என் மலர்tooltip icon

    OTT

    • விக்னேஷ் பழனிவேல் இயக்கத்தில் சஞ்சய் தயாரித்துள்ள வெப் தொடர் 'மதுரை பையனும் சென்னை பொண்ணும்'.
    • ஹனீப் அடேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் 'மார்கோ'

    திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

    'காதலிக்க நேரமில்லை'

    ரவிமோகன் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் 'காதலிக்க நேரமில்லை'. கிருத்திகா உதயநிதி இயக்கிய இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. இப்படம் இளம் தலைமுறைகளின் காதல், குடும்ப அமைப்பு, குழந்தை வளர்ப்பு அதனை சுற்றியுள்ள சிக்கல்களை பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

    'மார்கோ'

    ஹனீப் அடேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் 'மார்கோ'. ஆக்சன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ் , அபிமன்யூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.ஹாலிவுட் தரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஆக்ஷன் திரைப்படமாக உருவானது மார்கோ திரைப்படம். இந்நிலையில் திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    'தூம் தாம்'

    தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் யாமி கவுதம் நடித்துள்ள படம் தூம் தாம். ரிஷப் சேத் இயக்கத்தில் ஜோதி தேஷ்பாண்டே, ஆதித்யா தார், லோகேஷ் தார், புனித் வாடன் மற்றும் பலர் தயாரித்துள்ள இப்படத்திற்கு கேசவ் தார் இசையமைத்துள்ளார். சண்டையும் காதலும் கலந்த ஒரு முழு பொழுதுபோக்கு திரைப்படமாகும். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'மதுரை பையனும் சென்னை பொண்ணும்'

    விக்னேஷ் பழனிவேல் இயக்கத்தில் சஞ்சய் தயாரித்துள்ள வெப் தொடர் 'மதுரை பையனும் சென்னை பொண்ணும்'. இதில் பிரபல தொகுப்பாளர் ஏஞ்சலின் மற்றும் கண்ணா ரவி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடர் மொத்தம் 25 எபிசோடுகளை கொண்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தொடர் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. முதல் மூன்று எபிசோடுகளை வெளியிட்டுள்ளன. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை புது எபிசோடுகள் வரும் என தெரிவித்துள்ளனர்.

    'கோப்ரா காய்' சீசன் 6

    ஹேடன் ஷ்லோஸ்பெர்க், ஜோஷ் ஹீல்ட் மற்றும் ஜான் ஹர்விட்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட தொடர் 'கோப்ரா காய்' . இந்த தொடர் 6 அத்தியாயங்களை கொண்டது. அதில் 5 அத்தியாயங்களை நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது இந்த தொடரின் 6 வது அத்தியாயத்தின் 3 பாகம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. தற்காப்பு கலையான கராத்தே கலையை அடிப்படையாக கொண்டு இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

    'மனோராஜ்யம்'

    மனோராஜ்யம் என்பது ஒரு மலையாளத் திரைப்படம். ரஷீத் பரக்கல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கோவிந்த் பத்மசூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இது ஒரு குடும்பத் திரைப்படமாகும். இந்த படம் நாளை மனோரமா மேக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    'மை ஃபால்ட் லண்டன்'

    மை பால்ட் லண்டன், என்பது ரொமாண்டிக் கதைக்களத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் படமாகும். இந்த படத்தை டானி கிர்ட்வுட் மற்றும் சார்லோட் பாஸ்லர் இயக்கியுள்ளர். இப்படத்திற்கான கதையை மெலிசா ஆஸ்போர்ன் எழுதியுள்ளார். இது 2023-ம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான 'மை பால்ட்' படத்தின் தழுவலாகும். இப்படம் நாளை அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆஹா ஓடிடி தளத்தின் புதிய வெப் தொடராக மதுரை பையனும் சென்னை பொண்ணும் உருவாகியுள்ளது .
    • இத்தொடரை விக்னேஷ் பழனிவேல் இயக்கியுள்ளார்.

    ஆஹா ஓடிடி தளத்தின் புதிய வெப் தொடராக மதுரை பையனும் சென்னை பொண்ணும் உருவாகியுள்ளது . இதில் பிரபல தொகுப்பாளர் ஏஞ்சலின் மற்றும் கண்ணா ரவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்தொடர் காதல் தினத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது.

