என் மலர்
முன்னோட்டம்
இதில் முக்கிய கதாபாத் திரத்தில் கே.பாக்யராஜ், பொன்வண்ணன் நடித்துள்ளனர். கதா நாயகனாக யுவன், கதாநாயகி களாக சாராஷெட்டி, சிஞ்சுமோகன் அறிமுகமாகிறார்கள். இவர் களுடன் சிங்கம்புலி, முத்துக்காளை உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
“இந்தியாவில் இன்னும் பண்பாட்டுச் சூழல் கெட்டுப் போகாமல் இருக்கும் ஒரு சில மாநிலங்களில் முக்கிய இடம் தமிழகத்திற்கு தான் உண்டு. புரையோடிப்போன வன்மங்கள் எதுவுமின்றி அன்பு...பாசம்... நட்பு...வீரம்...அளவான கோபம்... இவை அனைத்தும் இன்னும் நம்மை பாதுகாக்கும் கவசகுண்டலங்கள் என்பதை மக்களுக்கு சொல்லும் படம் ‘அய்யனார் வீதி’” என்றார்.
யு.கே.முரளி இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் வெளியீடு சென்னை எம்ஜிஆர் தோட்டத்தில் நடந்தது. ‘அய்யனார் வீதி’ படத்தின் டீசரை நடிகர் ராதாரவி வெளியிட நடிகர் ரித்திஷ் பெற்றுக் கொண்டார்.
இசை வெளியீட்டு விழா நாளை நடக்கிறது. இசை தகட்டை கே.பாக்யராஜ் வெளியிட ஆர்.கே.சுரேஷ் பெற்றுக்கொள்கிறார்.
கதை-பாஸ்கரன், திரைக்கதை, வசனம், இயக்கம்-ஜிப்ஸி என்.ராஜ்குமார்.
இன்றைய எக்ஸ்பிரஸ் வேகத்தில் வாழ்க்கையை கடக்கும் இளைய தலைமுறையிடம் திருக்குறளை முழுமையாக படிக்கும் ஆர்வம் இருப்பது அரிதானது.
நவீன தகவல் தொடர்பு சாதனங்கள், இன்றைய இளைஞர்கள், இளம் பெண்களுக்கு ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுகிறது. அதுவே அவர்களின் சீரழிவுக்கும் காரணமாகிறது. இதை மையக்கருவாக வைத்து இது உருவாகிறது.
இந்த படத்தை தி.மனோராமச்சந்திரன், தி.ஆறுமுகம் என்ற இரட்டையர்கள் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார்கள். மேலும் என்.முத்துக்குமாருடன் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இதில் நடிப்பவர்கள் அனைவரும் புதுமுகங்கள்.
இந்த படத்தின் கதைக்களம் திருக்குறள் தான். ஒரே கட்டணத்தில் ஒரே தலைப்பில் குறிப்பிட்ட நேரத்திற்குள் மூன்று கதைகளை உள்ளடக்கி உருவாக்கப்படும் படம் ‘ உல்லாச உலகம்’.
சாமுவேல் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு-சந்திரன் சாமி, சண்டை பயிற்சி-ஆக்ஷன் பிரகாஷ், நடனம்-சஞ்சீவ கண்ணா.
எம்.ஜி.ஆர். பிறந்தநாளான ஜனவரி 17- ந்தேதி ‘உல்லாச உலகம்’ படப்பிடிப்பு தொடங்கியது.
இது கேரளா, உத்திரபிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களில் வளர இருக்கிறது.
இது நகைச்சுவை கதையம்சம் கொண்ட படம். உல்லாச வாழ்க்கையில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு நாகார்ஜுன் சீக்கிரமே எமலோகம் செல்கிறார். அங்கு உள்ள பெண்களையும் மயக்கி தன் வசமாக்குகிறார். இதனால் எமதர்மனுக்கு பெரும் தொல்லையாகிறது.
எனவே, நாகார்ஜுனாவை எமலோகத்தில் இருந்து எப்படியாவது அனுப்பி விட எமர்தமன் முடிவு செய்கிறார். பூலோகத்தில் உள்ள மனைவி அவரை அழைப்பதாகவும் கூறுகிறார். இதை கேட்ட நாகார்ஜுனா, “ஐயோ... நான் போக மாட்டேன்.. போனால் மனைவி என்னை, அடித்து உதைத்து துவைத்து விடுவாள்” என்று அடம் பிடிக்கிறார்.
இதனால் எமதர்மன் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி தவிக்கிறார். அடுத்து என்ன நடக்கும்? என்பது மீதி கதை. இது போன்ற கலகலப்பான காட்சிகள் கொண்ட படம் ‘சோக்காலி மைனர்’ என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
ஒளிப்பதிவு- பி.எஸ்.வினோத், ஆர்.சித்தார்த், இசை- அனுரூபன்ஸ், ஜான்பீட்டர், பாடல்கள்- குமார் கணேஷ், வசனம்- மைக்கேல் யாகப்பன், நடனம்-ராஜீவ் சுந்தரம், பாபாபாஸ்கர், நிக்ஸன், தயாரிப்பு- கெளபாய் எம்.நிரஞ்சன்குமார் யாதவ், இயக்கம் - கல்யாண கிருஷ்ண குருசாலா.
