என் மலர்
முன்னோட்டம்
ஜெயா பிலிம்ஸ் தயாரிக்கும் படம் “அமாவாசை”. இளைய தலைமுறையினரை பெரிதும் கவரும் ஒரு திகில் இசை திரில்லர் படமாக இதுஉருவாகி இருக்கிறது.
ஜெயா பிலிம்ஸ் தயாரிக்கும் படம் “அமாவாசை”. இளைய தலைமுறையினரை பெரிதும் கவரும் ஒரு திகில் இசை திரில்லர் படமாக இதுஉருவாகி இருக்கிறது. இதில் கதாநாயகர்களாக ஜெய்ஆகாஷ், நுபுர் மேத்தா, ராஜேஷ் விவேக், ஜீவா, ஷ்ராவன் ஆகியோர் நடித்துள்ளனர்.
கதாநாயகிகளாக சாக்ஷி, ஷோகன், ப்ரீத்திசிங், தன்யா மவுரியா, முமைத்கான் நடிக்கிறார்கள். இவர்களுடன் ரூபிகான், சீமாசிங் முக்கிய கதாபாத்திரத்தில் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஆகியோர் நடிக்கின்றனர்.
வசனம்–பாபா, இசை–சையத் அஹமத், ஒளிப்பதிவு– டேவிட் பாசு, எடிட்டிங்–அனில் பந்து, தயாரிப்பு –எழுத்து–இயக்கம்–ராகேஷ் சவந்த். இதன் படப்பிடிப்பு ராஜஸ்தான், உதய்பூர், ஜோத்பூர், சென்னை இதன் சுற்றுப்புறங்களில் நடந்தது. சென்னை ஸ்டார் ஸ்டூடியோவில் ஒரு டைட்டில் பாடலுக்கு நாராயண பாபுவால் டப்பிங் செய்யப்பட்டு பாடி முடிக்கப்பட்டது. பிரபல பாலிவுட் இசையமைப்பாளரான சையத் அஹமத் இசையில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகிறது. அனைத்து கட்ட படப்பிடிப்புகளும் முடிந்து விட்டன. இந்தப்படம் வருகிற ஆகஸ்டு மாதம் திரைக்கு வருகிறது.

பேஷன் பிலிம் பேக்டரி வழங்க அருண் வைத்தியநாதன் தயாரித்து இயக்கும் படம், `நிபுணன்'. இதில் அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். இவருடன் பிரசன்னா, வைபவ், சுமன், வரலட்சுமி, சுஹாசினி,சுருதி ஹரிஹரன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
பேஷன் பிலிம் பேக்டரி வழங்க அருண் வைத்தியநாதன் தயாரித்து இயக்கும் படம், `நிபுணன்'. இதில் அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். இவருடன் பிரசன்னா, வைபவ், சுமன், வரலட்சுமி, சுஹாசினி,சுருதி ஹரிஹரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு- அரவிந்த் கிருஷ்ணா, இசை- எஸ்.நவீன், படத்தொகுப்பு- சதீஷ்சூரியா, திரைக்கதை-அருண் வைத்தியநாதன், ஆனந்த ராகவ், கலை- ஆறுசாமி, ஸ்டண்ட்- அன்பறிவ், சுதீஷ், தயாரிப்பு- உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம், அருண் வைத்தியநாதன்.
இயக்கம்- அருண் வைத்தியநாதன். துப்பறியும் கதையாக உருவாகும் `நிபுணன்' படத்தில் அர்ஜுன் துப்பு துலக்கும் போலீஸ் குழுவின் தலைமை அதிகாரியாக நடிக்கிறார். இவருக்கு கீழ் காக்கிசட்டை அணியாமல் சாதாரண உடையில் மக்களுடன் மக்களாக கலந்து துப்பு துலக்கும் ரகசிய போலீஸ் அதிகாரிகளாக பிரசன்னா, வரலட்சுமி ஆகியோர் நடிக்கிறார்கள்.
வழக்கமான பாணியில் இல்லாமல் புதிய கோணத்தில் `நிபுணன்' படம் தயாராவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இந்த படம் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் தயார் ஆகிறது.

