என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    எம்.கே.பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘ராணி’. ‘கபாலி’ படத்தில் ரஜினியுடன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள தன்ஷிகா, அடுத்து இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
    எம்.கே.பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘ராணி’. ‘கபாலி’ படத்தில் ரஜினியுடன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள தன்ஷிகா, அடுத்து இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

    நாயகன் மற்றும் நடிகர்-நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. பெயர் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இயக்குனர் சமுத்திரக்கனியிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த எஸ்.பாணி இந்த படத்தை இயக்குகிறார். இளையராஜா இசை அமைக்கிறார்.

    ‘தங்கமகன்’ ஒளிப்பதிவாளர் ஏ.குமரன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள்-பழனிபாரதி, படத்தொகுப்பு-ஏ.எல்.ரமேஷ், கலை-விஜயகுமார், தயாரிப்பு நிர்வாகம்-எஸ்.பி.சொக்கலிங்கம். தயாரிப்பாளர்-சி.முத்துகிருஷ்ணன்.

    ‘ராணி’ படத்தின் தொடக்க விழா பூஜை திருவண்ணாமலையில் நடந்தது. இதற்கு இளையராஜா முன்னிலை வகித்தார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் நடைபெறுவதாக அமைந்துள்ளது. எனவே, படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறுகிறது. இதற்காக ‘ராணி’ படக்குழு மலேசியாவுக்கு பயணமாகிறது.
    ஹீரோ சினிமாஸ் தயாரிக்கும் படம் ‘ஒன்பதிலிருந்து பத்து வரை’. இந்த படத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார். இவரது ஜோடியாக சுவப்னா மேனன் நடிக்கிறார்.
    ஹீரோ சினிமாஸ் தயாரிக்கும் படம் ‘ஒன்பதிலிருந்து பத்து வரை’. இந்த படத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார். இவரது ஜோடியாக சுவப்னா மேனன் நடிக்கிறார். இவர்களுடன் லிவிங்ஸ்டன், சரவண சுப்பையா, அவன் இவன் ராமராஜன், டைரக்டர் ஜெகன், கிரண்மனோகர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு-ராஜரத்னம், இசை-எம்.கார்த்திக், பாடல்கள்-முத்து விஜயன், படத்தொகுப்பு-ஆர்.சுதர்சனன், கலை-ஆர்.கே.விஜயமுருகன், ஸ்டண்ட்-வீரா, தயாரிப்பு-சி.மணிகண்டன். இயக்கம்-விஜய் சண்முகவேல் ஐய்யனார்.

    படத்தின் நாயகன் கால் டாக்சி டிரைவர். அதில் நாயகி பயணம் செய்கிறார். அவர் ரேடியோ ஜாக்கி. நாயகன் ரேடியோ ஜாக்கியின் ரசிகர். தனது ரசிகர் என்ற முறையில் அன்பாக பேச, அதை நாயகன் தவறாக புரிந்து கொள்கிறான். இந்த நிலையில், நாயகிக்கு பெரிய ஒரு அதிர்ச்சியை நாயகன் ஏற்படுத்துகிறான். இதற்கிடையே போலீஸ் கமிஷனர் நாயகனை ஒரு கொலை தொடர்பாக தேடுகிறார். இப்படி செல்கிறது கதை. இதுகுறித்து இயக்குனர் விஜய் சண்முகவேல் ஐய்யனாரிடம் கேட்டபோது....
    “அழகான சிக்கல்களும், அதிர்ச்சிகளும் கலந்து சொல்லும் கதை ‘ஒன்பதிலிருந்து பத்துவரை’. இதன் அழகான முடிவு மனதை நெகிழவைக்கும். நம்மை சிந்திக்க வைக்கும்” என்றார்.
    விண்ட் சைம்ஸ் மீடியா என்டர் டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம்‘ கட்டப்பாவ காணோம்’. சிபிராஜ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவரது ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
    விண்ட் சைம்ஸ் மீடியா என்டர் டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம்‘ கட்டப்பாவ காணோம்’. சிபிராஜ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவரது ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இவர்களுடன் சாந்தினி, காளிவெங்கட், யோகிபாபு, மைம் கோபி, லிவிங்ஸ்டன், திருமுருகன், ஜெயகுமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதில் இயக்குனர் நலன்குமாரசாமி சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். படத்தொகுப்பு- சதீஷ் சூர்யா, கலை- லட்சுமி தேவ், இயக்கம்- மணி செய்யோன். இவர் அறிவழகனிடம் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.

