என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    ‘திருட்டு வி.சி.டி.’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து ‘காதல்’ சுகுமார் இயக்கும் இரண்டாவது படம் ‘சும்மாவே ஆடுவோம்’. ஸ்ரீரங்கா புரொடக்ஷன் சார்பில் டி.என்.ஏ. ஆனந்தன் தயாரிக்கும் இப்படத்தில் அருண் பாலாஜி ஹீரோவாக அறிமுகமாகிறார்.
    ‘திருட்டு வி.சி.டி.’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து ‘காதல்’ சுகுமார் இயக்கும் இரண்டாவது படம் ‘சும்மாவே ஆடுவோம்’.

    ஸ்ரீரங்கா புரொடக்ஷன் சார்பில் டி.என்.ஏ. ஆனந்தன் தயாரிக்கும் இப்படத்தில் அருண் பாலாஜி ஹீரோவாக அறிமுகமாகிறார். சர்வதேச அளவில் புகழ் பெற்ற நீச்சல் வீரரான இவர், குற்றாலீஸ்வரனின் சாதனையை முறியடித்தவர். நாயகியாக லீமா பாபு நடிக்கிறார்.

    இவர்களுடன் டி.என்.ஏ. ஆனந்தன், அர்ஜுன், பாலா சிங், பாண்டு, ராபர்ட், யுவராணி, கொட்டாச்சி, போண்டா மணி, உதயா, மனோ, ரவி, சுஜித், அம்மு மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களுடன், 45 முன்னணி காமெடி நடிகர்களும் நடித்துள்ளார்கள்.

    ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு-வில்லியம்ஸ். படத்தொகுப்பு-சதீஷ் பி.கோட்டாய், கலை-மதூர் எஸ்.சிவா, ஸ்டண்ட்-டேஞ்சர் மணி, நடனம்-பாலகுமாரன், ரேவதி, தினா, ஜாய் மதி.

    இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘காதல்’ சுகுமார் கூறுகையில், “கூத்து கலை என்பது ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தாலும் தற்போது நலிவடைந்துள்ளது. அந்த கலையை நம்பியிருக்கும் கலைஞர்களின் தற்போதைய நிலையைத்தான் இதில் சொல்லியிருக்கிறோம். முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்லியிருக்கிறோம்.

    கதைப்படி, மதுரையில் உள்ள ஜமீன் ஒருவர் கூத்து கலைஞர்களுக்காக ஒரு கிராமத்தை இலவசமாக கொடுக்கிறார். அந்த கிராமத்திற்கு ஆபத்து வருகிறது. அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், என்பதைத் தான் காமெடியாக சொல்லியிருக்கிறோம்” என்றார்.

    மூன்று காலகட்டத்தில் நடப்பது போல இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு, கோபி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
    ஓம் சிவ சக்தி முருகா பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘நட்சத்திர ஜன்னலில்’. இந்த படத்தில் அபிஷேக் குமரன் நாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அனுபிரியா அறிமுகமாகிறார்
    ஓம் சிவ சக்தி முருகா பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘நட்சத்திர ஜன்னலில்’.

    இந்த படத்தில் அபிஷேக் குமரன் நாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அனுபிரியா அறிமுகமாகிறார். இவர்களுடன் போஸ் வெங்கட், பாய்ஸ் ராஜன், ஜீவாரவி, பெஞ்சமின், செல்வகுமார், ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீலதா, நம்ரதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு– ராஜசேகர் ரத்னம், இசை–உதயன், நடனம்– ரமேஷ் ரெட்டி, அக்ஷயா ஆனந்த், ஸ்டண்ட்– சீறும் சின்னையா, எடிட்டிங்–சி.எஸ்.பிரேம், கலை– சேது ரமேஷ், தயாரிப்பு– எஸ்.டி.முத்துக்குமரன்.

    கதை, திரைக்கதை, வசனம்– இயக்கம்–ஜெயமுருகேசன்.

    படம் பற்றி இயக்குனர் ஜெயமுருகேசனிடம் கேட்டபோது....

    “ஒரே நாளில், ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் ஏழை குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தையும், பணக்கார குடும்பத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறக்கின்றார்கள். அந்த குழந்தைகள் ஒரே பள்ளியில் ஒன்றாக படிகிறார்கள்.

