என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    `சிகரம் சினிமாஸ்' தயாரிக்கும் படம் `ஆண் தேவதை'. இது சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம். இந்த படத்தை தாமிரா இயக்குகிறார்.
    `சிகரம் சினிமாஸ்' தயாரிக்கும் படம் `ஆண் தேவதை'. இது சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம். இந்த படத்தை தாமிரா இயக்குகிறார். இவர்  இயக்குநர் கே.பாலச்சந்தரின் மாணவர். பாலச்சந்தர், பாரதிராஜா இருவரையும் `ரெட்டச்சுழி' படத்தில் இணைந்து நடிக்க வைத்து  இயக்கியவர்.

    `ஆண் தேவதை' படத்தில் சமுத்திரக்கனியுடன் ரம்யாபாண்டியன், கவின், கஸ்தூரி, `பூ' ராமு, இளவரசு, ஸ்ரீநிகா, பிரகதீஷ், அறந்தாங்கி நிஷா, யாழ் நிலா, மயில்சாமி, அருண்மொழி, திலீபன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
    இது சென்னைப் பின்னணியில் நடக்கும் கதை.

    இன்று உலக மயமாக்கல், நகரமயமாக்கல் சூழல்தான் பெரும்பாலான நகரவாசிகளை இயக்குகிறது.  இன்றைய சூழலில் குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவி உறவு போன்றவை எந்த அளவுக்கு சிக்கலை எதிர்கொள்கின்றன என்பதைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது.

    ஒரு தாயிடம் வளரும் குழந்தைக்கும் தந்தையிடம் வளரும் குழந்தைக்கும்  என்ன வேறுபாடு? என்பதையும் இந்த படம்  உணரவைக்கும்.`இயக்குநர் சிகரம்` பாலச்சந்தர் மீது வைத்த மதிப்பின் அடையாளமாக `சிகரம் சினிமாஸ்' என்று தனது நிறுவனத்திற்குப் பெயர் வைத்து பக்ருதீனுடன் இணைந்து  இந்த படத்தைத் தயாரிக்கிறார் தாமிரா.

    ஒளிப்பதிவு- விஜய்மில்டன், இசை-ஜிப்ரான், படத்தொகுப்பு-காசிவிஸ்வநாதன், கலை-ஜாக்சன், ஸ்டண்ட்-ரன்ரவி தயாரிப்பு-பக்ருதீன், இயக்கம்-தாமிரா.
    17 நாட்களில் உருவான கள்ளாட்டம் படத்தை பற்றிய முன்னோட்டத்தை கீழே விரிவாக பார்ப்போம்...

    ஒயிட்ஹார்ஸ் புரொடக்ட‌ஷன் தயாரிப்பில் உருவான படம் ‘கள்ளாட்டம்’ . இதில் நந்தா, ரிச்சர்டு, இளவரசு, குமார் நாகராஜன், ஏழு மலை, ‌ஷரிகா, உஷா ஸ்ரீ, மேக்னா உள்படபலர் நடித்திருக்கிறார்கள்.

    இந்த படத்தின் ஒளிப் பதிவாளர் பிரகாஷ் ஜி இயக்குர் ஆகி இருக்கிறார். இசை- உமர் எழிலன், படத்தொகுப்பு- வி.டி. விஜயன், கலை - மோகன மகேந்திரன், தயாரிப்பு- சவுன் டியன்ஜி. பிரகாஷ் ஆர் சுமன் ஜி.

    ‘பிரண்ட்ஸ்’ , ‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’, ‘கிங்’, ‘ஆழ்வார்’ உள்பட பட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ரமேஷ் ஜி இந்த படத்தை ஒளிப்பதிவு செய்து, இயக்குகிறார்.

    இந்த படத்தில் நடிப்பது குறித்து நந்தா கூறும் போது....

