என் மலர்
சினிமா செய்திகள்
பாக்கியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’குலசாமி’ என்னும் குறும்படம் பிரபலங்களை கவர்ந்து பாராட்டையும் பெற்று வருகிறது.
தற்போது உள்ள இளைஞர்கள் குறும்படம் இயக்குவதில் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். அந்த குறும்படங்கள் அவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. குறும்படங்கள் பல திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று விருதுகளையும் பெற்று வருகிறது. குறும்படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர்கள் தற்போது பெரிய படங்களை இயக்கி சாதனை படைத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது குலசாமி என்னும் குறும்படம் பிரபலங்களை கவர்ந்து பாராட்டையும் பெற்று வருகிறது.
கேபி மூவிமேக்கர்ஸ் சார்பாக பழனி பவானி தயாரிப்பில் உருவாகியிருக்கும் குலசாமி குறும்படத்தை பாக்கியராஜ் இயக்கி உள்ளார். லயோலா கல்லூரி மாணவன் கிஷோத் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். நிஜில் இசையமைத்திருக்கும் இக்குறும்படத்திற்கு ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரேசன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்தக் குறும்படம் சமீபத்தில் பிரபலமான யூடியூப் இணையதளத்தில் வெளியானது. சாதியால் மனிதம் அழிந்து கொண்டிருக்கிறது என்ற சமூக கருத்தை வலியுறுத்தி வந்திருக்கும் இந்த குறும்படத்தை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.
இக்குறும்படம் குறித்து நடிகர் நகுல் கூறும்போது, 'குலசாமி என்னும் குறும்படத்தை பார்த்தேன். சமுதாயத்தில் நடக்கிற நிஜமான விஷயத்தை இயக்குனர் பாக்கியராஜ் திறமையாக இயக்கியிருக்கிறார். சாதி என்ற வார்த்தையால் எத்தனை பேர், எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இக்குறும்படத்தில் பார்க்கலாம்' என்றார்.

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறும்போது, 'இந்தியா முழுவதும் அண்மைக் காலமாக நடைபெற்று வரும், சாதி மதம் விட்டு திருமணம் செய்யும் இளம் தம்பதியரை படுகொலை செய்யும் ஆணவ கொலைகள், வறட்டு கவுரவ கொலைகள் அனைத்து தளங்களிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது. இந்திய அரசு ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன். சமூகத்தில் நடக்கும் இந்த பிரச்சினையை குல சாமி குறும்படம் மூலம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் பாக்கியராஜ். இன்றைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த படத்தை கொடுத்த பாக்கியராஜுக்கு வாழ்த்துக்கள்' என்றார்.
குலசாமி குறும்படத்தை பார்த்தவர்கள் பலரும் பாராட்டுவது, மற்றவர்களிடையே குலசாமி குறும்படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது.
களவாணி 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து விமல் நடிக்கும் புதிய படத்திற்கு "சோழ நாட்டான்" என பெயரிடப்பட்டுள்ளது.
களவாணி 2 படத்தை தொடர்ந்து விமல் நடிக்கும் படத்திற்கு "சோழ நாட்டான்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குனர் பட்டுக்கோட்டை "ரஞ்சித் கண்ணா" இயக்குகிறார், மரகதகாடு படத்தின் ஒளிப்பதிவாளர் "நட்சத்திர பிரகாஷ்" ஒளிப்பதிவு செய்கிறார்.

பாடல்கள் "மணிஅமுதவன்" மற்றும் "சபரீஷ்" எழுதுகிறார்கள். ஹரிஷ் பிலிம் புரோடக்ஷன் சார்பாக "பாரிவள்ளல்" தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் மற்றும் முன்னணி நாயகி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது விரைவில் அதை படக்குழு அறிவிக்கவுள்ளது.
ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் விக்ரம், அபி ஹசன், அக்ஷரா ஹாசன் நடிப்பில் வெளியாகி உள்ள கடாரம் கொண்டான் படத்தின் விமர்சனம்.
மலேசியாவில் முழு படமும் எடுக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் அடுக்கு மாடியில் இருந்து காயத்தோடு தப்பித்து வருகிறார் விக்ரம். இவரை இருவர் துரத்துகிறார்கள் தப்பித்து செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். மயக்கத்தில் இருக்கும் விக்ரமை போலீசார் விசாரணைக்காக மருத்துவமனையில் பாதுகாத்து வருகிறார்கள். இந்த மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் நாசரின் மகன் அபி ஹசன், அவரது மனைவி அக்ஷரா ஹாசனுடன் மலேசியாவில் தனியாக வசித்து வருகிறார்.
நிறைமாத கர்ப்பிணியான அக்ஷரா ஹாசனை பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததால் அபி ஹசனே இரவு வேலைக்கு போய் வந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் விக்ரம் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டில் அபி ஹசனுக்கு டியூட்டி போடப்படுகிறது. இவருடய கண்காணிப்பில் தான் விக்ரம் உள்ளார். யாரோ சிலர் விக்ரமை கொல்லப் பார்க்கிறார்கள். உயிருக்குப் போராடும் விக்ரமை அபி ஹசன் காப்பாற்றுகிறார். போலீஸ் விசாரணையில் விக்ரம் ஒரு திருடன் என்பது தெரிய வருகிறது.

