என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்தாலும், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானாராம் மரிய நடிகை. ஆனால் நடிகை, தமிழ் படத்தில் நடிக்க மறுத்து வருகிறாராம்.
    தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்தாலும், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானாராம் மரிய நடிகை. ஆனால் நடிகை, தமிழ் படத்தில் நடிக்க மறுத்து வருகிறாராம். சமீபத்தில் இயக்குனர் ஒருவர் நடிகையை அணுகி கதை சொல்லியிருக்கிறாராம். கதை நன்றாக இருக்கிறது. ஆனால், தமிழ் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.

    ஒல்லி நடிகருடன் கடல் தொடர்பான படத்தில் நடிகை நடித்தபோது இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாம். மேலும் ஒல்லி நடிகர் ஒரு காட்சியில் வேண்டுமென்றே நடிகையை எட்டி உதைத்தாராம். இதுபோன்ற டார்ச்சர்களால் தான் நடிகை தமிழ் பக்கம் வர பயப்படுகிறாரோ என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
    சூப்பர் நடிகர் ஸ்டைலை பலரும் பின் பற்றி வருகிறார்கள். அவருடைய ஸ்டைலுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
    சூப்பர் நடிகர் ஸ்டைலை பலரும் பின் பற்றி வருகிறார்கள். அவருடைய ஸ்டைலுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவருடைய ஸ்டைலை பின்பற்றி எதிர்நீச்சல் போட்ட காமெடி நடிகர் ஒரு வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறாராம். இந்த வீடியோவை பார்த்து பலரும் பாராட்டுவார்கள் என்று நினைத்தாராம் காமெடி நடிகர்.

    ஆனால், அந்த வீடியோவில் அவர் செய்த பித்தாலாட்டத்தை ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். இதனால், பலரும் காமெடி நடிகரை கலாய்த்து வருகிறார்களாம். 
    கடற்கரையில் நடந்த போராட்டத்தில் பெயர் பெற்றவர், பெரிய முதலாளி வீட்டில் நுழைந்து தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டாராம்.
    கடற்கரையில் நடந்த போராட்டத்தில் பெயர் பெற்றவர், பெரிய முதலாளி வீட்டில் நுழைந்து தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டாராம். இதிலிருந்து அவரை பலரும் கலாய்த்து வந்தார்களாம். பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம். அப்போதும் இவர் நடிகையாகி விட்டாரா என்று கலாய்க்க ஆரம்பித்தார்களாம். 

    தற்போது மாணவியை வைத்து உருவாகும் படத்தில் நடிக்கிறாராம். இதன் போஸ்டரும் வெளியான நிலையில், நடிகையை வைத்து பயங்கரமாக மீம்ஸ் உருவாக்கி கலாய்த்து வருகிறார்களாம். 
    நடிகர்கள் சிலர் ஒரு படம் ஓடிவிட்டால், அடுத்த படத்திற்கு உடனே சம்பளத்தை அதிகமாக உயர்த்தி காணாமல் போய் வருகிறார்களாம். அந்த வரிசையில் அட்ட நடிகரும் தற்போது இணைந்திருக்கிறாராம்.
    நடிகர்கள் சிலர் ஒரு படம் ஓடிவிட்டால், அடுத்த படத்திற்கு உடனே சம்பளத்தை அதிகமாக உயர்த்தி காணாமல் போய் வருகிறார்களாம். அந்த வரிசையில் அட்ட நடிகரும் தற்போது இணைந்திருக்கிறாராம். இவர் நடித்த படம் பெரிய ஹிட் கூட கொடுக்கவில்லையாம். ஆனால் வரும் தயாரிப்பாளர்களிடம் ஒன்றரை கோடி கேட்டு அலற விடுகிறாராம். தயாரிப்பாளர்களும், நடிகரை வைத்து படம் எடுக்க தயங்கி வருகிறார்களாம்.
    தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான வீர நடிகை, தற்போது விளம்பரப் படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறாராம்.
    தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான வீர நடிகை, தற்போது விளம்பரப் படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறாராம். சமீபத்தில் கன்னட மொழியில் பெரிய ஹீரோவுடன் சேர்ந்து விளம்பரப் படத்தில் நடித்திருக்கிறாராம். இதைப்பார்த்த அனைவரும் ஜோடி நன்றாக இருக்கிறது என்று புகழ்ந்தார்களாம்.

