என் மலர்
கிசுகிசு
பல தடவை காதலில் தோல்வி அடைந்த மூன்றெழுத்து நடிகர் தற்போது, ஒரு நடிகையுடன் பழக ஆரம்பித்து இருக்கிறாராம். நடிகையின் பெயரும் மூன்றெழுத்தில்தான் இருக்கிறதாம்.
பல தடவை காதலில் தோல்வி அடைந்த மூன்றெழுத்து நடிகர் தற்போது, ஒரு நடிகையுடன் பழக ஆரம்பித்து இருக்கிறாராம். நடிகையின் பெயரும் மூன்றெழுத்தில்தான் இருக்கிறதாம். சொந்த ஊர், கேரளா. அவருடைய முகவசீகரமும், மென்மையாக பழகும் சுபாவமும் நடிகருக்கு மிகவும் பிடித்து இருக்கிறதாம். இதேபோல் ‘ஒளிவு மறைவு இல்லாத’ நடிகரின் சுபாவம், அந்த நடிகைக்கு ரொம்ப பிடித்து இருக்கிறதாம்.
இருவரும் ஒரு நட்சத்திர ஓட்டலில் தினமும் சந்தித்து காதல் வளர்த்து வருகிறார்களாம். இந்த காதலாவது கல்யாணத்தில் முடியுமா? என்று நெருங்கிய சகாக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகிறார்களாம்.
சமீபத்தில் துப்பறிந்த இயக்குனர் அடுத்து ஒரு வாரிசு நடிகரை வைத்து படம் இயக்க இருக்கிறாராம். இந்த வாரிசு நடிகருக்கு ஜோடியாக 2 நடிகைகள் நடிக்கிறார்களாம்.
சமீபத்தில் துப்பறிந்த இயக்குனர் அடுத்து ஒரு வாரிசு நடிகரை வைத்து படம் இயக்க இருக்கிறாராம். இந்த வாரிசு நடிகருக்கு ஜோடியாக 2 நடிகைகள் நடிக்கிறார்களாம். அதில் ஒரு வேடத்துக்காக, மலரான டீச்சரை அணுகினார்களாம். அவர் எடுத்ததும், “ஹீரோ யார்?” என்று கேட்டு, மூன்று கோடி கொடுத்தால் நடிக்கிறேன் என்று ஒரு குண்டை தூக்கி போட்டாராம்.
இவ்வளவு அதிக சம்பளமா? அது எங்களுக்கு கட்டுப்படியாகாது என்று படக்குழுவினர் திரும்பி விட்டார்கள்.
நான் அந்த படத்தில் நடிக்க விரும்பவில்லை. அதனால்தான் அதிக சம்பளம் கேட்டு, அவர்களை திரும்பி போக வைத்தேன் என்கிறாராம் நடிகை
பெரிய நம்பர் நடிகை சமீப காலமாக நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடிக்க விருப்பம் தெரிவித்து வருகிறாராம்.
பெரிய நம்பர் நடிகை சமீப காலமாக நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடிக்க விருப்பம் தெரிவித்து வருகிறாராம். இதற்காக ஒரு குழுவை வைத்து கதைக்கேட்டு வருகிறாராம். இதில் போலீஸ் வேடத்தில் நடிக்க நடிகையிடம் கதை சொல்லியிருக்கிறார்களாம். இதற்கு நடிகை மறுத்து விட்டாராம்.
சமீபத்தில் ஜோவான நடிகை போலீஸ் அதிகாரியாக நடித்த படம் திரைக்கு வந்து நல்ல பெயர் பெற்று தந்ததாம். அவருடன் போட்டி போடுகிற மாதிரி நடிக்க நான் விரும்பவில்லை என்று கூறி மறுத்திருக்கிறாராம்.
இரண்டு எழுத்து நடிகர் வந்த புதிதில் பல நல்ல பெயர்களை எடுத்து வந்தாராம். பின்னர், பல சர்ச்சைகளில் சிக்கியதால் எந்த பட நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளாமல் இருந்து வருகிறாராம்.
இரண்டு எழுத்து நடிகர் வந்த புதிதில் பல நல்ல பெயர்களை எடுத்து வந்தாராம். பின்னர், பல சர்ச்சைகளில் சிக்கியதால் எந்த பட நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளாமல் இருந்து வருகிறாராம். இவருக்கும் தெரு நடிகைக்குக்கும் காதல் வந்து, பின்னர் இருவரும் முறித்துக் கொண்டார்களாம்.
நடிகரை பிரிந்த பின்பு சென்னை பக்கம் வராமல் ஆந்திராவிலேயே தங்கி நடித்து வருகிறாராம் நடிகை. நடிகையை பிரிந்த துயர், அந்த இரண்டெழுத்து நடிகரை ரொம்பவே பாதித்து விட்டதாம். தாடி வளர்த்து, தன்னிலை மறந்து, அவள் பறந்து போனாளே... என்று சோக கீதம் பாடிக்கொண்டிருக்கிறார்!