‘ஓகே கண்மணி’ படத்துக்கு பிறகு மணிரத்னம் புதிதாக தயாரித்து இயக்கும் படம் ‘காற்று வெளியிடை...’ கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவரது ஜோடியாக இந்தி நடிகை அதிதிராவ் நடிக்கிறார்.
‘ஓகே கண்மணி’ படத்துக்கு பிறகு மணிரத்னம் புதிதாக தயாரித்து இயக்கும் படம் ‘காற்று வெளியிடை...’ கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவரது ஜோடியாக இந்தி நடிகை அதிதிராவ் நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.ஜே. பாலாஜி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கிறார். கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதி இருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்துக்கு, பாரதியாரின் கண்ணம்மா பாடலின் முதல் வரியில் உள்ள காற்று வெளியிடை..’ என்ற வாசகம் தலைப்பாக சூட்டப்பட்டுள்ளது. இதுவும் காதல் கதை என்று இந்த தலைப்பு சொல்கிறது. என்றாலும் மணிரத்னம் படம் என்பதால் இதில் புதுமையை எதிர்பார்க்கலாம்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்ஸ், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘மாயவன்’. இதில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். லாவண்யா திரிபாதி நாயகியாக நடிக்கிறார்.
திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்ஸ், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘மாயவன்’.
இதில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். லாவண்யா திரிபாதி நாயகியாக நடிக்கிறார். வில்லன்களாக டேனியல் பாலாஜி, இந்தி நடிகர் ஜாக்கிஷெராப் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் பகவதி பெருமாள், மைம் கோபி, ஜே.பி. சிறப்பு தோற்றத்தில் அக்ஷரா கவுடா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு– கோபி அமர்நாத், இசை ஜிப்ரான், படத்தொகுப்பு– லியோ ஜான்பால், கலை–கோபி ஆனந்த், ஸ்டண்ட்– விக்கி, தயாரிப்பு– சி.வி.குமார், கே.ஈ.ஞானவேல்ராஜா. இயக்கம்– சி.வி.குமார்.
“இந்த படத்தின் கதாநாயகனாக சந்தீப்கிஷனும், லாவண்யா திரிபாதியும் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தின் திரைக்கதையை ‘திரில்லர்’ பின்னணியில் அமைத்திருக்கிறோம்.
பல்வேறு படங்களை தயாரித்துள்ள நான் அனைவரும் கொடுத்த நம்பிக்கையால் இந்த படத்தை இயக்கினேன். நான் இயக்குவதால் ஞானவேல் ராஜாவும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க முன் வந்தார். இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. நாங்கள் நினைத்தபடி படம் சிறப்பாக வந்திருக்கிறது” என்றார்.

பொன்னு பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘அந்த குயில் நீதானா’. இந்த படத்தில் சாகர் கதாநாயகனாக நடிக்கிறார். கீர்த்தி கிருஷ்ணா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஸ்ரேயா ஜோஸ், சாலம் குன்னத், வேணு, சாருலதா, ராக்பியா, பேபி ஸ்ரேயா, தாரகன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இசை-கிருஷ்ணபிரசாத் துவாரகா, பாடல்கள்-அஜெய், ஒளிப்பதிவு-ரஞ்சித்ரவி, கலை-பிரதீப், நடனம்-ராகுல், ஸ்டண்ட்-ஜெரீஷ், எழுதி இருப்பவர் - கனகம் ஸ்டெல்லா.
இயக்கம் -ஸ்டேன்லி ஜோஸ், தயாரிப்பு -குஞ்சய்யப்பன், ராஜ்.
படம் பற்றி இயக்குனர் ஸ்டேன்லி ஜோஸ் கூறும் போது,
“தொல் பொருள் ஆராய்ச்சியாளராக சங்கர்பாலா தனது மனைவி அஞ்சலியுடன் கிராமத்திற்கு வருகிறார். அந்த கிராமத்தில் வழி காட்டியாக இருக்கும் முத்துவின் மீது அஞ்சலி காதல் கொள்கிறாள். அவளது தவறான எண்ணம் நிறைவேறியதா? இல்லை முத்துவுக்கு மாமன் மகள் பவளத்துடன் திருமணம் நடந்ததா? என்பதை கிராமிய மணம் கமழ சொல்லும் படமாக உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.