    இது ஒரு முழுமையான போலீஸ் ஸ்டோரி . வழக்கமான சினிமாவில் வருகின்ற போலீஸ் போல் இல்லாமல், முழுமையாக மாறுபட்ட சினிமாவாக இருக்கும். மொத்தம் 90 நிமிடம் ஓடும் இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும்தான் உண்டு. அது ஒரு கலர்புல்லான கவர்ச்சி பாடலாகும்.

    காதல் பாடல்களை இப்படத்தில் வைக்கவில்லை. கதை முழுவதும் மிகவும் விறுவிறுப்புடன் பயணிக்கும். இயக்குநர் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். படத்தில் என்னோடு நடிகர் இளவரசன் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

    இது ஆங்கில திரைப்படத்திற்கு நிகராக இருக்கும். இயக்கம், ஒளிப்பதிவு இரண்டையும் ரமேஷ் ஜி சிறப்பாக செய்திருக்கிறார். 17 நாட்களில் படப்பிடிப்பு முடிந்து விட்டது” என்றார்.

    ஐயப்பன் மகிமையை சொல்லும் படமாக உருவாகி வரும் ‘கன்னிச்சாமி’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்...

    ரோ‌ஷன் மூவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் ஜாகீர் உசேன் தயாரித்து வரும் புதிய படம் ‘கன்னிசாமி’. இந்த படத்தில் பருத்திவீரன் சரவணன், அர்ச்சனாசிங் கணவன், மனைவியாக நடிக்கிறார்கள்.

    ஐயப்பன் வரலாற்றைச் சொல்லும் ‘குருசாமி’, சீரடி சாய்பாபாவின் அற்புதங்களைச் சொல்லும் ‘அபூர்வ மகான்’ படங்களை இயக்கிய கே.ஆர். மணிமுத்து ‘கன்னிசாமி’ படத்தை இயக்குகிறார்.

    சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து போயிருக்கும் தனது தாய் தந்தையரை மீண்டும் சேர்த்து வைக்க ஐயப்பனுக்கு மாலைபோட்டு விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று போராடும் ஒரு கன்னிசாமியின் கதை இது.

    கன்னிசாமியாக மாஸ்டர் யோகேஸ்வரன், கருப்புசாமியாக திருச்சி ஜெகதீசன், வில்லனாக சத்யபிரகாஷ் இவர்களுடன் கிங்காங்,போண்டாமணி, ‘அவன் இவன்’ ராமராஜன், மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

    ஒளிப்பதிவு- நெளசத், இசை-கண்மணிராஜா, பாடல்கள்- அண்ணாமலை, ஏம்பல் ராஜா, வைரவமூர்த்தி, நடனம்-பவர்சிவா, கதை, வசனம்-கே.ஆர்.வேலாயுதம், தயாரிப்பு- ஜாகீர்உசேன்.

    திரைக்கதை, டைரக்‌ஷன்-கே.ஆர்.மணிமுத்து. வரும் கார்த்திகை மாதம் 1-ந்தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    ஜெயராம் - ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ‘செண்பகக்கோட்டை’ என்ற படம் உருவாகியிருக்கிறது. அந்த படம் குறித்த முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்...
    ஜெயராம், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘செண்பகக்கோட்டை’. இப்படம் மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகியிருக்கிறது. 2000 வருடத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் நடக்கும் கதையாகவும், தற்போது நடக்கும் கதையாகவும், 20 வருடத்துக்கு முந்தைய கதையாகவும் இதில் கதைக்களம் உருவாகியிருக்கிறது.

    மூன்று காலகட்டங்களிலும் நடக்கும் கதை ஒரு புள்ளியில் வந்து சந்திக்கும் இடமே ‘செண்பகக்கோட்டை’. இப்படத்தை கண்ணன் தாமரக்குளம் என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் மலையாளத்தில் ஏற்கெனவே வெளிவந்திருந்தாலும், தமிழுக்கு ஏற்றார்போல் சில காட்சிகளை படமாக்கி பிறகு மலையாள படத்தோடு இணைத்து வெளியிடவிருக்கிறார்கள்.

