனந்த், முருகன் மந்திரம்,எடிட்டிங்- மாரீஷ்.ஏ, நடனம்- அக்‌ஷய் ஆனந்த், ஸ்டண்ட்-ஜாக்கி ஜான்சன், தயாரிப்பு- விபிஎம்.எல்.வின்ஸ்லி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- என்.எஸ்.அருள்செல்வம்.



    “ இது அரசியல் பின்புலத்துடன் கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்து போன்ற சமூக விரோத செயல்களை செய்து வருபவர்களை எதிர் கொண்டு அப்பாவி மக்களின் துயர் துடைக்கும் வீர தீர இளைஞனின் கதை. இதில் வரும் சண்டை காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கும். பாடல்கள் ஆட்டம் போட வைக்கும்” என்றார். படப்பிடிப்பு திருநெல்வேலி, வடக்கன்குளம், வள்ளியூர் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது.
    தம்பி தெய்வா மீடியாஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆண்கள் மட்டுமே நடித்து வரும் படமான ‘ஆடவர்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    தம்பி தெய்வா மீடியாஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘ஆடவர்’.

    இதில் முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே நடித்துள்ளனர். ராபர்ட், கார்த்திக், சரவணன், சிரஞ்சீவி ஆகிய நான்கு புதுமுகங்கள் கதையின் நாயகனாக நடித்துள்ளனர். இவர்களுடன் ‘சேதுபதி’ ஜெயச்சந்திரன், ரமேஷ், மாஸ்டர் கிரண் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    கேரள அரசின் விருது பெற்ற தஷி இசைஅமைத்துள்ளார். படத்தொகுப்பு-சீனிவாசன், நடனம்-ரமேஷ் கமல், தாயாரிப்பு- சொ. சிவகுமார் பிள்ளை. கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம்- ஸ்ரீரஞ்சன்.



    “ சுனாமி குறித்து ஆய்வு செய்வதற்காக 4 இளைஞர்கள் வருகிறார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அதில் இருந்து மீண்டு தங்களின் ஆய்வில் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதும் தான் கதை. மாஸ்டர் கிரண் என்ற 10 வயது சிறுவன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறான். இது திருப்பு முனைகதாபாத்திரம். அவன் சிறப்பாக நடித்து படக்குழுவினரிடம் பாராட்டு பெற்றான்” என்றார்.

    இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் எஸ்.ஆர்.எம்-ன் சிவாஜி திரைப்படக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட, கல்லூரியின் முதல்வர் ஏ.சுப்பையா பாரதி மற்றும் துறை தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.

    விழாவில் கானா உலகநாதன், டியாலோ கோபு ஆகியோர் படத்தின் பாடல்களை பாடினார்கள். ‘ஆடவர்’ படம் விரைவில் திரைக்கு வருகிறது.
    லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் கிராமத்து கதையாக உருவாகியுள்ள ‘விருத்தாசலம்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘விருத்தாசலம்’.

    இதில் விருதகிரி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் விருத்தாசலம் அருகே உள்ள கச்சிராய நத்தம் கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். சிறந்த நிர்வாகத்துக்காக ஜனாதிபதி விருது பெற்றவர். கதாநாயகிகளாக ஸ்வேதா, சமீரா, ஷெரீன் தாஹா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சம்பத்ராம், பாவாலட்சுமணன், காதல்சரவணன், வெண்ணிலா கபடிக்குழு ஜானகி, நெல்லை சிவா, டைரக்டர் நாராயணமூர்த்தி உள்பட பலர் நடிக்கிறார்கள்.



    ஒளிப்பதிவு -சிவ நேசன், உமாசங்கர், இசை-ஸ்ரீராம், பாடல்கள்- இளையகம்பன், எடிட்டிங் -வி.டி.விஜயன் சுனில், கலை- நா.கருப் பையன்,நடனம்-சதீஷ் , ஸ்டண்ட்-பயர் கார்த்திக்,தயாரிப்பு பி.செந்தில்முருகன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ரத்தன்கணபதி. படம் பற்றி இயக்குனர் கூறும் போது....

    “சூழ்நிலை காரணமாக சிறு வயதில் விருதகிரி செய்த குற்றத்திற்காக, 14 வருடம் சிறை தண்டனை அனுபவிக்கிறான். இளமையை இழந்து வெளியே வரும் அவன் பெற்ற தாயையும், காதலியையும் இழக்க நேரிடுகிறது.

    ஆனாலும் நேர்மையாக வாழ வேண்டும் என்கிற கொள்கையை மட்டும் அவன் இழக்க வில்லை. அவனது நேர்மைக்கு கிடைத்த பரிசு என்ன என்பதுதான் இந்த படத்தின் வாழ்வியல் கதை” என்றார்.

    கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் 7-ந் தேதி வெளியாகிறது.
    ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெற்றிவேல் சரவணா சினிமா தயாரித்துள்ள ‘8 தோட்டாக்கள்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    வெற்றிவேல் சரவணா சினிமா தயாரித்துள்ள படம் ‘8 தோட்டாக்கள்’.