    இத்தொடரை விக்னேஷ் பழனிவேல் இயக்கியுள்ளார். சஞ்சய் தயாரித்துள்ளார். எம்மாதிரியான் காதல் கதையாக அமையவுள்ளது என பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

    இத்தொடரில் தற்பொழுது 3 எபிசோடுகளை வெளியிட்டுள்ளன. புது புது எப்பிசோசுகள் வாரந்தோறூம் வெள்ளிக்கிழமை வெளியாகும் என ஆஹா நிறுவனம் அறிவித்துள்ளது. தொடரின் ஸ்னீக் பீக் காட்சி தற்பொழுது வெளியிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பயனர்களுக்கு 149 ரூபாய் முதல் பிளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
    • சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளையும் இந்த தளம் ஸ்ட்ரீம் செய்யும்.

    ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒன்றிணைந்து ஜியோ ஹாட்ஸ்டார் என்ற புதிய ஸ்ட்ரீமிங் தளத்தை இன்று [பிப்ரவரி 14] அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் தி வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் கூட்டு முயற்சியாக இந்த ஜியோ ஹாட்ஸ்டார் தொடங்கப்பட்டுள்ளது. இதில்  ரிலையன்ஸ் 60% பங்குகளை வைத்துள்ளது. டிஸ்னி 37% பங்குகளை வைத்துள்ளது.

    இரண்டு தளங்களிலும் இருந்த ஓடிடி கண்டென்ட்டுகளை இனி ஒரே தளத்தில் பார்க்கலாம். தற்போது இதில் இருக்கும் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், லைவ் ஷோக்கள் போன்றவற்றை இலவசமாகப் பார்க்கலாம். இடையில் வரும் விளம்பரங்களை தவிர்க்க சந்தா கட்ட வேண்டியிருக்கும்.

    இரு தளங்களிலும் ஏற்கனவே சந்தா கட்டியுள்ள பயனர்களுக்கு அவர்களின் சந்தா காலம் முடியும் வரை இந்த சேவை தொடரும். ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் புதிதாக சந்தா கட்ட தேவையில்லை.

    ஜியோ சினாவில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாகப் பார்க்க முடியும். ஆனால் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஐபிஎல் போட்டிகள் சந்தா முறைக்கு மாற்றப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. முதல் சில நிமிடங்களுக்கு பின் வீடியோ லாக்- இன் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. சந்தா செலுத்தினால் மட்டுமே விளம்பரம் இன்றி அதிக குவாலிட்டியில் ஐபிஎல் போட்டிகளை பார்க்க முடியும் என்பதால் ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

     

    புதிய பயனர்களுக்கு 149 ரூபாய் முதல் பிளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மொபைல் வெர்ஷனுக்கு ரூ. 149, சூப்பர் திட்டத்திற்கு ரூ. 299 மற்றும் விளம்பரம் இல்லாத பிரீமியம் திட்டத்திற்கு ரூ. 349 என மூன்று மாத கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

    ஜியோ ஹாட்ஸ்டாரில் கூடுதலாக NBCUniversal Peacock, Warner Bros, Discovery, HBO மற்றும் Paramount ஆகிய சேனல்களின் படங்கள் மற்றும் தொடர்கள் இதில் காணக்கிடைக்கும்.

    மேலும் IPL, WPL மற்றும் ICC நிகழ்வுகள் போன்ற முக்கிய கிரிக்கெட் போட்டிகளையும், பிரீமியர் லீக், விம்பிள்டன், புரோ கபடி மற்றும் ISL போன்ற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளையும் இந்த தளம் ஸ்ட்ரீம் செய்யும். 

     

    • புது முகங்கள் ரங்கா, ரியா நடித்துள்ள திரைப்படம் தென் சென்னை
    • ஜென் மார்டின், இந்த படத்திற்க்கு பின்னனி இசை அமைத்துள்ளார்.

    புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் "தென் சென்னை"

    அறிமுக இயக்குநர் ரங்கா இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என பல முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

    இதில் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்து நடிகரான நிதின் மெஹ்தாவும், இளங்கோ குமனனும் பிரதான பாத்திரங்களில் நடித்தனர். மேலும் வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி மற்றும் பலர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    ஜென் மார்டின், இந்த படத்திற்க்கு பின்னனி இசை அமைத்துள்ளார். குறைந்த அளவு திரையரங்குகளிள் வெளிவந்த இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

    படம் பார்த்த அனைவரும் கதை, திரைக்கதை, அனைவரின் நடிப்பு மற்றும் புதிய படக்குழுவினரின் முயற்சிகளுக்கு பெரும் பாராட்டைத் தந்தனர்.

