என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    பிரபல இயக்குனரின் பேரன் தமிழல் இயக்குனராக அறிமுகமாகும் "யார் இவன்" படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்க்கலாம்.
    படகோட்டி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கிய பிரபல இயக்குனரின் பேரன் தமிழல் இயக்குனராக அறிமுகமாகும் "யார் இவன்"

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நடிப்பில் `படகோட்டி', நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பில்  `உத்தம்புத்திரன்' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய T.பிரகாஷ்ராவ் அவர்களின் பேரன் T.சத்யா "யார் இவன்" படத்தின் மூலமாக  தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார்.

    `பீமிலி கபடி ஜட்டு', `எஸ்.எம்.எஸ்', `ஷங்கரா' ஆகிய தெலுங்கு படங்களை இயக்கி பெரும் வெற்றியை கண்ட T.சத்யா இயக்கும்  முதல் தமிழ் படம் `யார் இவன்'.

    `யார் இவன்' ஒரு காதல் கதை கலந்த மர்ம த்ரில்லர் திரைப்படம். சச்சின் நாயகனாகவும் ஈஷா குப்தா நாயகியாகவும்  நடிக்கின்றனர். பிரபு, சதீஷ், வென்னெலா கிஷோர், கிஷோர் குமார் உள்ளிட்டவர்களும் படத்தில் உள்ளனர்.

    ஏப்ரல் 2017 படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒரு சுவாரசியமான ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என  தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
    காசுக்காக எதையும் செய்யத் துணியும் ஒரு இளைஞனைப் பற்றிய படமாக உருவாகி வரும் "கோம்பே" படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    தேங்காயில் இருந்து தேங்காயையும் நீரையும் எடுத்த பின் கீழே போடப்படும் கூட்டைத்தான் கோம்பே என்பார்கள். மனித  வாழ்க்கையையும் அப்படித்தான் இருக்கிறது. மனித உடலில் உயிர் இல்லை எனில் அதற்கு எந்த மரியாதையையும் இல்லை இது  தான் இந்தப் படத்தின் அடி நாதம்.

    தேனியில் வாழும் ஒரு இளைஞன், காசுக்காக எதையும் செய்யத் துணிபவன், அவனது வாழ்க்கையை சொல்கிற படம்தான்   "கோம்பே"

    காசுக்காக கொலைகூட செய்பவனின் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைகிறாள். அவன் வாழ்வில் வசந்தம் வீசுகிறது. அவள்  அவன் வாழ்வை மாற்ற முயல்கிறாள் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் தான் இந்தப்படம்.

    முழுக்க புதுமுகங்களால் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் ஹீரோவாக "சார்லஸ்" ஹிரோயினாக "தீர்த்தா"  நடித்திருக்கிறாரகள்.

    கதை, ஒளிப்பதிவு, DI, எடிட்டிங், ஆகிய பணிகளுடன் இந்தப்படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார் ஹாபிஸ்இஸ்மாயில்.   மேலும் இப்படத்தில் வில்லனாகவும்  நடித்துள்ளார்.

    சினிமாவில் அனைத்து வேலைகளை செய்யும் இவர் மலையாளத்தில் ஏற்கனவே மூன்று படங்களை இயக்கியிருக்கிறார்.

    தேனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. படத்தின் கதை 4 நாட்களில் நடப்பதாக  கதை அமைக்கப்பட்டுள்ளது.

    புதுமுகம் அனூப் ராக்வெல், அபிஜித் ஜான்சன், டென்னிஸ்ஜோசப் ஆகிய மூவரும்  இந்தப்படத்தில் இசையமைத்திருக்கிறார்கள்.  ஹரிஸ் இஸ்மாயில் மற்றும் பினு ஆப்ரகாமுடன் இணைந்து ஹாபிஸ் இஸ்மாயில் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
    வின்சென்ட் அசோகன்-சோனியா அகர்வால் போலீசாக கலக்கும் ‘எவனவன்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்க்கலாம்.
    டிரீம்ஸ் ஆன் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பாக தங்கமுத்து, பி.கே.சுந்தர், கருணா, நட்ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும்  படம் ‘எவனவன்’.