காதலில் விழுந்த நடிகை ஒரு சில நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தாராம். இவர் நடித்த படங்கள் இவருக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தாலும் பட வாய்ப்புகள் அதிகம் வரவில்லையாம்.
காதலில் விழுந்த நடிகை ஒரு சில நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தாராம். இவர் நடித்த படங்கள் இவருக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தாலும் பட வாய்ப்புகள் அதிகம் வரவில்லையாம். தற்போது நடிகையை இரண்டாவது, மூன்றாவது கதாநாயகியாக அழைக்கிறார்களாம்.
இந்நிலையில் நடிகைக்கு இணைய தள தொடரில் நடிக்க அழைத்தார்களாம். நடிகை நடிக்க மறுத்திருக்கிறாராம். பின்னர் நண்பர்கள் இனிமேல் இணையதளம் தான், பெரிய திரையை நம்பாதே என்று கூறியிருக்கிறார்களாம். இதனால், நடிகை இணைய தள தொடரில் நடிக்க சம்மதித்திருக்கிறாராம்.
நடிகை ஒருவர் அடுத்தடுத்து உண்மைகளை வெளிப்படையாக, துணிச்சலாக தெரிவித்து வருவதால் கோலிவுட், டோலிவுட் பாலிவுட் என இந்திய சினிமாவிலே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Gossip
இந்திய கிரிக்கெட் அணியில் கூலான கேப்டனின் பெயரில் வெளியான படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அந்த நடிகை பின்னர் உச்ச நடிகருடன் ஒரு படத்தில் நடித்து பிரபலமானாராம்.
அவ்வப்போது தமிழ் சினிமாவில் தலைகாட்டும் அந்த நடிகை பெரும்பாலும் இந்தி படங்களிலேயே அதிக அளவில் நடித்து வருகிறாராம். சமீபத்தில் கூட அந்த நாயகி நடித்த ஒரு சமூக படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், பீச்சில் தனது நண்பருடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படத்தை ரசிகர்கள் கிண்டல் செய்த போதிலும், அவர்களுக்கு பதிலளித்து வந்தார்.
பின்னர், திரையுலகில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் இருக்கிறது என்றும், நடிக்க வாய்ப்பு தேடும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினாராம்.

கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை என்றும், கதைக்கு தேவைப்பட்டால் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றும் கூறிய அந்த நடிகை சமீபத்தில் கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தன்னிடம் தவறாக நடக்க முயன்ற நடிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்ததாகவும், அவர் பிரபலமான நடிகர் என்றும் கூறி வந்தாராம்.
இவ்வாறாக நாயகி உண்மைகளை போட்டுடைப்பதால் கோலிவுட், டோலிவுட் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Gossip
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆப் நடிகை, தமிழில் உச்ச நடிகருடன் ஜோடி போட்டு மிகவும் பிரபலமானாராம்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆப் நடிகை, தமிழில் உச்ச நடிகருடன் ஜோடி போட்டு மிகவும் பிரபலமானாராம். இவர் மனதில் பட்டதை அப்படியே பேசி வருகிறாராம். சமீபத்தில் தென்னிந்திய டைரக்டர்கள் மீது பாலியல் புகார் சொல்லி, சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தினாராம்.
இதனால் இயக்குனர்கள் அனைவரும் நடிகை மீது கோபமாக இருக்கிறார்களாம். அவருக்கு இனிமேல் யாரும் வாய்ப்பு கொடுப்பதில்லை என்று அனைவரும் ஒருமனதாக ரகசிய முடிவு எடுத்து இருக்கிறார்களாம்.
இந்த நிலையில், அந்த நடிகை தன்னை நீச்சல் உடையில் படம் எடுத்து எல்லா முன்னணி கதாநாயகர்களுக்கும், டைரக்டர்களுக்கும் அனுப்பியிருக்கிறாராம்.
பெரிய நம்பர் நடிகை முதலில் மூன்றெழுத்து நடிகர் மீது காதல்வசப்பட்டாராம். அந்த காதல் முறிந்ததும், ஆட்ட நாயகனை பிடித்தாராம்.
பெரிய நம்பர் நடிகை முதலில் மூன்றெழுத்து நடிகர் மீது காதல்வசப்பட்டாராம். அந்த காதல் முறிந்ததும், ஆட்ட நாயகனை பிடித்தாராம். அவருடன் திருமணம் வரை நெருங்கி கடைசி நேரத்தில், அந்த காதலும் முறிந்து போனதாம். டைரக்டரை பிடித்து அவரை பிரபலமாக்கி திருமணம் செய்து கொள்கிறேன், பார் என்று ஆட்ட நாயகனிடம் அவர் சவால் விட்டாராம்.