    இப்படத்தில் சம்பத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜெயராமுக்கு இணையாக இவருடைய கதாபாத்திரமும் இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். மேலும் ஓம் பூரி, ஆடுகளம் நரேன், ஷீலு ஆபிரகாம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

    முக்கியமான கதாபாத்திரங்களில் பேபி அக்ஷரா கிஷோர் மற்றும் பேபி ஏஞ்சலினா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடைய கதாபாத்திரம் படத்தில் பெரிதளவில் பேசப்படும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி தமிழில் வெளிவரவிருக்கிறது.

    படத்திற்கு ரித்தேஷ் வேகா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு ஜித்து தாமோதர். ஆர்ட் டைரக்டர் சாஹாஸ் பாலா. கதை - தினேஷ் பல்லாத், எடிட்டிங் - எஸ்.என்.பாசில், சந்தீப் நந்தகுமார். தயாரிப்பு - ஹர்ஷினி மூவிஸ். 
    மானஸ், அமரன், ரஜின் என புதுமுகங்கள் நடிப்பில் உருவாகும் ‘மெய்மை’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்..

    பூச்சாண்டி டிரீம் பிக்சர்ஸ் சார்பில் பி.மோகன்குமார் தயாரிக்கும் படம் ‘மெய்மை’. இதில் மானஸ், அமரன், ரஜின், வித்யாஸ்ரீ, மேரி, பூவிலங்கு மோகன், ரவிஷாந்த், கராத்தே ராஜா, ருக்மணி, ஹர்ஷித், மணி ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு- மகிபாலன், சண்டைப்பயிற்சி-அமிதாப், நடனம்-சுஜித்.

    ‘மெய்மை’ படத்துக்கு டி.எஸ்.திவாகர் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கி உள்ளார். இது இவர் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் 3-வது படம்.

    பரபரப்பான ஒரு இடத்தில் உல்லாச விடுதி ஒன்று உள்ளது. தினமும் பல ஜோடிகள் வந்து போவதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அப்படி இருக்கும் இந்த இடத்தில் ஒருநாள் அந்த விடுதிக்குள் நுழைந்த காதல் ஜோடிகள் காணாமல் போகிறார்கள். காணாமல் போன அவர்கள் மாய உலகம் ஒன்றில் சங்கமிக்கிறார்கள்.

    எப்படி அவர்கள் அந்த மாய உலகத்திற்குள் சென்றார்கள். அங்கு என்ன நடந்தது. அங்கிருந்து தப்பித்தார்களா? மீண்டும் இந்த உலகத்திற்குள் வந்தார்களா? அது என்ன அபூர்வ சக்தியின் மகிமை, பில்லி சூனியமா? சாத்தானின் வேலையா? என பல கேள்விகளுக்கு விடை தாங்கி விரைவில் வர இருக்கும் படம் ‘மெய்மை’.

    இதன் படப்பிடிப்பு ஆனைகட்டி, கொடைக்கானல், ஊட்டி, மூணாறு மற்றும் மலேசியாவில் நடைபெற்றுள்ளது.

    ‘பாகுபலி’ பிரபாஸின் உறவினர் நடிக்கும் புதிய படம் முன்னோடி. இப்படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    எஸ்.பி.டி.ஏ. ராஜசேகர், சோஹாம் அகர்வால் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் `முன்னோடி'.  இதில் தெலுங்கு தேசத்தை சேர்ந்த ஹரிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் 'பாகுபலி' பிரபாஸின் உறவினர். நாயகியாக தெலுங்கு தேசத்தை சேர்ந்த யாமினி பாஸ்கர் அறிமுகமாகிறார். இவர்கள் இருவருமே தமிழுக்கு புதிதாக அறிமுகமாகிறார்கள்.