    இந்த படத்தில் வின்சென்ட் அசோகன், சோனியா அகர்வால் இருவரும் போலீஸ் அதிகாரிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன்  புதுமுகம் அகில் சந்தோஷ், முருகாற்றுப்படை சரண், சாக்ஷி சிவா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு- அருண் பிரசாத், இசை-பெடோ பீட் , நடனம்- விமல், பாடல்கள் தென்றல் ராம்குமார், எடிட்டிங்-ராமாராவ், ஸ்டண்ட்-  குன்றத்தூர் பாபு, கலை- கே.வி.லோகு, தயாரிப்பு-தங்கமுத்து, பி.கே.சுந்தர்,கருணா, நட்ராஜ்.

    கதை, திரைக்கதை,வசனம், இயக்கம்-ஜே.நட்டிகுமார். இவருடைய தந்தை ஜானகிராமன் பல படங்களை தயாரித்தவர். நட்டிகுமார்  அமெரிக்காவில் சினிமா பற்றி படித்து பட்டம் பெற்றவர். சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருது பெற்ற ‘மெய்ப் பொருள்’,  ‘பனித்துளி’ படங்களையும் இயக்கியவர். அவரிடம் படத்தை பற்றி கேட்ட போது...

    “எதையும் திட்டமிட்டு செயல்படு வதிலும், செயல்படுத்துவதிலும் இளைஞர்கள் புத்திசாலிகள். என்றாலும், விளைவுகள் பற்றி  தெரியாமல் இறங்கி சிரமப்படும் இளைஞர்கள் சிலர் உண்டு. இது போல் சின்ன தவறுதானே செய்கிறோம். அதனால் என்ன  பெரிதாக வந்து விட போகிறது என்று நினைத்து இளைஞன் ஒருவன் செய்த தவறு அவனை என்ன மாதிரியான சிக்கலில்  ஆழ்த்துகிறது? என்பதுதான் கதைக்களம். இதில் வின்சென்ட் அசோகனும், சோனியா அகர்வாலும் போலீஸ் அதிகாரிகளாக  நடிக்கிறார்கள். கண்டுபிடிக்க முடியாத ஒரு குற்றம் ஒன்றை விறு விறுப்பாக கண்டு பிடிக்கும் அதிகாரியாக சோனியா அகர்வால்  நடிக்கிறார்” என்றார்.
    அஸ்வின், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் ‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்க்கலாம்.
    ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘றெக்கை’ படங்களை தயாரித்த காமன்மேன் புரொடக்‌ஷன்ஸ் பி.கணேஷ், இயக்குனர் ரதீந்த்ரன் பிரசாத்  இணைந்து தயாரிக்கும் படம் ‘இது வேதாளம் சொல்லும் கதை’.

    இந்த படத்தில், அஸ்வின் ககமனு, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகன்- நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் குருசோமசுந்தரம்,  ஹாலிவுட் நடிகர் கிரபுரிட்ஜ்,லெஸ்ஸி திரிபாதி, அக்னீஸ்வர் அன்பு, கனிகா குப்தா ஆகியோர் நடிக்கிறார்கள்.

    இசை- ஜிப்ரான், ஒளிப்பதிவு-ராபர்டோ சாசாரா,சண்டை பயிற்சி-கிரபுரிட்ஜ்,அசோக், படத்தொகுப்பு-ஆனந்த் கேரளாடின்,  கலை-ராஜ்குமார் கிப்சன், தயாரிப்பு- பி.கணேஷ்,ரதீந்த்ரன் பிரசாத், எழுத்து, இயக்கம்-ரதீந்த்ரன் பிரசாத்.