    அவர்களுக்குள் காதல் மலர்கிறது. படிக்கிற வயசுல படிக்கணும், அதிலிருந்து கவனம் சிதறினால் வாழ்க்கை என்ன ஆகும் என்பதை இளமை ததும்ப சொல்லி இருக்கிறோம்” என்றார்.

    படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை, கேரளா மற்றும் திருக்கோவிலூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.
    கான்பிடண்ட் கபே, கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ், ஆர்.கே.டிரீம் வோல்ட் சார்பில் தயாராகும் படம் ‘பைசா’. இதில் ‘பசங்க’ ஸ்ரீராம், புதுமுகம் ஆரா ஆகியோர் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள்.
    கான்பிடண்ட் கபே, கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ், ஆர்.கே.டிரீம் வோல்ட் சார்பில் தயாராகும் படம் ‘பைசா’. இதில் ‘பசங்க’ ஸ்ரீராம், புதுமுகம் ஆரா ஆகியோர் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் நாசர், ராஜசிம்மன், மயில்சாமி, சென்ட்ராயன், மதுசூதனன், ராம்ராஜ், தீபிகா உள்பட பலர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு- வேல்முருகன், இசை-ஜே.வி., பாடல்கள்- நா.முத்துக்குமார், படத்தொகுப்பு -எஸ்.பி.அகமது. தயாரிப்பு-அப்துல் மஜீத், ரங்கநாதன் ராஜூ, கண்ணன், பாஸ்கர்.

    எழுத்து, இயக்கம்-அப்துல்மஜீத். இவர் விஜய்யின் ‘தமிழன்’ படத்தை இயக்கியவர். மனிதர்களை தன்பிடியில் வைத்திருக்கும் பணத்தை கதை கருவாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. படம் பற்றி கூறிய இயக்குனர் அப்துல்மஜீத்....

    “பைசா என்பது வாழ்க்கையின் அத்தியாவசிய தேவை. என்றாலும், அதுவே, வாழ்க்கையாக மாறிவிடக்கூடாது. இது தான் இந்த படத்தின் ஒருவரி கதை” என்றார்.

    படத்தின் நாயகன் ஸ்ரீராம், “இந்த படம் தனது திரை உலக வாழ்க்கையின் முக்கிய படமாக அமையும்” என்றார். நாயகி ஆரா, “மக்களின் ரசனையையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதே ஒரு நடிகரின் முக்கியமான கடமை. அந்த எதிர்பார்ப்புகளை இந்த படம் நிறைவேற்றும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
    பல வெற்றிப் படங்களையும் விருதுப் படங்களையும் தயாரித்த தனுஷின் வுண்டர் பார் பிலிம்ஸ் சார்பில் இப்போது உருவாக்கியிருக்கும் படம் ‘அம்மா கணக்கு’.
    பல வெற்றிப் படங்களையும் விருதுப் படங்களையும் தயாரித்த தனுஷின் வுண்டர் பார் பிலிம்ஸ் சார்பில் இப்போது உருவாக்கியிருக்கும் படம் ‘அம்மா கணக்கு’. இது இந்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டு வெற்றி பெற்ற ‘நில் பேட்டா சனாட்டா’ படத்தின் ரீமேக்.

    இதில் அமலாபால், ரேவதி, சமுத்திரகனி, சிறுமி யுவா நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தியில் இயக்கிய அஸ்வினி ஐயர் திவாரி தமிழிலும் ‘அம்மா கணக்கு’ படத்தை இயக்கியுள்ளார். படம் பற்றி நடிகரும் படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் கூறும் போது..

    ‘’நாங்கள் தயாரித்த ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ போன்ற படங்களுக்கெல்லாம் விருதுகள் கிடைத்து பாராட்டப்படுவது கடவுள் அருளால் தானாக அமைவதுதான். நாங்கள் திட்டமிட்டு விருதுகளுக்காகப் படமெடுப்பதில்லை. இந்த ‘அம்மா கணக்கு’ படத்தை தயாரித்ததில் வுண்டர்பார் பிலிம்ஸ் பெருமைப்படுகிறது. ஏனென்றால் இது சமுதாயத்துக்குத் தேவையான கருத்தைச் சொல்லியிருக்கும் படம்.