    நாய்கள் ஜாக்கிரதை படத்தில் நாய் முக்கிய கதாபாத்திரமாக இருந்தது. இந்த படத்தில் ஒரு மீன் கதையின் முக்கிய அம்சமாக இடம் பெறுகிறது.

    படம் குறித்து இயக்குனர் மணி செய்யோன் கூறும் போது....

    எனது பள்ளி பருவத்தில் இருந்தே எனக்கு மிகவும் பிடித்த ஒரு செல்லப்பிராணி மீன் தான். என்னுடைய ஓய்வு நேரத்தை அவைகளுடன் கழிப்பேன். நாயை போலவே மீன்களுக்கும் மனிதர்களை அடையாளம் கண்டு கொள்ளும் சக்தியும், ஆற்றலும் இருக்கிறது. அவைகளை ஹீரோவாக மக்களுக்கு காட்ட வேண்டும் என்று நான் எடுத்த முயற்சி தான் இந்த ‘கட்டப்பாவ காணோம்’. எப்படி சிபிராஜின் தந்தை சத்யராஜ் சாருக்கு பூவிழி வாசலிலே மற்றும் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு திரைப்படங்கள் அமைந்ததோ அதே போல் ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம் சிபிராஜுக்கு சிறந்த மைல் கல்லாக அமையும்” என்றார்.
    நாடோடிகள் பட நிறுவனம் வழங்க, இயக்குனர் பி.சமுத்திரகனி தயாரித்து இயக்கும் படம் ‘அப்பா’. இதில் சமுத்திரகனி நாயகனாக நடிக்கிறார். அவருடன் தம்பி ராமையா, வினோதினி, பிரீத்தி, நமோநாராயணன், வேலா ராமமூர்த்தி, விக்னேஷ், ராகவ், யுவலட்சுமி, கேபிரில்லா, நிஷாத், திலீபன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
    நாடோடிகள் பட நிறுவனம் வழங்க, இயக்குனர் பி.சமுத்திரகனி தயாரித்து இயக்கும் படம் ‘அப்பா’. இதில் சமுத்திரகனி நாயகனாக நடிக்கிறார். அவருடன் தம்பி ராமையா, வினோதினி, பிரீத்தி, நமோநாராயணன், வேலா ராமமூர்த்தி, விக்னேஷ், ராகவ், யுவலட்சுமி, கேபிரில்லா, நிஷாத், திலீபன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    இளையராஜா இசை அமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு- ரிச்சர்டு எம் நாதன், படத்தொகுப்பு- ஏஎல் ரமேஷ், கலை-ஜாக்கி, எழுத்து,இயக்கம், தயாரிப்பு- பி.சமுத்திரகனி

    ஒரு தந்தையின் கடமை உணர்வை பிரதிபலிக்கும் கதையாக ‘அப்பா’ உருவாகி இருக்கிறது. படம் பற்றி சமுத்திரக்கனி கூறும் போது...

    “இது தந்தை மகன் உறவை சொல்லும் கதை. தற்போதய சமூக பிரச்சினைகள், குடும்பபாசம் ஆகியவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

    பெற்றோர் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் சுதந்திரத்தை கொடுத்து வளர்க்க வேண்டும். ஒரு குழந்தையின் கடைசி நம்பிக்கை அப்பா. எனவே, அவர்களுக்கு எதிராக தந்தை நடந்து கொள்ளக்கூடாது. ஒரு தந்தையின் அன்பும் அரவணைப்பும் இருந்தால் தான் அது குழந்தையை நல்வழிபடுத்தும் என்பதே கதையின் கரு.

