என் மலர்tooltip icon

    கிசுகிசு

    சில ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த காதல் பிசாசு நடிகை, பல படங்களில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றாராம். மலையாளப் படத்தில் நடித்து விருது பெற்றிருக்கிறாராம்.
    சில ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த காதல் பிசாசு நடிகை, பல படங்களில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றாராம். மலையாளப் படத்தில் நடித்து விருது பெற்றிருக்கிறாராம். திடீர் என்று நடிப்புக்கு முழுக்கு போட்டு திருமணம் செய்துக் கொண்டாராம். 

    இந்த நிலையில் நடிகை மீண்டும் நடிக்க வருகிறாராம். இதற்காக கதை கேட்டு வருகிறாராம். சமீபத்தில் நடிகையின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த நடிகையா இது? இப்படி குண்டாகிவிட்டாரே என்று பலரும் புலம்பினார்களாம். நடிகை தற்போது கதைக் கேட்டு வருவதால், அக்கா, அண்ணி வேடத்துக்குத்தான் நடிப்பார் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
    நாயகி தொடர்ந்து அடம்பிடித்து வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் படக்குழு யோசித்து வருகிறதாம்.
    ஸ்கெட்ச்சா போடும் நாயகன் தற்போது போலீசாக ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். அந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்த சின்ன நம்பர் நடிகை இரண்டாவது பாகத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் முதலில் ஒப்பந்தமானாராம்.

    பின்னர் தனது கதாபாத்திரத்தில் வலுவில்லை என்று கூறி நாயகி படக்குழுவில் இருந்து வெளியேறிவட்டாராம். நாயகி மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், தன்னால் படத்தில் நடிக்க முடியாது என்று கறாராக கூறிவிட்டாராம். இதையடுத்து படத்தில் அந்த நடிகை இறந்துவிட்டதாக ஒரு காட்சி வைத்துவிட்டு படத்தை வேறு நாயகியை வைத்து எடுத்துவிடலாம் என்று படக்குழு யோசித்து வந்ததாம்.

    ஆனால் நாயகி அதற்கும் பிரச்சனையாக வந்து நிற்கிறாராம். படத்தில் தன்னை பற்றிய எந்த அறிகுறியும் இருக்கக்கூடாது என்று நாயகி கூறியதாக ஒரு பேச்சு அடிபடுகிறதாம். அந்த நாயகிக்கு இது கொஞ்சம் ஓவர் தான் என்று கோலிவுட்டில் கிசுகிசுத்து வருகிறார்கள்.

    தமிழில் நேரமாக வந்த நடிகர், தற்போது மலையாள உலகில் முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறாராம். இவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறதாம்.
    தமிழில் நேரமாக வந்த நடிகர், தற்போது மலையாள உலகில் முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறாராம். இவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறதாம். இவர் நடிப்பில் தற்போது உருவான படத்திற்கு அதிக உடல் எடையை கூட்டினாராம். 

    இந்நிலையில், இவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் பெரிய நம்பர் நடிகை நாயகியாக நடிக்க இருக்கிறாராம். நடிகை உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருப்பதால், தானும் உடல் எடையை குறைக்க போகிறேன் என்று முடிவு எடுத்திருக்கிறாராம். இவர் எடுத்தது படத்திற்காக இல்லையாம், நடிகைக்காக என்று பலரும் கூறி வருகிறார்களாம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வர போராடி வரும் நாயகி தனக்கு வரப்போகும் கணவன் இப்படி தான் இருக்கவேண்டும் என்று கூறி கோலிவுட்டையே கிறுகிறுக்க வைத்துள்ளாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வர தொடர்ந்து முயற்சி செய்து வரும் சிங் நடிகை தொடக்கத்தில் நடித்த படங்கள் போதிய வரவேற்பை பெறாததால் தெலுங்கில் முழு கவனம் செலுத்தினாராம்.

