என் மலர்tooltip icon

    OTT

    • ஷேன் நிகாம் 'மெட்ராஸ்காரன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக களம் இறங்கியுள்ளார்.
    • திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'கிஸ்மத்' படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம்.

    தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான 'இஷ்க்', 'கும்பளங்கி நைட்ஸ்', 'ஆர்டிஎக்ஸ்' உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

    ஷேன் நிகாம் 'மெட்ராஸ்காரன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக களம் இறங்கியுள்ளார்.

    இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    எஸ்.ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் ஜெகதீஷ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர். வசந்தகுமார் படத்தொகுப்பு செய்துள்ளார்.

    இந்த நிலையில் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் பிப்ரவரி 7 முதல் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்டிரீமாகவுள்ளது. இப்படத்தை திரையரங்குகளில் காண தவறவிட்டவர்கள் ஓடிடி-யில் கண்டு களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'.
    • பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

    இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

    பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்தது, இதுவரை இந்திய சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகமாகும்.

    இந்தியாவில் வெளியான படங்களில் மிக குறுகிய காலக்கட்டத்தில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படமாக புஷ்பா 2 உருவெடுத்தது. இந்த நிலையில், படம் வெளியான 32 நாட்களில் ரூ. 1831 கோடியை வசூல் செய்தது.

    தற்பொழுது படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜனவரி 30 ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. நெட்பிளிக்ஸில் புஷ்பா 2 ரீலோடட் வெர்ஷன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் நேர அளவு 3 மணி நேரம் 44 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் மோகன்லால் இயக்குனராக அறிமுகமான படம் பரோஸ்.
    • இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு.மாணிக்கம்.

    ஓடிடியில் வெளியாகும் பிரபல நடிகர்களின் படங்கள் முதல் இளம் நடிகர்களின் படங்கள் வரை அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்புக்கு இணையாக ஓடிடியில் வரவேற்பு கிடைக்கிறது. இந்த வாரம் ஓடிடி தளங்களில் என்ன திரைப்படங்களை பார்க்கலாம் என இந்த செய்தியில் காணலாம்.

    'தி ஸ்மைல் மேன்'

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார் நடித்துள்ள படம் 'தி ஸ்மைல் மேன்'. சரத்குமார் நடித்த 150-வது திரைப்படமாகும். இந்த படத்தை இயக்குனர் ஷ்யாம் பர்வின் இயக்கியுள்ளார். சரத்குமார் இப்படத்தில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார், அவரது ஞாபகம் அழிவதற்குள் அவர் ஒரு தொடர் கொலைகள் செய்த குற்றவாளியை பிடிக்க வேண்டும். இதை மையமாக வைத்து படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை (24-ந் தேதி) ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    'திரு.மாணிக்கம்'

    இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு.மாணிக்கம். நடிகை அனன்யா இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு மனிதன் இன்றைய காலகட்டத்திலும் நேர்மையாக இருக்க முடியுமா? அதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்பதை பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளது. இப்படம் நாளை ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    'பரோஸ்'

    நடிகர் மோகன்லால் இயக்குனராக அறிமுகமான படம் பரோஸ். இந்த படத்தில் இவருடன் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்திருந்தனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரித்த இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். லிடியன் நாதஸ்வரம் இசையமைப்பில் 3டி-யில் உருவான இந்தப் படம், பான் இந்தியா முறையில் கடந்த மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில், இப்படம் கடந்த 22-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'ரஸாக்கர்'

    சுதந்திரப் போராட்ட காலத்தில், ஐதராபாத் நகரில் நடந்த, வரலாற்று நிகழ்வைக் கொண்டு உருவாகியுள்ள படம், 'ரஸாக்கர்'. சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி தயாரித்துள்ளார். யதா சத்யநாராயணா இயக்கியுள்ள இந்தப் படத்தில், பாபி சிம்ஹா, வேதிகா, அனுஷா, ஜான் விஜய் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    சிவாரபள்ளி

    சிவாரபள்ளி தெலுங்கு சீரிஸாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியில் வெற்றித் தொடராக ராக் மயூர் இயக்கத்தில் அமைந்த பஞ்சாயத் தொடரை தெலுங்குவில் ரீமேக் செய்துள்ளனர். இது நாளை அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    'தி நைட் ஏஜென்ட்'

