என் மலர்
கிசுகிசு
வழக்கு நடிகை, சினிமாவில் ஒரு நல்ல இடம் பிடிப்பார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தார்களாம். ஆனால், நடிகைக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால், இடத்தை பிடிக்க முடியவில்லையாம்.
வழக்கு நடிகை, சினிமாவில் ஒரு நல்ல இடம் பிடிப்பார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தார்களாம். ஆனால், நடிகைக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால், இடத்தை பிடிக்க முடியவில்லையாம்.
இந்த நிலையில், நடிகையை சொப்பண பாட்டுக்கு ஆட வைத்தாராம் இயக்குனர். அந்த பாட்டு வரவேற்பு பெற்றாலும், நடிகையை பாட்டின் பெயரை கொண்டே அழைக்கிறார்களாம். இதனால், நடிகைக்கு மன கஷ்டம் ஏற்பட்டு விட்டதாம். இதன் பிறகும் நடிகையை கதாநாயகி வேடத்திற்கு அழைக்காமல் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆட அழைத்தார்களாம்.
நடிகையோ எந்த பாட்டுக்கும் ஆட மாட்டேன் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாராம். இதனால், நடிகையின் சினிமா வாழ்க்கையே சரிந்து விட்டதாம். அந்த பாட்டுக்கு ஆடினது தப்பா போச்சே என்று பலரிடமும் கூறிவருகிறாராம் நடிகை.
போராட்ட நாயகி என்று பெயர் பெற்றவர், பெரிய முதலாளி மூலம் பிரபலமானாராம். இதன் பிறகு சினிமாவில் பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தாராம்.
போராட்ட நாயகி என்று பெயர் பெற்றவர், பெரிய முதலாளி மூலம் பிரபலமானாராம். இதன் பிறகு சினிமாவில் பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தாராம். ஆனால், நடிகைக்கு தங்கை கதாபாத்திரம், குணச்சித்திர வேடம் தான் கிடைத்ததாம். நடித்தால் கதாநாயகி தான் என்று வந்த படங்களில் நடிக்க மறுத்து விட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்தாராம்.
கதாநாயகி வேடத்திற்கு அடம்பிடித்து காத்திருந்த நடிகைக்கு தற்போது புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நல்ல இடத்தை பிடிப்பாரா என்று பலரும் பேசிவருகிறார்களாம்.
பல படங்களில் தன்னுடைய புன்னகையால் ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகை, திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டாராம். பின்னர், நடிகையை நடிக்க வைக்க பல முயற்சிகள் நடந்ததாம். ஆனால், நடிகை எந்தப் படத்திலும் நடிக்க மறுத்து வந்தாராம்.
பல படங்களில் தன்னுடைய புன்னகையால் ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகை, திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டாராம். பின்னர், நடிகையை நடிக்க வைக்க பல முயற்சிகள் நடந்ததாம். ஆனால், நடிகை எந்தப் படத்திலும் நடிக்க மறுத்து வந்தாராம். நடித்தால் பெரிய பட்ஜெட் படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும் என்று முடிவோடு இருந்தாராம்.
எதிர்பார்த்தபடி, நடிகைக்கு, பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். நடிகையும் ஆசைப்பட்டு நடிக்க ஆரம்பித்தாராம். அந்தப் படத்திற்காக நடிகை உடல் எடை எல்லாம் குறைத்து நடித்திருந்தாராம். நடிகையை வைத்து 18 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்களாம்.
படம் வெளியான பிறகு, திரையில் பார்த்த நடிகை அதிர்ச்சி அடைந்திருக்கிறாராம். காரணம், நடிகையின் காட்சி 5 நிமிடம் மட்டும்தான் வந்திருக்கிறதாம். நடிகை உடல் எடை குறைத்திருப்பதை கூட சரியாக காட்ட வில்லையாம். இதனால், உடல் உழைப்பு எல்லாம் வீணா போச்சே என்று புலம்பி வருகிறாராம்.