    படத்தை எடுத்து முடித்த பிறகுதான் இளையராஜாவை இசை அமைக்கும் படி கேட்டுக் கொண்டேன். அன்புடன் ஒப்புக் கொண்டார். அவர் இசை அமைத்த பிறகு படத்தின் தகுதி பல மடங்கு உயர்ந்திருக்கிறது. வருகிற 1-ந்தேதி ‘அப்பா’ திரைக்கு வருகிறது” என்றார்.
    ஜே.ஜே.புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் படைப்பு ‘சிவசக்தி’. இந்த படத்தை தீபக் ஜெயலலித் தயாரித்து, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
    ஜே.ஜே.புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் படைப்பு ‘சிவசக்தி’. இந்த படத்தை தீபக் ஜெயலலித் தயாரித்து, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    புதுமுகம் விமல், வித்யா, சத்யேந்திரா, இயக்குனர் விவேகபாரதி, ‘பொரியுருண்டை’ சுரேஷ், விஜய்வெங்கட், மதி, கவுதம், உமா, மணி, சீதா, மீராகிருஷ்ணன், ராஜேந்திரன், சர்தார்ஜி, தேவாங்கு, பேபி அர்ச்சனா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

    ஒளிப்பதிவு- எம்.சி. காளிதாஸ், இசை-ஜேக்கப் சாமுவேல், படத்தொகுப்பு- நாகராஜ், கலை- முருகன், கதை,திரைக்கதை, வசனம்-குமார் அர்ச்சனா.

    படம் பற்றி கூறிய இயக்குனர்...

    “நாயகன் சிவாவின் தம்பி சக்தி திடீரென திருநங்கையாக மாறி அவருக்கு தங்கை ஆகிறாள். இதனால் இருவருக்குமான உறவில் உளவியல் சிக்கல் ஏற்படுகிறது. அந்த சக்தி, நாயகன் சிவாவின் நண்பனை காதலிக்கிறாள். இதனால் ஏற்படும் விளைவுகள், திருநங்கையின் வலி, காதல், வாழ்வியல் ஆகியவை இந்த படத்தில் சொல்லப்படுகிறது.

    சாப்ட்வேர் என்ஜினீயர் ஆக வேலை செய்யும் நாயகன் சிவா, வேலையை உதறி விட்டு சாப்பாடு போடும் விவசாயியாக மாறி புரட்சி செய்கிறார். இது போன்ற சமூக பிரச்சினைகளை பேசும் சிறந்த படைப்பாக ‘சிவசக்தி’ உருவாகிறது”என்றார்.
    ஜெஸ் மூவிஸ் தயாரித்துள்ள படம் ‘பட்டதாரி’. இதில் அபிசரவணன் முக்கிய நாயகனாக நடிக்கிறார். அதிதி நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சங்கர், செந்தில், கார்த்திக், ஆனந்த், ராசிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
    ஜெஸ் மூவிஸ் தயாரித்துள்ள படம் ‘பட்டதாரி’. இதில் அபிசரவணன் முக்கிய நாயகனாக நடிக்கிறார். அதிதி நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சங்கர், செந்தில், கார்த்திக், ஆனந்த், ராசிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் மகாநதி சங்கர், கிரேன் மனோகர், கலையரசன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    இசை–எஸ்.எஸ்.குமரன், ஒளிப்பதிவு– சூரியன், படத்தொகுப்பு–ரிச்சர்டு கெவின், ஸ்டண்ட்–எம்.கே.முருகன், கலை– ஆனந்த்மணி, நடனம்–சுரேஷ், தயாரிப்பு– எஸ்.இளங்கோவன் லதா. எழுத்து, இயக்கம்–ஏ.ஆர். சங்கர் பாண்டி. படம் பற்றி இயக்குனர் சங்கர் பாண்டியிடம் கேட்ட போது....

    மதுரையை களமாக கொண்டு இந்த கதை படமாக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பை முடித்து விட்டு சில வருடங்கள் வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகள் மனநிலை எப்படி இருக்கும்? அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? நினைத்ததை சாதித்தார்களா? என்பது இதன் திரைக்கதை.