    தி நைட் ஏஜென்ட் என்பது ஒரு அமெரிக்க அதிரடி திரில்லர் தொடர். இந்த தொடரை ஷான் ரியான் இயக்கியுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு வெளியான இந்த தொடரின் முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்றது. பீட்டர் சதர்லேண்ட் என்ற எப்.பி.ஐ ஏஜென்ட்டின் வாழ்க்கையைச் சுற்றி வரும் மாத்யூ குயிர்க்கின் நாவலை அடிப்படையாகக் கொண்டது இந்த தொடர் உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இரண்டாவது சீசன் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'ஹிசாப் பராபர்'

    ஹிசாப் பராபர் என்பது ஒரு நகைச்சுவை திரில்லர் படமாகும். அஷ்வின் திர் இயக்கியுள்ள இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் எஸ்பி சினிகார்ப் நிறுவனம் தயாரித்துள்ளன. இப்படத்தில் ராதே மோகன் ஷர்மா என்ற எளிய ரயில்வே துறை ஊழியராக ஆர்.மாதவன் நடித்துள்ளார். மேலும் நீல் நிதின் முகேஷ் , கிர்த்தி குல்ஹாரி , ரஷாமி தேசாய் மற்றும் பைசல் ரஷித் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் நாளை ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்'

    டாம் ஹார்டி நடிப்பில் கெல்லி மார்செல் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான படம் 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்'. இப்படத்தில் பிரம்மாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த பாகத்துடன் இப்படம் முடிவடைகிறது. இந்தப் படத்தில் சிவெடெல் எஜியோபர், ஜூனோ டெம்பிள், ரைஸ் இபான்ஸ், பெக்கி லு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் உலகளவில் 400 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படம் வருகிற 25-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    'கிளாடியேட்டர் 2'

    ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் ரசல் குரோவ் நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கிளாடியேட்டர்'. இப்படம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி சுமார் 400 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது. கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு 'கிளாடியேட்டர் 2' படத்தினை ரிட்லி ஸ்காட் தற்போது உருவாக்கியுள்ளார். இப்படத்தில், பால் மெஸ்கல், டென்சல் வாஷிங்டன், பெட்ரோ பாஸ்கல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் பாராமவுண்ட் பிளஸ் ஓ.டி.டி தளத்தில் கடந்த 21-ந் தேதி வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகிய படம் திரு. மாணிக்கம்.
    • சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகிய படம் திரு. மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஜிபி ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.

    திரைப்படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்களான ரஜினிகாந்த், சிவக்குமார், அமீர், லிங்குசாமி மற்றும் பல பாராட்டினர். இந்த காலத்திலும் ஒரு மனிதன் நேர்மையாக வாழ முடியுமா? என்ற கேள்வியை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.

    இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் ஜனவரி 24 ஆம் தேதி ஸ்ட்ரீமாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவானது "தி ஸ்மைல் மேன்"
    • இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.

    மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் - பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவானது "தி ஸ்மைல் மேன்" (The Smile Man)திரைப்படம். இப்படம் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவலதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகும் முன், ஒரு சிக்கலான, மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், எட்டு தோட்டாக்கள் வெற்றி நடிப்பில் மெமரீஸ் படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இப்படத்தை உருவாக்கியுள்ளது.

    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், ரௌடி பேபி புகழ் பேபி ஆழியா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மெமரீஸ் படப்புகழ் ஶ்ரீகுமார் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்டிரீம்மாகவுள்ளது. திரைப்படத்தை திரையரங்கில் காண தவறவிட்டவர்கள் ஓடிடியில் இப்படத்தை பார்த்து மகிழுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை.
    • திரைப்படம் தற்பொழுது ஓடிடியில் வெளியாகியுள்ளது.

    இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர்.

    இதைத் தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கினார். இதிலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்துள்ளனர். விடுதலை 2 திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பலரும் இப்படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இந்நிலையில் திரைப்படம் தற்பொழுது ஓடிடியில் வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் இரண்டு பாகமும் தற்பொழுது அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங்கில் உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • மிர்ச்சி சிவா நடிப்பில் அர்ஜுன் சூது கவ்வும் 2 இயக்கி இருந்தார்.
    • குணாநிதி, செம்பன் வினோத், காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த படம் அலங்கு.

    ஓடிடியில் வெளியாகும் பிரபல நடிகர்களின் படங்கள் முதல் இளம் நடிகர்களின் படங்கள் வரை அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்புக்கு இணையாக ஓடிடியில் வரவேற்பு கிடைக்கிறது. மொழி பாக்பாடின்றி பல்வேறு மொழி திரைப்படங்களை மக்கள் ஓடிடியில் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். இந்த வாரம் ஓடிடி தளங்களில் என்ன பார்க்கலாம் என இந்த செய்தியில் காணலாம்.