    “அனை வருக்கும் பரிட்சையமான புராண கதையை அடிப் படையாக கொண்டு ‘இது வேதாளம் சொல்லும் கதை’  எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹாலிவுட் நடிகரும் குத்துச்சண்டை வீரருமான கிரபுரிட்ஜ் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். படத்தின்  சண்டை காட்சிகளையும் வடிவமைத்து இருக்கிறார்.

    இத்தாலிய ஒளிப்பதிவாளர் ராபர்ட் சேஸாரா ஒளிப்பதிவு செய்கிறார். பாங்காங்கை சேர்ந்த ஒரு நிறுவனம் விஷுவல் எபக்ட்ஸ்  பண்ணுறாங்க. தாய்லாந்தை சேர்ந்த பாப்சந்த் ருக்ரந்சரித் இந்த படத்தின் அனிமே‌ஷன் பகுதிகளை கவனிக்கிறார்.

    முதல் கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதாராபாத்தில் நடக்கிறது.வித்தியாசமான கதை களத்  துடன் இந்த படம் உருவாகிறது” என்றார்.
    இளம்பருவ காதல் கதையை மையமாக வைத்து உருவாக உள்ள ‘இடி மின்னல் புயல் காதல்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்க்கலாம்.
    வெள்ளைப் பன்றிக்குட்டியை முக்கிய கதாப்பாத்திரமாக்கி அதிநவீன தொழில்நுட்பத்துடன், அமெரிக்க தொழில்நுட்ப கலைஞர்களை  வைத்து 3-டியில் தயாராகும் படம் ‘ஜெட்லி’.

    இந்த படத்தை தயாரிக்கும் சிவாஜி சினிமாஸ் பட நிறுவனம் அடுத்து ‘இடி மின்னல் புயல் காதல்’ என்ற படத்தை தயாரிக்கிறது.

    இதில், திராவிடன் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். நாயகி தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    ஒளிப்பதிவு- துலீப்குமார். பல படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த இவர் ‘ஜெட்லி’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

    இசை-சி.சத்யா, எடிட்டிங்-பால்ராஜ், ஸ்டண்ட் -நரேன், கலை-குருராஜ், தயாரிப்பு - ஜெகன்சாய்.

    கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- யோகேந்திரன் மகேஷ் என்ற புதியவர். இவர் இயக்குனர் ஹரியிடம் பல படங்களுக்கு  உதவியாளராக இருந்தவர். சிவசண்முகத்திடம் இணை இயக்குனராக பணியாற்றியவர்.

    “இளம்பருவ காதல் கதையை யதார்த்தமான திரைக்கதை உத்திகளால் குடும்ப பொழுது போக்குப் படமாக உருவாக்குகிறோம்” என்றார்.
    வெங்கட்G.சாமி இயக்கத்தில் `கண்டேன் காதல் கொண்டேன்' படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்க்கலாம்.
    கிரியேட்டிவ் டீம்ஸ் ப்ரெசென்ட்ஸ் E.R ஆனந்தன் தயாரித்திருக்கும் திரைப்படம் "கண்டேன் காதல் கொண்டேன் ".  இத்திரைப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் வெங்கட்G.சாமி. இத்திரைப்படத்தில் சன்மியூசிக் புகழ் பாலா  கதாநாயகனாகவும்,  அஷ்வினி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் மயில்சாமி, "பத்திரகாளி" ராஜசேகர், "சூதுகவ்வும்" ராதா,கே.ஸ் பழனி,  கிங்ஸ் A.மோகன் , கிச்சா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் நாகா,  ஒளிப்பதிவு செய்கிறார் சுரேஷ் தேவன்.

    இத்திரைப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது,
     
    கதைப்படி நாயகன்,நாயகி இருவரும் பார்த்தவுடன் காதல் வயப்படுகின்றனர்.இருவரும் சிறிது காலம் தனியாக சேர்ந்து  வாழலாம்,இத்தைகைய வாழ்க்கை பிடித்தால் ஒருவரையொருவர் திருமணம் செய்துகொண்டு வாழலாம் என்று  முடிவெடுக்கின்றனர். இதற்காக  ஊரை விட்டு வெளியேறி தனியாக நவீன கால முறைப்படி வாழ்கின்றனர்.ஆனால் பின்னர்தான்  தெரியவருகின்றது இவர்கள் இருவரும் வெவ்வேறு மனநிலை கொண்டவர்கள் என்று.