    பின்னர், கன்னட மொழி படங்களில் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டதற்கு, இந்த பெரிய ஹீரோ, கதாநாயகனாக நடித்தால் அவருடன் நடிக்க தயார் என்று நிபந்தனை போட்டிருக்கிறாராம்.
    பிகினி அணிந்தபடி தனது நண்பருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகையை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் திட்டிதீர்த்து வருகிறார்களாம். #Gossip
    பிகினி அணிந்தபடி தனது நண்பருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகையை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் திட்டிதீர்த்து வருகிறார்களாம்.

    தமிழ் சினிமாவில் பிரகாசமான வில்லன் நடிகரின் படத்தில் அறிமுகமான அந்த நடிகை பின்னர் சூப்பரான உச்ச நட்சத்திரத்துக்கு மனைவியாக நடித்தாராம். அதே நேரத்தில் அவ்வப்போது தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வரும் அந்த நாயகி, அவ்வப்போது சர்ச்சை படங்களிலும் நடித்து திட்டு வாங்கினாராம்.

    இந்நிலையில், அந்த நாயகி நடிப்பில் சமீபத்தில் வெளியான பாலிவுட் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் அந்த பட வெற்றியை நாயகி தனது நண்பர்களுடன் பீச்சில் கொண்டாடினாராம். அப்போது பிகினி அணிந்து கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டாராம். 



    இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், திருமணம் ஆன இந்திய பெண், நண்பர்கள் முன்பு இப்படித்தான் நீச்சல் உடை அணிவதா? திருமணமான ஒரு பெண் செய்யும் காரியமா இது? என திட்டித் தீர்த்துவிட்டார்களாம். இதைப்பற்றி கவலைப்படாத நாயகி, ரசிகர்களின் விமர்சனத்துக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாகவே இருக்கிறாராம். #Gossip

    சின்ன நம்பர் நடிகை நடிக்க வந்து பல ஆண்டுகளாகிவிட்டதாம். தொடர்ந்து ஹீரோயினாக நடிக்கும் அவர் சீனியர், இளம் நடிகர்களுடன் நடித்து விட்டாராம். ஆனால், நடிகைக்கு ஒரே ஒரு குறை இருக்கிறதாம்.
    சின்ன நம்பர் நடிகை நடிக்க வந்து பல ஆண்டுகளாகிவிட்டதாம். தொடர்ந்து ஹீரோயினாக நடிக்கும் அவர் சீனியர், இளம் நடிகர்களுடன் நடித்து விட்டாராம். ஆனால், நடிகைக்கு ஒரே ஒரு குறை இருக்கிறதாம். அது உச்ச நடிகருடன் நடிக்காதது தானாம். உச்ச நடிகருடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதே நடிகையின் நீண்ட கால ஆசையாம்.

    தன்னுடைய ஆசையை அடிகடி வெளிப்படுத்தி இருக்கிறாராம். ஆனால் இதுவரை நிறைவேறவில்லையாம். தற்போது உச்ச நடிகர் புதியதாக நடிக்க இருக்கும் படத்திலாவது வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்ப்பார்த்து இருக்கிறாராம்.

    இதற்காக இயக்குனருக்கு கொக்கி போட்டும் தூது அனுப்பியும் வருகிறாராம் நடிகை. 
    தமிழில் அறிமுகமாகி சரியான வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு பக்கம் போன ஒல்லி நடிகை, அங்கு மிகவும் பிரபலமானாராம்.
    தமிழில் அறிமுகமாகி சரியான வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு பக்கம் போன ஒல்லி நடிகை, அங்கு மிகவும் பிரபலமானாராம். பின்னர் சில இந்தி படங்களுக்கு தாவி ஓரளவிற்கு அங்கு பிரபலமானாராம். பின்னர் அங்கு மார்க்கெட் டல்லடிக்கவே மறுபடியும் தெலுங்கு பக்கம் வந்தாராம்.