இறைவன் சினி கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் `ஒரு கனவு போல'. இந்த படத்தில் ராமகிருஷ்ணன், சவுந்தர் ராஜன் இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அமலா நடிக்கிறார்.
இறைவன் சினி கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் `ஒரு கனவு போல'.
இந்த படத்தில் ராமகிருஷ்ணன், சவுந்தர் ராஜன் இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அமலா நடிக்கிறார். இவர்களுடன் அருள்தாஸ், சார்லி, மயில் சாமி, சுப்ரமணி, கவி பெரியதம்பி, வின்னர் ராமசந்திரன், ஸ்ரீலதா, பாலாம்பிகா ஆகியோர் நடிக்கிறார்கள்.
கேரளாவில் தேசிய விருது பெற்ற இயக்குனர் மதுபால் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு- அழகப்பன்.என் இவர் மலையாளத்தில் 60 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்து, அதில் 40 படங்களுக்கு விருதுகளை பெற்றிருக்கிறார்.
இசை-இ.எஸ்.ராம், பாடல்கள்- புலவர் புலமைப்பித்தன், முத்துலிங்கம், சினேகன்.
கலை-எம்.டி.பிரபாகரன், எடிட்டிங் -சாபுஜோசப், ஸ்டண்ட்-தியாகராஜன், நடனம்-எஸ்.எல்.பாலாஜி தயாரிப்பு -சி.செல்வகுமார் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- வி.சி.விஜயசங்கர் இவர் பாரதிகண்ணம்மா, ஆட்டோகிராப், சந்தோஷ்சுப்பிரமணியம், 23-ம் புலிகேசி உள்பட ஏராளமான வெற்றிப்படங்களின் இணை இயக்குனர்.இவர் இயக்கும் முதல் படம் இது.
படம் பற்றிகூறிய இயக்குனர்.... "லாரி டிரைவராக இருக்கும் ராம கிருஷ்ணனுக்கும், சினிமாவில் பாடகர் ஆக வேண்டும் என்று லட்சியத்துடன் வாழும் சவுந்தர்ராஜனுக்கும் உள்ள நட்பின் வலிமையை சொல்லும் படம் இது.
கணவன், மனைவி உறவின் உன்னதங்களை, உள்ளுக்குள் இருக்கும் நற்பண்புகளைச் சொல்லும் படம் இது. படப்பிடிப்பு நாகர்கோவில்,கன்னியாகுமரி, ஐதராபாத், கொடைக்கானல், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது'' என்றார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமாகிய நடிகர் விக்ரம் பிரபு, பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் என்ற புதிய திரைப்படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். இதன் முதல் தயாரிப்பாக ‘நெருப்புடா’ என்ற திரைப்படத்தைத் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் விக்ரம் பிரபு ஒரு தீயணைப்பு வீரராகவும், தீவிர ரஜினி ரசிகராகவும் நடிக்கிறார். ‘நெருப்புடா’ படத்தை விக்ரம்பிரபு “சந்திரா ஆர்ட்ஸ்” மற்றும் “சினி இன்னோவேஷன்ஸ்” ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கிறார்.
விக்ரம் பிரபு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இவர்களுடன் பொன்வண்ணன், ‘நான்கடவுள்’ ராஜேந்திரன், ‘ஆடுகளம்’ நரேன், மதுசூதன்ராவ், நாகிநீடு உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு– ஆர்.டி.ராஜசேகர், இசை– ஷான் ரோல்டன், பாடல்கள்– ரோக்கேஷ், கலை–எம்.பிரபாகரன், படத்தொகுப்பு– தியாகு, சண்டைப்பயிற்சி– திலிப் சுப்ராயன், தயாரிப்பு– விக்ரம் பிரபு, இசக்கிதுரை, ஆர்.கே.அஜெய் குமார், இயக்கம்– பி.அசோக் குமார்.