    இந்த நிலையில் இப்படம் டென்ட்கொட்டா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு

    • நந்தா கிஷோர் எமானி இயக்கத்தில், நிவேதா தாமஸ் நடித்த 35 சின்ன விஷயம் இல்ல திரைப்படத்தில் நடித்தார்
    • இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வெளியானது.

    நந்தா கிஷோர் எமானி இயக்கத்தில், நிவேதா தாமஸ் நடித்த 35 சின்ன விஷயம் இல்ல திரைப்படம் ரசிகர்களை கவர்ந்த மிகுந்த தாக்கமுள்ள குடும்பக் கதையாகும். இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தமிழின் முன்னணி ஓடிடி தளமான SUN NXT-இல் ஸ்ட்ரீமாகிறது!

    ஒரு நடுத்தர குடும்பத்து இளம் தாய் தனது மகன் படிப்பில் திணறுகையில், அவனை பாஸ் மார்க்கான 35 மதிப்பெண்களைப் பெற வைக்க முயற்சிக்கிறாள். இது வீட்டின் இயல்பான வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது. அந்த குடும்பம் சந்திக்கும் சவால்களும், அதைத் தீர்க்க அவர்கள் போராடுவதும், வெகு சுவாரஸ்யமான திரைக்கதையால் சொல்லப்பட்டுள்ளது. எளிய நடுத்தர வர்க்கம் தங்கள் வாழ்க்கையைத் திரையில் பார்க்கும்படி ஒரு அசத்தலான ஃபேமிலி டிராமாவாக உருவாகியிருந்த இப்படம் திரையரங்குகள் மற்றும் விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    நடிகை நிவேதா தாமஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் பிரியதர்ஷி, விஸ்வதேவ் ரச்சகொண்டா, கௌதமி, பாக்யராஜ், கிருஷ்ண தேஜா, அருண் தேவ், அபய், அனன்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு இசையமைப்பாளர் விவேக் சாகர் இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக T C பிரசன்னா பணியாற்றியுள்ளார். பிரின்சி வைத் காஸ்ட்யூம் டிசைன் செய்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை லதா நாயுடு செய்துள்ளார்.

    "35 சின்ன விஷயம் இல்ல" திரைப்படத்தை SUN NXT தளத்தின் மூலம் அனைவரும் பார்த்து ரசியுங்கள்!!

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு

    • ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'குடும்பஸ்தன்'.
    • தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'குடும்பஸ்தன்'. இத்திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இரண்டாவது வாரம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

    தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இது நகைச்சுவையான பொழுதுபோக்கு கொண்ட குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது.

    ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக இப்படம் கையாண்டுள்ளது.

    குருசோமசுந்தரம் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு வைசாக் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை ஜீ5 தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேப்போல் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. திரைப்படம் மூன்றாவது வாரம் கடந்தும் திரையரங்கிள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'.
    • வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் மலையாள நடிகர் ஷான் நிகம் நடிப்பில் வெளியான படம் 'மெட்ராஸ்காரன்'.

    திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

    'கேம் சேஞ்சர்'

    ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'. இதில், இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரியான ராம் சரணுக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கும் இடையே நடக்கும் அதிகார பிரச்சினையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. கேம் சேஞ்சர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

    'மெட்ராஸ்காரன்'

    இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் மலையாள நடிகர் ஷான் நிகம் நடிப்பில் வெளியான படம் 'மெட்ராஸ்காரன்'. இந்த படத்தில் கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் ஜெகதீஷ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படம் ஆஹா மற்றும் சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'தி கிரேட்டஸ்ட் ரைவல்ரி இந்தியா பாகிஸ்தான்'

    இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டிகளை மையப்படுத்திய புதிய ஆவணப்படம் ஒன்றை நெட்பிளிக்ஸ் தயாரித்து உள்ளது. இந்த ஆவணப்படத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளில் விளையாடிய முன்னாள் வீரர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டிகளும் சில இடங்களில் காட்சியாக வைக்கப்படுகின்றன. இந்த ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'விவேகானந்தன் வைரலானு'