    இதில், புதுமுகம் வெற்றி கதாநாயகனாக நடித்திருக்கிறார். நாயகி அபர்ணா பாலமுரளி கேரள வரவு. இவர்களுடன் நாசர்,  எம்.எஸ்.பாஸ்கர், மைம் கோபி, அம்மா கிரியே‌ஷன் சிவா, சார்லஸ் விநோத், ஆர்.எஸ். சிவாஜி, தேனிமுருகன், மணிகண்டன்  உள்பட பலர் நடித் திருக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு-தினேஷ்கே.பாபு, இசை-கே.எஸ்.சுந்தர மூர்த்தி, எடிட்டிங்-நாகூரான், ஸ்டண்ட்-திலீப்சுப்புராயன், நடனம்-தினேஷ்,நந்தா,  தயாரிப்பு- வெள்ளைப் பாண்டியன், இயக்கம்- ஸ்ரீகணேஷ்.



    படம் பற்றி அவரிடம் கேட்ட போது.....

    “இது கிரைம் திரில்லர் கதையாக உருவாகி இருக்கிறது. போலீஸ் நிலையத்தில் இருந்த ஒரு துப்பாக்கி மாயமாகிறது. அதில்  உள்ள 8 தோட்டாக்கள் வெவ்வேறு இடங்களில் வெடிக்கின்றன. ஏன் இப்படி நடக்கிறது? இதற்கு காரணம் யார்? என்பது கதை.  இதில் நாயகன் வெற்றி, சப்-இன்ஸ் பெக்டராக நடித்திருக்கிறார்.இவர் தயாரிப்பாளர் மகன். என்றாலும், கதைக்கு மட்டுமே  முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் யதார்த்தமாக நடித்திருக்கிறார்.

    நாயகி அபர்ணா பத்திரிகை நிருபராக வருகிறார். எம்.எஸ்.பாஸ்கருக்கு இதில் அற்புதமான கதாபாத் திரம். அருமையாக  நடித்திருக்கிறார். இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமையும். அவர் நிச்சயம் ஒரு படி மேலே போவார். அவரது பாத்திரம்  அதிகமாக பேசப்படும்” என்றார்.
    ‘ஏஆர்மூவி பாரடைஸ்’ சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ள ‘களத்தூர் கிராமம்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    ‘ஏஆர்மூவி பாரடைஸ்’ சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ள படம் ‘களத்தூர் கிராமம்’.

    இந்த படத்தில் கிஷோர் குமார், புதுமுகம் யக்னா ஷெட்டி ஆகியோர் நாயகன் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சுலீல்  குமார், மிதுன்குமார், ரஜினி மகா தேவய்யா, அஜய் ரத்னம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இளையராஜா இசை அமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு- புஷ்பராஜ் சந்தோஷ், படத்தொகுப்பு- சுரேஷ் உர்ஸ், பாடல்கள்-  இளையராஜா கண்மணி சுப்பு, ஸ்டண்ட்- மகேஷ், ஓம் பிரகாஷ், இயக்கம்-சரண் கே.அத்வைத்தன். படம் பற்றி கூறிய அவர்...



    “இந்த களத்தூர் கிராமத்தின் கதையை நான் எழுத ஆரம்பித்த உடனே, ராஜாசாரின் இசை தான் இதற்கு மிக சரியாக இருக்கும்  என்பதை முடிவு செய்துவிட்டேன். கதையை முழுவதுமாக கேட்டு, அது பிடித்த பின்பு தான் இளையராஜா சார் எங்கள் படத்திற்கு  இசையமைக்க சம்மதம் தெரிவித்தார்.

    போலீசாருக்கும், களத்தூர் கிராம மக்களுக்கும் இடையே நிலவும் பிரச்சினை தான் இந்த படத்தின் கதை கரு. கதாநாயகன்  கிஷோர், இளைஞர், முதியவர் என இரண்டு வேடங்களில் நடித்து இருக்கிறார். 1980-ஆம் ஆண்டுகளில் நடக்கும் சம்பவங்களை  மையமாக கொண்டு உருவாகி இருக்கும் ‘களத்தூர் கிராமம்’ நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும்” என்றார்.

    மலை வாழ்மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள ‘கடம்பன்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி, ஆர்யாவின் ஷோ பீப்பிள் பட நிறுவனங் கள் தயாரிக்கும் படம் ‘கடம்பன்’.

    ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக கேத்தரின் தெரசா நடித்திருக்கிறார். இவர்களுடன் முருகதாஸ், சூப்பர்  சுப்புராயன், தீப்ராஜ் ரணா, ராஜசிம்மன், ஓய்.ஜி.மகேந்திரன், எத்தி ராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு- எஸ்.ஆர்.சதீஷ் குமார், இசை-யுவன்சங்கர் ராஜா, எடிட்டிங்- தேவ், கலை-ஏ.ஆர்.மோகன், ஸ்டண்ட் - திலீப்சுப்புராயன்,  பாடல்கள்-யுகபாரதி, நடனம்- ராஜு சுந்தரம், ஷோபி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- ராகவா.



