என் மலர்
சினிமா

உண்மைகளை போட்டுடைக்கும் நடிகை - பரபரப்பில் சினிமா உலகம்
நடிகை ஒருவர் அடுத்தடுத்து உண்மைகளை வெளிப்படையாக, துணிச்சலாக தெரிவித்து வருவதால் கோலிவுட், டோலிவுட் பாலிவுட் என இந்திய சினிமாவிலே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Gossip
இந்திய கிரிக்கெட் அணியில் கூலான கேப்டனின் பெயரில் வெளியான படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அந்த நடிகை பின்னர் உச்ச நடிகருடன் ஒரு படத்தில் நடித்து பிரபலமானாராம்.
அவ்வப்போது தமிழ் சினிமாவில் தலைகாட்டும் அந்த நடிகை பெரும்பாலும் இந்தி படங்களிலேயே அதிக அளவில் நடித்து வருகிறாராம். சமீபத்தில் கூட அந்த நாயகி நடித்த ஒரு சமூக படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், பீச்சில் தனது நண்பருடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படத்தை ரசிகர்கள் கிண்டல் செய்த போதிலும், அவர்களுக்கு பதிலளித்து வந்தார்.
பின்னர், திரையுலகில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் இருக்கிறது என்றும், நடிக்க வாய்ப்பு தேடும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினாராம்.

கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை என்றும், கதைக்கு தேவைப்பட்டால் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றும் கூறிய அந்த நடிகை சமீபத்தில் கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தன்னிடம் தவறாக நடக்க முயன்ற நடிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்ததாகவும், அவர் பிரபலமான நடிகர் என்றும் கூறி வந்தாராம்.
இவ்வாறாக நாயகி உண்மைகளை போட்டுடைப்பதால் கோலிவுட், டோலிவுட் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Gossip
Next Story