    தெலுங்கில் முன்னணி நாயகர்களுடன் நடித்து முன்னணி நாயகியாகவும் அங்கு வலம் வந்தாராம். சமீபத்தில் அந்த நாயகி நடித்த சிலந்தி படத்திற்கு தமிழ், தெலுங்கு என இரு மொழியிலும் வரவேற்பு கிடைக்கவில்லையாம். அந்த படத்திற்கு பிறகு நாயகிக்கு வாய்ப்பு குறைந்துவிட்டதாம். 

    பின்னர் அவர் நடித்து தமிழில் வெளியான போலீஸ் படம் வெற்றி பெற்றதால், தற்போது தமிழில் காட்டு ராசா நாயகனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். மேலும் அந்த நாயகனின் தம்பியுடன் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறாராம். 



    இந்நிலையில், சமீபத்தில் நாயகி ஒரு பத்திரிகையின் போட்டோஷூட்டில் கலந்து கொண்டாராம். அப்போது, நாயகி டேட்டிங் செல்ல விரும்புபவர் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டதற்கு, 6 அடி உயரமாக இருக்க வேண்டும் என்று நாயகி கூறினாராம். அது போன்ற ஆண்மகனைத்தான் எனது கணவராக எதிர்பார்க்கிறேன் என்றும் நாயகி ஒரே போடாய் போட்டாராம். 

    சமீபத்தில் தான் பல்லால தேவனுடன் நாயகிக்கு காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், நாயகியின் இந்த பதில் கோலிவுட்டையே கிறுகிறுக்க வைத்துள்ளதாம். 

    தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூச்சி நடிகைக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசையாம்.
    தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூச்சி நடிகைக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசையாம். இவருடைய ஆசைக்கு பூச்சி வெளியான போது, ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் மிகவும் சோகத்தில் இருந்தாராம். 

    அதன்பின் போலீஸ் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானாராம். இதன்பின் தமிழில் நிறைய வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம் தாம் மிஞ்சி இருக்கிறதாம். இதனால், நடிகை கவர்ச்சி போட்டோவை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வாய்ப்பு தேடுகிறாராம்.
    தமிழில் இரு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், பிரபலமான அந்த நாயகியிடம் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்லாமல் மழுப்பினாராம்.
    தமிழில் இரு படங்களில் மட்டுமே நடித்துள்ள இலிக்கும் நாயகி, தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்தாராம். சமீபத்தில் தெலுங்கு சினிமாவையும் விட்டுவிட்டு, தற்போது இந்தி பட உலகில் வலம் வருகிறாராம்.

    அதேநேரத்தில் வெளிநாட்டு புகைப்பட கலைஞர் ஒருவரை காதலித்து நாயகி வருகிறாராம். தனது காதலருடன் எடுத்த புகைப்படத்தை நாயகி அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அவரை கணவர் என்று கூறியிருந்தாராம். இதையடுத்து நாயகிக்கும், அவருக்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டதாக ஒரு பேச்சு உலா வந்ததாம்.



    இந்நிலையில், நாயகி நடிப்பில் உருவாகியிருக்கும் ஒரு இந்தி படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாயகியிடம், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேட்க, நாயகி அதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டாராம். அதுபற்றி அதிகம் பேச தனக்கு விருப்பமில்லை என்றும், அதனை தவிர்த்து மற்ற விசயங்களை பேசலாம் என்றும் நாயகி மழுப்பி விட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. 

    ஒல்லி நடிகருடன் ஜோடி சேர்ந்த மேகமான நடிகை, இப்படத்தில் நடிக்கும் போதே மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானராம்.
    ஒல்லி நடிகருடன் ஜோடி சேர்ந்த மேகமான நடிகை, இப்படத்தில் நடிக்கும் போதே மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானராம். ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வந்ததால் நடிகை மிகவும் பரவலாக பேசப்பட்டாராம். இவ்விரு படங்களின் படப்பிடிப்பு முடிந்தும் சில காரணங்களால் படம் வெளியாகாமல் இருக்கிறதாம்.

