என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரேமம், கொடி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன், விரைவில் இயக்குனராக மாற இருக்கிறார்.
    பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுசுடன் கொடி படத்தில் நடித்தார். அதன் பின்னர் தமிழ், மலையாளத்தில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

    அனுபமாவுக்குத் திரைப்பட இயக்கத்திலும் அதிக ஆர்வம் இருக்கிறது. படம் இயக்கியே தீருவேன் என்று துடிப்பாக இருந்த அனுபமா, இப்போது நடிப்புக்குச் சிறிது காலம் இடைவேளை விட்டிருக்கிறார். 



    துல்கர் சல்மான் தயாரிக்கும் ஒரு மலையாளப் படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். விரைவில் இயக்குனராக மாற இருக்கிறார்.
    திரைப்படம், டி.வி. தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை நந்தினி, டி.வி. நடிகரை இரண்டாவதாக திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
    வெண்ணிலா கபடி குழு படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி ஜோடியாக நடித்தவர் நந்தினி. வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். டி.வி. தொடர்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். டி.வி. தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மைனா நந்தினி என்று இவரை அழைத்தனர். 

    இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை நந்தினி காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி ஒரு வருடத்திலேயே கார்த்திகேயன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.



    குடும்பத் தகராறில் மனம் உடைந்து உயிரை மாய்த்ததாக கூறப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினார்கள். நந்தினி கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவர் இறந்து சில மாதங்களுக்கு பிறகு நந்தினி மீண்டும் டி.வி. தொடர்களில் நடிக்க தொடங்கினார்.

    இந்த நிலையில் டி.வி. நடிகர் யோகேஷ் என்பவரை காதலிப்பதாக நந்தினி அறிவித்து உள்ளார். கடந்த ஒரு வருடமாக இருவரும் நண்பர்களாக பழகி வருவதாகவும், தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
    நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், பொருளாளர் பதவிக்கு நடிகர் ஜெயம் ரவி போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தென் இந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 10-ந்தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெறுகிறது. 11-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது.

    வேட்புமனுக்களை திரும்ப பெற 14-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலையே இறுதி பட்டியல் வெளியிடப்படும். வெளியூரில் இருக்கும் சங்க உறுப்பினர்கள் வாக்களிக்க வசதியாக தபால் வாக்குச்சீட்டுகள் 16-ந்தேதி முதல் வினியோகிக்கப்படும். தபாலில் ஓட்டுகள் பதிவு செய்ய 22-ந்தேதி கடைசி நாளாகும்.

    நடிகர் சங்க தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான ‘பாண்டவர் அணி’யின் தற்போதைய நிர்வாகத்தினர் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தனர். தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

    ஒரு துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் போட்டியிடுகிறார். இன்னொரு துணைத்தலைவர் பதவிக்கு கடந்த முறை பொன்வண்ணன் போட்டியிட்டார். இந்த முறை அவருக்கு பதில் பூச்சி முருகன் போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு மீண்டும் கார்த்தி போட்டியிடுகிறார். செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு கோவை சரளா, மனோபாலா, குஷ்பு உள்ளிட்ட 26 பேர் போட்டியிடுகின்றனர்.



    நாசர் அணிக்கு எதிராக போட்டி அணியை உருவாக்கும் முயற்சிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. ஐசரி கணேஷ் பொதுசெயலாளர் பதவிக்கு விஷாலை எதிர்த்தும் உதயா துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுவதும் நேற்று வரை உறுதியாகி இருந்தது.

    இந்தநிலையில் நேற்று மாலை இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் இந்த அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்தார். உதயாவுடன் குட்டி பத்மினியும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

    இந்த அணி சார்பில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் நபரை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த பதவி முக்கியமான பதவி என்பதால் இதற்கு ஜெயம் ரவியிடம் பேச்சு வார்த்தை நடக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் பிரபலமான ராய் லட்சுமி, தற்போது புதிய படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார்.
    தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராய் லட்சுமி. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான திரைப்படம் நீயா 2. இந்த படத்தில் இவருடன் ஜெய், வரல‌ட்சுமி சரத்குமார், கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்திருந்தனர்.

    ஆனாலும் இந்த படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. தற்போது ராய் லட்சுமி கதை நாயகியாக சிண்ட்ரெல்லா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் கல்லூரி வினோத், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர்.



    இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளது. இப்படத்தில் ராய் லட்சுமி மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிண்ட்ரெல்லா கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு வேடத்திலும், ராக் ஸ்டாராக ஒரு வேடத்திலும், இது தவிர மூன்றாவதாக நடிக்கும் வேடம் சஸ்பென்சாக வெளியிடப்படாமல் இருக்கிறது.
    பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக் ஆகிய படங்களில் நடித்து வரவேற்பு பெற்ற நிவேதா பெத்துராஜ் தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
    நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக் ஆகிய படங்களில் நடித்து வரவேற்பு பெற்றார். கடந்த ஆண்டு விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக திமிரு பிடிச்சவன் படத்தில் நடித்து இருந்தார்.

    தெலுங்கில் மென்டல் மதிலோ, சித்ரலஹரி ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்ற நிவேதா தற்போது அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். திரிவிக்ரம் இயக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.



    தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்துகிறார். நிவேதா தமிழில் தற்போது விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் சங்கத்தமிழன் படத்திலும் ஜகஜால கில்லாடி படத்திலும் நடித்துவருகிறார். இந்த 2 படங்களுக்கு பிறகு தமிழில் அவருக்கு படங்கள் இல்லை.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 64’ படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகையிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
    சர்கார் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதில் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது.

    படத்தின் தலைப்பையும், விஜய் தோற்றத்தையும் அவரது பிறந்த நாளையொட்டி வருகிற 21-ந் தேதி மாலை வெளியிடுகிறார்கள். படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த படத்துக்கு பிறகு விஜய்யின் 64-வது படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.



    ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், வினோத், பேரரசு ஆகியோர் பெயர்கள் அடிபட்டன. மோகன்ராஜாவும், “விஜய்யை வைத்து வேலாயுதம் படத்தை இயக்கி உள்ளேன். மீண்டும் அவர் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றார். தற்போது விஜய்யின் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது முடிவாகி உள்ளது. இவர் ஏற்கனவே மாநகரம் படத்தை இயக்கி உள்ளார். தற்போது கார்த்தியின் கைதி படத்தை டைரக்டு செய்து வருகிறார்.

    விஜய்யின் 64-வது படத்தை அவரது உறவினரான பிரிட்டோ தயாரிப்பார் என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே செந்தூரபாண்டி, ரசிகன் உள்ளிட்ட சில படங்களை தயாரித்து உள்ளார். இசையமைப்பாளராக அனிருத்தையும், ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியனையும் ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்துள்ளனர். கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங்கை பரிசீலிக்கின்றனர். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.
    சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
    அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக மிக அவசரம் என்கிற படத்தை தயாரித்துள்ளது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதையடுத்து வெங்கட் பிரபு டைரக்சனில் சிம்பு நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை அதிக பொருட்செலவில் இந்த நிறுவனம் தயாரிக்கிறது.

    கதாநாயகியாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார். இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் இடம்பெறுகின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.



    இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன்-25ஆம் தேதி மலேசியாவில் பாடல் காட்சியுடன் துவங்க இருக்கிறது. பாடலுடன் சில முக்கியமான காட்சிகளும் அங்கு படமாக்கப்பட உள்ளன.

    முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் இந்தப்படம் உருவாகிறது. சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகை ரெஜினா, தற்போது சீட் எட்ஜ் திரில்லராக உருவாகியுள்ள எவரு படத்தில் நடித்துள்ளார்.
    பிவிபி சினிமா நிறுவனம் தயாரிப்பில் பேர்ல் வி பொட்லூரி, பரம் வி பொட்லூரி, கவின் அன்னே தயாரிக்கும் திரைப்படம் ‘எவரு’. சீட் எட்ஜ் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ரெஜினா, ‘சனம்’  புகழ் ஆத்வி ஷேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த புகழ் பெற்ற நடிகரான முரளி சர்மா நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான வெங்கட் ராம்ஜி இப்படத்தை இயக்கியுள்ளார்.



    கொடைக்கானல், ஹைதரபாத் உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது. எவரு வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி உலக முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.
    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் நடுவரின் தீர்ப்பை நடிகர் தனுஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
    சென்னை:

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இப்போட்டியின் நடுவர்களின் தீர்ப்புகள் பல முறை தவறாக அமைந்தது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்யும்போது பல முறை ஆஸ்திரேலிய அணி பௌலரின் அப்பீலுக்கு நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் உண்மையில் நாட் அவுட் என்பது மூன்றாம் அம்பயரிடம் ரிவ்யூ கேட்டதன் மூலம் தெரியவந்தது.