    அதே நேரம் இவர்களின் காதலால் இவர்களின் குடும்பங்களிலும் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் இவர்கள் இருவருக்கும்  பல்வேறு பிரச்சனைகள்  ஏற்பட்டு வீடு திரும்புகின்றனர், வீட்டிலும் அவர்கள் அனுமதிக்கப்பட்டார்களா? பின்னர் அவர்களின்  வாழ்வில் என்னவெல்லாம் நடக்கின்றது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடு சொல்லியிருக்கின்றோம், இத்திரைப்படம்  விரைவில் திரைக்குவரவிருக்கிறது.

    நடிகர், நடிகைகள்: பாலா, அஷ்வினி, மயில் சாமி, "பத்திரகாளி" ராஜசேகர், "சூதுகவ்வும்" ராதா, கே.ஸ் பழனி, கிங்ஸ் A.மோகன்,  கிச்சா மற்றும் பலர்

    தொழில்நுட்ப கலைஞர்கள்

    தயாரிப்பு நிறுவனம் - கிரியேட்டிவ் டீம்ஸ்
    தயாரிப்பாளர் - E R ஆனந்தன்
    இயக்குனர் - வெங்கட் G சாமி
    ஒளிப்பதிவாளர் - சுரேஷ் தேவன்
    இசை - நாகா
    எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ்
    ஆர்ட் - ஷிவா யாதவ்
    வரிகள் - மோகனராஜன் /சாரதி /வெங்கட்.G
    நடனம் - தீனா /பாப்பி
    PRODUCTION EXCUTIVE - சாம் V.ஞானராஜ்
    DI - PRISM AND PIXL 
    சுரேஷ் எஸ் குமார் இயக்கத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு எடுக்கப்படவுள்ள 'நகல்' படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்க்கலாம்.
    இயக்குநர் சசி மற்றும் இயக்குநர் சுசீந்திரன் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் எஸ் குமார் இயக்க  இருக்கும் திரைப்படம் 'நகல்'. ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே மையமாக கொண்டு உருவாக இருக்கும் இந்த 'நகல்' படத்தை  'கரிஸ்மாட்டிக் கிரியேஷன்ஸ்' சார்பில் மணிகண்டன் சிவதாஸ் தயாரிக்க இருக்கிறார்.

    ஒளிப்பதிவாளர் - பிரசன்னா, இசையமைப்பாளர் - ஆண்டனி ஜார்ஜ், படத்தொகுப்பாளர் - லோகேஷ், கலை இயக்குநர் - ரூபெர்ட்,  ஸ்டண்ட் மாஸ்டர் - சக்தி சரவணன் மற்றும் டிசைனர் - ஜோசப் ஜாக்சன் என பல திறமை வாய்ந்த தொழில் நுட்ப கலைஞர்கள்   இந்த 'நகல்'  படத்தில் பணியாற்ற இருக்கின்றனர்.

    இந்த ஒற்றை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தற்போது சில முன்னணி கதாநாயகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்  இயக்குநர் சுரேஷ் குமார்.

    "ஒரு முற்றிலும் தனித்துவமான கதை களத்தோடு தான் நான் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்பதில்  உறுதியாக இருந்தேன். அப்படி இருந்து நான் உருவாக்கி இருக்கும் கதை தான் இந்த 'நகல்'. ஒரு பெண்ணின் அமானுஷிய  அனுபவங்களை மையமாக கொண்டு தான் எங்களின் 'நகல்' படத்தின் கதை நகரும். ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் இருப்பதால்,  'நகல்' படத்தின் கதையை எழுதுவதற்கு சற்று சவாலாகவே இருந்தது.