    சூது கவ்வும் 2

    விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் சூது கவ்வும் திரைப்படம் முக்கிய பங்கை வகிக்கும். அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் அர்ஜுன் இப்படத்தை இயக்கி இருந்தார். திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    அலங்கு

    குணாநிதி, செம்பன் வினோத், காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த படம் அலங்கு. இப்படத்தை எஸ்.பி.சக்திவேல் இயக்கி இருந்தார். இப்படம் மனிதனுக்கும், நாய்க்கும் இடையேயான உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படத்தை அன்புமணியின் மகள் சங்கமித்ரா தயாரித்துள்ளார். இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

    ஃபேமிலி படம்

    செல்வக்குமார் திருமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஃபேமிலி படம். இப்படத்தில் விவேக் பிரசன்னா நயாகனாக நடித்திருக்கிறார். அனிவீ இசையமைத்துள்ள இப்படத்திற்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மகனின் திரைப்படத்திற்காக குடும்பமாக சேர்ந்து படத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுப்படும் குடும்பத்தின் கதையாக அமைந்துள்ளது ஃபேமிலி படம். இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

    ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ்

    பரத் நடிப்பில் உருவாகி இருக்கும் திரில்லர் திரைப்படம் ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ். இப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நாயர் நடித்துள்ளார். மேலும் அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை பிரசாத் முருகன் இயக்கி இருக்கிறார். ஒரு துப்பாக்கி 6 நபர்களின் கைகளுக்கு செல்கிறது. அது அவர்களை எந்த சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதே படத்தின் மையக்கதை. இப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

    பணி

    மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் இயக்கி நடித்து இருக்கும் திரைப்படம் பணி. இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

    ரைஃபில் கிளப்

    ஆஷிக் அபு இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது ரைஃபில் கிளப் திரைப்படம். ஷியாம் புஷ்கரன், திலீஷ் கருணாகரன் மற்றும் சுஹாஸ் இணைந்து எழுதியுள்ளனர். இப்படத்தில் விஜயராகவன், திலீஷ் போதன் அனுராக் காஷ்யப், வனி விஷ்வநாத், சுரேஷ் கிருஷ்ணா, தர்ஷனா மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் தற்பொழுது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'ஜாலியோ ஜிம்கானா'.
    • எம்.ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகிய தொடர் 'உப்பு புளி காரம்'.

    ஓடிடியில் வெளியாகும் பிரபல நடிகர்களின் படங்கள் முதல் இளம் நடிகர்களின் படங்கள் வரை அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்புக்கு இணையாக ஓடிடியில் வரவேற்பு கிடைக்கிறது. இந்த வாரம் ஓடிடி தளங்களில் என்ன பார்க்கலாம் என இந்த செய்தியில் காணலாம்.

    'ஜாலியோ ஜிம்கானா'

    சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'ஜாலியோ ஜிம்கானா'. இதில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். மேலும் திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்தப்படத்தினை ட்ரான்ஸ் இந்தியா மீடியா & என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இறந்துப்போன பிரபுதேவாவின் உடலை ஒரு இடத்தில் சென்று ஒப்படைக்க முயற்சிக்கும் 4 பெண்களின் கதையாக இப்படம் அமைந்துள்ளது. இப்படம் கடந்த 30-ந் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'ரீயூனியன்'

    'ரீயூனியன்' என்பது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மாளிகையில் நடைப்பெற்ற கொலையை அடையாளம் காணும் வகையில் உருவாக்கப்பட்ட மர்மம் மற்றும் நகைச்சுவை கலந்த படமாகும். இந்த படத்தில் நினா டோப்ரேவ், ஜேமி சுங், சேஸ் க்ராபோர்ட், பில்லி மேக்னுசென் ஆகியோர் நடித்துள்ளனர். ஒரே பள்ளியில் படித்த நண்பர்கள் மீண்டும் இணைந்து, அந்த கொலையை செய்த கொலைகாரனை கண்டுபிடிக்கும் விதமாக இப்படம் அமைந்துள்ளது. இந்நிலையில் இப்படம் கடந்த ஜனவரி 1-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

    'தி பிளாக் ஸ்விண்ட்லர்'

    ஜப்பானின் 'மங்கா' தொடரை அடிப்படையாகக் கொண்டு, குரோசாகி என்ற பெயரிடப்பட்ட கதாபாத்திரம், தனது குடும்பத்தை ஏமாற்றி மோசடி செய்பவர்களை பழிவாங்கும் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் கடந்த 1-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'உப்பு புளி காரம்'