கேரளாவை சேர்ந்த அந்த மூன்று எழுத்து நடிகையின் மார்க்கெட் டல்லாக உள்ளதாம். இந்நிலையில் அவர் அண்மையில் வெளியான ஒரு படத்தில் வில்லனுக்கு மனைவியாக நடித்தாராம். அந்த படத்தை அவர் பெரிதும் எதிர்பார்த்தாராம்.
கேரளாவை சேர்ந்த அந்த மூன்று எழுத்து நடிகையின் மார்க்கெட் டல்லாக உள்ளதாம். இந்நிலையில் அவர் அண்மையில் வெளியான ஒரு படத்தில் வில்லனுக்கு மனைவியாக நடித்தாராம். அந்த படத்தை அவர் பெரிதும் எதிர்பார்த்தாராம்.
ஆனால் படம் எதிர்ப்பார்த்தபடி ஓடவில்லையாம். நடிகையின் நடிப்பையும் யாரும் பாராட்டவில்லையாம். இந்நிலையில் ஹீரோவுக்கு அக்காவாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடிச் வந்திருக்கிறதாம்.
நடிகை மிகவும் கோபப்பட்டாராம். ஏது வில்லனுக்கு ஜோடியாக நடித்தால் உடனே அக்காவா அதற்கு வேறு ஆளை பாருங்க என்று நடிகை தெரிவித்துவிட்டாராம்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் அந்த நாயகிக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் தவித்து வருகிறாராம்.
தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அந்த நாயகி, தமிழில் அறிமுகமான முதல் படம் வெற்றி பெற்றாலும், அவர் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. பின்னர் தெலுங்கு சினிமாவில் தலைகாட்டிய அந்த நாயகி அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வந்தார். அந்த படங்களும் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
பின்னர் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்திய அந்த நடிகை, முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். அதனை பயன்படுத்திக் கொண்ட அந்த நடிகை, அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாகவும் வலம் வந்தாராம்.
இப்படி இருக்கையில் சமீபத்தில் அந்த நாயகி நடித்த சிலந்தி படம் போதிய வரவேற்பை பெறவில்லையாம். மேலும் தெலுங்கி சினிமாவில் வேறு படங்களில் ஒப்பந்தமாகாத அந்த நடிகை படமின்றி தவித்து வருகிறாராம். இந்த நிலையில் தான் அவரது நடிப்பில் தமிழில் வெளியான போலீஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றதாம். இதை பயன்படுத்தி தமிழ் சினிமாவில் காலூன்ற நினைத்த அந்த நாயகிக்கு தமிழிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் குழம்பிப் போயிருக்கும் அந்த நடிகை மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம்.

தமிழ், தெலுங்கு என படமின்றி தவித்து வரும் அந்த நாயகி அடுத்தது பாலிவுட் பக்கம் திரும்பப் போவதாகவும் கூறப்படுகிறது. அவர் உண்மையிலேயே பாலிவுட் தான் போகிறாரா? அல்லது தான் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கப் போகிறாரா தெரியவில்லையே என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்களாம்.
பல நடிகைகள் விவகாரத்திற்கு அந்த நடிகர் தான் காரணம் என்று பலரும் கூறி வரும் நிலையில், தற்போது ஒரு நடிகை, விவகாரத்து கேட்டு வழக்கு போட்டிருக்கிறாராம். இந்த விவகாரத்திற்கும் அந்த நடிகர் தான் காரணம் என்று கூறுகிறார்களாம்.
பல நடிகைகள் விவகாரத்திற்கு அந்த நடிகர் தான் காரணம் என்று பலரும் கூறி வரும் நிலையில், தற்போது ஒரு நடிகை, விவகாரத்து கேட்டு வழக்கு போட்டிருக்கிறாராம். இந்த விவகாரத்திற்கும் அந்த நடிகர் தான் காரணம் என்று கூறுகிறார்களாம்.