    தனித்துவமான முயற்சியில் முழுக்க முழுக்க திகில்  அனுபவங்களை கொடுக்கும் ஒரு திரைப்படமாக 'நகல்' இருந்தாலும், ரசிகர்களை உற்சாகப்படுத்த கூடிய எல்லா  சிறப்பம்சங்களையும் நான் இந்த கதையில் உள்ளடக்கி இருக்கின்றேன். தற்போது படத்தின் கதாநாயகியை தேர்வு செய்யும்  பொருட்டு, சில முன்னணி கதாநாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. என்று உற்சாகமாக கூறுகிறார் 'நகல்'  படத்தின் இயக்குநர் சுரேஷ் எஸ்  குமார்.
    திருச்சியில் நடந்த உண்மை கதையான ‘சத்ரியன்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்க்கலாம்.
    `இதயம்', ‘கிழக்குவாசல்’, ‘பகல்நிலவு’, ‘மூன்றாம்பிறை’ போன்ற படங்களை தயாரித்த சத்ய ஜோதி நிறுவனம் தயாரிப்பில்,  எஸ்.ஆர். பிரபாகரன் இயக்க,விக்ரம்பிரபு நடிக்கும் படம் ‘சத்ரியன்’.

    விக்ரம் பிரபு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார்.

    இவர்களுடன் ஐஸ்வர்யா தத்தா, கன்னட நடிகை தாரா, சரத்லோகி தஸ்வா, அருள்தாஸ்,ஆர்.கே.விஜய்முருகன், கதிர்,  சவுந்தர்ராஜன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    “உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திருச்சி பின்புலத்தில் கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பாலான  காட்சிகள் திருச்சியிலேயே படமாக்கப்பட்டு படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.இறுதிகட்ட பணிகள் நடைபெறுகிறது.  ஆக்‌ஷனுக்கும்,காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மிக பிரம்மாண்டமாக ‘சத்ரியன்’ தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார்.

    இசை-யுவன்சங்கர் ராஜா,ஒளிப்பதிவு-சிவக்குமார் விஜயன்,கலை-ஆர்.கே.விஜய் முருகன், படத்தொகுப்பு-வெங்கட்ராம் மோகன்,  பாடல்கள் -வைரமுத்து, சினேகன்,விவேக்,சண்டை- அன்பறிவ்,நடனம்-செரிப், தயாரிப்பு- செந்தில் தியாகராஜன், அர்ஜுன்  தியாகராஜன்.

    கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- எஸ்.ஆர். பிரபாகரன்.
    நிதின் சத்யா - பவர்ஸ்டார் - V.R.விநாயக் கூட்டணியில் உருவாகும் ‘சிரிக்க விடலாமா’..! படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்க்கலாம்.
    ‘சிரிக்க விடலாமா’ ; உத்தரவு கேட்கும் பவர்ஸ்டார்..!
     
    ‘வேதாளம்’ படத்தில் அஜித் பேசும் பவர்புல் வசனம் தான் ‘தெறிக்க விடலாமா’.. சூப்பர்ஹிட்டான இந்த வசனத்தை காமெடிக்காக   அப்படியே உல்டா பண்ணி ‘சிரிக்க விடலாமா’ என்கிற தலைப்பில் ஒரு படம் உருவாகிறது..

    முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் நிதின் சத்யா,பவர்ஸ்டார் சீனிவாசன் &  V.R.விநாயக் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக லீஷா, புதுமுக நாயகி சௌமியா மற்றும் தீபா  ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
     
    முக்கியமான கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ் மற்றும் மகாநதி சங்கர், சந்தானபாரதி, கோவை செந்தில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்..

    இந்தப்படத்தின் தயாரிப்பாளரான ஜெயக்குமார், இசையமைப்பாளராகவும் கூடவே நடிகராகவும் அறிமுகமாகிறார். மேலும் படத்தில்   இடம்பெற்றுள்ள பாடல்களை எழுதி பாடியிருப்பவரும் இவரே.