    படத்தில் வில்லன்களாக 'கங்காரு' படத்தில் ஹீரோவாக நடித்த அர்ஜுனா, ‘குற்றம் கடிதல்’ படத்தில் நடித்த பாவல் நவநீதன்  ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சித்தாரா, ஷிஜாய் வர்கீஸ், நிரஞ்சன், சுரேஷ், தமன், வினுக்ருதிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.  

    வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்கிறார். கே.பிரபு ஷங்கர் இசையமைக்கிறார். எடிட்டிங்- என்.சுதா, நடனம்-ஏபி.சந்தோஷ். ஸ்டண்ட் -டேஞ்சர் மணி. இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் எஸ்.பி.டி.ஏ.குமார்.

    தொழிலதிபரான இவர் சினிமா மீது கொண்ட காதலால் யாரிடமும் உதவியாளராக பணிபுரியாமல் இயக்குனர் ஆகியிருக்கிறார்.   
    சூழ்நிலையால் ரவுடியாக வளரும் ஒருவன் வேறொரு சூழ்நிலையில் மனம் திருந்தி நல்லவனாக மாற முயற்சிக்கிறான். அவன் முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை உணர்ச்சிகரமாகவும் நகைச்சுவையாகவும் சொல்லும் படம் `முன்னோடி'.

    இயக்குனர்  எஸ்.பி.டி.ஏ. குமார் ஒரு பாடல் காட்சி முழுவதையும் கிராபிக்ஸ் காட்சிகளால் அமைத்துள்ளார். இந்த பாடலை எடுக்க ஆறு மாதங்கள் உழைத்திருக்கிறோம். வேறு கிராபிக்ஸ் காட்சிகளும் உண்டு என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
    மிராக்கிள் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘நிசப்தம்’. படம் குறித்த விவரங்களை கீழே பார்ப்போம்...
    ‘நிசப்தம்’ படத்தில் நாயகனாக அஜய் அறிமுகமாகிறார். ‘நாடோடிகள்’' அபிநயா, பேபி சாத்தன்யா, கிஷோர், கன்னட புகழ்  ராமகிருஷ்ணா, இயக்குநர் ஏ.வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை ஏஞ்சலின் டாவன்ஸி, பிராக்கிள் பிக்சர்ஸ் மூலம் க்ருப்பா கிதியோன், ஜெயரதி லாரன்ஸ், ப்ரச்சி சுக்லா, வளர்மதன்,பெருமாள் ஆகியோருடன் இணைந்து  தயாரித்துள்ளார்.

    படம் முழுவதும் பெங்களூரின்  மையப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. பெங்களூரில்  வாழும் ஓர் தமிழ் குடும்பத்தை சுற்றிவரும் கதை. ஒளிப்பதிவு- எஸ்.ஜே.ஸ்டார், இசை- ஷான் ஜஸில், எடிட்டிங்- லாரன்ஸ் கிஷோர், கலை- ஜான்பிரிட்டோ.  

    இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களையும் மறைந்த கவிஞர் நா.முத்துகுமார் எழுதியிருக்கிறார். இயக்கம்- மைக்கேல் அருண். படம் பற்றி கூறிய அவர்.. “இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘மண்மீது பெண்ணாய் வந்தாய் கண்ணே’ என்ற பாடல் மறைந்த கவிஞர் நா.முத்துகுமாருக்கு மீண்டும் ஒரு தேசிய விருது பெறும் பாடலாக அமையும்.

    படத்தின் இசை கோர்ப்பு பணிகளில் உலகில் சிறந்த இசை கலைஞர்களாகிய ‘செல்லோயிஸ்ட்’ ஜேக் சார்க்கி, கேம் ஆப் த்ரோன்ஸ் புகழ் செல்லோ கலைஞர் டீனா குவா, மற்றும் செர்பியன் இசை கலைஞர் விளாடிஸ்வர் நடிஷானா போன்றவர்கள் பங்கேற்றுள்ளனர். நாயகி அபிநயா நடிப்பும், பேபி சாத்தன்யா ஏற்று நடித்துள்ள ‘பூமி’ என்கிற கதாபாத்திரமும் கண்டிப்பாக அனைவர் மனதையும் விட்டு நீங்காது இடம்பெறும்” என்றார்.

