என் மலர்
முன்னோட்டம்
சினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் ‘ஜெயிக்கிறகுதிர’ என்ற காமெடி கலாட்டா படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
சினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜெயிக்கிறகுதிர’.
இந்த படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்ஷிஅகர்வால், அஸ்வினி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவைசரளா, சித்ராலட்சுமணன், லிவிங்ஸ்டன், ரமேஷ்கண்ணா, மதன் பாப், ஏ.எல்.அழகப்பன், ரோபோசங்கர், இமான்அண்ணாச்சி, பவர்ஸ்டார் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு-ஆஞ்சி, இசை-கே.ஆர்.கவின்சிவா, எடிட்டிங் -ரஞ்சித்குமார், கலை-மணிகார்த்திக், ஸ்டண்ட்- தளபதி தினேஷ், நடனம் -கூல் ஜெயந்த், தயாரிப்பு-டி.ஆர்.திரேஜா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-ஷக்தி என்.சிதம்பரம்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது....
“ஜெயிக்கிறவனை மட்டும் தான் இந்த உலகம் மதிக்கும். நீ நல்லவனா கெட்டவனா என்று பார்க்காது. அப்படிப்பட்ட இந்த உலகில் ஜெயிக்க, நாயகன் ஜீவன் எந்த வழியை தேர்ந்தெடுத்தார்? எப்படி வெற்றி பெற்றார்? என்பதை காமெடி, சென்டிமென்ட் கலந்து வித்தியாசமாக உருவாக்கி உள்ளோம். இந்த படத்தில் காமெடி, இரண்டரை மணி நேரம் சிவகாசி சீனி வெடி போல பட பட வென இருக்கும். அனைவரும் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் படமாக உருவாக்கி இருக்கிறேன். படம் விரைவில் வெளியாக உள்ளது” என்றார்.

என்.டி.சி. மீடியா மற்றும் வீகேர் புரொடக்ஷன் தயாரித்துள்ள படமன ‘தங்கரதம்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
என்.டி.சி. மீடியா மற்றும் வீகேர் புரொடக்ஷன் தயாரித்துள்ள படம் ‘தங்கரதம்’.
இந்த படத்தில் நாயகன் வெற்றி, நாயகி அதிதி கிருஷ்ணா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் சவுந்தரராஜா, நான் கடவுள் ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், லொள்ளுசபா சாமிநாதன், வெள்ளபுறா பாண்டி, ராண்டில்யா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இசை-டோனி பிரிட்ஜோ, ஒளிப்பதிவு- ஜேக்கப் ரத்தினராஜ், படத்தொகுப்பு-சுரேஷ் அர்ஸ், கலை-என்.கே.பாலமுருகன், ஸ்டண்ட்-பயர் கார்த்திக், நடனம்- தீனா, தயாரிப்பு- சி.எம்.வர்க்கீஸ் வெளியீடு- எஸ்.பி.ஐ.சினிமாஸ், வெங்கீஸ்பிலிம் இன்டர் நேஷனல்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- பாலமுருகன்.
‘தங்கரதம்’ படம் பற்றி கூறிய அவர்...
“ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கிராமம் கரியாம்பட்டி. இங்கிருந்து தினமும் இரண்டு டெம்போக்களில் ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டிற்கு காய்கறிகள் போகும். ஒன்று தங்கரதம் டெம்போ, மற்றொன்று பரமன் டெம்போ. தங்கரதம் டெம்போவின் டிரைவர் நாயகன் செல்வா, பரமன் டெம்போவின் டிரைவர் வில்லன் பரமன், காய்கறி மூட்டைகள் ஏற்றுவதிலும் மார்க்கெட்டுக்கு முந்திக் கொண்டு போவதிலும் இவர்கள் இரண்டு பேருக்கும் ஏற்பட்ட மோதல் பகையாக வளர்கிறது. இந்த சூழ்நிலையில் உண்மையான ஒரு காதலுக்கும், விசுவாசத்துக்கும் இடையில் நடக்கிற உணர்வு போராட்டத்தில் எது ஜெயிக்கிறது என்பது தான் படத்தின் கதை” என்றார்.

