என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக தமிழ் இயக்குனர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. விக்ரமன் தலைவராகவும், ஆர்கே.செல்வமணி பொதுசெயலாளராகவும் பேரரசு பொருளாளராகவும் இருந்து வருகின்றனர்.

    இயக்குனர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வடபழனியில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இதில் தலைவர் விக்ரமனும் பொதுசெயலாளர் ஆர்கே.செல்வமணியும் ஆண்டறிக்கையை வாசித்து சங்கத்தின் நிர்வாகம் செய்த பணிகளை பட்டியலிட்டனர். பின்னர் பொருளாளர் பேரரசு ஆண்டு கணக்கு அறிக்கையை தாக்கல் செய்தார். பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகத்தின் பணிக்காலம் முடிவதால் அடுத்து தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.



    தற்போதைய தலைவரான விக்ரமன் தொடர்ந்து 6 ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருந்துவிட்டதால் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தார். இதன் பின்னர் சங்கத்துக்கான தலைவராக மூத்த இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மற்ற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது.
    பல படங்களில் வசனகர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றிய கிரேஸி மோகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
    மோகன் ரங்காச்சாரி என்ற இயற்பெயர் கொண்ட கிரேஸி மோகன் அடிப்படையில் மெக்கானிக் எஞ்சினியரிங் படித்தவர். கல்லூரிக் காலங்களில் குட்டி குட்டி நாடகங்களைப் போட்டவருக்கு நல்ல வேலை கிடைத்தும் அதில் மனம் லயிக்காமல் சபாக்களில் நாடகங்கள் போட ஆரம்பித்தார். 

    சுமார் 3000க்கும் மேற்பட்ட நாடகங்களை நிகழ்த்தியிருக்கும் கிரேஸி மோகனை முதன் முதலில் தனது ‘பொய்க்கால் குதிரைகள்’ படத்துக்கு வசனம் எழுத வைத்தவர் இயக்குநர் பாலசந்தர்.

    பின்னர் கமலுடன் ‘சதி லீலாவதி’ படத்தில் வசனகர்த்தாவாகப் பணியாற்ற ஆரம்பித்த கிரேஸி மோகன் அடுத்து அவருடன் தொடர்ந்து ’காதலா காதலா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ’அபூர்வ சகோதர்கள்’, ’இந்தியன்’, ’அவ்வை சண்முகி’, ’தெனாலி’, ’பஞ்ச தந்திரம்’ உட்பட பல படங்களில் பணியாற்றினார். 



    வசனகர்த்தாவாகப் பணியாற்றிய அதே சமயம் சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும் தோன்றியிருக்கிறார். தனது டைமிங் காமெடியால் மக்களை சிரிக்க வைத்தவர் கிரேஸி மோகன்.

    தற்போது உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி பிற்பகல் 2 மணிக்கு கிரேஸி மோகன் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
    பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் இன்று அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் ரகுநாத் கர்னாட்(81). இவர் கன்னட மொழியின் எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார்.

    சமீபத்தில் கன்னடத்திற்கான ஞானபீட விருது பெற்ற ஏழு நபர்களில் இவரும் ஒருவராவார்.  இந்த விருதானது இந்தியாவில் இலக்கியம் சார்ந்தவர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய கெளரவமாகும்.

    கர்னாட் நாற்பது ஆண்டுகளாக நாடகங்களை இயக்கி வருகிறார், பெரும்பாலும் தற்காலத்திய பிரச்சனைகளை சமாளிப்பதற்காக வரலாற்றினைப் பயன்படுத்துவார்.

    அவருக்கு இந்திய அரசாங்கத்தின் மூலமாக பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற கெளரவங்களும் அளிக்கப்பட்டுள்ளன.



    தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே, ஹேராம் போன்ற படங்களில் குணச்சித்தர, வில்லன் ஆகிய வேடங்களில் சிறப்பாக நடித்தவராவார். இந்நிலையில் இன்று காலை வயது முதிர்வின் காரணமாக பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் கிரிஷ் கர்னாட் காலமானார்.

    இவருக்கு பல்வேறு திரை உலக பிரபலங்களும், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் கர்நாடக முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி, அரசு நிகழ்ச்சிகள் மற்றும் தான் பங்கேற்கவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் இன்று ரத்து செய்வதாக  அறிவித்தார்.

    மேலும் கிரிஷ் கர்னாட்டின் மறைவையொட்டி கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

    பல படங்களில் வசனகர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றிய கிரேஸி மோகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    பிரபல நாடக கலைஞர் கிரேஸி மோகன். இவர் முதன் முதலில் பாலசந்தர் இயக்கிய ‘பொய்க்கால் குதிரைகள்’ படத்துக்கு வசனம் எழுதினார்.

    பின்னர் கமலுடன் ‘சதி லீலாவதி’ படத்தில் வசனகர்த்தாவாகப் பணியாற்ற ஆரம்பித்த கிரேஸி மோகன் அடுத்து அவருடன் தொடர்ந்து ’காதலா காதலா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ’அபூர்வ சகோதர்கள்’, ’இந்தியன்’, ’அவ்வை சண்முகி’, ’தெனாலி’, ’பஞ்ச தந்திரம்’ உட்பட பல படங்களில் பணியாற்றினார். 