    ஒரு அம்மா தன் மகள் மீது வைத்துள்ள பாசம் கனவு பற்றிச் சொல்கிற படம். இப்படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ளார். குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தை முடித்து அசத்திவிட்டார்.

    இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அவரது இசை படத்துக்கு பெரிய பலமாக இருக்கும். படத்துக்கு ஒளிப்பதிவு ஆரி ஹாலிவுட் தரத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

    அமலா பால் ஏற்றிருக்கிற பாத்திரம் மிகவும் சிறப்பானது. அவர் நடித்ததிலேயே இதுதான் பெஸ்ட் என்று சொல்வேன். இப்படத்தின் மூலம் அமலாபாலுக்கும் சுட்டிப்பெண் யுவாவுக்கும் தேசியவிருது கிடைக்கும்“ என்றார்.
    ராகதேவி புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக ராஜேந்திரன் குப்புசாமி தயாரிக்கும் படம் “தகடு”. இதில் பிரபா, அஜய் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக சனம் ஷெட்டி நடிக்கிறார்.
    ராகதேவி புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக ராஜேந்திரன் குப்புசாமி தயாரிக்கும் படம் “தகடு”. இதில் பிரபா, அஜய் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக சனம் ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ராஜ்கபூர், சபிதா ஆனந்த், நெல்லை சிவா, அவன் இவன் ராமராஜன், ஆர்.தீபக் ராஜ், மிப்பு, ராம் கிரண், பிரியங்கா சுக்லா, ஹாசிகா, ஆயிஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு-எஸ்.கார்த்திகேயன், இசை-சார்லஸ் மெல்வின்.எம், பாடல்கள்-இளைய கம்பன், எடிட்டிங்-சுரேஷ் அர்ஷ், ஸ்டண்ட்-சூப்பர் குட் ஜீவா, நடனம்- அஜய் சிவ சங்கர், ராக் சங்கர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-எம்.தங்கதுரை.

    படம் பற்றி இயக்குனர் எம்.தங்கதுரை கூறும் போது...

    “பேராசையால் உலகையே அடைய நினைத்த பல மன்னர்கள் அழிந்த கதை உண்டு. இன்றுவரை அந்த பேராசை ஏதோ ஒரு வடிவில் உலாவி கொண்டு தான் இருக்கிறது. அப்படி பேராசை கொண்ட ஒருவனோடு பயணிக்கும் கல்லூரி மாணவர்களின் ஒரு அசாத்தியமான பயணம் தான் இந்த ‘தகடு’.

    கல்லூரியில் வரலாறு பாடம் படிக்கும் நாயகன் மற்றும் அவரது நண்பர்கள் வரலாறு சம்பந்தபட்ட ஒரு இடத்தை தேடி போகிறார்கள். அப்போது முக்கியமான ஒன்றை பார்கிறார்கள். அது என்ன-? அதனால் அவர்களுக்கு என்ன நேர்ந்தது? என்பது திரைக்கதை.

    இந்த படத்திற்காக ஆந்திராவில் உள்ள கங்குந்தி கோட்டையில் முதன் முறையாக படிப்பிடிப்பு நடத்தினோம். இதற்காக நான்கு கிலோ மீட்டர் நடந்து சென்று கஷ்டப்பட்டு படப்பிடிப்பு நடத்தினோம் ” என்றார்.
    ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் தயாரித்துள்ள படம் ‘ஜாக்சன்துரை’. இதில் சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி, கருணாகரன், ராஜேந்திரன், ஹாலிவுட் நடிகர் ஷாஜரி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
    ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் தயாரித்துள்ள படம் ‘ஜாக்சன்துரை’. இதில் சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி, கருணாகரன், ராஜேந்திரன், ஹாலிவுட் நடிகர் ஷாஜரி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    சித்தார்த் விபின் இசை அமைக்கிறார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு- விவேக் ஹர்சன். தயாரிப்பு- எம்.எஸ்.சரவணன், எழுத்து, இயக்கம்- தரணிதரன்.

    போலீஸ் அதிகாரி சிபிராஜ். ஒரு கிராமத்தின் பிரச்சினையை தீர்க்க இவரை அனுப்பி வைக்கிறார்கள். அங்கே சில திகில் சம்பவங்கள் நடக்கின்றன. அதில் இருந்து அந்த கிராமத்தை சிபிராஜ் எப்படி காப்பாற்றுகிறார் என்பது மீதி கதை.
    சத்யராஜ் முதல் முறையாக இந்த படத்தில் பேய் வேடம் ஏற்று நடித்திருக்கிறார்.