    ‘நிசப்தம்’ படத்தை அடுத்த மாதம் திரையிட திட்டமிட்டுள்ளனர்.
    தாயை வெறுக்கின்ற மகன், பிள்ளைப் பாசத்திற்காக ஏங்குகிற தாய். இதனை மையக் கருத்தாகக் கொண்டு உருவாகி வரும் `செல்லமடா நீ எனக்கு' படத்தை பற்றிய முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்...
    கலைமகள் புரொடக்ஷன் சார்பில் சிறுமடை லிங்கம் எஸ்.தயாரிக்க ஆனந்த்சிவம் இயக்கத்தில் ‘செல்லமடா நீ எனக்கு’ படம் உருவாகிறது. இப்படத்தை வசீகரன், நேகா நாயகன்- நாயகியாக அறிமுகமாகிறார்கள். அமுதவாணன், போஸ் வெங்கட், ரிஷா, `பசங்க' செந்தி, மீராகிருஷ்ணன், ரிந்துரவி உள்பட பலர் நடிக்கின்றனர்.

    தயாரிப்பாளர் சிறுமடை லிங்கம் போலீஸ் அதிகாரி வேடத்திலும், ஒளிப்பதிவாளர் செல்வா ஆர்.எஸ். கதாநாயகியின் தந்தையாகவும் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு-செல்வா ஆர்.எஸ்., இசை - ராஜ்நூர், எடிட்டிங் - சங்கர்.கே, கலை - மணிவர்மா, ஸ்டண்ட்- குன்றத்தூர் பாபு, நடனம்- சங்கர், அஸார், தயாரிப்பு நிர்வாகம்-ஜி.சம்பத், தயாரிப்பு- சிறுமடை லிங்கம்.எஸ், கதை,வசனம், பாடல்கள்-மதுரா வேல்பாரி, திரைக்கதை, இயக்கம்- ஆனந்த் சிவம்.

    படப்பிடிப்பு தேவக்கோட்டை, சிறுமடை, காரைக்குடி, சென்னை போன்ற இடங்களில் 50 நாட்கள் நடந்து முடிவடைந்தது.
    பெட்டி சி.கே., பி.ஆர். மோஹன் இணைந்து நிமோஷா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரித்து வரும் புதிய படம் `கொஞ்சம் கொஞ்சம்'. இதில் கதாநாயகனாக புதுமுக நடிகர் கோகுல் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பம்பாய் நடிகை நீனு நடிக்கிறார்.
    பெட்டி சி.கே., பி.ஆர். மோஹன் இணைந்து நிமோஷா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரித்து வரும் புதிய படம் `கொஞ்சம் கொஞ்சம்'. இதில் தமிழ் நாட்டிலிருந்து கேரளாவுக்கு போய் இரும்புக் கடைகள் வைத்து வாழ்க்கையில் முன்னேறும் இளைஞராக அப்புக்குட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    இவருக்கு மனைவியாக மதுமிதா நடிக்கிறார், காதலியாக  டி.வி. புகழ் சர்மிளா தாபா நடிக்கிறார்.

    கதாநாயகனாக புதுமுக நடிகர் கோகுல் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பம்பாய் நடிகை  நீனு, கேரளாவைச் சேர்ந்த பிரியா, மோஹன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
    ஒளிப்பதிவு. பி.ஆர், நிக்கி கண்ணன். இவர் கே.வி. ஆனந்த், காக்காமுட்டை மணிகண்டனிடம் பணியாற்றியவர்.

