வெற்றி மாறனின் விடுதலை 2 திரைப்படம் ஓடிடியில் வெளியானது

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. திரைப்படம் தற்பொழுது ஓடிடியில் வெளியாகியுள்ளது.
வெற்றி மாறனின் விடுதலை 2 திரைப்படம் ஓடிடியில் வெளியானது
Published on: 

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கினார். இதிலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்துள்ளனர். விடுதலை 2 திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பலரும் இப்படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இந்நிலையில் திரைப்படம் தற்பொழுது ஓடிடியில் வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் இரண்டு பாகமும் தற்பொழுது அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங்கில் உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com