    படம் குறித்து இயக்குனர் தரணிதரனிடம் கேட்ட போது....

    “1940-ல் சுதந்திர போராட்டத்தின் போது நடந்த ஒரு சம்பவத்தை பின்னணியாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் படம் முழுவதையும் கலகலப்பாக ரசிக்கும் வகையில் காமெடி கலந்த திகில் கதையாக கொடுத்திருக்கிறோம். நவீன தொழில் நுட்பத்துடன் ‘ஜாக்சன்துரை’ படமாகி இருக்கிறது. சத்யராஜின் வித்தியாசமான நடிப்பை இதில் காணலாம். இது நிச்சயம் அனைவரையும் கவரும். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது” என்றார்.
    கேலக்ஸி பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “காத்தாடி”. இதில் அவிஷேக் நாயகனாக நடிக்கிறார். இவர் நடிகை ஸ்ரீதேவியின் அக்காள் மகன். நடிகை மகேஸ்வரியின் சகோதரர். கதாநாயகியாக தன்ஷிகா நடிக்கிறார்.
    கேலக்ஸி பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “காத்தாடி”. இதில் அவிஷேக் நாயகனாக நடிக்கிறார். இவர் நடிகை ஸ்ரீதேவியின் அக்காள் மகன். நடிகை மகேஸ்வரியின் சகோதரர். கதாநாயகியாக தன்ஷிகா நடிக்கிறார். இவர்களுடன் சம்பத், ஜான் விஜய், மனோபாலா, கோட்டா சீனிவாசராவ், வி.எஸ்.ராகவன், காளி வெங்கட், குமார் டேனியல், நான் கடவுள் ராஜேந்திரன், பசங்க சிவகுமார், லொள்ளு சபா மனோகர் மற்றும் முக்கிய பாத்திரத்தில் பேபி சாதன்யா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு-ஜெமின் ஜோம்அயாநாத், பாடல்களுக்கு இசை-பவன், பின்னணி இசை-தீபன், பாடல்கள்-மோகன்ராஜன், ஸ்டண்ட்-அன்பறிவ், தயாரிப்பு-கேலக்ஸி பிக்சர்ஸ் ஸ்ரீனிவாஸ் சம்மந்தம்.

    கதை திரைக்கதை, வசனம், இயக்கம்-எஸ்.கல்யாண். இவர் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கத சொல்ல போறோம்’ படத்தின் இயக்குனர்.

    படம் பற்றி இயக்குனர் கல்யாணிடம் கேட்டோம்... இந்த படத்தை முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறோம். தொழிலதிபராக வரும் சம்பத்தின் குழந்தை சாதன்யாவை பணத்திற்காக 2 பேர் கடத்துகிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் தன்ஷிகா திருடர்களிடமிருந்து பேபி சாதன்யாவை எப்படி காப்பாற்றினார் என்பதை ஆக்ஷன், காமெடி கலந்து உருவாக்கி உள்ளோம்.

    ஏலகிரி, கேரளாவில் உள்ள வாகுமன் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. விரைவில் படம் திரைக்கு வருகிறது” என்றார்.
    “சிங்கம் 2” படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் “மோகினி”. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை அம்சம் உள்ள இந்த படத்தின் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார்.
    “சிங்கம் 2” படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் “மோகினி”. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை அம்சம் உள்ள இந்த படத்தின் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். அவருடன் சுகன்யா, கவுசல்யா, முகேஷ் திவாரி, யோகி பாபு, சாமிநாதன், ஆர்த்தி கணேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணி புரிந்தவர் ஆர்.மாதேஷ். விஜய் நடித்த வெற்றி படமான ‘மதுர’ படத்தை இயக்கிய இவர் இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

    இசை-விவேக் மெர்வின். இவர் ‘புகழ்’ படத்தின் இசையமைப்பாளர். ஒளிப்பதிவு -ஆர்.பி.குருதேவ், படத் தொகுப்பு-விவேக் ஹர்ஷன்.