ஆட்டா குரூப்ஸ் எண்டர்டைன்மென்ட் படநிறுவனம் தயாரித்துள்ள ‘இவன் ஏடாகூடமானவன்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
ஆட்டா குரூப்ஸ் எண்டர்டைன்மென்ட் படநிறுவனம் தயாரித்துள்ள படம் ‘இவன் ஏடாகூடமானவன்’.
அபிசரவணன் இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இன்னொரு கதாநாயகனாக யோகி அறிமுகமாகிறார். காயத்திரி கதாநாயகியாக நடிக்கிறார். அகல்யா மற்றொரு கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் ஷைலேஷ் சிவராஜா வில்லனாகநடிக்கிறார். பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், மயில்சாமி, மதன்பாப், மதுரைமுத்து, பாவா லட்சும ணன், அல்வா வாசு, போண்டா மணி, அமர் பானி சங்கர் உள்பட பலர் நடித்திருக் கிறார்கள்.
ஒளிப் பதிவு - ஆதி. கருப்பையா, இசை- வித்யாஷரன், பாடல்கள்- முத்துவிஜயன், எடிட்டிங் - யோகபாஸ்கர், கலை-பழனிவேல், நடனம் -ஜாஸ்மதி, சுரேஷ், ஸ்டண்ட் - ரமேஷ்பாபு, தயாரிப்பு - எஸ்.ஷைலேஷ்சிவராஜா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -ஜெஸ்டின் திவாகர்.

படம் பற்றி அவரிடம் கேட்ட போது...
“அரசியல் பின்புலமுள்ள அதிகாரவர்க்கத்தை சேர்ந்தவர்கள் சமூகத்தில் பெயரும், புகழோடு கவுரவமாக இருப்பவர்களின் சொத்துக்களை மிகக்குறைந்தவிலைக்கு மிரட்டி வாங்கி தன்வசப்படுத்திக் கொள்கிறார்கள். அதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவன் வெகுண்டெழுந்து இழந்ததை எவ்வாறு மீட்கிறான் என்பது கதை களம். இதை காதல் நகைச்சுவை கலந்து விறுவிறுப்புடன் படமாக்கி இருக்கிறோம்” என்றார்.
இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

பெண் கல்வியை வற்புறுத்தும் ‘இலை’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
லீப் புரொடக்ஷன்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளபடம் ‘இலை’. இது ஒரு பெண் தனது கல்வியில் சாதிக்கத் தடைகளைத் தாண்டி எவ்வளவு போராட்டங்களைச் சந்திக்கிறாள் என்பதைச் சொல்லும் கதை.
சுவாதி நாராயணன் நாயகியாக நடிக்கிறார். எதிர் நாயகனாக சுஜீத் ஸ்டெபானோஸ் நடிக்கிறார். இவர்களுடன் கன்னட நடிகர் கிங்மோகன், மலையாள நடிகை ஸ்ரீதேவி, ஷைன் குருக்கள், விஜு பிரகாஷ், கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம், காவ்யா நடித்துள் ளனர். ஒளிப்பதிவு - சந்தோஷ் அஞ்சல், இசை- விஷ்ணு வி.திவாகரன், வசனம் -ஆர்.வேலுமணி, கலை -ஜைபின் ஜெஸ்மஸ், எடிட்டிங் - டிஜோ ஜோசப். இயக்கம்-பினிஷ்ராஜ்.

“இது 1991-ல் நடக்கும் கதை. அந்த ஊரில் பெண் பிள்ளைகளைப் படிக்க வைக்கக்கூடாது என்பது ஊர் கட்டுப்பாடு. அந்த ஊரில் வசிக்கும் நாயகிக்கோ படித்து வாழ்வில் உயர வேண்டும் என்பது கனவு. ஆனால் ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு ? என்று பெற்ற தாயும், தாய் மாமனும் அவளது படிப்புக்கு குறுக்கே நிற்கிறார்கள். ஆனால் நாயகியின் அப்பா, மகளுக்கு ஆதரவாக இருக்கிறார்.