    தற்போது நிறைய இளம் நடிகைகள் வருவதால் நடிகையை யாரும் சீண்ட வில்லையாம். மேலும் காதல், திருமண சர்ச்சையில் சிக்கியதால், வாய்ப்புகள் குறைந்துவிட்டதாம். இந்த நிலையில், நடிகை தமிழில் கிளாமர் இல்லாத ரோல்கள் கிடைக்குமா என்று தூது அனுப்பி இருக்கிறாராம்.
    மூன்று படங்களை இயக்கி வெற்றிக் கண்டாலும், ஒரு பக்கம் படங்கள் அனைத்தும் காப்பி என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
    மூன்று படங்களை இயக்கி வெற்றிக் கண்டாலும், ஒரு பக்கம் படங்கள் அனைத்தும் காப்பி என்று பலரும் பேசி வருகிறார்களாம். மேலும் சங்கம் தரப்பிலும் காப்பி அடித்ததற்காக விளக்கம் கேட்டும் வருகிறார்களாம். இவருடைய இரண்டு படங்களில் நடித்த தளபதியாரும் அடுத்த படம் தருவார் என்று நம்பி இருந்தாராம். ஆனால் அவரோ சில வருடங்கள் போகட்டும் என்று சொல்லிவிட்டராம்.

    இதையடுத்து தெலுங்கு தேசத்தில் இருக்கும் பெரிய ஹீரோவை அணுகிறாராம் இயக்குனர். அவரும் கைவிரித்து விட்டாராம். இதனால் தன்னுடைய அடுத்த படத்திற்கு ஹீரோ கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறாராம் இயக்குனர்.
    சில படங்களில் மட்டுமே நடித்த வெளிநாட்டு நடிகை, தற்போது உச்ச நடிகருடன் நடித்த படம் மட்டுமே கைவசம் இருக்கிறதாம்.
    சில படங்களில் மட்டுமே நடித்த வெளிநாட்டு நடிகை, தற்போது உச்ச நடிகருடன் நடித்த படம் மட்டுமே கைவசம் இருக்கிறதாம். புது வாய்ப்பு தேடி வராத நிலையில் சோர்வடைந்த நடிகை, ஹாலிவுட் டி.வி சீரியல் மற்றும் வெப் சீரியலில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறாராம். 

    மேலும், ரியல் எஸ்டேட், ஓட்டல் போன்ற சைடு பிசினஸ் செய்வதிலும் ஈடுபட்டுள்ளாராம். சினிமாவில் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்று, அவருடன் நடித்த சில சீனியர் நடிகர்கள் அறிவுரை சொன்னதுதான் தனது கொள்கையை மாற்றி இருக்கிறாராம் நடிகை. 
    ஸ்டைலிஷ் இயக்குனர் என்று பெயர் பெற்ற விண்ணைத்தாண்டியவர், தற்போது இரண்டு படங்களை இயக்கி வருகிறாராம்.
    ஸ்டைலிஷ் இயக்குனர் என்று பெயர் பெற்ற விண்ணைத்தாண்டியவர், தற்போது இரண்டு படங்களை இயக்கி வருகிறாராம். இப்படம் இன்னும் முடியாத நிலையில், அடுத்தப் பட வேலைகளை ஆரம்பித்திருக்கிறாராம். ஏற்கனவே இயக்கிய படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறாராம். 

    இதில் சர்ச்சை நடிகர் நடிப்பதாக அறிவித்தாராம். ஆனால், முந்தைய பாகத்தில் நடித்த நடிகை, நடிகருடன் சேர்ந்து நடிக்க மறுத்து விட்டராம். இதனால், நடிகையின் பேச்சை கேட்டு, நடிகரை மாற்றி இருக்கிறாராம். இதனால், நடிகை மீது நடிகர் கடுங்கோபத்தில் இருக்கிறாராம்.
    ஒரு காலத்தில் காமெடிக்கு இவர்தான் என்று கூறப்பட்ட சந்தன நடிகர், திடீர் என்று ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தாராம்.
    ஒரு காலத்தில் காமெடிக்கு இவர்தான் என்று கூறப்பட்ட சந்தன நடிகர், திடீர் என்று ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தாராம். முதல் படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும், அடுத்தடுத்த வந்த படங்கள் நல்ல வரவேற்பு பெற்றதாம். இதனால், ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்தாராம்.

    ஆனால், நடிகர் எதிர்பார்த்தபடி ஹீரோவாக நிலை நிறுத்திக் கொள்ள முடியவில்லையாம். சமீபத்தில் வெளியான படம் தோல்வியடைந்ததால், தன்னுடைய முடிவை மாற்றி இருக்கிறாராம் நடிகர். அதாவது இனிமேல் ஆக்‌ஷன் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்காமல், தனக்கு என்ன வருமோ அதைவைத்து முன்னேறலாம் என்று முடிவு எடுத்திருக்கிறாராம்.
    ×