    அபிசரவணன் முக்கிய நாயகன். அதிதி நாயகி. இவர் கேரளாவை சேர்ந்தவர். 2–வது நாயகி ராசிகா சென்னையை சேர்ந்தவர். ஹீரோவின் நண்பர்கள் 4 பேர். இந்த 5 பேரும் ஒன்றாக சந்தித்துக் கொள்கிறார்கள். ஆனால் 5 பேருக்கும் தனித்தனி காதலிகள். தனித்தனி பிரச்சினைகள். அதை எப்படி சமாளித்தார்கள்? என்பதை ‘பட்டதாரி’ படத்தில் வித்தியாசமாக சொல்லி இருக்கிறேன். இதில் நடிக்கும் 4 இளைஞர்கள் கூத்துப் பட்டறையை சேர்ந்தவர்கள் யதார்த்தத்தை சொல்லும் படமாக இது உருவாகி இருக்கிறது” என்றார்.
    ராம்பாபு புரொடெக்ஷன்ஸ் சார்பில் எம்.பி.ராம்பாபு தயாரிக்கும் திரைப்படம் ‘முடிஞ்சா இவன புடி’. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் கதாநயாகனாக நடிக்கிறார்.
    ராம்பாபு புரொடெக்ஷன்ஸ் சார்பில் எம்.பி.ராம்பாபு தயாரிக்கும் திரைப்படம் ‘முடிஞ்சா இவன புடி’. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் கதாநயாகனாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே ‘நான் ஈ’, ‘புலி’ போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சுதீப் நேரடியாக கதாநாயகனாக நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது.

    இதன் படபிடிப்பு நிறைவடைந்து, தற்போது போஸ்ட் புரோடெக்ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஜூன் மாத இறுதியில் இப்படத்தின் பாடல்கள் வெளிவரும். ஜூலை மாதத்தில் முடிஞ்சா இவன புடி படத்தை திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இந்த படத்தில் நாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார், ‘போக்கிரி’, ‘பூஜை’ படங்களில் நடித்த முகேஷ் திவாரி வில்லனாக நடிக்கிறார். ‘எதிர் நீச்சல்’, ‘பாண்டிய நாடு’ படங்களில் நடித்த சரத் லோகித்சுவா மற்றொரு வில்லனாக நடிக்கிறார். நாசர், சாய் ரவி, அச்சுதா குமார், லதா ராவ், சிக் கின்னா, சதீஷ், சது கோகிலா, கௌதமி, விச்சு, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
    பிரபு தேவா ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘போகன்’. ரோமியோ ஜூலியட் படக்குழுவினர் கூட்டணியில் ‘போகன்’ படம் மிகப் பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வருகிறது.
    பிரபு தேவா ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘போகன்’. ரோமியோ ஜூலியட் படக்குழுவினர் கூட்டணியில் ‘போகன்’ படம் மிகப் பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வருகிறது.

    ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கிறார். இதில் இவருக்கு ஹீரோவாகவும், வில்லனாகவும் வரும் வேடம். அரவிந்த்சாமியும் ஹீரோ -வில்லன் என இரு வேறு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஒரே வேடம் தான் ஆனால் இரு வேறு குணாதிசயங்களை வெளிக் கொணரும் வேடங்கள் இருவருக்கும்.

    நாயகியாக ஹன்சிகா நடிக்கிறார். இவர்களுடன் வி.டி.வி.கணேஷ், ஆடுகளம் நரேன், அஸ்வின், நாகேந்திர பிரசாத் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு -சவுந்தர்ராஜன், இசை- டி.இமான், பாடல்கள்-தாமரை, மதன்கார்க்கி, ரோகேஷ், கலை -மிலன், நடனம்- ராஜு சுந்தரம், பிருந்தா, ஷெரீப் ஸ்டண்ட்-திலீப் சுப்பராயன், எடிட்டிங் -ஆண்டனி , தயாரிப்பு- டாக்டர். கே. கணேஷ், எழுதி இயக்குபவர்-லட்சுமன்.
    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

    “ரோமியோ ஜூலியட் எப்படி ஜாலியான காதல் கதை ஆனால் இது பரபரப்பான ஆக்ஷன் திரில்லர். இதிலும் மெலிதான காமெடி படம் முழுவதும் இருக்கும். காக்கி சட்டைக்கு கவுரவம் சேர்க்கும் படமாக இது இருக்கும். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்றார்.
    மோஹிதா சினி டாக்கீஸ் தயாரிக்கும் படம் ‘மாணிக்’. இதில் கதாநாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். நாயகி சூசாகுமார். இவர்களுடன் பலர் நடிக்கிறார்கள்.
    மோஹிதா சினி டாக்கீஸ் தயாரிக்கும் படம் ‘மாணிக்’. இதில் கதாநாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். நாயகி சூசாகுமார். இவர்களுடன் பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு–எம்.ஆர்.பழனிகுமார், இசை–தருண்குமார், பாடல்கள்–மெர்ச்சி விஜய், படத்தொகுப்பு–கே.எம்.ரியாஸ், ஸ்டண்ட்–ராம்போவிமல், தயாரிப்பு– எம்.சுப்பிரமணியன், பி.வினோத். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்– மார்ட்டின். படம் பற்றி இவர் கூறும்போது....