    இதனால் நடிகை மிகவும் வருத்தமடைந்திருக்கிறாராம். தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். இந்த படத்தின் ஹீரோ, இந்த நடிகையாக, இவருடன் நடித்தால் படம் வெளியாகாதே என்று கூறியிருக்கிறாராம். இவருடன் நடிப்பது குறித்து மிகவும் பயந்து வருகிறாராம்.
    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர், பெரிய முதலாளி வீட்டில் நுழைந்து மிகவும் பிரபலமானாராம். போராளியாக பார்க்கப்பட்டவர், சில செயல்களால், ரசிகர்கள் வெறுக்க தொடங்கினார்களாம். இருந்தாலும், தனக்கு இருந்த எதிர்மறையான பிம்பத்தை வைத்தே, தொலைக்காட்சியில் தொகுப்பாளினியானாராம்.
    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர், பெரிய முதலாளி வீட்டில் நுழைந்து மிகவும் பிரபலமானாராம். போராளியாக பார்க்கப்பட்டவர், சில செயல்களால், ரசிகர்கள் வெறுக்க தொடங்கினார்களாம். இருந்தாலும், தனக்கு இருந்த எதிர்மறையான பிம்பத்தை வைத்தே, தொலைக்காட்சியில் தொகுப்பாளினியானாராம். 

    சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் சிறு காட்சியில் தலைக்காட்டியவர், ஒரு புதிய படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வர, தலைகால் புரியாமல் இருக்கிறாராம் நடிகை. 

    தனது முதல் படம் வெளியாவதற்கு முன்பாகவே மேனஜர் ஒருவரை வைத்துக்கொண்டாராம். அவருக்கு போன் செய்து, திரைப்படங்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகள் குறித்து கேட்பவர்களிடம், தனது மேனஜரிடம் பேசுங்கள் என்று கூறுகிறாராம். முதல் படமே வெளியாகவில்லை அதற்குள் நடிகை ஓவராக செய்கிறாரா என்று பலரும் பேசி வருகிறார்களாம். 
    தமிழில் நீண்ட காலமாக கதாநாயகியாக நடித்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பெரிய நம்பர் நடிகை, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.
    தமிழில் நீண்ட காலமாக கதாநாயகியாக நடித்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பெரிய நம்பர் நடிகை, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். சமீபத்தில் நடிகை நடித்த படம் சூப்பர் ஹிட்டானதாலும், ரசிகர்கள் இதுபோன்ற படங்களை விரும்புவதாலும், நடிகை இந்த முடிவு எடுத்திருக்கிறாராம்.

    மேலும் இந்த படங்களில் நடிகை அதிக சம்பளம் வாங்கி வருகிறாராம். நடிகைகளில் சம்பள வரிசையில் முதலில் இருக்கும் இந்த நடிகை, தற்போது உலக நடிகர் நடிக்க இருக்கும் படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறாராம். இதற்காக நடிகை ஒரு தொகையை சம்பளமாக கேட்டிருக்கிறாராம். இதையறிந்த நாயகன் அதிக சம்பளமா என்று ஆச்சரியப்பட்டிருக்கிறாராம். இதனால், நடிகை நாயகனுக்காக சம்பளத்தை குறைத்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறாராம்.
    முன்னணி நடிகையாக வலம் வரும் வீரமான நடிகை சமீபத்தில் ஐதராபாத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு சென்றாராம். அப்போது நடிகையை நோக்கி ரசிகர் ஒருவர் செருப்பை வீசினாராம்.
    முன்னணி நடிகையாக வலம் வரும் வீரமான நடிகை சமீபத்தில் ஐதராபாத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு சென்றாராம். அப்போது நடிகையை நோக்கி ரசிகர் ஒருவர் செருப்பை வீசினாராம். அது அவர் மீது படவில்லை. என்றாலும், நடிகை மிகுந்த வேதனை அடைந்துள்ளாராம். ‘யாரையும் புண்படுத்தி பேசாத தனக்கு இப்படி நடந்து விட்டதே, என்று நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப் பட்டு வருகிறாராம்.