நாயகிக்கு வருகிற தடைகள் அவள் தேர்வு எழுத முடியாத அளவுக்குக் குறுக்கே நிற்கின்றன. தடைகளை மீறி அவள் தேர்வு எழுதினாளா, இல்லையா என்பதே கதை. இதில் ஒரு முழு சினிமாவுக்கான அனைத்து அம்சங்களும் உள்ளன. அப்படி ஒரு வணிக ரீதியிலான படமாக ‘இலை’ உருவாகியுள்ளது” என்றார்.

அஸ்வின் கிரியேஷன்ஸ் சார்பில் லயன் பிரின்ஸ் தயாரிக்க எஸ்.சாம் இமானுவேல் இயக்கும் ‘கேக் கிறான் மேய்க் கிறான்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
அஸ்வின் கிரியேஷன்ஸ் சார்பில் லயன் பிரின்ஸ் தயாரிக்க எஸ். சாம் இமானுவேல் இயக்கும் படம் ‘கேக் கிறான் மேய்க் கிறான்’.
இதில் சபா கதாநாயகனாகவும், லூப்னா அமீர் கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன், சபீதா ஆனந்த், பிளாக் பாண்டி, மதுமிதா உள்பட நடிக்கின்றனர். ‘மஸ்காரா’ புகழ் அஸ்மிதா கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.

ஒளிப்பதிவு-கார்த்திக் பாலா, இசை-ஆதித்ய மகாதேவன், பாடல்கள்-முருகன் மந்திரம், நிகரன், எடிட்டிங்-சபரி பெரியசாமி, நடனம்- சரண் பாஸ்கர், சதீஷ், ஸ்டண்ட்-ஸ்பீடு மோகன், தயாரிப்பு - லயன் பிரின்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- எஸ்.சாம் இமானு வேல்.
இணைபிரியாத நண்பர்கள் 4 பேர் மாடலிங் கம்பெனி நடத்தி வருகிறார்கள். இதற்காக கதாநாயகி வீட்டில் நடக்கும் திருட்டு தொடர்பாக நாயகனை அவள் சந்தேதிக்கிறாள். பிரிவினை ஏற்படுகிறது. பின்னர் இருவரும் எப்படி சேர்ந்தார்கள் என்பது கதை.

முத்தக்காட்சியில் நடிக்க நாயகன் தயங்கி மறுத்துவிட்டார். படத்துக்கு அவசியம் என்று இயக்குனர் எடுத்து கூறினார். அப்போது எதிர்பாராதவிதமாக கதாநாயகி திடீர் என்று கதாநாயகனுக்கு முத்தம் கொடுத்தார். காட்சி ஓ.கே. ஆனது. ‘ கேக்கிறான் மேய்க்கிறான்’ படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடித்த இயக்குனரை, தயாரிப்பாளர் பாராட்டினார்.