    இசை- வல்லவன், பாடல்கள் -அருண்பாரதி, தேன்மொழிதாஸ், மீனாட்சிசுந்தரம், ஹசீனா எஸ்.கானம், நடனம்-தினா, எடிட்டிங்- ரஞ்சித் டச் ரிவர், தயாரிப்பு- பெட்டி சி.கே.  பி.ஆர் மோஹன்.  கதை, திரைக்கதை , வசனம், டைரக்ஷன்-உதய்சங்கரன்.
    வித்தியாசமான கதையமைப்போடு, காதல், காமெடி, சென்டிமென்ட் கலந்து  அனைவரையும் கவரக்கூடிய ஜனரஞ்சகமான படமாக இதை உருவாக்கி வருகிறார்கள், என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

    `கொஞ்சம் கொஞ்சம்' படத்தின் அனைத்துக் கட்டப்படப்பிடிப்பும் தமிழ்நாடு மற்றும் கேரளாவிலுள்ள முக்கிய பகுதிகளில் நடைபெறுகிறது.
    அக்டோபர் மாதம் இந்தபடத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.    
    நர்கவி டாக்கிஸ் தயாரிக்கும் படம் `அன்புக்கு பஞ்சமில்லை'. இதில் விக்னேஷ் வித்தியாசமாக நடித்துள்ளார்.
    நர்கவி டாக்கிஸ் தயாரிக்கும் படம் `அன்புக்கு பஞ்சமில்லை'. இதில் விக்னேஷ் வித்தியாசமாக நடித்துள்ளார். இவருடன் `பந்து' படத்தில் நாயகனாக நடித்துள்ள பிரதாப், காயத்திரி அய்யர், கஞ்சாகருப்பு, துளசிதேவர்,தேனிமுருகன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    இசை-சவுந்தர்யா,பாடல்கள் அறிவுமதி, தேன்மொழி, கிருதயா, செங்கதிர் வாணன், நடனம்-சாய்சரவணன், கோபால்ஜி, கவுசல்யா, ஸ்டண்ட்-லயன்சரா, வசனம்-சேதுபதி. கதை, திரைக்கதை, இயக்கம்-விவேகபாரதி.

    தஞ்சை டெல்டா பகுதியில் அக்காவின் மகள் வாழ்க்கைக்காக பாசப்போராட்டம் நடத்தும் தாய்மாமன். தன்னை காதலிக்கா விட்டாலும் அவனை காதலித்ததை பெருமையாக நினைக்கும்  நாயகி. தாய்மாமன் ஒரு புறம், அக்காள் மகள் மறுபுறம், அக்காள் மகளை காதலிக்கும் நாயகன் இன்னொருபுறம்.

    இவர்களின் வாழ்வியலை தஞ்சை மாவட்டத்தில் அழகிய டெல்டா பகுதிகளில் கண்ணுக்கு  இனிமையாய் உருவாக்கியிருக்கும் படம் `அன்புக்குபஞ்சமில்லை'.
    படப்பிடிப்பு முழுவதும் மயிலாடுதுறை, தஞ்சையை சுற்றி நடை பெற்றுள்ளது. படத்தின் உச்ச கட்ட காட்சிகளை மிக அருமையாக படமாக்கி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.   
    பெப்பி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `யானும் தீயவன்'. புதுமுகம் அஸ்வின் ஜெரோம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் வர்ஷா கதாநாயகியாக நடிக்கிறார். ராஜுசுந்தரம் வில்லனாக நடிக்கிறார்.
    பெப்பி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `யானும் தீயவன்'. புதுமுகம் அஸ்வின் ஜெரோம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் வர்ஷா கதாநாயகியாக நடிக்கிறார். நடன இயக்குனரும் பிரபுதேவாவின் சகோதரருமான ராஜுசுந்தரம் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் விடிவி கணேஷ், பொன்வண்ணன், சந்தானபாரதி, அருண்ராஜ காமராஜ்,மதுமிதா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    இசை- அச்சுராஜாமணி, ஒளிப்பதிவு -ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பு- பிரசன்னா ஜிகே, கலை -எம்.ஷிவாயாதவ், பாடல்கள்- கபிலன்,அமுதவன், சண்டைபயிற்சி- ராம்போ விமல், நடனம்- பிருந்தா. தயாரிப்பு-சோபியா ஜெரோம், பெப்பிதா ஜெரோம், இயக்கம்-பிரசாந்த் ஜி.சேகர். படம் பற்றி இவர் கூறியபோது.... "எல்லோருடைய மனதிலும் ஒரு  நல்லவன், ஒரு தீயவன் இருப்பான்.