    விவேகானந்தன் வைரலானு என்பது மலையாள நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். இதில் ஷைன் டாம் சாக்கோ, ஸ்வாசிகா விஜய், கிரேஸ் ஆண்டனி, மரீனா, ஜானி ஆண்டனி ஆகியோர் நடித்துள்ளனர். கமல் இயக்கிய இந்தப் படத்தை நெடியத் நசீப், பி.எஸ்.செல்லிராஜ், கமாலுதீன் சலீம் ஆகியோர் தயாரித்துள்ளனர். அரசு ஊழியரான விவேகானந்தன், தனது வாழ்க்கையில் வரும் ஐந்து பெண்களுடன் இணைந்து செல்லும் கதை இது. இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி.யில் வெளியாகி உள்ளது.

    'டாகு மகாராஜ்'

    பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் 'டாகு மகாராஜ்'. இப்படத்தில் பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் சாந்தினி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். எஸ் தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வருகிற 9-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.

    Mrs

    ஆர்த்தி கடவ் இயக்கத்தில் சான்யா மல்ஹோத்ரா, கன்வல்ஜித் சிங் மற்றும் நிஷாந்த் தாஹியா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ளது Mrs திரைப்படம் . இப்படம் மலையாள திரைப்படமான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை.
    • திரைப்படம் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். திரைப்படம் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    குறிப்பாக இத்திரைப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி நெபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'.
    • ராம் சரண் இப்படத்தில் 2 கதாப்பாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

    இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த மாதல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    ராம் சரண் இப்படத்தில் 2 கதாப்பாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். படத்தின் இசையை எஸ்.தமன் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உன்னி முகுந்தன் நடிப்பில் ஹனீஃப் அதேனி இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது மார்கோ திரைப்படம்.
    • திரைப்படம் இதுவரை 100 கோடி ரூபாய்-க்கு மேல் வசூலித்துள்ளது.

    மலையாள நடிகரான உன்னி முகுந்தன் நடிப்பில் ஹனீஃப் அதேனி இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது மார்கோ திரைப்படம். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்திய சினிமாவில் இப்படி ஒரு ஆக்ஷன் திரைப்படம் வரவில்லை என மக்கள் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தனர்.

    படத்தின் பின்னணி இசை ரவி பஸ்ருர் மேற்கொடுள்ளார். இப்படத்தில் உன்னி முகுந்தனுடன் யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ் , அபிமன்யூ மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படம் இதுவரை 100 கோடி ரூபாய்-க்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் படத்தின் வெற்றியை தொடர்ந்து மார்கோ படத்தின் அடுத்த பாகம் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்கோ 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் வெளியானதுஎமக்குத் தொழில் ரொமான்ஸ் திரைப்படம்
    • இசையமைப்பாளர் நிவாஸ் K பிரசன்னா இசையமைத்துள்ளார்.

    அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாகத் திரையரங்குகளில் வெற்றியைக் குவித்த படம் எமக்குத் தொழில் ரொமான்ஸ்.

    இப்படத்தின் ஒடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில், இப்படம் தமிழின் முன்னணி ஓடிடி தளமான SUN NXT ஓடிடி தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீமாகிறது.

    ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என, அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக, இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகியிருந்த இப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    நடிகர் அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அழகம் பெருமாள், பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், விஜய் வரதராஜ், படவா கோபி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் K பிரசன்னா இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக ஜெரோம் ஆலன் பணியாற்றியுள்ளார். பாடாலாசிரியர் மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார். பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைன் செய்துள்ளார்.

    "எமக்குத் தொழில் ரொமான்ஸ்" திரைப்படத்தை SUN NXT தளத்தின் மூலம் அனைவரும் பார்த்து ரசியுங்கள்!!

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திரிஷா மற்றும் டோவினோ தாமஸ் இணைந்து நடித்துள்ள படம் 'ஐடென்டிட்டி'.
    • சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் 'புஷ்பா 2'.

    ஓடிடியில் வெளியாகும் பிரபல நடிகர்களின் படங்கள் முதல் இளம் நடிகர்களின் படங்கள் வரை அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்புக்கு இணையாக ஓடிடியில் வரவேற்பு கிடைக்கிறது. இந்த வாரம் ஓடிடி தளங்களில் என்ன திரைப்படங்களை பார்க்கலாம் என இந்த செய்தியில் காணலாம்.