இசையமைப்பாளர் பரணி இயக்கும் ‘ஒண்டிக்கட்ட’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
இசையமைப்பாளர் பரணி முதன் முதலாக இயக்குனர் அவதாரம் எடுக்கும் படம் ‘ஒண்டிக்கட்ட’.
பிரண்ட்ஸ் சினி மீடியா பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.
பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். இவர்களுடன் தர்மராஜ், கலைராணி, சாமி நாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு-ஆலிவர் டெனி, இசை-பரணி, பாடல்கள்- கபிலன், பரணி, தர்மா, எடிட்டிங் -விதுஜீவா, நடனம்- சிவசங்கர், தினா, ராதிகா, ஸ்டண்ட்-குபேந்திரன், கலை-ராம், எழுத்து, இயக்கம்-பரணி.
படம் பற்றி இயக்குனர் பரணியிடம் கேட்ட போது...
“நான் இசையமைப்பாளராக 40 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளேன். பெரியண்ணா படத்தின் மூலம் அறிமுகமாகி, பார்வை ஒன்றே போதுமே, சார்லி சாப்ளின், சுந்தரா டிராவல்ஸ் போன்ற படங்களின் பாடல்கள் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை தந்தன. ஒரு நல்ல கதை அமைந்ததால் `ஒண்டிக்கட்ட' படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறேன். ஒரு உண்மைக் கதையை நல்ல திரைக்கதையாக்கி அதை படமாக்கி இருக்கிறோம். தையமுத்து, நல்லதம்பி, பஞ்சவர்ணம் என்ற மூன்று கதாப்பாத்திரங்கள் கதையின் உயிர் நாடி. முல்லை, கோதண்டம் இருவரும் கவுண்டமணி- செந்தில் மாதிரி காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். இந்த படத்தின் பாடல்கள் பட்டையை கிளப்பும்” என்றார்.

இயக்குனர் அமீர் முக்கிய வேடத்தில் நடிக்கும் `அச்சமில்லை அச்சமில்லை' படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
இயக்குனர் அமீர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘அச்சமில்லை அச்சமில்லை’.
இயக்குனர் அமீரின் உதவியாளர் முத்து கோபால் இந்த படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். நாயகி சாந்தினி தமிழரசன். இவர்களுடன் ஹரீஷ் ஜாலே, தருஷி, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், எம்.முனிஸ் ராஜா உள்பட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் அமீர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு - அருண்குமார், இசை - விவ்யுரி குமார், பாடல்கள் - சினேகன், படத்தொகுப்பு - ஆதியப்பன் சிவா, தயாரிப்பு - இயக்குனர் அமீர், இயக்கம்- முத்து கோபால்.
படம் குறித்து இயக்குனர் முத்து கோபால் கூறும் போது...
“இந்த படத்தின் கதை பிடித்து இருந்ததால் நானே இயக்கி கதாநாயகனாக நடிக்க விரும்பினேன். எனது ஆசையை நிறைவேற்ற, அப்பா நிலத்தை விற்று பணம் எனக்கு கொடுத்தார். என்றாலும் பண தட்டுப்பாடு ஏற்பட்டது.

உடனே அமீர் சாரை சந்தித்தேன் அவர் இந்த படத்தை தயாரிக்க முன்வந்தார். படத்தை பார்த்து விட்டு ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்று பெயர் வைக்கலாம் என்றார். இதற்கு கே.பாலச்சந்தர் குடும்பத்தினரிடம் அமீர்சார் முறைப்படி அனுமதி பெற்று தந்தார். இதில் அவர் விவசாயியாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நாயகி கல்லூரி மாணவியாகவும், நான் வக்கீலாகவும் நடித்திருக்கிறோம்” என்றார்.
அமீர் பேசும் போது, “இது கோவை,திருப்பூர், சேலம் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறை பற்றிய படம். சமூக பிரச்சினைகளை துணிச்சலாக சொல்லும் படம். எனவே, இதை நான் தயாரிக்க ஒப்புக் கொண்டேன். நிறைய சமூக கருத்துக்கள் இதில் இடம் பெற்றுள்ளன” என்று கூறினார்.

சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தல்களை பற்றி அலசும் கதையான ஜூலியும் நாலு பேரும் படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
கதையின் முக்கிய சாராம்சம் சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தல்களை பற்றி அலசுகிறது. அமெரிக்காவில் கடத்தப்படும் இடது காதில் மூன்று அதிர்ஷ்ட மச்சங்களை கொண்ட “ஜூலி” என்கிற அதிர்ஷ்ட நாயை மையமாக வைத்து கதை நகர்கிறது.
இப்படத்தில் பிரபல டிவி புகழ் அமுதவாணன், சதீஷ்.ஆர்.வி. ஜார்ஜ் விஜய், யோகானந்த், அல்யா மனாசா, யோதீஷ் சிவன், பில்லி முரளி, மகாநதி ஷங்கர், மாறன், வெங்கட் ராவ், ஹோமாய், சாண்டி மாஸ்டர், ஜாகுவார் தங்கம் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
தயாரிப்பாளர் - எஸ்.பிரேம் குமார்(காவ்யா சினிமாஸ்), இணை தயாரிப்பாளர் - என். சுவேதா தேவி(ரீச் மீடியா சொலூசன்ஸ்), இயக்குநர் - சதீஸ்.ஆர்.வி., புகைப்பட இயக்குநர் - பாஸ்கர், இணை இயக்குநர் - யோதீஷ் சிவன், இசை - ரகு ஷரவன் குமார், எடிட்டிங் - வி.ஏ. மழை தாசன். கலை - சிட்டி பாபு

இப்படம் குறித்து இயக்குநர் தெரிவித்ததாவது, நாய் கடத்தல் கும்பலின் தலைவனான வில்லன் மூலமாக ஜூலி என்கிற நாய் இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு, சென்னையில் ஒரு பெரிய தொழிலதிபருக்கு விற்கப்படுகிறது.
மறுபுறம், தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் 3 இளைஞர்களும் சென்னையில் வசித்து வரும் ரஜினியின் தீவிர ரசிகராக ஆட்டோ ஓட்டும் மாணிக்கம் எனும் இளைஞரும், நண்பர்களாகின்றனர்.
வேலை தேடிவந்த மூவரும் சென்னையில் ஒரு கன்சல்டன்சியிடம் பணத்தை பறிகொடுக்கின்றனர். விட்ட பணத்தை குறுக்கு வழியிலாவது சென்னையிலேயே சம்பாதிக்க எண்ணி, “ஜூலி நாயை” வாங்கிய தொழிலதிபரின் மகளிடமிருந்து அதை கடத்துகின்றனர்.

கோடிக்கணக்கில் மதிப்புள்ள கடத்தப்பட்ட நாயை தேடி ஒருபுறம் தொழிலதிபர் இவர்களை துரத்த, நாயை வேறு ஒரு நாட்டு நபருக்கு விற்பதற்காக, நாயை தேடி வில்லனும் அவனது ஆட்களும் நால்வரையும் துரத்த, அதே சமயத்தில் ஜூலி என்ற பெண் ஒருவர் காணாமல் போக, குழப்பத்தில் போலீஸும் இவர்களை துரத்த, நால்வரும் செய்யும் கலாட்டாக்களை நகைச்சுவையாக எடுத்துச்செல்கிறது, இப்படம்.
அதிர்ஷ்ட நாய் ஜூலி யாரிடம் சேர்கிறது என்பதும், எல்லோரிடமிருந்தும் எப்படி நால்வரும் தப்பிக்கிறார்கள்?, விட்ட பணத்தை அடைந்தார்களா? இல்லையா? என்பதையும் பரபரப்புடன் அமைந்த படத்தின் இறுதிக்கட்டங்கள் எடுத்துச்செல்கிறது.
இவ்வாறு தெரிவித்தார்.

பின்னணி நடன பெண்களின் அவலத்தை சொல்ல வரும் யாதுமாகி நின்றாய் படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
தாமரை போன்ற நடனப்பெண் இருபதாண்டு காலமாக அவள் வாழ்நாளில் சந்தித்த மற்றும் பயணித்த பல்வேறு நபர்களின் கதையை சொல்கிறது `யாதுமாகி நின்றாய்'.
பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டரின் மகளான காயத்ரி ரகுராம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான காயத்ரி ரகுராம் பின்னர் நடன இயக்குநராக தனது துறையை மாற்றிக் கொண்டார். எனினும் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது `யாதுமாகி நின்றாய்' என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார்.
இப்படத்தின் கதாநாயகனாக நடிகர் வஸந்த் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