    ஹாரிபாட்டர் படத்திற்கு விஎப்எஸ் செய்த லண்டனை சேர்ந்த பிரபல விஎப்எஸ் குழுவினர் இந்த படத்தின் ஸ்பெஷல் எபக்ட்ஸில் பணியாற்றவுள்ளனர். தயாரிப்பு எஸ்.லட்சுமண்குமார்.

    படப்பிடிப்பு ஜூன் முதல் லண்டனில் ஆரம்பமாகிறது. தொடர்ந்து 40 நாட்கள் அங்கு நடைபெறுகிறது. அதன் பிறகு இந்தியாவில் 20 நாட்களும், பாங்காக்கில் 10 நாட்களும், மெக்சிகோவிலும் அடுத்து படப்பிடிப்பு நடைபெறுகிறது.

    “ஹாரர் திரில்லர் படமாக மோகினி உருவாகிறது. திரிஷாவின் சினிமா வரலாற்றில் இது அவருக்கு முக்கிய படமாக இருக்கும்” என்று இயக்குனர் தெரிவித்தார்.
    ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ரம்’. இதில் ஹரிஷிகேஷ், விவேக், சஞ்சிதா ஷெட்டி, நரேன், மியாஜார்ஜ், அம்ஜத், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடிக்கிறார்கள்.
    ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ரம்’. இதில் ஹரிஷிகேஷ், விவேக், சஞ்சிதா ஷெட்டி, நரேன், மியாஜார்ஜ், அம்ஜத், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    இசை-அனிருத், ஒளிப்பதிவு-விக்னேஷ் வாசு, படத்தொகுப்பு-சத்யராஜ், ஸ்டண்ட்-அசோக், நடனம்-சதீஷ், தயாரிப்பு- விஜயராகவேந்திரா.டி, இயக்கம்-சாய்பரத்.எம்.

    இந்த படத்துக்காக அனிருத் இசையில் உருவான பாடலுக்கான நடன காட்சி அடர்ந்த காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டது. இதில் விவேக்கும் நடனம் ஆடி இருக்கிறார்.

    வித்தியாசமான கதை அம்சத்துடன் ‘ரம்’ படம் வளர்ந்து வருகிறது. ஏற்கனவே ‘ரம்’ படத்துக்காக அனிருத் இசையில் உருவான ‘ஹோலா... ஹோலா... அமிகோ’ பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது படமாக்கப்பட்ட நடன காட்சிக்கான பாடலும் விரைவில் வெளியாக இருக்கிறது.
    வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தற்போது வீரசிவாஜி படத்தை தயாரித்து வருகிறது. இதில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார், நாயகியாக ஷாமிலி நடிக்கிறார்.
    வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தற்போது வீரசிவாஜி படத்தை தயாரித்து வருகிறது.

    இதில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார், நாயகியாக ஷாமிலி நடிக்கிறார். இவர்களுடன் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு-எம்.சுகுமார், இசை-டி.இமான், எடிட்டிங் -ரூபன், வசனம்- ஞானகிரி, சசி பாலா, பாடல்கள்-யுகபாரதி, கபிலன், ரோகேஷ், கலை-லால்குடி இளையராஜா, நடனம் -தினேஷ், ஸ்டண்ட் -திலீப்சுப்பராயன்,

    கதை, திரைக்கதை, இயக்கம் -கணேஷ் விநாயக், தயாரிப்பு -எஸ்.நந்தகோபால்.

    வீரசிவாஜி படத்திற்கு இமான் இசையில்..ரோகேஷ் பாடல் வரிகளில் சிம்பு பாடிய “தாறுமாறு தக்காளி சோறு என் ஆள பாரு பப்பாளி தோலு” என்ற பாடலுக்கான படிப்பிடிப்பு ரஷியாவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் நடன இயக்குனர் தினேஷ் நடன அமைப்பில் படமாக்கப் படுகிறது.

    படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிவடையும் நிலையில் உள்ளன. விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
    டாண் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘மஞ்சள்’. இதில் திரு கதாநாயகனாக நடிக்கிறார். இவர் இயக்குனர் பாலுமகேந்திராவின் பயிற்சி நிறுவனத்தில் நடிப்பு பயின்றவர். கதாநாயகியாக புதுமுகம் சசி அறிமுகம் ஆகிறார்.
    டாண் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘மஞ்சள்’. இதில் திரு கதாநாயகனாக நடிக்கிறார். இவர் இயக்குனர் பாலுமகேந்திராவின் பயிற்சி நிறுவனத்தில் நடிப்பு பயின்றவர். கதாநாயகியாக புதுமுகம் சசி அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் ராஜ்கபூர், சண்முகராஜன், செவ்வாளை, தவசி, பூவிதா, செந்தில்குமாரி, ஜெயசூர்யா, மதுரைஜானகி, சம்பத்ராம், திருப்பதி, கோவை உமா, பெருமாயிபாட்டி, பாப்புபாட்டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு-சதீஷ்குமார், இசை- செல்வநம்பி, படத் தொகுப்பு-எல்.வி.தாஸ், பாடல்கள்- யுகபாரதி, கபிலன், கானாபாலா, எடாசி, கலை- சிவக்குமார், நடனம்- தீனா, சாண்டி, ஜாய்மதி. தயாரிப்பு- கணேஷ், சுரேஷ். இயக்கம் - சத்யா சரவணா. படம் பற்றி இயக்குனர் சொல்கிறார்...

    இது ஒரு கிராமத்து காதலை பின்னணியாக கொண்ட கதை. வழக்கமாக திரைப்படங்களில் காதலுக்கு குடும்பம், அந்தஸ்து, சமூக அமைப்பு, சாதி போன்றவை எதிராகவும், தடையாகவும் இருக்கும். ஆனால் இந்த படத்தில் காதலுக்கு இடையூறாக இருக்கும் வேறு ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறோம்.

    நாயகன் தப்பாட்ட கலைஞன். அவன் தனது முறைப்பெண்ணை காதலிக்கிறான். இதில் ஏற்படும் பிரச்சினைகளை, யதார்த்தமாகவும், சுவையாகவும் சென்டிமென்ட் கலந்து கொடுத்திருக்கிறோம். மதுரை பகுதியில் இது படமாக்கப்பட்டுள்ளது. பாடல்கள் கதைக்கு உயிரூட்டும் விதத்தில் அமைந்துள்ளன. அனைவரும் ரசிக்கும் படமாக உருவாகி இருக்கும் ‘மஞ்சள்’  இம்மாதம் திரைக்கு வருகிறது. 
    மோகன்லால்-கவுதமி ஜோடி சேர்ந்து நடிக்கும் ஒரு படம் மலையாளம், தெலுங்கு, தமிழில் தயாராகிறது. தெலுங்கில் அந்தப் படத்திற்கு ‘‘மனமன்தா’’ என்றும் தமிழில் ‘‘நமது’’ என்றும் பெயர் சூட்டி உள்ளனர்.
    மோகன்லால்-கவுதமி ஜோடி சேர்ந்து நடிக்கும் ஒரு படம் மலையாளம், தெலுங்கு, தமிழில் தயாராகிறது. தெலுங்கில் அந்தப் படத்திற்கு ‘‘மனமன்தா’’ என்றும் தமிழில் ‘‘நமது’’ என்றும் பெயர் சூட்டி உள்ளனர்.

    சாய் ஷிவானி வழங்க, வாராஹி சலனசித்திரம் மற்றும் சாய் கோரப்பட்டி புரொடக்சன்ஸ் பட நிறுவனம் இதை தயாரிக்கிறது.
    மலையாளத்தில் அமோக வெற்றி பெற்ற ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா படத்தில் ஜோடி சேர்ந்த மோகன் லால்- கவுதமி ராசியான ஜோடி என்று கேரளாவில் சொல்லுகிறார்கள். இந்த ஜோடியுடன், விஸ்வநாத்-ஹனிஷா ஆம்ரோஷ் இன்னொரு ஜோடியாக நடிக்கிறார்கள்.

    இவர்களுடன் நாசர், ஊர்வசி, சந்திரமோகன், கொல்லப்புடி மாருதிராவ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

    வசனம் மற்றும் பாடல்களை மதன்கார்க்கி எழுதுகிறார். ஒளிப்பதிவு- ராகுல் ஸ்ரீவத்சவ், இசை-மகேஷ் சங்கர், தயாரிப்பு- ரஜினி கோரப்பட்டி.

    எழுதி இயக்குபவர்- சந்திரசேகர் ஏலட்டி. இவர் தெலுங்கில் கோபிசந்தர் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை இயக்கியவர். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
    ×