    'புஷ்பா 2'

    சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் 'புஷ்பா 2'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் உலகளவில் இதுவரை 1800 கோடி ரூபாய் மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்படத்தின் ரீலோடட் வெர்ஷன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'ஐடென்டிட்டி'

    திரிஷா மற்றும் டோவினோ தாமஸ் இணைந்து நடித்துள்ள படம் 'ஐடென்டிட்டி'. இந்த படத்தில் வினய் ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை அகில் பால், அனஸ்கான் இயக்கியுள்ளனர். கடந்த 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு கொலையாளியை கண்டுப்பிடிக்கும் கிரைம் திரில்லராக இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இப்படம் ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'எமக்கு தொழில் ரொமான்ஸ்'

    அறிமுக இயக்குனர் பாலாஜி கேசவன் இயகத்தில் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்'. அவந்திகா மிஸ்ரா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என ரொமான்ஸ் காமெடி திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இப்படம் சன் நெக்ஸ்ட், டென்ட்கொட்டா, சிம்பிலி சவுத் ஆகிய ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளது.

    'பயாஸ்கோப்'

    சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் கடந்த 3-ந் தேதி வெளியான படம் 'பயாஸ்கோப்'. இப்படத்தை 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி ஆகியோர் தயாரித்துள்ளனர். முற்றிலும் கிராமத்து புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜும், சேரனும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். 'வெங்காயம்' என்ற படம் எப்படி உருவானது என்ற உண்மை சம்பவ பின்னணியே 'பயாஸ்கோப்' படத்தின் கதை. இந்த நிலையில் இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'தோழர் சேகுவேரா'

    சத்யராஜ் நடிப்பில் அனிஷ் எட்மண்ட் பிரபு தயாரிப்பில் அலெக்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தோழர் சேகுவேரா. இப்படத்தில் மொட்டை ராஜேந்தர், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அதிகார வர்கத்திற்கும் தொழிலாளி வர்கதுக்கும் இடையே நடக்கு போர் மற்றும் பாகுபாடுகளை பேசக் கூடிய படமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் இப்படம் டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'மோனா 2'

    மோனா என்பது குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட ஹாலிவுட் அனிமேஷன் படம் மோனா. வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்த இதன் முதல் பாகம் 2016-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இந்த பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் மவ்வி கதாபாத்திரத்தில் குத்துச்சண்டை வீரர் ராக் நடித்துள்ளார். கடலில் நடக்கும் சாகங்கள் இடம் பெற்றுள்ள இப்படம் கடந்த 27-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'தி பயர் இன்சைட்'

    தி ஃபயர் இன்சைட் என்பது ரேச்சல் மோரிசன் இயக்கிய குத்துச் சண்டை படமாகும். இது கிளாரெசா ஷீல்ட்ஸின் என்பவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பிரையன் டைரி ஹென்றி, ஆடம் கிளார்க் ஆகியோருடன் ரியான் டெஸ்டினி கதாநாயகனாக நடித்துள்ளார். பாக்ஸ் ஆபிஸில் இப்படம் 8.1 மில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் இப்படம் கடந்த 28-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'செவப்பி'

    எம்.எஸ்.ராஜா எழுதி இயக்கத்தில் கிராமத்தில் வசிக்கும் ஐந்து வயது சிறுவனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை வைத்து உருவாகி இருக்கும் படம் 'செவப்பி'. இதை ராஜேஷ்வர் காளிசாமி, பிரசன்னா பாலச்சந்திரன் தயாரித்துள்ளனர். ஒரு கோழியை நேசத்தோடு வளர்க்கிறான் சிறுவன். ஒரு கட்டத்தில் அதைப் பிரிய நேரிடுகிறது. இதனால் ஒன்றாக வாழும் அந்தக் கிராமம் இரண்டாகப் பிரிந்து மோதிக்கொள்கிறது. இறுதியில் அந்தச் சிறுவனும் கோழியும் ஒன்று சேர்ந்தார்களா? என்பது கதை. இப்படம் நாளை சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    இந்த வார ஓடிடியில் வெளியான திரைப்படங்களை கண்டு மகிழுங்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×