    இந்தப்படத்தை எழுதி இயக்குகிறார் V.B.காவியன். இவர் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், 'ஆயுதபூஜை' சி.சிவகுமார் மற்றும் 'உன்னை  கொடு என்னை தருவேன்' கவி காளிதாஸ்  ஆகியோர்களிடம்  உதவி இயக்குனராக  பணியாற்றியவர்  என்பது குறிப்பிடத்தக்கது.  படத்தின் ஒளிப்பதிவை K.S.முத்து மனோகரன் மேற்கொள்ள, படத்தொகுப்பை கவனிக்கிறார் S.R.முத்துக்கொடப்பா.
     
    பாடகர்கள்: வேல்முருகன், ஜெயக்குமார்
    நடனம்: ரமேஷ் கமல், அக்சயா ஆனந்த்
    கலை: ஏ.சி.சேகர்
    தயாரிப்பு நிர்வாகி: மனோகரன்
    இளம் வயதில்பெண் குழந்தை சந்திக்கும் சவலைலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘நிசப்தம்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்க்கலாம்.
    மிராக்கிள் பிக்சர்ஸ் சார்பில் ஏஞ்சலின் டாவின்சி தயாரித்துள்ள படம் ‘நிசப்தம்’. இந்த படத்தில் நாயகனாக புதுமுகம் அஜய்,  அவருடைய ஜோடியாக அபிநயா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பேபி சாதன்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன்  ‌ஷபிதா ரெட்டி, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், பழனி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    ஷான் ஜேஸீஸ் இசை அமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு-எஸ்.ஜே.ஸ்டார், எடிட்டர்-லாரன்ஸ், பாடல்கள்-நா.முத்துக்குமார், ஆடியோ  கிராப்-யுவராஜ், தயாரிப்பு-ஏஞ்சலின் டாவின்சி, இயக்கம்-மைக்கேல் அருண்.

    “இது பெங்களூரில் வாழும் ஒரு தமிழ் குடும்பத்தில் ஏற்படும் நிகழ்வு பற்றிய கதை. இந்த குடும்பத்தில் உள்ள பெண்  குழந்தைக்கு ஒரு பாதிப்பு ஏற்படுகிறது. அதற்கு தீர்வு காண சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவை சேர்ந்தவர்களும் சேர்ந்து  உதவுகிறார்கள்.

    ஜாதி-மதத்தை கடந்து அனைவரும் அந்த குழந்தையை மாமூல் வாழ்க்கை வாழ வைக்கிறார்கள். இந்த கதை முழுவதும் இந்த  சிறுமியை சுற்றியே வருகிறது. இறுதியில் அந்த குழந்தை எடுக்கும் முடிவு உச்சக்கட்டம்.

    அஜய்-அபிநயா இருவரும் காதல் வாழ்க்கை, கணவன்-மனைவி, ஒரு குழந்தையின் பெற்றோர் என்று முப்பரிமாணத்தில்  நடித்திருக்கிறார்கள். அபிநயா, பேபி சாதன்யா நடிப்பு அற்புதம். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் கே.ஜே.ஸ்டார் என் தம்பி. படம்  தயாரித்த ஏஞ்சலின் டாவின்சி என் தங்கை. இது மனிதம், மனித நேயம் ஆகியவற்றை முக்கியப்படுத்தும் வாழ்க்கையை  சொல்லும் விழிப்புணர்வு கதை” என்றார்.
    தாய்-மகன் பாச போராட்டக் கதையாக உருவாகி வரும் ‘செவிலி’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்க்கலாம்.
    எம்.கே.எம்.பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘செவிலி’. இது தாயின் பாசத்திற்காக ஏங்கும் மகனுக்கும்-மகனின் பாசத்தை புரிந்து கொள்ளாத  தாய்க்கும் நடக்கும் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கிறது.