    குறிப்பாக கிறிஸ் கெய்ல் விளையாடும்போது தொடர்சியாக மூன்று முறை அம்பயர் அவுட் கொடுத்தார். அதில் இரு முறை கெய்ல் தப்பித்தார். மூன்றாவது முறை கள அம்பயரின் தீர்ப்பே இறுதியானது எனும் தீர்ப்பால் கெய்ல் அவுட் ஆனார்.

    நேற்றைய போட்டியின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் நடுவர்களின் முடிவை கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    நேற்று போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கார்லஸ் பிராத்வெய்ட், நடுவர்களின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தார்.

    இதையடுத்து நடிகர் தனுஷ் நடுவர்களின் தீர்ப்பை விமர்சித்து ஒரு ட்வீட் பதிவிட்டிருக்கிறார்.

    ''வெஸ்ட் இண்டீஸ் எப்படியும் வென்றுவிடக் கூடாது என நடுவர் விரும்புகிறார். வெஸ்ட் இண்டீஸ் கடுமையாக போராடியது. நடுவரின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருப்பது உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. நடுவரின் செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமாக உள்ளது'' என தனுஷ் விமர்சனம் செய்துள்ளார்.
    நடிகர் சங்க தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், நாசரை எதிர்த்து கே.பாக்யராஜ் போட்டியிட இருக்கிறார்.
    தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல் வரும் 23-ந்தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரம், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.

    தேர்தலில் பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் துணை தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர். மேலும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.



    இந்நிலையில், நாசரை எதிர்த்து இயக்குனர் கே.பாக்யராஜ் நிற்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நிற்கிறார். 
    ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் முன்னோட்டம்.
    'சுட்டுப்பிடிக்க உத்தரவு' அதன் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் எதிர்பாராத விதத்தில் வெளியாகி, மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை தூண்டி விட்டிருக்கிறது. குறிப்பாக, இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோரும் இணைந்து நடிப்பது படத்துக்கு ஒரு பெரிய ஈர்ப்பை கொடுத்துள்ளது. 

    படத்தின் காட்சி விளம்பரங்கள் இன்னும் பெரிய அளவில் சுவாரஸ்யமாக அமைந்து, படத்தை மேலும் சிறப்பாக கொண்டு சென்றது. அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த படம் தணிக்கை சான்றிதழையும் பெற்று விட்டது. சமீபத்தில் இந்த திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்துக்கு U/A சான்றிதழை அளித்திருக்கிறார்கள்.



    சுட்டுப்பிடிக்க உத்தரவு ஒரு தீவிர ஆக்ஷன் த்ரில்லர் படம். தினேஷ் காசி சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். இந்த படம் ஒரு மிகச்சிறந்த ஆக்‌ஷன் படமாக இருக்கும் என உறுதியளிக்கலாம்.

    'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராம் பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்குகிறார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் இந்த படத்தை தயாரிக்கிறார். சுஜீத் சாரங் (ஒளிப்பதிவு), ஜாக்ஸ் பிஜாய் (இசை) மற்றும் ஜி.ராமராவ் (படத்தொகுப்பு) ஆகியோர் டிரைலரிலேயே தங்கள் முத்திரையை பதித்து விட்டனர். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. 
    உடல் தோற்றத்தையும், நிறத்தையும் கிண்டல் செய்யாதீர்கள் என்று பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
    வித்யாபாலன் தற்போது தமிழில் அஜித் நடிக்கும், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடிக்கிறார். தமிழில் தான் வித்யா பாலன் முதலில் அறிமுகமாகி இருக்க வேண்டும். இங்கு இருந்த டைரக்டர்கள் நிராகரித்ததால் இந்திக்கு சென்று அங்கு பெரிய நடிகையாகி விட்டார்.

    ஒருசிலர் வித்யாவின் பருமனான தோற்றத்தை கிண்டல் செய்ததை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். இதுபற்றி வித்யாபாலன் கூறும்போது, ’யாருடைய உடல் தோற்றத்தையும், நிறத்தையும் கிண்டல் செய்து சிரிக்காதீர்கள். ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள்.



    எல்லோருமே ஒரு வகையில் சிறப்பானவர்கள் தான். சினிமாவில் நான் நுழைந்த கால கட்டத்தில் பலரும் என் மன வலிமையை பலவீனப்படுத்தும் வகையில் அவமரியாதை செய்தார்கள். குண்டு பெண் என்று அழைத்து கேலி பேசினார்கள். இது எனது தன்னம்பிக்கையை பாதித்தது. உடல்தோற்றம் மட்டுமே ஒருவரை சாதனையாளராக்கப் போவதில்லை என்பதை கிண்டல் பேசுபவர்கள் உணர வேண்டும்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×