என் மலர்tooltip icon

    OTT

    • தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியானது
    • படத்தின் மிக பிரபலமான கிஸிக் பாடலின் வீடியோ நேற்று வெளியானது.

    இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

    பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், இதுவரை இந்தியன் சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகம் என்று தகவல் வெளியானது. தற்போது வரை திரைப்படம் உலகளவில் 1500 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

     

    படத்தின் மிக பிரபலமான கிஸிக் பாடலின் வீடியோ நேற்று வெளியானது. இந்நிலையில் புஷ்பா 2 ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. கடந்த சில நாட்களாக ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய வதந்திகள் பரவி வருகின்றன.

    இந்நிலையில் படக்குழு அதுகுறித்து மௌனம் கலைத்துள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், 'புஷ்பா 2' பட ஓடிடி ரிலீஸ் குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றன. படத்தை பெரிய திரைகளில் கண்டு மகிழுங்கள். 56 நாட்கள் முடிவதற்கு முன் எந்த ஓடிடியிலும் 'புஷ்பா 2' வெளியாகாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • துருவா வாயு இயக்கிய தெலுங்கு பேன்டஸி ஹாரர் திரில்லர் திரைப்படம் 'கலிங்கா'.
    • கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நிறங்கள் மூன்று'.

    திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் பல சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி உள்ளன. வாங்க அவை என்னென்ன திரைப்படங்கள்-ன்னு பார்க்கலாம்.

    'டுவிஸ்டர்ஸ்'

    டுவிஸ்டர்ஸ் என்பது 1996-ம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இப்படம் அமெரிக்காவின் டொர்னாடோ பின்னணியில் அமைக்கப்பட்டது, புயல் துரத்துபவர்கள் தனிப்பட்ட சவால்களை வழிநடத்தி அழிவு சக்திகளை எதிர்கொள்ளும் கதையை இது விவரிக்கிறது. இப்படம் டிசம்பர் 18-ம் தேதி ஜியோ சினிமா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ்'

    சுசி தலாதி இயக்கிய இப்படம், பெண் கண்ணோட்டம் மற்றும் ஆணாதிக்க விதிகளுக்கு எதிரான போராட்டத்தை எடுத்துக்காட்டுகிறது. நடிகை பிரீத்தி பாணிகிரஹி மீராவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு பெண்ணை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'கலிங்கா'

    துருவா வாயு இயக்கிய தெலுங்கு பேன்டஸி ஹாரர் திரில்லர் திரைப்படம் 'கலிங்கா'. இத்திரைப்படத்தில் துருவா வாயு மற்றும் பிரக்யா நயன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்., அவர்களுடன் ஆடுகளம் நரேன், லக்ஷ்மன் மீசாலா, தணிகெல்ல பரணி, ஷிஜு ஏஆர், முரளிதர் கவுட், சம்மேத காந்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். சமூக-கற்பனைக் கூறுகளை பின்னணியாகக் கொண்ட இந்த திரில்லர் படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'லீலா வினோதம்'

    பவன் குமார் சுங்கரா இயக்கும் புதிய வெப் தொடர் 'லீலா வினோதம்'. மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த தொடரில் சண்முக் ஜஸ்வந்த், அனகா அஜித் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஒரு சிறிய கிராமத்தில் நடக்கும் ஒரு இளம் மாணவனின் வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் கதையை மையமாக வைத்து இந்த தொடர் உருவாகி உள்ளது. இந்த தொடர் ஈடிவி-வின் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'நிறங்கள் மூன்று'

    'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நிறங்கள் மூன்று'. இந்த படத்தில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகி உள்ளது. இப்படம் அமேசான் பிரைம், ஆஹா தமிழ், சிம்பிலி சவும் ஆகிய ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளது.

    'ஜீப்ரா'

    ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்யதேவ், டாலி தனஞ்சயா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள படம் 'ஜீப்ரா'. தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. தமிழிலிருந்து சத்யராஜ், தெலுங்கில் இருந்து சத்யதேவ் மற்றும் கன்னடத்தில் இருந்து தனஞ்சயா ஆகியோரின் முக்கிய நட்சத்திரங்களின் மூன்று வெவ்வேறு கதைகளை பிணைத்து இப்படம் உருவாகி உள்ளது. இந்த நிலையில், இப்படம் தற்பொழுது ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'பணி'

    மலையாள நடிகர் நடிகர் ஜோஜு ஜார்ஜ், இயக்கி நடித்துள்ள படம் 'பணி'. நாடோடிகள் அபிநயா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஷ்ணு விஜய், சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்கள். கேரளாவின் திருச்சூரில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே நடக்கும் பழிவாங்கும் கதையை மையமாக வைத்து இந்த திரில்லர் படம் உருவாகியுள்ளது. இப்படம் தற்பொழுது சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    முரா

