என் மலர்tooltip icon

    சினிமா

    காதலரை நாயகனாக்க முயற்சிக்கும் நடிகை
    X

    காதலரை நாயகனாக்க முயற்சிக்கும் நடிகை

    பெரிய நம்பர் நடிகை முதலில் மூன்றெழுத்து நடிகர் மீது காதல்வசப்பட்டாராம். அந்த காதல் முறிந்ததும், ஆட்ட நாயகனை பிடித்தாராம்.
    பெரிய நம்பர் நடிகை முதலில் மூன்றெழுத்து நடிகர் மீது காதல்வசப்பட்டாராம். அந்த காதல் முறிந்ததும், ஆட்ட நாயகனை பிடித்தாராம். அவருடன் திருமணம் வரை நெருங்கி கடைசி நேரத்தில், அந்த காதலும் முறிந்து போனதாம். டைரக்டரை பிடித்து அவரை பிரபலமாக்கி திருமணம் செய்து கொள்கிறேன், பார் என்று ஆட்ட நாயகனிடம் அவர் சவால் விட்டாராம்.

    அதன்படி, இரண்டு சாமிகளின் பெயர்களை கொண்ட இளம் டைரக்டரை பிடித்து தன்வசப்படுத்தி, அவரையே திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்து இருக்கிறாராம். அதற்கு முன்பாக, டைரக்டரை கதாநாயகனாக்கும் முயற்சியில், பெரிய நம்பர் நடிகை மிக தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறாராம். இதற்காக கதையும் கேட்டு வருகிறாராம்.
    Next Story
    ×