காதலுக்கு ஒரு கொள்கை வைத்து கலாச்சாரத்தை மீறாமல் கண்ணியமான காதலை மையப்படுத்தி கிராமத்து பின்னணியில் சுவைபட இந்த படம் உருவாகியிருக்கிறது. விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 40 அழகிய கிராமங்களில் ஐம்பது நாட்கள் படமாக்கப்பட்டது. இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
பிப்ரவரி மாதத்தில் ‘விடல பசங்க’ படத்தின் பாடல்கள், இசை, திரைப்பட முன்னோட்டம், பட அறிமுக விழா நடைபெறுகிறது.
அ.லட்சுமணன்- க.ஜெயமுருகன் என்ற இரட்டையர்கள் இந்த படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு-செஞ்சி குபேந்திரன், இசை, படத்தொகுப்பு-குட்லக் ரவி, பாடல்கள் க.ஜெயமுருகன்.
கிராமங்களில் நடைபெறும் பல வன்முறை சம்பவங்களுக்கு அடிப்படையே புரிந்துகொள் ளாமல் மோதுவது தான். அதனால் ஏற்படும் இழப்பு எத்தகையது என்பதை அழுத்தமாகச் சொல்லும் படைப்பாக ‘யாகன்’ உருவாகிறது. வில்லனின் தவறான புரிதலால் ஹீரோவின் குடும்பம் இழப்புகளைச் சந்திக்கிறது. அதற்கு ஹீரோ என்ன தீர்வு காண்கிறான் என்பது பரபரப்பான திரைக்கதை. இந்த படத்தில் அப்பாவும் மகனும் எவ்வளவு தூரம் அன்பாக இருக்கமுடியும் என்பதைக் காட்டியிருக்கிறார்களாம்.
இசை-நிரோ பிரபாகரன், ஒளிப்பதிவு- மகேஷ்.டி. படத்தொகுப்பு- சண்முகம், பாடல்கள்- நா. முத்துக்குமார், கபிலன், பத்மாவதி, அருண் பாரதி, தயாரிப்பு-யோகராசா சின்னத்தம்பி.
கதை, திரைக்கதை , வசனம், இயக்கம்-புதுமுக இயக்குனர் வினோத் தங்கவேலு.
மிக் ஸ்டுடியோ தயாரிக்கும் புதிய படம் ‘வனமகன்’. இதில் ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் சாயிஷா சேகல், தம்பிராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
‘தேவி’ படத்துக்கு பிறகு ஏ.எல்.விஜய் இந்த படத்தை இயக்குகிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்துக்கு ‘குமரி கண்டம்’ என்று முதலில் பெயர் வைப்பதாக கூறப்பட்டது. இப்போது ‘வனமகன்’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயம்ரவி-ஏ.எல்.விஜய் இணையும் இந்த படம் புதிய கதை களத்தில் உருவாகிறது. ஜெயம் ரவிக்கு வித்தியாசமான படமாக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
‘மகாபிரபு’, ‘ஏய்’, ‘பகவதி’, ‘குத்து’, ‘சாணக்யா’ உள்பட 22 படங்களை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். இவரது 23-வது படம் ‘நேத்ரா’. இதில் வினய், சுமிக்ஷா, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த்தேவா இசை அமைக்கிறார்.
தமிழ் நாட்டில் இருந்து கனடா செல்லும் ஒரு இளம் தம்பதி விபரீதங்களை எதிர்கொள்ளும் கதை. கனடாவை சேர்ந்த பா.ராஜசிங்கம் இதை தயாரிக்கிறார். பெரும்பாலான படப்பிடிப்பு கனடாவில் நடக்கிறது.
இதுபற்றி கூறிய இயக்குனர் வெங்கடேஷ், “இது திரில்லர், காமெடி கலந்த கதை. மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர் இணைந்து காமெடியில் கலக்குகிறார்கள்” என்றார்.
இசை-இஷான்தேவ், ஒளிப்பதிவு-ராணா, கலை-மோகனமகேந்திரன், எடிட்டிங்-அதுல் விஜய், திரைக்கதை, வசனம்-அரசு.வி, தயாரிப்பு-ரோகித் ராய் முல்லை மோட்டில். இயக்கம்-ஜெயதேவ். இவர் நடிகை பாவனாவின் சகோதரர்.
வித்தியாசமான கதை களத்தில் `பட்டினப்பாக்கம்' உருவாகிறது. இந்த படத்தின் டீசரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.
பல ஆங்கிலப் படங்களை வினியோகம் செய்த எஸ்.பி.சினிமாஸ் இந்த படத்தின் விளம்பரம் மற்றும் வினியோக உரிமையை பெற்றுள்ளது.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சி-3’ படத்தை ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 16-ந் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தையும் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இவர் வெளியிடும் உரிமை பெற்ற புதிய படம் “ ஹர ஹர மஹா தேவகி”. இதன் தொடக்க விழா பூஜை நடந்தது. இதில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். , அவரது ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இவர்களுடன் சதீஷ், மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, நமோ நாராயணன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்தபடத்துக்கு முரளி பாலு இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு: -செல்வ குமார், கலை: சுரேஷ். இவர் கலை இயக்குனர் ராமலிங்கத்தின் உதவியாளர்.