    இந்நிலையில் சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் மலையாள இயக்குனரான முகமத் முஸ்தஃபா இயக்கத்தில் `முரா' மலையாள திரைப்படம் உருவாகி கடந்த நவம்பர் 8 ஆம் தேதி வெளியானது . இப்படம் ஒரு கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஹ்ரிது ஹரூன் , மாலா பார்வதி, கனி கஸ்தூரி, கண்ணன் நாயர், ஜோபின் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ரியா ஷிபுவின் HR பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் முரா திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இப்படம் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் கார்த்திக் நரேன் சமீபத்தில் இயக்கி வெளியான திரைப்படம் 'நிறங்கள் மூன்று'.
    • அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இயக்குனர் கார்த்திக் நரேன் சமீபத்தில் இயக்கி வெளியான திரைப்படம் 'நிறங்கள் மூன்று'. இதில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். சுஜித் சாரங்கின் உதவியாளர் டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    திரைப்படம் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதர்வா ஒரு இயக்குனராகும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறார். சரத்குமார் காவல் அதிகாரி கதாப்பாத்திரத்திலும் ரகுமான் ஒரு பள்ளி ஆசிரியர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    தற்பொழுது படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் 20 ஆம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரைம், ஆஹா மற்றும் சிம்பிலி சவுத் ஆகியவற்றில் வெளியாகவுள்ளாது. திரையரங்கில் இப்படத்தை காண தவறவிட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    நிறங்கள் மூன்று திரைப்படத்தின் விமர்சனத்தை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆர்.ஜே. பாலாஜி சமீபத்தில் சொர்க்கவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார்.
    • கடந்த நவம்பர் மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    ஆர்.ஜே. பாலாஜி சமீபத்தில் சொர்க்கவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள இந்த படம் ஜெயிலில் நடக்க கூடிய கதைக்களத்துடன் அமைந்துள்ளது. இப்படத்தின் கதையை எழுதியவர் தமிழ் பிரபா ஆவார். ஆர்.ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். கருணாஸ், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆர் ஜே பாலாஜியின் நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர். செய்யாத குற்றத்திற்காக ஆர் ஜே பாலாஜியை சிறையில் அடைக்கிறார்கள். அங்கு சந்திக்கும் மனிதர்களால் ஏற்படும் பிரச்சனையை பற்றி கதைக்களம் அமைந்துள்ளது.

    நடிகை சானியா ஐயப்பன் கதையின் நாயகியாக நடித்து இருந்தார். இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

    சொர்க்கவாசல் திரைப்படத்தின் விமர்சனத்தை படிக்க இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி வெளியானது தங்கலான் திரைப்படம்.
    • இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது

    பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படம் 'தங்கலான்'. இதில், விக்ரமுடன், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டகிரோன், ஆனந்த் சாமி, ஹரி கிருஷ்ணன், அர்ஜூன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்தனர்.

    மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. திரைப்படம் இந்தி மொழியிலும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    அதனைத்தொடர்ந்து, இப்படம் விரைவில் ஓ.டி.டியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தங்கலான் படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும், வைணவ மதத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையிலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், ஓ.டி.டியில் வெளியானால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.

    தணிக்கை சான்று பெற்று திரையரங்குகளில் வெளியான படத்தை ஓ.டி.டியில் வெளியிட தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

    இந்த நிலையில் தங்கலான் திரைப்படம் தற்பொழுது ஓடிடியில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் தமிழ், தெலுங்கு,இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அமரன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது
    • பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜ் மற்றும் மீனாட்சி சவுத்ரி நடிப்பில் வெளியான படம் 'மட்கா'.

    திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

    'அமரன்'

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் வெளியான படம் 'அமரன்'. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் கடந்த 5-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

    அமரன் திரைப்படத்தின் விமர்சனத்தை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

    'மேரி'

    மேரி என்பது டி.ஜே. கருசோ இயக்கியிருக்கும் பைபிள் அடிப்படையிலான திரைப்படமாகும். இதில் நோவா கோஹன், இடோ டகோ மற்றும் அந்தோனி ஹாப்கின்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 4-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    ஸ்டார் வார்ஸ்: ஸ்கெலிட்டன் க்ரூ'

    கிறிஸ்டோபர் போர்டின் மற்றும் ஜான் வாட்ஸால் உருவாக்கப்பட்டது இந்த தொடர். இது இரண்டு எபிசோடுகளாக வெளியாக உள்ளது. வேறொரு கிரகத்தில் சிக்கி தவிக்கும் குழந்தைகள், தங்கள் சொந்த கிரகத்திற்கு திரும்பி செல்ல முயற்சிக்கும் போது மறக்க முடியாத விண்மீன் சாகசத்தில் ஈடுபடுவதை இந்த தொடர் காட்டுகிறது. இந்த தொடர் கடந்த 2-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'மட்கா'

    பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜ் மற்றும் மீனாட்சி சவுத்ரி நடிப்பில் வெளியான படம் 'மட்கா'. இந்த படத்தினை கருணா குமார் இயக்கியுள்ளார். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள் இப்படம் கடந்த 5 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'சார்'

    போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சார்'. சாயா கண்ணன் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் கல்வி அனைவருக்கும் சமம் என்பதை கூறும் விதமாக உருவாகியுள்ளது. இப்படம் நேற்று (6-ந் தேதி) அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    சார்  திரைப்படத்தின் விமர்சனத்தை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

    'ஜிக்ரா'

    பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்துள்ள படம் 'ஜிக்ரா'. தர்மா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தினை வாசன் பாலா இயக்கியுள்ளார். தி ஆர்ச்சீஸ் நடிகர் வேதாங் ரெய்னா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் நேற்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது

    'லிட்டில் ஹார்ட்ஸ்'

    அபி டிரீசா பால் மற்றும் ஆன்டோ ஜோஸ் பெரேரா ஆகியோரால் நகைச்சுவை கதைக்களத்தில் இயக்கப்பட்ட மலையாள படம் 'லிட்டில் ஹார்ட்ஸ்'. சாண்ட்ரா தாமஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஷேன் நிகம் மற்றும் மஹிமா நம்பியார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மூன்று வெவ்வேறு ஜோடிகளின் காதல் கதை பற்றி கூறும் இப்படம் க் டென்ட் கொட்டாய் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் பொகெயின்வில்லா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    மலையாள ரசிகர்களால் ஃபாஃபா என்று அன்புடன் அழைக்கப்படுபவர் ஃபகத் ஃபாசில். மலையாள சினிமா மட்டுமன்றி, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

    தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் மற்றும் தெலுங்கில் புஷ்பா உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் வெளியான வேட்டையன் திரைப்படத்தில் பேட்டரி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். படத்தில் தனது நடிப்பு ஆற்றல் மூலம் அசத்தியுள்ளார் குறிப்பாக காமெடி காட்சிகளில் கலக்கியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் பொகெயின்வில்லா திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஃபகத்தின் நெருங்கிய நண்பரான அமல் நீரட் இயக்கியுள்ளார்.இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தில் ஃபஹத் ஃபாசிலுடன் , குஞ்சாக்கோ போபன், வீணா நந்த குமார், ஜோதிர்மயி, ஸ்ரீண்டா, முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தன் நினைவுகளை மறக்கும் ஒரு பெண் அவளுக்கும் காணாமல் போன பெண்களுக்கு உள்ள தொடர்பை மையப்படுத்தி இப்படம் அமைந்துள்ளது.

    ஆனந்த சந்திரன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்நடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் அமரன்.
    • ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் அமரன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

    மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

    ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் தற்போது வரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அமரன் திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்


    • வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் "லக்கி பாஸ்கர்" வெளியானது.
    • சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியான படம் 'பிளடி பெக்கர்'.

    என்னதான் திரைப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆனாலும்,, அதை ஓடிடி-யில் பார்க்க என ஒரு தனி கூட்டமே உள்ளது. திரையரங்கில் வெற்றி திரைப்படமாக அமையாத பல திரைப்படங்கள் ஓடிடி வெளியீட்டின் பிறகு மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.

    இப்போ அடிக்கிற மழையில் வீட்டில் அனைவரும் அமர்ந்து பிடித்த உணவை சாப்பிட்டு இந்த வார ஓடிடியில் என்ன படம் பாக்கலாம்-ன்னு பார்ப்போம்

    'ராக்கெட் டிரைவர்'

    ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரித்துள்ள படம் "ராக்கெட் டிரைவர்". இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்கியுள்ளார். பேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை சுனைனா, ஜெகன் நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் கடந்த 25-ந் தேதி வெளியானது.

    'அந்தகன்'

    பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தின் ரீமேக்காக 'அந்தகன்' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகனாக பிரசாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் கடந்த 26-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது

    'தீபாவளி போனஸ்'

    நடிகர் விக்ராந்த் நடிப்பில் ஜெயபால் இயக்கத்தில் வெளியான படம் 'தீபாவளி போனஸ்'. இந்த படத்தில் கதாநாயகியாக ரித்விகா நடித்துள்ளார். ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் பன்னீர்செல்வம், வெங்கட்ராமன் பாலாஜி, மாலிக் ரபிக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த 26-ந் தேதி ஆஹா தமிழ் மற்றும் சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளது.