    மேலும் இனிமேல் தனியார் நிகழ்ச்சிகள், கடை திறப்பு விழாவிற்கு செல்ல போவதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறாராம்.
    பெரிய முதலாளி மூலம் மிகவும் பிரபலமான ஆர்ட் நடிகை, வீட்டில் இருந்து வெளியான பிறகு பல இயக்குனர்களிடம் கதை கேட்டு சம்பளத்தை உயர்த்தினாராம்.
    பெரிய முதலாளி மூலம் மிகவும் பிரபலமான ஆர்ட் நடிகை, வீட்டில் இருந்து வெளியான பிறகு பல இயக்குனர்களிடம் கதை கேட்டு சம்பளத்தை உயர்த்தினாராம். நடிகையின் சம்பளத்தை கேட்டு பல இயக்குனர்கள் நடிகை வேண்டாம் என்று ஓடி சென்றார்களாம். நடிகையும் பல படங்கள் கிடைக்கும் என்று வேண்டாம் என்று சொன்ன இயக்குனர்களை பற்றி கவலைப்பட வில்லையாம்.

    இந்நிலையில், நடிகைக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்க வில்லையாம். இதனால், வேண்டாம் என்று நினைத்த இயக்குனர்களை தற்போது வேண்டி, வேண்டி அழைக்கிறாராம் ஆர்ட் நடிகை. 
    படப்பிடிப்பின் முதல் நாளே அதிக அக்கறை எடுத்துக் கொண்ட நாயகன் மீது கோபப்பட்ட நாயகி படத்தில் இருந்து விலகுவதாக கூறியிருக்கிறாராம். அவரை படக்குழுவினர் சமாதானம் செய்துள்ளார்களாம்.
    ‘ஹாலிவுட்’ நகைச்சுவை நடிகரின் பெயரில், சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த தமிழ் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த நடன புயலே, இந்த பாகத்திலும் கதாநாயகனாக நடிக்கிறாராம். அவருக்கு ஜோடியாக  டார்லிங்கான நடிகை நடிக்கிறாராம்.

    இந்த படத்தின் முதல்நாள் எடுத்த பாடல் காட்சியின் போதே நாயகனுக்கும், நாயகிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம். “இப்படி செய்... அப்படி செய்...” என்று நாயகன், அதிக அக்கறை எடுத்துக் கொண்டு தன் ‘ஐடியா’க்களை திணித்தது, நாயகிக்கு பிடிக்கவில்லையாம்.

    “மாஸ்டர் இவரா, அவரா?” என்று நாயகி முணுமுணுத்தாராம். நாயகனின் மிகையான அறிவுரைகள், ஒரு கட்டத்தில் நாயகியை கோபம் கொள்ள செய்ததால், நடன அமைப்பாளர் சொல்லிக் கொடுத்தபடி ஆடுவதா, கதாநாயகன் சொல்வது போல் ஆடுவதா? ஒரு முடிவுக்கு வாங்க” என்று கூறியபடி நாயகி, நாற்காலியில் போய் ஹாயாக உட்கார்ந்துவிட்டாராம்.



    படக்குழுவினரும் நாயகியை சமாதானம் செய்ய “டைரக்டர் சொல்லிக் கொடுத்தபடிதான் நடிப்பேன்... நடன அமைப்பாளர் சொல்லிக் கொடுத்தபடிதான் ஆடுவேன்... இதற்கு சம்மதித்தால் தொடர்ந்து நடிக்கிறேன். இல்லையென்றால், படத்தில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன்” என்று நாயகி கண்டிசன் போட்டாராம்.

    அதற்கு படக்குழுவினர் சம்மதம் தெரிவித்து சமாதனம் செய்ததால் நாயகி படப்பிடிப்பில் கலந்து கொண்டு தொடர்ந்து ஆடினாராம். நடன புயலுக்கும், டார்லிங்கான நடிகைக்கும் நடந்த இந்த சண்டைதான் கோடம்பாக்கத்தில் பரவலாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

    ×