    படம் பற்றி இயக்குனர் ராகவா கூறும் போது...

    “மலை வாழ் மக்களின் வாழ்க்கை பதிவு தான் கடம்பன். ஆர்யா இந்தபடத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அடர்ந்த  காடுகளில் பூச்சிகள் வண்டுகள் கடியிலிருந்து யாரும் தப்பவில்லை. மலைத்தேன் எடுப்பவர்களின் வாழ்க்கை தான் இதன்  மூலக்கரு. ஆர்யாவுக்கு இது ஹைலைட் படமாக இருக்கும். ஏப்ரல் மாதம் 14-ந்தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.  ‘கடம்பன்’ பக்கா கமர்ஷியல் படம்” என்றார்.
    கம்போடியாவில் சோழர்கள் கட்டிய கோவிலில் படமான ‘முந்தல்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    ஹர்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், கே.பாலகுமரன் தயாரித்துள்ள படம் ‘முந்தல்’. இதில் அப்பு கிருஷ்ணா என்ற  புதுமுகம் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக முக்ஷா நடிக்கிறார். இவர்களுடன் நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன்,  அழகு, மகாநதி சங்கர், போண்டாமணி உள்பட பலர் நடிக்கிறார்கள். ரிஷா கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார்.

    இந்த படத்தில் இயக்குனராக ஸ்டண்ட் ஜெயந்த் அறிமுகமாகிறார். ஸ்டண்ட் இயக்குனரான இவர். தமிழ்,தெலுங்கு, இந்தி,  கன்னடம் உள்பட 250 படங்களில் ஸ்டண்ட் கலைஞராகவும் ஸ்டண்ட் இயக்குனராகவும் பணியாற்றியவர்.



    புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பான கருவை வைத்து முழுக்க முழுக்க டிராவல் மற்றும் ஆக்‌ஷன் பார்மட்டில் இந்த படம்  உருவாகி இருக் கிறது.

    “ராமேஸ்வரத்தில் தொடங்கும் படம் கேரளா, குளுமணாலி, அந்தமான், பாங்காக், கம்போடியா, வியட்நாம் என்று பல நாடு  களுக்கு பயணிக்கும் படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பல சாகச காட்சிகளை கிராபிக்ஸ் பயன்படுத்தாமல்  ஒரிஜினலாகவே பட மாக்கியுள்ளனர். கம்போடியாவில் சோழர்கள் கட்டிய சிவபெருமான் கோவிலில் பெரும்பாலான காட்சிகள்  படமாக்கப்பட்டது. அதிரடி சண்டைக் காட்சி ஒன்றும் அங்கு படமாக்கப்பட்டுள்ளது. தணிக்கை குழுவினரின் பாராட்டோடு, யு  சான்றிதழும் பெற்றுள்ள ‘முந்தல்’ படம் விரைவில் திரைக்கு வருகிறது.
    ஈராஸ் இன்டர்நே‌ஷனல் மீடியா லிமிடெட் நிறுவனம் தயாரிப்பில் கிராமத்து சாயலில் உருவாகி உள்ள நகைச்சுவை படம் ‘ஒரு கிடாயின் கருனை மனு’. இப்படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    ஈராஸ் இன்டர்நே‌ஷனல் மீடியா லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘ஒருகிடாயின் கருனை மனு’.

    இந்த படத்தில் விதார்த் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடைய ஜோடியாக டப்பிங் கலைஞர் ரவீணா நடிக்கிறார். இவர்களுடன்  ஜார்ஜ், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு- ஆர்.வி.சரண், இசை-எம்.ரகுமான், எடிட்டிங்-கே.எல்.பிரவீன், ஸ்டண்ட்-ஹரி தினேஷ், கலை-கிரவ் போர்டு, வசனம்-  வி.குருநாதன், சுரேஷ் சங்கையா, பாடல்கள்- வேல்முருகன், வி.குருநாதன்.

    இயக்கம்-சுரேஷ் சங்கையா. இவர் ‘காக்காமுட்டை’ இயக்குனர் மணிகண்டன் உதவியாளர்.



    “இது கிராமத்து பின்னணியில் 3 நாட்களில் நடக்கும் கதை. வேண்டுதலுக்காக பலியிட ஒரு ஆடு கோவிலுக்கு கொண்டு  போகப்படுகிறது. அப்போது நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களே கதை. இதில் ஆடு பலியிடுவது பற்றிய காட்சிகள் எதுவும்  கிடையாது. விதார்த், டப்பிங் கலைஞர் ரவீணா யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். அனைவரும் ரசிக்கும் நகைச்சுவை படம்.

    ராஜபாளையம் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது” என்றார்.

    விதார்த், “மைனா, படத்துக்குபிறகு என் மனதுக்கு நெருக்கமான கதை இது” என்று தெரிவித்தார்.

    சமீபத்தில் நடந்த இதன் பாடல் வெளியீட்டு விழாவில் நாசர், இயக்குனர் பிரபுசாலமன் மற்றும் படக்குழுவினர் கலந்து  கொண்டனர்.
    ×