    “இந்த படம் முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் நடைபெறும் கதையாக உருவாகி வருகிறது. இப்படத்தில் கதாநாயகன் சென்னையில் வசிக்கும் திருமணம் ஆகாத இளைஞராக வருகிறார். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக இந்த இளைஞர்கள் மேற்கொள்ளும் பயணத்தை இந்த கதையில் சொல்லி இருக்கிறேன். இதில் மா.கா.பா.ஆனந்த் படிக்காத மேதையாக வருகிறார். நாயகி சூசாகுமார் புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மனோ பாலா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்” என்றார்.

    ‘மாணிக்’ படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் நடந்தது.
    அரசு பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தங்களது முதல் படமாக சிவா, பவர்ஸ்டார் சீனிவாசன் கூட்டணியை வைத்து தயாரித்துள்ள ‘அட்ரா மச்சான் விசிலு’ திரைக்கு வர தயாராகிறது. இந்த நிலையில் தங்களது அடுத்த படத்தை தயாரிப்பதற்கான வேலைகளில் அரசு பிலிம்ஸ் இறங்கியுள்ளது. இந்த புதிய படத்துக்கு ‘மன்னர் வகையறா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
    அரசு பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தங்களது முதல் படமாக சிவா, பவர்ஸ்டார் சீனிவாசன் கூட்டணியை வைத்து தயாரித்துள்ள ‘அட்ரா மச்சான் விசிலு’ திரைக்கு வர தயாராகிறது.

    இந்த நிலையில் தங்களது அடுத்த படத்தை தயாரிப்பதற்கான வேலைகளில் அரசு பிலிம்ஸ் இறங்கியுள்ளது. இந்த புதிய படத்துக்கு ‘மன்னர் வகையறா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    இயக்குனர் பூபதி பாண்டியன் இந்தப்படத்தை இயக்குகிறார். இதில் விமல், கயல் ஆனந்தி, பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி) உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    இந்த ‘மன்னர் வகையறா’ படம் தன்னை வித்தியாசப்படுத்திக்காட்டும் என்று விமல் கூறினார். இது வரை சூரியுடன் காமெடிக்கூட்டணி அமைத்துவந்த விமல், இதில் ரோபோ சங்கருடன் புதிதாக கூட்டணி அமைத்திருக்கிறார்.

    ஆனந்தி நடிப்பு இதில் பேசப்படும். ‘மன்னர் வகையறா’ படத்தில் தனி நகைச்சுவை நடிகராக மாறியிருக்கும் ரோபோ சங்கரின் காமெடி மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

    ஒளிப்பதிவு- பி.ஜி.முத்தையா, இசை-ஜாக்ஸ். இந்த படத்தை முதல் பிரதி அடிப்படையில் நடிகர் விமல் தயாரித்து கொடுக்கிறார். படப்பிடிப்பு வருகிற 20-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது.
    கே.பி.ஆர்.-எண்டர்டெய்ன் மென்ட்ஸ் சார்பில் கே.பி. ராஜேந்திரன் தயாரிக்கும் படம் ‘அம்மாயி’. இதில் கதாநாயகனாக வினய் நடிக்கிறார். நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் மயில்சாமி, சாம்ஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
    கே.பி.ஆர்.-எண்டர்டெய்ன் மென்ட்ஸ் சார்பில் கே.பி. ராஜேந்திரன் தயாரிக்கும் படம் ‘அம்மாயி’. இதில் கதாநாயகனாக வினய் நடிக்கிறார். நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் மயில்சாமி, சாம்ஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    இளையராஜா இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு- சரவணன், படத்தொகுப்பு- ஜெயசங்கர், கலை-ஜான்பிரிட்டோ, ஸ்டண்ட்-பவர் பாஸ்ட்.