கதை, திரைக்கதை, இயக்கம் - காயத்ரி ரகுராம், தயாரிப்பாளர் - கிரிஜா ரகுராம், இசையமைப்பாளர் - அஸ்வின் விநாயகமூர்த்தி மற்றும் அச்சு, பாலாசிரியர் - கபிலன், அச்சு
இந்த படம் சாதரண, பின்னணியில் நடனமாடும் பெண்களின் மனதினுள் இருக்கும் கனவுகளையும், ஆசைகளையும் சொல்லும் முதல் தமிழ் படமாகும்.
ஒரு பெண் தன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களை மைய கதையாக கொண்ட படம் தான் `யாதுமாகி நின்றாய்'. பின்னனி நடனம் ஆடும் பெண்களின் தினசரி வாழ்வில் நடக்கும் உண்மை கதைகளை அடிப்படையாக கொண்ட இப்படத்தை காயத்ரி ரகுராம் இயக்குகிறார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக நடனமாடும் பெண்ணாக தள்ளப்பட்ட பள்ளி செல்லும் சிறுமி, சாதரண கனவுகளோடும், ஆசைகளோடும் தனது வாழ்க்கையில் பயணிக்கிறாள். ஆனால், முற்றிலும் மாறாக உண்மையில் ஒருவரால் நினைத்து பார்க்க முடியாத கொடுமைகளும், அவலங்களையும் அனுபவிக்கும் அவளது வாழ்க்கையே படத்தின் கதையாக காயத்ரி ரகுராம் எடுத்து வருகிறார்.

வி.கே.பி.டி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘பள்ளி பருவத்திலே’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்க்கலாம்.
வி.கே.பி.டி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘பள்ளி பருவத்திலே’.
இந்த படத்தில் இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக வெண்பா அறிமுகமாகிறார். இவர் கற்றது தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இவர்களுடன் கே.எஸ்.ரவி குமார், ஊர்வசி, தம்பிராமய்யா, கஞ்சாகருப்பு, ஜி.கே.ரெட்டி, ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு- வினோத்குமார், இசை-விஜய் நாராயணன், இவர் இளையராஜா, ஏ.ஆர்.ரகு மான் ஆகியோரிடம் உதவியாளராக இருந்தவர்.பாடல்கள் - வைரமுத்து, வாசுகோகிலா, எம்.ஜி. சாரதா, கலை- ஜான்பிரிட்டோ,எடிட்டிங்-சுரஷ்அர்ஷ், நடனம்- தினா, ஸ்டண்ட் -சுப்ரீம்சுந்தர், தயாரிப்பு- டி.வேலு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் வாசுதேவ் பாஸ்கர். இவர் படம் பற்றி கூறும்போது...
“நிஜ சம்பவங்களின் தொகுப்பே கதையாக உருவாக்கப் பட்டுள்ளது. தஞ்சையில் உள்ள ஆம்பளாபட்டு என்ற கிராமத்தில் நான் படித்த பள்ளிக் கூடத்தில் நடந்த சம்பவங்கள் சுவாரஸ்ய மானது. இங்கு படித்த பலர் உயர்ந்த நிலையில் இருக் கிறார்கள். இதற்கு காரணமான ஆசிரியர் சாரங்கன் கதாப்பாத்திரத்தை கே.எஸ்.ரவிகுமார் ஏற்றிருக்கிறார். ஊர்வசி பாத்திரமும் பேசப்படும்.

இன்றைய கால கட்டத்தில் அழிந்து வரும் விவசாயத்தை காக்கும் பொருட்டு படப்பிடிப்பு நடைபெறும் தஞ்சை மாவட்டத்தில், விவசாயிகளுக்கு 100 பசு மாடுகளை தானமாக கொடுக்க உள்ளோம். தொடக்க விழா நடைபெற்ற பிப்ரவரி 12 முதல் படப்பிடிப்பு முடிவடை வதற்குள் 100 மாடுகளை வழங்குவோம்.
‘பள்ளி பருவத்திலே’ கிராமத்து காமெடி படமாக உருவாகிறது” என்றார்.