விவகாரத்து கேட்டிருக்கும் நடிகையை சமீபத்தில் தன்னுடைய படத்தில் நடிக்க வைத்தது தான் காரணமாம். அப்போதே, நடிகைக்கும் கணவருக்கும் சலசலப்பு ஏற்பட்டு விட்டதாம். மேலும் அந்தப் படம் வெளியாகும் போது டைட்டில் கார்டில் நடிகையின் பெயரை மாற்றி இருக்கிறாராம் நடிகர்.
இன்னும் எத்தனை பேர் வாழ்க்கையில் இந்த நடிகர் விளையாட போகிறார் என்ற வகையில், அவரைப் பற்றி கோடம்பாக்கத்தினர் பேசி வருகிறார்களாம்.
பெரிய முதலாளி வீட்டில் புகழ் பெற்ற வர்ணமான நடிகை, தற்போது பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறதாம். நடிகையின் வாய்ப்பை பார்த்து பலரும் பொறாமை பட்டு வருகிறார்களாம்.
பெரிய முதலாளி வீட்டில் புகழ் பெற்ற வர்ணமான நடிகை, தற்போது பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறதாம். நடிகையின் வாய்ப்பை பார்த்து பலரும் பொறாமை பட்டு வருகிறார்களாம். சமீபத்தில் வர்ணமான நடிகை பேய் படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம். ஆனால், அந்த படம் தொடங்க சில காலதாமதம் ஆனதால், நடிகை வேற படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம். நடிகையின் கால்ஷீட் கேட்பதற்குள் கொழு கொழு நடிகை, உள்ளே புகுந்து நடிகையின் வாய்ப்பை தட்டி பறித்து விட்டாராம்.
கொழு கொழு நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால், வர்ணமான நடிகை விட்டுக் கொடுத்ததாக கூறி வருகிறார்களாம்.
கொழு கொழு நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால், வர்ணமான நடிகை விட்டுக் கொடுத்ததாக கூறி வருகிறார்களாம்.
அரசியல் வாரிசு நடிகர் ஹீரோவாக அறிமுகமானபோது கொழு கொழு நடிகை முன்னணி ஹீரோயினாக இருந்தாராம். இருந்தாலும் அரசியல் வாரிசுடன் ஜோடியாக நடித்தாராம்.
அரசியல் வாரிசு நடிகர் ஹீரோவாக அறிமுகமானபோது கொழு கொழு நடிகை முன்னணி ஹீரோயினாக இருந்தாராம். இருந்தாலும் அரசியல் வாரிசுடன் ஜோடியாக நடித்தாராம்.
இப்போது அரசியல் வாரிசு முன்னணி ஹீரோவாக வலம் வருகிறாராம். ஆனால் நடிகைக்கு வாய்ப்பில்லையாம். அடுத்து அரசியல் வாரிசும் அவார்டு இயக்குநரும் சேர்ந்து படம் பண்ணப்போவதாக தகவல் வந்தவுடன் அந்த படத்தை கைப்பற்ற முயற்சி செய்கிறாராம். ஏற்கனவே பல ஹீரோக்களுக்கு தூது அனுப்பி வரும் நடிகைக்கு, இதாவது கைகூடுமா என்று பலரும் எதிர்பார்க்கிறார்களாம்.
திருமண அறிவிப்பு வரை பல படங்களில் நடித்து வந்த காத்தாடி நடிகை, திருமணம் நெருங்க நெருங்க வேறு அவதாரம் எடுத்து கவர்ச்சி அவதாரம் எடுத்தார். மேலும் இதற்காக போட்டோ ஷூட் நடத்தப்பட்டதாம்.
திருமண அறிவிப்பு வரை பல படங்களில் நடித்து வந்த காத்தாடி நடிகை, திருமணம் நெருங்க நெருங்க வேறு அவதாரம் எடுத்து கவர்ச்சி அவதாரம் எடுத்தார். மேலும் இதற்காக போட்டோ ஷூட் நடத்தப்பட்டதாம். இதனால் அவரது புகுந்த வீடு தர்ம சங்கடமானதாம். தந்தை மகனை அழைத்து கண்டிக்க, கணவர் தேனிலவு முடிந்ததும் மனைவியிடம் இதுபற்றி பேசினாராம்.
