என் மலர்
கிசுகிசு
செல்வமான இயக்குனரை விவாகரத்து செய்த அந்த நடிகை, மீண்டும் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டினாராம். ஆனால், நடிகைக்கு எந்த வாய்ப்பும் கிடைக்க வில்லையாம். மாறாக சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.
செல்வமான இயக்குனரை விவாகரத்து செய்த அந்த நடிகை, மீண்டும் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டினாராம். ஆனால், நடிகைக்கு எந்த வாய்ப்பும் கிடைக்க வில்லையாம். மாறாக சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால், நடிகை நடித்தால் பெரிய திரைதான் என்று அடம்பிடித்தாராம். டி.வி ஷோக்களில் பங்கேற்கவும் அவருக்கு ஆர்வம் இல்லையாம்.
இதனால், பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படுகிறாராம். இந்த விஷயத்தை தன் நெருக்கமான தோழிகளிடம் சொல்லிப் புலம்பும் நடிகை, தன் எதிர்கால வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது என்று ஆலோசனை கேட்டு காத்திருக்கிறாராம்.
இசையமைப்பாளர்கள் சிலர் நடிக்க வந்து விட்டார்கள். அந்த வரிசையில் கூடை மேல இசையமைப்பாளரும் வரவிருப்பதாக பலரும் கூறி வருகிறார்களாம்.
இசையமைப்பாளர்கள் சிலர் நடிக்க வந்து விட்டார்கள். அந்த வரிசையில் கூடை மேல இசையமைப்பாளரும் வரவிருப்பதாக பலரும் கூறி வருகிறார்களாம். மேலும் இசையமைப்பாளர் கொழு கொழு இருந்த தனது உடம்பை மிகவும் கஷ்டப்பட்டு ஸ்லிம்மாகி இருக்கிறாராம். அதனால், கண்டிப்பாக ஹீரோவாக நடிக்க ஆசை வந்து விட்டது என்றும் பேசினார்களாம்.
ஆனால், இசையமைப்பாளரோ எனக்கு நடிக்கும் ஆசை இல்லை என்று திட்டவட்டமாக கூறி விட்டாராம். இருந்தாலும் பலர் ஏற்க மறுத்து வருகிறார்களாம்.
முன்னணி நடிகையாக வலம் வந்த கொழு கொழு நடிகை, தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறாராம். படம் இல்லாததால் தன்னுடைய உடலையும் ஸ்லிம்மாக்கினாராம்.
முன்னணி நடிகையாக வலம் வந்த கொழு கொழு நடிகை, தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறாராம். படம் இல்லாததால் தன்னுடைய உடலையும் ஸ்லிம்மாக்கினாராம். ஆனால், அதற்கும் எந்த பலனும் கிடைக்க வில்லையாம். சமீபத்தில் வெளியான படத்தின் புரமோஷனுக்கும் பணம் கேட்டதால் படக்குழுவினர் நடிகையை தவிர்த்தார்களாம்.
தற்போது நடிகைக்கு கைவசம் ஒரு படம் தாம் இருக்கிறதாம். இதனால், விளம்பரப்படங்களில் நடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம். ஏற்கனவே நடித்த விளப்படத்தில் அதிக வருமானம் கிடைத்தால், இந்த திடீர் முடிவு எடுத்திருக்கிறாராம் கொழுகொழு நடிகை.
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வரும் சௌந்தரமான நடிகர், தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். சமூக அக்கறையிலும் ஆர்வம் கொண்ட இவர் திடீர் என்று வீரமான நடிகையுடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியானதாம்.
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வரும் சௌந்தரமான நடிகர், தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். சமூக அக்கறையிலும் ஆர்வம் கொண்ட இவர் திடீர் என்று வீரமான நடிகையுடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியானதாம்.
இதையறிந்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தார்களாம். வீரமான நடிகையுடன் திருமணமா? எங்கையோ இடிக்குதே... இருவருக்கும் சம்மந்தமே இல்லை எப்படி நடந்திருக்கும் என்று முணுமுணுத்தார்களாம். இருந்தாலும், இருவரும் தர்மமான படத்தில், சேர்ந்து நடித்திருந்தார்கள். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்திருக்கும் என்றும் பேசினார்களாம்.
இருந்தாலும் ஏற்றுக்கொள்ளாத சிலர் வைத்தெரிச்சலால், நடிகருக்கு போன் செய்து அதை உறுதி செய்தார்களாம். பின்னர்தான் தெரிந்ததாம். பெயர் ஒன்றுதான். ஆனால், ஆள் வேற என்று.
முன்னணி இடத்திலிருந்த சில நடிகைகள் சம்பளம், கதாபாத்திரம் போன்ற விவரங்களில் கறாராக இருப்பதாலும், சில சமயம் அவர்கள் நடிக்கும் படங்கள் தோல்வி அடைவதாலும் புதிய பட வாய்ப்புகள் பெற முடியாமல் பின்தங்கி விடுகிறார்களாம்.