எவர்கிரீன் இன்டர் நேஷனல் வழங்கும் படம் ‘காகித கப்பல்’. “நாயகனாக சிவபாலன் என்கின்ற அப்புக்குட்டி நடிக்கிறார். கதாநாயகியாக தில்லிஜா அறிமுகமாகிறார். ‘பவர் ஸ்டார்’சீனிவாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
எவர்கிரீன் இன்டர் நேஷனல் வழங்கும் படம் ‘காகித கப்பல்’. “நாயகனாக சிவபாலன் என்கின்ற அப்புக்குட்டி நடிக்கிறார். கதாநாயகியாக தில்லிஜா அறிமுகமாகிறார். ‘பவர் ஸ்டார்’சீனிவாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பரோட்டா முருகேசன், எலி ராஜன், ரமேஷ் மாணிக்கம், சுஜாதா, பூனை சூப் பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இசை-பிரசன்னா, ஒளிப்பதிவு-வெங்கட், படத்தொகுப்பு- யாசின், கலை இயக்குனர்-சாய் குமார், தயாரிப்பு- வி.ஏ.துரை, கதை, திரைக்கதை, இயக்கம்- சிவராமன்.எஸ்
படம் பற்றி கூறிய இயக்குனர்... கதையின் நாயகன் 9 வயதிலிருந்து குப்பை சேகரித்து உழைப்பால் உயர்ந்தவன், நேர்மையான உழைப்பு மற்றும் சேமிப்பை குறிக்கோளாக வைத்து வாழ்பவன். படித்த பெண்மணி இந்த நாயகனின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். நிர்ப்பந்தத்தின் காரணத்தினால் இருவரும் மணம் முடிக்கின்றனர். படிக்காதவன்- படித்தவளாக இருந்தும் தரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் கதாநாயகியின் ஒரே ஒரு ஆசையால் அவர்களது வாழ்க்கை “காகித கப்பல்” ஆகிறது. அது என்ன என்பதே கதை” என்றார்.

ஸ்ரீராம் பிலிம் இண்ட்நேஷனல் சார்பில் நடிகர் அர்ஜுன் தயாரித்து இயக்கும் படம் `காதலின் பொன் வீதியில்'. இதில், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா துடுக்கான இளம் நாயகியாக நடிக்கிறார். நாயகனாக சந்தன் அறிமுகம் ஆகிறார்.
ஸ்ரீராம் பிலிம் இண்ட்நேஷனல் சார்பில் நடிகர் அர்ஜுன் தயாரித்து இயக்கும் படம் `காதலின் பொன் வீதியில்'. இதில், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா துடுக்கான இளம் நாயகியாக நடிக்கிறார். நாயகனாக சந்தன் அறிமுகம் ஆகிறார். இவர் நடிப்பு கல்லூரியில் படித்து முறையான பயிற்சி பெற்றவர்.
சந்தன்-ஐஸ்வர்யா அர்ஜுன் ஜோடியுடன் டைரக்டர் கே.விஸ்வநாத், சுஹாசினி, நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, சதீஷ், யோகிபாபு, பிளாக் பாண்டி, போண்டாமணி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
எச்.சி.வேணுகோபால் ஒளிப்பதிவு செய்கிறார். இசை-ஜெஸ்ஸி கிப்ட். படத்தொகுப்பு- கே.கே., ஸ்டண்ட்- `கிக்ஆஸ்' காளி, இணைதயாரிப்பு-பாலாஜி.
கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு- இயக்கம்- அர்ஜுன். இளமை ததும்பும் காதல் மற்றும் சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த கதையாக இது உருவாகிறது.
சண்டை காட்சிகளுடன், நகைச்சுவையும் இடம் பெறுகிறது. `காதலின் பொன் வீதியில்' முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத், டெல்லியிலும், அடுத்து தர்மசாலா, லடாக் பகுதிகளிலும் நடைபெறுகிறது.

ரஜினியின் தீவிர ரசிகர் லொள்ளுசபா ஜீவா கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஆரம்பமே அட்டகாசம்’. இதில் அவருக்கு ஜோடியாக சங்கீதா பட் அறிமுகமாகிறார். இவர் கன்னட வெற்றிப்படங்களின் நாயகி. கதை, திரைக்கதை எழுதி ரங்கா இயக்குகிறார்.

அஜித்தின் தீவிர ரசிகரான இவர் அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களான ஆரம்பம், அட்டகாசம் ஆகிய படங்களின் தலைப்பையும் இணைத்து ஆரம்பமே அட்டகாசம் என்று பெயர் சூட்டியுள்ளார். இது இவரது 2-வது படம்.
லொள்ளுசபா ஜீவா, சங்கீதா பட் தவிர பாண்டியராஜன், சாம்ஸ், வையாபுரி, ஸ்ரீநாத், வாசுவிக்ரம், கு.ஞானசம்பந்தம், முனீஸ், நெல்லை சிவா, தேனடை மதுமிதா, லொள்ளுசபா மனோகர், சேசு, உதய் உள்பட பலர் நடிக்கிறார்கள். காதல் நகைச்சுவை படமாக உருவாகும். ‘ஆரம்பமே அட்டகாசம்’ படத்தை சுவாதி பிலிம் சர்க்யூட் சார்பில் மாலதி வேலு, எஸ்.சுக்குருல்லா ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு- ஆனந்த், இசை-ஜெ.கே.தாஸ், எடிட்டிங்-மாரிஸ் எ.வெங்கடேஷ், நடனம்-சுரேஷ், இயக்கம்- ரங்கா.
பொதுவாக கமலின் படத்தில் கண்டிப்பாக ஒரு ‘லிப்லாக்’ முத்தக்காட்சி இடம் பெறும். ஜீவா நடிக்கும் இந்த படத்தில் மொத்தம் 10 முத்தக் காட்சிகள் இடம் பெறுகின்றன. இதன் மூலம் கமலின் முத்த சாதனையை ஒரே படத்தில் இவர் முறியடித்து விட்டார் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
சென்னை, கேரளா, ஐதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது.