அப்போது நடிகை 'இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்' என்று சத்தியம் செய்திருக்கிறாராம். இதனால்தான் நடிகை தொடர்ந்து நடிக்க க்ரீன் சிக்னல் கிடைத்திருக்கிறதாம்.
ஹீரோக்கள்தான் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் எதையாவது பேசி மாட்டிக்கொள்வது வழக்கம். அந்த லிஸ்ட்டில் ஒரு நடிகையும் சேர்ந்து சென்னை பக்கமே வரக்கூட முடியாமல் தவிக்கிறாராம்.
ஹீரோக்கள்தான் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் எதையாவது பேசி மாட்டிக்கொள்வது வழக்கம். அந்த லிஸ்ட்டில் ஒரு நடிகையும் சேர்ந்து சென்னை பக்கமே வரக்கூட முடியாமல் தவிக்கிறாராம். சமீபத்தில் நடந்த பைனான்சியர் வழக்கு விவகாரத்தில் பெரிய ஹீரோக்களே வாயைத் திறக்காமல் இருக்க, அந்த பூர்ணமான நடிகை பைனான்சியரை விமர்சித்து ட்விட் போட்டாராம். அப்போதே நடிகையை பலரும் எச்சரித்தார்களாம். ஆனால் அவரோ 'நான் உண்மையை தானே சொன்னேன்' என்று சமாளித்தாராம்.
இப்போது பைனான்சியரின் வெயிட்டை தெரிந்துகொண்ட நடிகை சென்னை பக்கம் வரவே பயப்படுகிறாராம். தமிழுக்கே மூட்டை கட்டிவிட வேண்டியதுதான் போல என புலம்புகிறாராம்.
பல படங்களில் நடித்தாலும், ஒரு பாடலுக்கு நடனமாடினாலும், மஸ்காரா போட்ட பிறகுதான் மிகவும் பிரபலமானாராம் அந்த நடன அழகி. தொடர்ந்து பல படங்களில் நடனம் ஆடி வருகிறாராம்.
பல படங்களில் நடித்தாலும், ஒரு பாடலுக்கு நடனமாடினாலும், மஸ்காரா போட்ட பிறகுதான் மிகவும் பிரபலமானாராம் அந்த நடன அழகி. தொடர்ந்து பல படங்களில் நடனம் ஆடி வருகிறாராம். இவருக்கும் துணை நடிகர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டிருக்கிறதாம். இருவரும் அடிக்கடி வெளியில் சந்தித்து ஊர் சுற்றுகிறார்களாம். விரைவில் திருமணம் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். நடன அழகிக்கு தற்போது பல படங்களில் வாய்ப்பு வரும் நிலையில், இப்படி சுற்றுவது நியாயமா? என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
நடிகைகள் பெரும்பாலானோர் தான் நடிக்கும் படங்களின் புரோமோஷன்களில் கலந்துக் கொள்வதில்லையாம். ஆனால், சமீபத்தில் நயன நடிகை, தான் நடித்த படத்தை ரசிகர்களோடு பார்த்தும், திரையரங்குகளுக்கு சென்றும் வந்தாராம்.
நடிகைகள் பெரும்பாலானோர் தான் நடிக்கும் படங்களின் புரோமோஷன்களில் கலந்துக் கொள்வதில்லையாம். ஆனால், சமீபத்தில் நயன நடிகை, தான் நடித்த படத்தை ரசிகர்களோடு பார்த்தும், திரையரங்குகளுக்கு சென்றும் வந்தாராம். இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகமாக அமைந்ததாம். அதுபோல், தற்போது பால் நடிகையும், தான் நடித்த படத்தை ரசிகர்களோடு சேர்ந்து பார்த்திருக்கிறாராம். மேலும் அவர்களோடு புகைப்படமும் எடுத்திருக்கிறார்.
இதையறிந்த நயன நடிகையின் ரசிகர்கள், எங்கள் நாயகி போல் நீங்களும் பின் பற்றுகிறீர்களா என்று கூறிவருகிறார்களாம்.