    எம்.ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகிய தொடர் 'உப்பு புளி காரம்'. இத்தொடரில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, பரினா, தீபக் பரமேஷ் மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கனா காணும் காலங்கள் மற்றும் ஹார்ட் பீட் இணையத் தொடர்களை அடுத்து ஒளிபரப்பான உப்பு, புளி, காரம் தொடரும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த தொடரின் இறுதி எபிசோடு கடந்த 2 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'ஆல் வி இமேஜின் அஸ் லைட்'

    பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான படம் "ஆல் வி இமேஜின் அஸ் லைட்". இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கடம், ஹிருது ஹாரூன், அஸீஸ் நெடுமங்காட் மற்றும் டிண்டுமால் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிட்டு இரண்டாவது உயரிய விருதான 'கிராண்ட் பிரிக்ஸ்' விருதை வென்றது. இந்த நிலையில் இப்படம் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

    'ஆரகன்'

    இயக்குனர் அருண் கே ஆர் இயக்கத்தில் மைக்கேல் தங்கதுரை, கவிப்ரியா என பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'ஆரகன்'. இப்படத்தினை தயாரிப்பாளர் ஹரிகரன் பஞ்சலிங்கம் தயாரிக்க, இசையமைப்பாளர் விவேக் இசையமைத்துள்ளார். புராண கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இப்படம் இன்று ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    கடகன்

    கேரள மாநிலத்தில் உள்ள நிலம்புர் பகுதியில் கதைக்களம் அமைந்துள்ளது. இப்படத்தை சஜில் மம்பத் இயக்கியுள்ளார். ஹகீம் ஷாஜஹான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மணல் கடத்தலை மையப்படுத்தி இக்கதைக்களம் அமைந்துள்ளது. இப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நகைச்சுவை திரைப்படமான ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நகைச்சுவை திரைப்படமான ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இப்படத்தில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். இவருடன் அபிராமி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரோபோ சங்கர், சாய் தீனா, யாஷிகா ஆனந்த் மற்றும் மதுசுதன் நடித்துள்ளனர்.

    படத்தின் முதல் பாடலான `போலிஸ் காரனா கட்டிக்கிட்டா' பாடல் ஆண்டிரியாவின் குரலில் டபுள் மீனிங் வரிகளுடன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இறந்த பிரபு தேவாவி உடலை 4 பெண்கள் யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்திற்கு சென்று சேர்க்கனும். இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமே ஜாலியோ ஜிம்கானா.

    இந்நிலையில் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆல் வி இமாஜின் ஆஸ் லைட் { All We Imagine As Light} என்ற இந்திய திரைப்படம் பல சர்வதேச உயரிய விருதுகளை பெற்றது.
    • இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.

    ஆல் வி இமாஜின் ஆஸ் லைட் { All We Imagine As Light} என்ற இந்திய திரைப்படம் பல சர்வதேச உயரிய விருதுகளை பெற்றது. மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் பாராட்டுகளை பெற்ற திரைப்படமாகும். இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.

    இத்திரைப்படத்தை பாயல் கபாடியா இயக்கியுள்ளார். இப்படத்தில் கனி கஸ்தூரி, திவ்ய பிரபா, சாயா கதம் மற்றும் ஹிருது ஹரூன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 2024 கேன்ஸ் பிலிம் ஃபெஸ்டிவல் உயரிய விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றது. 1994 ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரு இந்திய திரைப்படம் இந்த விருதை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

    பலரும் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என காத்துக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜனவரி 3 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்புக்கு இணையாக ஓடிடியில் வரவேற்பு கிடைக்கிறது
    • இந்த வாரம் ஓடிடி தளங்களில் என்ன பார்க்கலாம் என இந்த செய்தில் பார்க்கலாம்.

    ஓடிடியில் வெளியாகும் பிரபல நடிகர்களின் படங்கள் முதல் இளம் நடிகர்களின் படங்கள் வரை அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்புக்கு இணையாக ஓடிடியில் வரவேற்பு கிடைக்கிறது. இந்த வாரம் ஓடிடி தளங்களில் என்ன பாக்கலாம்-ன்னு இந்த செய்தில பார்க்கலாம்.