    சூழ்நிலைக்கு ஏற்ப அவன் வெளிப்படுவான். அது தான் இந்த படத்தின் தலைப்பு. எந்த ஒரு  விஷயத்தையும் நன்றாக சிந்தித்து செய்ய வேண்டும்.யோசிக்காமல் செய்வதால் ஏற்படும் விளைவுகளை சொல்லும்  காதல், கிரைம் கலந்த படமாக  இது உருவாகி இருக்கிறது.

    ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளரின் மகன் அஸ்வின் ஜெரோம். இதில் கதாநாயகனாக அறிமுக மாகிறார். ஏற்கனவே நடனம் பயின்ற இவர் இந்த படத்துக்காக சண்டை பயிற்சியும் பெற்றிருக்கிறார். ராஜுசுந்தரம் இந்த படத்தில் மிரட்டும் வில்லனாக வருகிறார்.

    நாயகி வர்ஷா ஏற்கனவே சில படங்களில் நடித்திருத்தாலும் இது அவருக்கு பேசப்படும் படமாக அமையும். வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட இது அனைவரும் விரும்பும் படமாக இருக்கும்'' என்றார். இதன் இசை வெளியீட்டு  விழா சென்னையில் நடந்தது. பிரபுதேவா, ஆர்யா, தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவா மற்றும் படகுழுவினர் கலந்து கொண்டனர்.
    தெலுங்கில் `பாகு பங்கா ராம்' என்ற பெயரில் தயாராகும் படமே தமிழில் `செல்வி'யாக உருவாகிறது.ஆகஸ்ட் 12-ம் தேதி இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் வெளியாகிறது.
    சித்தாரா எண்டர் டைன்மெண்ட்ஸ் வழங்க  சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் "செல்வி''. தெலுங்கில் `பாகு பங்கா ராம்'  என்ற பெயரில் தயாராகும் படமே தமிழில் `செல்வி'யாக  உருவாகிறது.

    ஆகஸ்ட் 12-ம் தேதி இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் வெளியாகிறது. போலீஸ உயர் அதிகாரி வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.இவர்களுடன் ஜெய பிரகாஷ், சம்பத், சவுகார்ஜானகி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு-ரிச்சர்ட் பிரசாத், இசை-ஜிப்ரான், எடிட்டிங்- திரிநாத், பாடல்கள்-கருணாநிதி, கல்யாண்ஜி, அருண்பாரதி, மீனாட்சிசுந்தரம், மோகன், இயக்கம்-மாருதி. இவர் 20-க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர்.

    தயாரிப்பு -பத்ரகாளி பிரசாத், வசனம் எழுதி தமிழாக்கம் செய்பவர்- ஏ.ஆர்.கே.ராஜராஜா. படம் பற்றி கூறிய அவர்.... "வெங்கடேஷ் - நயன்தாரா ஏற்கனவே  லஷ்மி என்ற படத்தில் நடித்து அந்த படம் வெற்றி பெற்றிருக்கிறது.  ஆக்ஷன், காமெடி, குடும்ப கதையாக செல்வி உருவாகி உள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடை பெறுகிறது.  நாயகன் வெங்கடேஷ்  மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்'' என்றார்.
    ×