    'லக்கி பாஸ்கர்'

    வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் "லக்கி பாஸ்கர்" வெளியாகி உள்ளது.இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். இப்படம் சாதாரண நபரான நாயகன் அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் செல்வந்தனாக மாறும் கதையாக உருவாகி உள்ளது. இப்படம் 28-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

    'கா'

    சுதீப் மற்றும் சுஜித் இயக்கத்தில் தீபாவளியன்று வெளியான படம் 'கா'. இவர்கள் இயக்கிய முதல் படம் இதுவாகும். இதில் கிரண் அப்பாவரம் கதாநாயகனாகவும், தன்வி ராம் மற்றும் நயன் சரிகா என இரண்டு கதாநாயகிகளும் நடித்தனர். ஸ்ரீசக்ராஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் நேற்று இடிவி வின் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

    'பிளடி பெக்கர்'

    நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியான படம் 'பிளடி பெக்கர்'. இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்சயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் கவின் 'பிச்சைக்காரன்' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டார்க் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் இன்று அமேசான் பிரைம், டென்டுகொட்டா, சன் நெக்ஸ்ட் போன்ற ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளது.

    'பிரதர்'

    ஜெயம் ரவி நடிப்பில் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள படம் 'பிரதர்'. இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகியுள்ளது. பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரில் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    'விகடகவி'

    பிரதீப் மடலி இயக்கத்தில் நரேஷ் அகஸ்தியா மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள தொடர் 'விகடகவி'. இந்த தொடர் பீரியட் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ராம் தல்லூரி இந்த தொடரை தயாரித்துள்ளார். நரேஷ் அகஸ்தியா விக்டகவியாக நடித்துள்ளார், அவர் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு துப்பறியும் நபராக நடித்துள்ளார். இந்த தொடர் ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'பாராசூட்'

    இயக்குனர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் கிஷோர் நடித்துள்ள புதிய வெப்சீரிஸ் 'பாராசூட்'. இதில் நடிகர் கிஷோர் குழந்தைகளின் தந்தையாகவும், பிரபல நடிகை 'குக் வித் கோமாளி' கனி குழந்தைகளுக்கு அம்மாவாகவும், நடிகர் கிருஷ்ணா குலசேகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
    • இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ளது.

    தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக இருப்பவர் சார்லி. இதுவரை 800 மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் இன்றும் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சார்லி, ஜெகன் பாலாஜி, அதிதி பாலன், சரண்யா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் லைன்மேன். இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    லைன்மேன் சார்லியின் மகன் ஜெகன் பாலாஜி, சூரிய ஒளி மறைந்தது தானாக தெரு விளக்கு எரிவது போலவும் ஒளி வந்ததும் தானாக அணைவது போலவும் ஒரு கண்டுபிடிப்பை கண்டுபிடிக்கிறார். அதற்கு அரசு அங்கீகாரம் பெற எடுக்கப்படும் முயற்சி, அதனால் ஏர்படும் சிக்கல்களை பற்றி பேசக்கூடிய திரைப்படமாக இது அமைந்துள்ளது.

    படத்தை பார்த்த பலர் இணையத்தில் பாராட்டி பதிவு செய்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் விக்ராந்த் மற்றும் ரித்விகா இணைந்து நடித்த தீபாவளி போனஸ் திரைப்படம் கடந்த மாதம் 25 ஆம் தேதி வெளியானது.
    • தீபக் குமார் தலா இப்படத்தை தயாரித்துள்ளார்.

    நடிகர் விக்ராந்த் மற்றும் ரித்விகா இணைந்து நடித்த தீபாவளி போனஸ் திரைப்படம் கடந்த மாதம் 25 ஆம் தேதி வெளியானது. இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தை ஜெயபால்.ஜே இயக்கியுள்ளார். படத்தின் இசையை மரியா ஜெரால்ட் மேற்கொண்டுள்ளார். தீபக் குமார் தலா இப்படத்தை தயாரித்துள்ளார்.

    இப்படம் லோவர் மிடில் கிளாஸ் குடும்பத்தின் நிதர்சத்தையும், எதார்த்தத்தியும் பதிவு செய்துள்ள திரைப்படமாகும். மதுரை மாநகராட்சியில் உள்ள ஒரு குடும்பம் தீபாவளி போனஸை மையமாக வைத்து எடுத்துள்ள திரைப்படமாகும். இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 26 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. படத்தை திரையரங்கில் பார்க்க தவற விட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாரு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    திரைப்படத்தின் விமர்சனத்தை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.
    • இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார்.

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.

    இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வெளியான இத்திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில், லக்கி பாஸ்கர் திரைப்படம் உலகம் முழுவதும் 111 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    லக்கி பாஸ்கர் திரையரங்குகளில் வெளியாகி 25 நாட்களை கடந்த நிலையில், இப்படம் வரும் 28 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.இத்திரைப்படம் தமிழ் , தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×