பாடலே இல்லாமல் உருவாகி இருக்கும் படம் ‘மாயா பவனம்’. கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற சம்பவத்தால் இந்த நூற்றாண்டில் பழிவாங்கும் அமானுஷ்ய சக்தி பற்றிய கதையாக ‘மாயாபவனம்’ உருவாகி இருக்கிறது.
பாடலே இல்லாமல் உருவாகி இருக்கும் படம் ‘மாயா பவனம்’. கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற சம்பவத்தால் இந்த நூற்றாண்டில் பழிவாங்கும் அமானுஷ்ய சக்தி பற்றிய கதையாக ‘மாயாபவனம்’ உருவாகி இருக்கிறது. புதுமுகங்கள் ஓம்ஸ்ரீ கண்ணாஜி, ஆத்மா, மம்தா, ஏஞ்சல் ராய், டி.வி.ஆர். சேகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதற்கு ராஜ் பாஸ்கர் இசை அமைத்திருக்கிறார். என்.பி. பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு-ஜி.சசிகுமார், கலை- ஏழுமலை, டி.எஸ்.பாண்டியன், இணைதயாரிப்பு- ஜோதிகண்ணன், தன்ஷி.
ஓம்ஸ்ரீகண்ணாஜி நாயகனாக நடித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கி உள்ளார். சென்னை, கும்பகோணம், காரைக்குடியில் ‘மாயாபவனம்’ வளர்ந்துள்ளது.

சந்திரமுகி, மன்னன், வால்டர் வெற்றிவேல், சின்னத்தம்பி மற்றும் தெலுங்கு, கன்னடம், இந்தியில் 62 க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை எழுதி இயக்கியவர் பி.வாசு.
சந்திரமுகி, மன்னன், வால்டர் வெற்றிவேல், சின்னத்தம்பி மற்றும் தெலுங்கு, கன்னடம், இந்தியில் 62 க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை எழுதி இயக்கியவர் பி.வாசு. இவர் அடுத்து ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை மிக பிரம்மாண்டமான முறையில் இயக்குகிறார்.
சமீபத்தில் சிவராஜ்குமார், ஷக்திவேல் வாசு, வேதிகா நடித்த சிவலிங்கா திரைப்படம் கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
கன்னடத்தில் வெற்றிப்பெற்ற ‘சிவலிங்கா’ திரைப்படம் தமிழ் - தெலுங்கு மொழிகளுக்கு ஏற்றவாறு மாறுதல்கள் செய்யப்பட்டு புதிய பொலிவுடன், அதே பெயரில் ஒரே நேரத்தில் உருவாகிறது.
400-க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்தவரும் சசிகுமார் நடித்த வெற்றிவேல் படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் தயாரித்தவருமான ஆர்.ரவீந்திரன் இந்த படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக “இறுதிச்சுற்று” புகழ் ரித்திக்கா சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சந்திரமுகிக்கு பிறகு அதே முக்கிய வேடத்தில் மீண்டும் பி.வாசுவுடன் வடிவேலு இணைகிறார். மிக முக்கிய வேடத்தில் ஷக்திவேல் வாசு நடிக்கிறார்.
ஒளிப்பதிவு: பி.கே.எச்.தாஸ், இசை : எஸ்.எஸ்.தமன், படத்தொகுப்பு: சுரேஷ் அர்ஸ், கலை : துரை ராஜ், தயாரிப்பு: ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் - ஆர். ரவீந்திரன், எழுத்து, - இயக்கம்: பி.வாசு
பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்குகிறது.