    'ஸ்குவிட் கேம் சீசன் 2'

    கடந்த 2021-ம் ஆண்டு நெட்பிளிகஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் 'ஸ்குவிட் கேம்'. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார். இத்தொடரின் இரண்டாம் சீசனுக்கு மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது இந்தத் தொடரின் 2-வது சீசன் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'சொர்க்கவாசல்'

    பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள படம் சொர்க்கவாசல். இந்த படத்தை ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து 1999-ல் நடந்த உண்மையான கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'கிளாடியேட்டர் II'

    ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் ரசல் குரோவ் நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கிளாடியேட்டர்'. இப்படம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி சுமார் 400 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது. கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு 'கிளாடியேட்டர் 2' படத்தினை ரிட்லி ஸ்காட் தற்போது உருவாக்கியுள்ளார். இப்படத்தில், பால் மெஸ்கல், டென்சல் வாஷிங்டன், பெட்ரோ பாஸ்கல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 24-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'பகீரா'

    கே.ஜி.எப், காந்தாரா, சலார் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான படம் 'பஹீரா'. இயக்குனர் பிரசாந்த் நீல் கதை எழுதிய இப்படத்தை இயக்குனர் சூரி இயக்கினார். இந்தப் படத்தில் கன்னட நடிகர் ஸ்ரீமுரளி நாயகனாக நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்த நிலையில் இப்படம் கடந்த 24-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'பைரதி ரணகல்'

    பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் இயக்குனர் நர்த்தன் இயக்கத்தில் வெளியான படம் 'பைரதி ரணகல்'. 2017 ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டான 'மஃப்டி' படத்தின் தொடர்ச்சியில் இப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் ருக்மணி வசந்த், ராகுல் போஸ், தேவராஜ், அவினாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது. இப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் கடந்த 25-ந் தேதி வெளியானது.

    'ரூபன்'

    இயக்குனர் அய்யப்பன் சுப்ரமணி இயக்கத்தில் விஜய் பிரசாத், காயத்ரி ரேமா, சார்லீ என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம் 'ரூபன்'. இப்படத்தினை தயாரிப்பாளர் ஆறுமுகம் கலியப்பன் தயாரிக்க, அரவிந்த் பாபு இசையமைத்துள்ளார். இப்படம் மர்மம் நிறைந்த வரலாற்று கதையாகும். இப்படம் கடந்த 25-ந் தேதி டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'வட்டார வழக்கு'

    இயக்குனர் கண்ணுசாமி ராமசந்திரன் இயக்கத்தில் சந்தோஷ், ரவீனா ரவி என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை மதுரா டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். கிராமத்தில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இந்த நிலையில் இப்படம், கடந்த 25-ந் தேதி டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'ஆர்.ஆர்.ஆர்: பிஹைண்ட் அண்ட் பியோன்ட்'

    ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இந்தப் படம் ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இந்நிலையில் இத்திரைப்படம் உருவான விதத்தை படக்குழு ஆவணப்படுத்தியுள்ளனர். இந்த ஆவணப்படம் தற்பொழுது நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'பூல் புலையா 3'

    அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன், திரிப்தி டிம்ரி, வித்யா பாலன் மற்றும் மாதுரி தீட்சித் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் 'பூல் புலையா 3'. நகைச்சுவை திகில் கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது. கடந்த நவம்பர் மாதம் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'ஒயிட் ரோஸ்'

    அறிமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் ஆனந்தி நடித்துள்ள திரில்லர் திரைப்படம் 'ஒயிட் ரோஸ்'. இந்த படத்தை பூம்பாரை முருகன் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ், விஜித், ரூசோ ஶ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராவார் சுராஜ் வெஞ்சரமூடு.
    • முரா திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

    மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராவார் சுராஜ் வெஞ்சரமூடு. இவர் தற்பொழுது சீயான் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.இதுவே இவர் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமாகும்.

    இந்நிலையில் சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் மலையாள இயக்குனரான முகமத் முஸ்தஃபா இயக்கத்தில் `முரா' மலையாள திரைப்படம் உருவாகி கடந்த நவம்பர் 8 ஆம் தேதி வெளியானது .

    இப்படம் ஒரு கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஹ்ரிது ஹரூன் , மாலா பார்வதி, கனி கஸ்தூரி, கண்ணன் நாயர், ஜோபின் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ரியா ஷிபுவின் HR பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் முரா திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இப்படம் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

    இப்படத்தின் இயக்குனரான முஸ்தஃபா இதற்கு முன் அன்னா பென் நடிப்பில் வெளியான தேசிய விருதைப்பெற்ற கப்பேலா திரைப்படத்தை இயக்கியவராவார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×