    இந்த படத்தில் அரவிந்த் ரோ‌ஷன், கீர்த்தி ரெட்டி, நாயகன் நாயகியாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ‘மைனா’ பூவிதா, நெல்லை  சிவா, ‌ஷகிலா, சிட்டிசன் மணி உள்பட பலர் நடித்துள்ளனர்.

    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....

    “தாய் பூவிதாவின் அரவணைப்பும் பாசமும் கிடைக்காமல் ஏங்கி தவிக்கும் மகனாக அர்விந்த் ரோ‌ஷன் நடிப்பில் தனி முத்திரை  பதித்துள்ளார். மகனின் பாசத்தை உணராத தாய் நிலையை அறிந்து காதலிக்க தொடங்கும் கீர்த்தி ரெட்டி- தனது காதலுக்கு தடையாக  காதலனே மாறியதை எண்ணி வேத னைப்படும் காட்சிகளில் அனைவரையும் உருக வைத்து இருக்கிறார்.

    கேரளாவில் நாயகி கீர்த்திரெட்டி குளிக்கும் காட்சியில் நடிக்கும் போது மலைப்பாம்பிடமிருந்து உயிர் தப்பினார். படத்தில் இயற்கை  எழில் கொஞ்சும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கும்” என்றார்.

    இசை- வி.எம்.ஜீவன், பின்னணி இசை-சங்கர் ரங்கராஜன், பாடல்கள்- ப்ரியா, பிரபாகர், சண்டை- திரில்லர் எஸ்.ஆர்.முருகன்,  நடனம்-எஸ்ரா எடிசன், எடிட்டிங்- சுப்பிரமணி, தயாரிப்பு- கே.பீர்முகமது, எழுத்து, ஒளிப்பதிவு, இயக்கம்- ஆர்.ஏ. ஆனந்த்.
    வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ்த் திரைப்படமான 'கனவு வாரியம்' படத்தின் முன்னோட்டத்தை பார்க்கலாம்.
    தமிழகத்தில் நிலவிய மின்வெட்டு பிரச்சனையை மையமாக கொண்டு டிசிகாப் சினிமாஸ் தயாரிப்பில் உருவான ஜனரஞ்சகமான  திரைப்படம் 'கனவு வாரியம்', திரைக்கு வரும்  முன்பே 7 சர்வதேச விருதுகளையும், 9 நாடுகளில் இருந்து 15 சர்வதேச  அங்கீகாரங்களையும், கௌரவங்களையும் வென்றுள்ளது. உலகப் புகழ்ப் பெற்ற 2 சர்வதேச 'ரெமி' விருதுகளை வென்ற முதல்  இந்தியத் திரைப்படம் 'கனவு வாரியம்'.

    இந்தியா முழுவதும் வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படம் 'கனவு வாரியம்' என்பது  குறிப்பிடத்தக்கது.

    இயக்குனர் அருண்சிதம்பரம் 'கனவு வாரியம்' திரைப்படத்திற்குகதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எழுதி, இயக்கி  கதாநாயகனாகவும் நடித்து உள்ளார்.  அருண் சிதம்பரம் மறைந்த மக்களின் ஜனாதிபதி மேதகு அப்துல்கலாம் அவர்களால்  பெரிதும் பாராட்டப்பெற்றவர்.

    'கனவு வாரியம்' திரைப்படத்தில் ஜியா (அறிமுக கதாநாயகி), இளவரசு, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், பிளாக் பாண்டி, யோக்  ஜெப்பி, செந்தி குமாரி உட்பட பலர்நடித்துள்ளனர். இசை - ஷியாம் பெஞ்சமின், ஒளிப்பதிவு - எஸ்.செல்வகுமார், படத்தொகுப்பு –  காகின்.

    'ஆணழகன்'  டாக்டர் அ.சிதம்பரம்  மற்றும் கார்த்திக் சிதம்பரம் அவர்களும் இணைந்து 'டிசிகாப் சினிமாஸ்' பேனரில் 'கனவு  வாரியம்' திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
    ×