முன்னணி இடத்திலிருந்த சில நடிகைகள் சம்பளம், கதாபாத்திரம் போன்ற விவரங்களில் கறாராக இருப்பதாலும், சில சமயம் அவர்கள் நடிக்கும் படங்கள் தோல்வி அடைவதாலும் புதிய பட வாய்ப்புகள் பெற முடியாமல் பின்தங்கி விடுகிறார்களாம்.
இனிப்பு கடை நடிகை டாப் ஹீரோ படங்களில் நடிப்பதால் அந்தப் படம் குறிப்பிடத்தக்க வெற்றி பெறுகிறதாம். இதனால் அவரது மார்க்கெட் இறங்கிவிடாமல் சீராக சென்றுகொண்டிருக்கிறதாம். சீனியர் ஹீரோக்கள் இளம் ஹீரோயின்களுடன் ஜோடி சேர எண்ணுவதால் சீனியர் நடிகையான இனிப்பு கடை நடிகை இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட முடிவு செய்திருக்கிறாராம்.
அத்துடன் நடுத்தரமான பட்ஜெட்டில் படம் உருவாக்கப்படுகிறது என்றால் தனது சம்பளத்தையும் குறைத்துக்கொள்கிறாராம். பாலிவுட்டில் முன்னணி நடிகையின் மார்க்கெட் இறங்கிய போது அவர் கடைபிடித்த டெக்னிக்கை தற்போது இனிப்பு கடை நடிகை கடைப்பிடிக்க தொடங்கியிருக்கிறார் என கோலிவுட்டில் முணுமுணுக்கிறார்களாம்.
ஒரு படத்தில் நடித்து புகழ் பெற்ற ஆனந்தமான நடிகைக்கு தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறாராம். நடிகை ஒரு சில படங்கள் மட்டுமே நடித்து வருகிறாராம்.
ஒரு படத்தில் நடித்து புகழ் பெற்ற ஆனந்தமான நடிகைக்கு தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறாராம். நடிகை ஒரு சில படங்கள் மட்டுமே நடித்து வருகிறாராம். காரணம் கேட்டால் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கதாநாயகன் யார் என்று முதலில் கேட்கிறாராம்.
நாயகன் யார் என்று தெரிந்த பிறகுதான் கதையையே கேட்கிறாராம். புதுமுகங்கள் என்றால் நடிக்க மாட்டேன் என்று கண்டிப்பாக சொல்லிவிடுகிறாராம். குறைந்த படங்களில் நடித்தாலும் பரவா இல்லை. ஆனால், புதுமுக நடிகர்கள் படத்தில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் கொள்கையுடன் இருக்கிறாராம்.
பெரிய நம்பர் நடிகை தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கண்டிசன் புதுசு புதுசா கண்டிசன் போடுகிறாராம். நடிகையின் நடிப்பில் கடந்த வருடம் 2 படங்கள் வெளியானதாம்.
பெரிய நம்பர் நடிகை தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கண்டிசன் புதுசு புதுசா கண்டிசன் போடுகிறாராம். நடிகையின் நடிப்பில் கடந்த வருடம் 2 படங்கள் வெளியானதாம். இரண்டுமே வெற்றி பெற்றதாம். இதில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் நடிகைக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்ததாம். கதாநாயகனுடன் சேர்ந்து நடித்த படத்தில் நடிகைக்கு அவ்வளவா பெயர் கிடைக்கவில்லையாம்.
இதனால், நடிகை இனிமேல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில்தான் நடிப்பேன் என்று முடிவுக்கு எடுத்திருக்கிறாராம். ஹீரோக்களை பார்த்து சிரித்து, மரத்தை சுற்றி சுற்றி வந்து டான்ஸ் ஆடும் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்றும் கிளாமராக நடிக்க மாட்டேன் என்றும் கூறியிருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நாயகி ஒருவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு என முன்னணி நாயகியாக வலம் வருகிறாராம் பெரிய நம்பர் நடிகை. இந்த நடிகை சினிமாவில் அறிமுகமான தருணத்தில் நடிகைக்கும், வம்பு நாயகனுக்கும் இடையே காதல் இருந்ததாம். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் பிரிந்தார்கள்.
இதையடுத்து ஆட்டம் போடும் நடிகர் இயக்கிய படத்தில் நடித்த நாயகியும், அந்த இயக்குநரும் திருமணம் வரை சென்ற நிலையில், இருவரும் பிரிந்தனர். இதையடுத்து படத்தின் மீது தீவிர கவனம் செலுத்திய நாயகி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.
இப்படி இருக்கையில், மற்றொரு இயக்குநரிடம் காதல் வயப்பட்டிருக்கிறாராம் அந்த நடிகை. இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவது, வெளிநாடுகளுக்கு ஒன்றாக செல்வது, ஒரே வீட்டில் தங்குவது என சந்தோஷமாக இருக்கிறார்களாம். இப்படி இருக்கையில் அந்த நாயகிக்கும் இயக்குநருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறதாம்.

இந்த விஷயத்தை பிரபல இசையமைப்பாளர் ஒருவர் பொது மேடையிலேயே உளறிவிட்டாராம். எனவே இவர்களது திருமணம் விரைவில் நடப்பது உறுதியாகிவிட்டதாக கோலிவுட்டில் ஒரு கிசுகிசுக்கப்படுகிறது.