சமுதாய சூழ்நிலையை சொல்லும் படமான `கவண்' படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
கல்பாத்தி எஸ்.அகோரம் வழங்கும் ஏ.ஜி.எஸ். எண்டர்டைன் மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கவண்’. கடந்த ஆண்டு ‘அனேகன்’, ‘தனிஒருவன்’ ஆகிய வெற்றிப்படங்களை வழங்கிய ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்த ஆண்டு தயாரித்து வழங்கும் முதல் படம் இது.
பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவரஇருக்கிறது. இந்த படம் இன்றைய சமூக சூழலுக்கு ஏற்ற படமாக உருவாகியிருக்கிறது. சவால், காதல், அவமானம், மீண்டெழுதல், கொண்டாட்டம் என ஒரு சுவாரசிய சினிமாவிற்கான அனைத்து லட்சணங்களையும் உள்ளட க்கிய படமாக ‘கவண்’ அமைந்திருக்கிறது.
விஜய்சேதுபதி ‘கவண்’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இயக்குனர் நடிகர் டி.ராஜேந்தர் கவண் படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.
விஜய்சேதுபதி ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடித்திருக்கிறார். பாண்டியராஜன், விக்ராந்த், ‘அயன்’ ஆகாஷ், போஸ்வெங்கட், ‘நண்டு’ ஜகன், பவர் ஸ்டார் உள்பட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் கே.வி. ஆனந்த், சுபா, கபிலன் வைரமுத்து ஆகியோர் இணைந்து கவண் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு- அபிநந்தன் ராமானுஜம், இசை- ‘ஹிப் ஹாப்’ தமிழா.
அருண்ராஜா காமராஜ் எழுதி டி.ஆர். பாடிய ‘ஹேப்பி நியூ இயர்’ பாடல் வரவேற்பை பெற்றுள்ளது.
கலை-கிரண், படத்தொகுப்பு- ஆண்டனி,தயாரிப்பு- கல்பாத்தி எஸ்.அகோரம்,கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்திஎஸ்.சுரேஷ்.

சுசீந்திரன் இயக்கும் அடுத்த திரைப்படமான ‘அறம் செய்து பழகு’ படத்தின் முன்னோட்த்தை கீழே பார்க்கலாம்.
சுசீந்திரன் இயக்கும் அடுத்த திரைப்படம் ‘அறம் செய்து பழகு’.
இந்த படத்தை ‘அன்னை பிலிம் பேக்டரி’ நிறுவனம் மூலம் ஆண்டனி தயாரிக்கிறார். இவர் ஏவிஎம், ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்களிலும், இயக்குனர் சுசீந்திரன் படங்களிலும் தயாரிப்பு நிர்வாகியாக பணி புரிந்தவர்.
இதில் சந்தீப், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்பட பலர் நடிக்கின்றனர். சந்தீப் ஜோடி யாக ‘கிருஷ்ணகாடி வீர பிரேமா காதா’ என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த மெஹ ரீன் நடிக்கிறார். இவர் இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதா நாயகியாக அறிமுகம் ஆகிறார்.
“வெண்ணிலா கபடி குழு” திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஜே.லஷ்மண் மீண்டும் இயக்குனர் சுசீந்திரனுடன் இணைந்துள்ளார். முதல் முறையாக சண்டை பயிற்சியாளர் அன்பறிவ் சுசீந்திரனுடன் இணைந்துபணியாற்றி உள்ளார்.
வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி பாடல்களுக்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தொகுப்பு- காசி விஸ்வநாதன், கலை- சேகர், நடனம்- ஷோபி. இந்த படத்தின் தலைப்பை ஜெயம்ரவி அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இது ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகி வருகிறது.