    வசனகர்த்தாவாகப் பணியாற்றிய அதே சமயம் சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும் தோன்றியிருக்கிறார். தனது டைமிங் காமெடியால் மக்களை சிரிக்க வைத்தவர் கிரேஸி மோகன்.

    தற்போது உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
    அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தில் விஜய்யின் பெயர் மைக்கேல் என்று அழைத்து வந்த நிலையில், தற்போது வேறொரு பெயர் லீக்காகியுள்ளது.
    ‘தெறி', 'மெர்சல்' படங்களுக்கு பிறகு தளபதி விஜய் -  அட்லி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் 'தளபதி 63'. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் மைக்கேல் என்று கூறப்பட்டது. தற்போது விஜய்யின் பெயர் ‘பிகில்’ என்று வைத்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 



    இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, சவுந்தரராஜா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
    பெங்களூருவில் வீட்டை காலி செய்த போது ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதாக நடிகர் யஷ் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் யஷ். இவர் நடித்த கே.ஜி.எப். படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இந்த நிலையில் நடிகர் யஷ், பெங்களூருவில் முனிபிரசாத் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு வீட்டை காலி செய்யும்படி நடிகர் யஷ்சிடம், உரிமையாளர் முனிபிரசாத் கூறினார். ஆனால் வீட்டை காலி செய்ய நடிகர் யஷ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கு பிரச்சினை உண்டானது. மேலும் இதுதொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் நடிகர் யஷ் மீது, உரிமையாளர் முனிபிரசாத் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாடகை வீட்டை காலி செய்யும்படி நடிகர் யஷ்சுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் யஷ் வாடகை வீட்டை காலி செய்து விட்டார். மேலும் வீட்டின் உரிமையாளருக்கு வழங்கவேண்டிய வாடகை பாக்கி தொகையையும் அவர் கொடுத்து விட்டார்.



    இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் முனிபிரசாத் நடிகர் யஷ், அவரது தாய் உள்பட சிலர் மீது போலீசில் ஒரு புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

    கோர்ட்டு உத்தரவுப்படி வீட்டை காலி செய்த போது நடிகர் யஷ், அவரது தாய் உள்பட சிலர் வீட்டின் சமையல் அறை, வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த அலங்கார மின்விளக்குகள், வீட்டில் உள்ள சில பொருட்கள் என ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தி சென்றுவிட்டார்கள் என்று புகார் மனுவில் கூறியிருக்கிறார். அதன்பேரில் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ஷங்கர் இயக்கத்தில் தமிழில் உருவான காதலன் எனும் படத்தில் நடித்த பிரபல கர்நாடக நடிகர் கிரிஷ் கர்னாட் இன்று காலமானார்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் ரகுநாத் கர்னாட்(81). இவர் கன்னட மொழியின் எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார்.

    சமீபத்தில் கன்னடத்திற்கான ஞானபீட விருது பெற்ற ஏழு நபர்களில் இவரும் ஒருவராவார்.  இந்த விருதானது இந்தியாவில் இலக்கியம் சார்ந்தவர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய கெளரவமாகும்.

    கர்னாட் நாற்பது ஆண்டுகளாக நாடகங்களை இயக்கி வருகிறார், பெரும்பாலும் தற்காலத்திய பிரச்சனைகளை சமாளிப்பதற்காக வரலாற்றினைப் பயன்படுத்துவார்.

    இப்ராகிம் அல்காசி, பீ. வீ. கரந்த், அலிகியூ படம்சே, பிரசன்னா, அரவிந்த் கவூர், சத்யதேவ் துபே, விஜயா மேத்தா, ஷியாமானந்த் ஜலன் மற்றும் அமல் அலானா போன்ற புகழ்பெற்ற இயக்குனர்களால் அவரது நாடகங்கள் இயக்கப்பட்டன.

    ஒரு நடிகராக, இயக்குனராக மற்றும் திரைக்கதை எழுத்தாளராக இந்தியத் திரைப்பட உலகில் இன்றும் அவர் நிலைத்து நிற்கிறார். இதனால் ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். அவருக்கு இந்திய அரசாங்கத்தின் மூலமாக பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற கெளரவங்களும் அளிக்கப்பட்டுள்ளன.

    தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே, ஹேராம் போன்ற படங்களில் குணச்சித்தர, வில்லன் ஆகிய வேடங்களில் சிறப்பாக நடித்தவராவார். இந்நிலையில் இன்று காலை வயது முதிர்வின் காரணமாக பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் கிரிஷ் கர்னாட் காலமானார்.  

     
    சித்தார்த் மற்றும் கேத்ரின் தெரசா ஆகியோர் நடிக்க, சாய் சேகர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அருவம்’ படத்தின் முன்னோட்டம்.
    டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரனிடம் இருந்து ஏதாவது ஒரு விஷயம் வருகிறது என்றால் அது மிகவும் தரமானதாக இருக்கும் என்பது உறுதி. குறிப்பாக, மிக திறமையானவர்கள் இணைந்து பணிபுரியும் "அருவம்" திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படம். சித்தார்த் மற்றும் கேத்ரின் தெரசா ஆகியோர் நடிக்க, சாய் சேகர் இயக்கியிருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் புத்தாண்டுக்கு நமக்கு ஒரு விருந்தாக வெளியானது. 

    தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் சித்தார்த், கேத்ரின் தெரசா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க கபிர் துகன் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா மற்றும் போஸ்டர் நந்தகுமார் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர். சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல், மயில்சாமி இன்னும் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.



    இத்திரைப்படத்திற்கு எஸ்.எஸ். தமன் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது வென்ற பிரவீன் கே.எல். எடிட்டிங் செய்ய, ஜி துரைராஜ் கலை இயக்குனராக பணிபுரிகிறார். ஸ்டண்ட் சில்வா வில்லனாக நடிப்பதோடு, படத்தின் சண்டைப்பயிற்சியாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
    நடிகர் சங்க தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், பொருளாளர் பதவிக்கு கார்த்தியை எதிர்த்து பிரசாந்த் போட்டியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
    தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். - ஜானகி கல்லூரியில் தேர்தல் நடக்கிறது.

    இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையில் அணியும் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். நேற்று நாசர் சங்கத்தினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

    நாசர்-விஷால் அணியை எதிர்த்து பாக்யராஜ் தலைமையிலான அணி போட்டியிடுவதால் நடிகர் சங்க தேர்தலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அணி சார்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ் களம் இறங்கி உள்ளார். பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேசும், துணைத் தலைவர்கள் பதவிக்கு உதயா, குட்டி பத்மினியும் போட்டியிடுகிறார்கள்.



    பாக்யராஜ் அணி சார்பில் போட்டியிடுபவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். மேலும் தங்கள் அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். 

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த அணியில் இருப்பவர்கள் பலர் எங்கள் அணியில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். நடிகர் சங்க தேர்தலில் எந்தவிதமான அரசியல் தலையீடும் இல்லை. ரஜினி, கமல் ஆகியோரிடம் ஆலோசித்த பின்னரே தேர்தலில் நிற்க முடிவு செய்தேன். எங்கள் அணியில் பொருளாளர் பதவிக்கு நடிகர் பிரசாந்த் நிற்கிறார்’ என்றார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் பும்ரா, பிரபல நடிகையை காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இவர் ஐ.சி.சி. பவுலர்கள் தர வரிசைப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

    இவருக்கும், மலையாள நடிகை அனுபமாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. நடிகை அனுபமா, மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர். சுருட்டை முடி, கவர்ச்சியான சிரிப்பின் மூலமாக ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தார்.

    தமிழில் தனுசுடன் கொடி படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கா விட்டாலும், தெலுங்கிலும், மலையாளத்திலும் அனுபமா பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.



    இவர்களது காதல் கிசுகிசுக்க அவர்களின் டுவிட்டர் பக்கம் தான் காரணமாக அமைந்துள்ளது. பும்ரா டுவிட்டரில் 25 பேரை ‘பாலோ’ செய்கிறார். இதில் அதிகம் பேர் கிரிக்கெட் வீரர்கள். மற்றவை கிரிக்கெட் தொடர்புடைய பக்கம். அவர் பாலோ செய்யும் ஒரே ஒரு நடிகை அனுபமா தான்.

    அதேபோல அனுபமாவும் தனது டுவிட்டரில் பும்ராவை ‘பாலோ’ செய்கிறார். பும்ரா போடும் ஒவ்வொரு பதிவுக்கும் லைக் செய்து அதை ‘ஷேர்’ செய்து வருகிறார். இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக இணையதளத்தில் நெட்டிசன்கள் தகவல் பரப்பி வருகின்றனர்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அனுஷ்கா, தற்போது ரீமேக் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    பாகமதி படத்திற்குப் பின் அனுஷ்கா சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் ஒப்பந்தமானார். அந்த படத்தை தவிர வேறு எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார். தற்போது அனுஷ்கா மாதவனுடன் இணைந்து சைலன்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

    தெலுங்கில் இந்தப் படம் நிசப்தம் என்ற பெயரில் தயாராகிறது. அமெரிக்காவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் ஸ்பானிஷ் மொழி திரைப்படம் ஒன்றின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.



    ஜூலியாஸ் ஐஸ் என்ற அப்படம் 2010ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தை கபீர் லால் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்ய உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

    விஜய் நடிப்பில் உருவாகி வரும் "தளபதி 63" படம் குறித்த புதிய தகவலை இயக்குனர் அட்லி தெரிவித்துள்ளார்.
    விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    தீபாவளி ரிலீஸ் என்பதால் படக்குழுவினர் வேலைகளில் பிஸியாக உள்ளனர். விஜய் இப்படத்தில் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். கால்பந்து போட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் சமீபத்தில் படமாக்கினார்கள். 



    இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே தயாராகிவிட்டதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாடல் பணிகள் நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில் இந்த பாடல் ரெகார்டிங் பணிகளின்போது எடுத்த ஒரு புகைப்படத்தை அட்லி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 
    ×