போராட்டம் நடத்தி பெரிய முதலாளி வீட்டில் புகுந்து பிரபலமானவரை சமூக வலைத்தளத்தில் கிண்டல் செய்து கலாய்த்து தள்ளினார்களாம்.
போராட்டம் நடத்தி பெரிய முதலாளி வீட்டில் புகுந்து பிரபலமானவரை சமூக வலைத்தளத்தில் கிண்டல் செய்து கலாய்த்து தள்ளினார்களாம். அதன் பின் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க போகிறார் என்ற செய்தி கேள்விப்பட்டதும், ரசிகர்கள் பலர் வரவேற்பு செய்தாலும், சிலர் கலாய்த்தார்களாம்.
படத்தின் பெயரை வெளியிட்டால் நடிகையின் பெயர் மாறும். அனைவரும் பாராட்டுவார்கள் என்று நினைத்தாராம். ஆனால், படம் பெயர் வந்ததும், இன்னும் நிறைய பேர் மீம்ஸ் போட்டு கலாய்த்திருக்கிறார்கள். இதனால், அந்த அறிமுக நடிகை வருத்தத்தில் இருக்கிறாராம்.
நடிகைகள் எல்லாம் திரைப்படத்திற்குத்தான் சம்பளம் கேட்பார்கள். ஆனால், ஒரு நடிகை தான் நடித்த படத்தின் புரொமோஷனுக்கு வர பணம் கேட்டிருக்கிறாராம்.
நடிகைகள் எல்லாம் திரைப்படத்திற்குத்தான் சம்பளம் கேட்பார்கள். ஆனால், ஒரு நடிகை தான் நடித்த படத்தின் புரொமோஷனுக்கு வர பணம் கேட்டிருக்கிறாராம்.
கொழு கொழு நடிகை தற்போது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியிருக்கிறாராம். ஆனால், இந்த கடின உழைப்புக்கு பலன் கிடைக்க வில்லையாம். உடல் எடையை குறைத்தால் நிறைய பட வாய்ப்புகள் வரும் எதிர்ப்பார்த்த நடிகைக்கு, கைவசம் இரண்டு படங்கள் தான் இருக்கிறதாம்.
ஏற்கனவே நடித்த படம் ஒன்று விரைவில் வெளியாக இருக்கிறதாம். இதற்கான புரொமோஷன் தற்போது நடைபெற்று வருகிறதாம். ஆனால், இதில் நடிகை கலந்துக் கொள்ள மறுத்து வருகிறாராம். காரணம் என்ன என்று விசாரித்தால், புரொமோஷனுக்கு வரவேண்டும் என்றால் பணம் வேண்டும் என்று நடிகை கேட்டிருக்கிறாராம்.
தயாரிப்பாளர் பணம் தர மறுத்ததால் புரொமோஷனுக்கு வர மறுத்திருப்பதாக பலரும் பேசிவருகிறார்களாம்.
பிரபல ஆபாச நடிகை பாலிவுட்டில் சில படங்களில் நடித்து முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக இருந்து வருகிறாராம். இந்நிலையில், நடிகை ஒரு தமிழ் படத்தில் வரலாற்று சரித்திர படத்தில் நடிக்க இருக்கிறாராம்.
பிரபல ஆபாச நடிகை பாலிவுட்டில் சில படங்களில் நடித்து முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக இருந்து வருகிறாராம். இந்நிலையில், நடிகை ஒரு தமிழ் படத்தில் வரலாற்று சரித்திர படத்தில் நடிக்க இருக்கிறாராம். இதனால், தமிழ் நடிகைகளுக்கு போட்டியாக வந்து விட்டார் என்று பலரும் நடிகை மீது பொறாமை பட்டு வருகிறார்களாம். மேலும் சரித்திர படத்தில் நடிப்பதால், யோகா நடிகையும், தமன நடிகையும் எங்கள் இடத்தை பிடிக்க வந்துவிட்டால் என்று வருத்தத்தில் இருக்கிறார்களாம்.
முன்னணி நடிகையாக வலம் வந்த மழை நடிகை, தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறாராம். அதிக சம்பளம் கேட்டதால்தான் நடிகைக்கு இந்த நிலைமை என்று பலரும் கூறிவருகிறார்களாம்.
முன்னணி நடிகையாக வலம் வந்த மழை நடிகை, தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறாராம். அதிக சம்பளம் கேட்டதால்தான் நடிகைக்கு இந்த நிலைமை என்று பலரும் கூறிவருகிறார்களாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறாராம்.
தமிழில் மீண்டும் தன்னுடைய இடத்தை தக்க வைக்க பல தயாரிப்பாளர், இயக்குனர்களுக்கு தூது அனுப்புகிறாராம். மேலும் தற்போது அரை நிர்வாணமாக புகைபடத்தையும் வெளியிட்டிருக்கிறாராம். எனக்கு இன்னும் வயதாகவில்லை, இளமையாகத் தான் இருக்கிறேன் என்று நிருபிக்கவே இந்த போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறாராம். மேலும் போட்டோ சூட் ஒன்றையும் எடுத்துள்ளாராம்.