கதை , திரைக்கதை , அமைத்து வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் சந்தோஷ்பீட்டர் ஜெயகுமார். இவர் “எங்கேயும் எப்போதும்” டைரக்டர் சரவணனின் உதவி இயக்குனர்.
“ஸ்லாப் ஸ்டிக்” காமெடியாக உருவாகும் இப்படத்தின் படபிடிப்பு வருகிற 23-ந் தேதி சென்னையில் ஆரம்பமாகிறது. முழுக்க முழுக்க சென்னையில் நடைபெறும் இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ். தங்கராஜ் தயாரிக்கிறார்.
மோரா பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘மோகனா’. இதில் மொட்டை ராஜேந்திரன், பவர்ஸ்டார் சீனிவாசன், கல்யாணி நாயர்,உமா,ஹரீஷ்,மோரா, மும்பை சீனுஜி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இசை-எல்.ஜி. பாலா,பாடல்-சீனிவாசன், நடனம்- கவுசல்யா, சண்டைப்பயிற்சி-‘ஸ்டண்ட்’ விஜய், தயாரிப்பு- மோரா. கதை,திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம்- ஆர்.ஏ. ஆனந்த். இவர் ‘செவிலி’ படத்தை இயக்கியவர்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது....
“நாடகத்துறையிலுள்ள கலைஞர்களின் வாழ்க்கை எவ்வாறு அமைகிறது என்பதைப்பற்றி கூறும் படம்.
மோகனா எனும் நாடக நடிகையை, நடிகராக வரும் ‘பவர் ஸ்டார்’ ஒரு தலையாக காதலிக்கிறார். அதே சமயம் பண்ணையார் மொட்டை ராஜேந்திரனும் அவள் மேல் உயிரையே வைத்திருக்கிறார். அதில் சிக்கித்தவிக்கும் மோகனாவின் நிலை என்ன என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் முழு நீள நகைச்சுவை படம் தான் ‘மோகனா’” என்றார்.
இந்த படம் முழுவதும் நள்ளிரவு காட்சிகளாக எடுக்கப்பட்டது. ஒரு பாடல் மட்டுமே உள்ளது.
இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இசை - செல்வநம்பி, ஒளிப்பதிவு - ராசாமதி, படத்தொகுப்பு - விஷால் வி.எஸ்., பாடல்கள் - நா.முத்துகுமார், யுகபாரதி, ஏகாதசி,
நடனம் - தினேஷ், நிர்வாகத் தயாரிப்பு -பெருமாள் காசி, தயாரிப்பு - ஜி.ராமசாமி, எழுத்து, இயக்கம் - சுந்தரன்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது... “ஒரு சேட்டைக்கார பையன், பயங்கர குறும்புக்காரன். அவர் அடக்கமும், அமைதியும் கொண்ட ஒரு பெண்ணைப் பார்த்து ஒரு தலையாக காதலிக்க ஆரம்பிக்கிறான்.
ஒரு கட்டத்தில் அந்த பெண் இவனை விடபயங்கர சேட்டை மற்றும் குறும்புக்காரப் பெண் என்று தெரிகிறது. எனவே அவளை விட்டு விலக நினைக்கிறான். ஆனால், அவள் அவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை நகைச்சுவையாக இதில் சொல்லியிருக்கிறோம்” என்றார்.
இவர்களுடன் நாசர், லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
தேசிய விருது பெற்ற `குற்றம் கடிதல்' படத்தை அடுத்து இதை இயக்குனர் பிரம்மா இயக்குகிறார்.
ஒளிப்பதிவு- எஸ்.மணிகண்டன், இசை-ஜிப்ரான், படத்தொகுப்பு-சி.எஸ்.பிரேம், பாடல்கள்-தாமரை, விவேக், உமாதேவி, சவுண்ட்டிசைன்- அந்தோணி பி. ஜெயரூபன், இணைதயாரிப்பு- ராஜ்சேகர் கற்பூர சுந்தர பாண்டியன், கிறிஸ்டி சிலுவப்பன், தயாரிப்பு-சூர்யா. எழுத்து, இயக்கம்-பிரம்மா.
ஜோதிகா இந்த படத்தில் ஆவணபட இயக்குனராக நடிக்கிறார். முழுக்க முழுக்க குடும்ப பொழுது போக்கு படமாக இது உருவாகிறது. 1994-ல் கமல்ஹாசன் `மகளிர் மட்டும்' என்ற படத்தை தயாரித்தார். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய இதில் ரேவதி, ஊர்வசி, ரோகிணி, நாசர் உள்பட பலர் நடித்திருந்தனர்.
இப்போது ஜோதிகா நடிக்கும் இந்த படத்துக்கு `மகளிர் மட்டும்` என்று பெயர் வைக்க கமல் அனுமதி வழங்கி உள்ளார். இதற்காக அவருக்கு சூர்யா நன்றி தெரிவித்திருக்கிறார். படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.