அதன்படி, இரண்டு சாமிகளின் பெயர்களை கொண்ட இளம் டைரக்டரை பிடித்து தன்வசப்படுத்தி, அவரையே திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்து இருக்கிறாராம். அதற்கு முன்பாக, டைரக்டரை கதாநாயகனாக்கும் முயற்சியில், பெரிய நம்பர் நடிகை மிக தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறாராம். இதற்காக கதையும் கேட்டு வருகிறாராம்.
தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்த டீச்சர் நடிகை மீது புகார் பட்டியலை வாசிக்கிறார்களாம் அவருடன் நடித்த ஹீரோக்கள்.
தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்த டீச்சர் நடிகை மீது புகார் பட்டியலை வாசிக்கிறார்களாம் அவருடன் நடித்த ஹீரோக்கள். நடிகை அறிமுகமான படத்தை பார்த்த பல நடிகர்கள் அவரை கமிட் பண்ண எவ்வளவோ முயற்சித்தார்களாம். படிப்புதான் முக்கியம் என்று போனவர் இப்போதுதான் வந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகி இருக்கிறாராம்.
நடிகை நடிப்பைத் தவிர வேறு எந்த கெமிஸ்ட்ரிக்கும் இடம் கொடுக்க மாட்றாராம். இதனால் தான் நடிகர்களுடன் பிரச்சனை ஏற்படுகிறதாம். இதனால் பெரிய ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி போடும் வாய்ப்பு மிஸ் ஆகும் என்று பலரும் கூறுகிறார்களாம். ஆனால் நடிகை பரவாயில்லை என்கிறாராம்.
தனி ஒருவராக வாழ்ந்து வரும் சாமி நடிகருக்கு தன்னை யாரும் சரியாக பயன்படுத்தவில்லையே... என்று வருத்தமாம்.
தனி ஒருவராக வாழ்ந்து வரும் சாமி நடிகருக்கு தன்னை யாரும் சரியாக பயன்படுத்தவில்லையே... என்று வருத்தமாம். ரீஎன்ட்ரி மூலம் சிறந்த படங்களில் நடிப்பார் என்று எதிர்ப்பார்த்தால், சரியான படங்கள் கிடைக்காமல் இருக்கிறதாம். இதனால், அவர் ஒரு புதிய முடிவுக்கு வந்து இருக்கிறாராம்.
அதாவது சொந்த பட நிறுவனத்தை தொடங்கி படம் தயாரிக்க இருக்கிறாராம். மேலும் அந்த படத்தில் தானே கதாநாயகனாக நடிப்பது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறாராம்!
டிவியில் இருந்து வந்திருக்கும் மான் நடிகையை இயக்குனர்கள் ஒப்பந்தம் செய்ய தயங்குகிறார்களாம். காரணம் நடிகைக்கு ஒரு காதலர் இருப்பதுதானாம்.
டிவியில் இருந்து வந்திருக்கும் மான் நடிகையை இயக்குனர்கள் ஒப்பந்தம் செய்ய தயங்குகிறார்களாம். காரணம் நடிகைக்கு ஒரு காதலர் இருப்பதுதானாம். அந்த நடிகைக்கு வெளிநாட்டில் ஒரு காதலர் இருப்பதாக ஒரு செய்தி ஓடுகிறதாம். இப்போதைக்கு திருமணம் இல்லை என்று சொல்லும் நடிகை காதலர் செய்தியை மட்டும் மறுக்கவில்லையாம். எனவே இந்த விஷயத்தில் இயக்குனர்களுக்கு சந்தேகம் அதிகரிக்கிறதாம்.
படம் பாதியில் இருக்கும்போது திருமணம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று பயந்தே இயக்குனர்கள் அவரை கமிட் பண்ண யோசிக்கிறார்களாம்.
தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் சுமார் மூஞ்சி நடிகரை, பல இயக்குனர்கள் அணுகி கதை சொல்லி வருகிறார்களாம்.
தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் சுமார் மூஞ்சி நடிகரை, பல இயக்குனர்கள் அணுகி கதை சொல்லி வருகிறார்களாம். இதுவரை சளிக்காமல் கேட்ட நடிகர், தற்போது கதை கேட்க மறுக்கிறாராம்.
சம்பளம் எத்தனை கோடி கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று சொல்லும் இயக்குனர்களை, நடிகர் பக்கத்தில் அழைத்து பதற்றம் இல்லாமல் பேசி, திருப்பி அனுப்புகிறாராம். வெற்றி பெற்ற இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிப்பது என்பதில், அவர் உறுதியாக இருக்கிறாராம்!