    அறிமுக இயக்குனர் ஜி.சங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘அம்மாயி’ திரைப்படத்தின் தொடக்க விழா இளையராஜா முன்னிலையில் நடந்தது. படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பங்கேற்க பூஜையுடன் படம் தொடங்கியது.

    இவ்விழாவில் தயாரிப்பாளர் கே.பி.ராஜேந்திரன் பேசும் போது, “இந்த படத்தை தயாரிப்பது மகிழ்ச்சி. இதில் இசைஞானி பணியாற்றுவது இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்தார்.

    படத்தின் நாயகன் வினய், “இந்த படம் எனக்கு நல்ல படமாக அமையுமென நம்புகிறேன்” என்றார்.

    நடிகர் மயில்சாமி “ஒரு படம் என்னை போன்று பலருக்கு வேலை கொடுக்கிறது. படம் முழுவதும் வருவது போல் எனது கதாபாத்திரம் இருக்குமென இயக்குனர் கூறியிருக்கிறார். எங்களுக்கு இளையராஜாவே இருக்கிறார். இதற்கு மேல் என்ன வேண்டும்?” என்றார்.

    இயக்குனர் ஜி.சங்கர் “இந்த வாய்ப்பினை வழங்கிய தயாரிப்பாளர் கே.பி.ராஜேந்திரனுக்கு நன்றி. நான் தெய்வமாக நினைக்கும் இசைஞானி இளையராஜா எனது படத்திற்கு இசையமைப்பதை பற்றி விவரிக்க வார்த்தையே இல்லை.” என்று கூறினார்.
    சமயாலயா கிரியேஷன் சார்பாக பொள்ளாச்சி வி.விசு மற்றும் பொள்ளாச்சி கோல்டு வி.குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “முப்பரிமாணம்”. இதில் சாந்தனு கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே நாயகியாகவும் நடிக்கிறார்கள்.
    சமயாலயா கிரியேஷன் சார்பாக பொள்ளாச்சி வி.விசு மற்றும் பொள்ளாச்சி கோல்டு வி.குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “முப்பரிமாணம்”. இதில் சாந்தனு கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பிராமையா, அப்புக்குட்டி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    இயக்குனர்கள் கதிர், பாலா ஆகியோரிடம் பணியாற்றிய அதிரூபன் இந்த படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். திரைப்பட கல்லூரி மாணவரான இவர் இயக்கிய “ஜனனம்” என்ற குறும்படம் மாநில விருது பெற்றது.

    இசை-ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு-ராசாமதி, படத்தொகுப்பு- விவேக் ஹர்ஷன், கலைஇயக்கம்- மாயபாண்டி, பாடல்கள்- நா.முத்துகுமார், கபிலன், யுகபாரதி, நடனம்-பிருந்தா, பாபி ஆண்டனி, ஷெரிப், சண்டை பயிற்சி- ஸ்டண்ட் கோட்டி.

    இந்த படத்துக்காக 27 பிரபல நடிகர்-நடிகைகள் கலந்து கொண்ட பாடல் காட்சி சென்னையில் படமாக்கப்பட்டது. புதிய வருட பிறப்பை அனைவரும் கொண்டாடும் விதமாக ‘முப்பரிமாணம்’ படத்தில் இந்தபாடல் இடம் பெற்றுள்ளது.

    இதில் ஜாக்கி ஷரோப், கே.பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜன், பார்த்திபன், ராதிகா, ரம்யா கிருஷ்ணன், பூர்ணிமா, விவேக், ஆர்யா, வெங்கட்பிரபு, விஜய் ஆண்டனி, பிரசன்னா, பாபி சிம்ஹா, கலையரசன், சூரி, வித்தார்த், ஆரி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜனனி ஐயர், பிரித்வி, கிரிஷ், மொட்டை ராஜேந்திரன், கீர்த்தி சாந்தனு உள்பட 27 பேர் பங்கேற்றனர். கபிலன் வரிகளில் உருவான இந்தபாடலுக்கு நடன இயக்குனர் பிருந்தா நடனம் அமைத்துள்ளார்.
    ×