அப்பொழுது வீட்டில் தனியாக இருக்கும் நாயகி அக்ஷரா ஹாசனை கடத்தி வைத்திருப்பதாகவும், உடனடியாக விக்ரமை மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டு வந்து தன்னிடம் சேர்த்தால் தான் அக்ஷரா ஹாசனை விடுவிக்க முடியும் என்று அபி ஹசனுக்கு போனில் மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதனால் வேறுவழியின்றி விக்ரமை மருத்துவமனையிலிருந்து அழைத்துக்கொண்டு நாயகியை மீட்பதற்காக செல்கிறார் அபி ஹசன். இதனால் அபி ஹசனும் குற்றவாளி லிஸ்டில் சேர்க்கப்படுகிறார். விக்ரம் யார்? அவரை கொல்ல முயற்சிப்பது யார்? அபி ஹசனும், அக்ஷராவும் என்ன ஆனார்கள்? என்பதே மீதிக்கதை

படம் முழுக்க விக்ரம் வசனங்கள் ஏதும் பேசாமல் சைலண்டாக பேசி, பார்வையிலேயே வைலண்டான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விக்ரம். வித்தியாசமான கெட்டப், லுக் என படம் முழுக்க ஸ்டைலிஷாக இருக்கிறார் விக்ரம். விக்ரம் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக இருக்கும்.
கர்ப்பிணியாக நடித்திருக்கும் அக்ஷராவுக்கு கொஞ்சம் நேரம் மட்டும் தான் படத்தில் வேலை. இளம் வயதில் இத்தகைய அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள அவர், ஒவ்வொரு பிரேமிலும் தடம் பதிக்கிறார். நாசரின் மகன் அபி ஹசனுக்கு இதுதான் முதல்படம். படம் முழுக்க வரும் இவர் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ஈர்க்கிறார். போலீஸ் அதிகாரிகளாக வரும் லேனா, வின்சென்ட் ராஜதுரை உள்பட அனைவரும் சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார்கள்.

தூங்காவனம் படத்தை போன்று கடாரம் கொண்டான் படத்தையும் ஆக்ஷன் ஜானரில் எடுத்துள்ளார் ராஜேஷ் எம். செல்வா. சண்டை காட்சிகள், விஷுவல் என அனைத்தும் ஹாலிவுட் தரத்திற்கு உள்ளது. படம் முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் திரைக்கதை சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். 2-ம் பாதி ஆக்ஷன் படங்களுக்கான விறுவிறுப்பில்லாமல் செல்கிறது.
ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஸ்ரீனிவாஸ் குதாவின் கேமரா படத்தை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்து சென்றிருக்கிறது.
மொத்தத்தில் ’கடாரம் கொண்டான்’ விறுவிறுப்பு குறைவு.
டிஸ்னி தயாரிப்பில் ஜோன் பேவ்ரோவ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘தி லயன் கிங்’ படத்தின் விமர்சனம்.
1994 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி தயாரிப்பில் வெளியான அனிமேஷன் திரைப்படம் `தி லயன் கிங்'. இந்தப் படத்திற்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கின்றனர். 25 ஆண்டுகள் கழித்து, இந்தப் படத்தை நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி லைவ் ஆக்ஷன் அனிமேஷன் முறையில் வெளியாகி உள்ளது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு டிஸ்னியின் ’தி லயன் கிங்’ திரைப்படம் அனிமேஷனில் வெளியாகி உலகமெங்கும் பிரபலமானது. தான் வாழும் பரந்த நிலப்பரப்பை சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். ராஜா சிங்கம் முபாசா. அவரை வீழ்த்தி தான் ராஜாவாக திட்டம் தீட்டி வருகிறார் அவரது தம்பி சிங்கம் ஸ்கார். இந்நிலையில் முபாசாவுக்கு அழகிய ஆண்குழந்தையாக குட்டிசிங்கம் சிம்பா பிறக்கிறான். அவனை அடுத்த ராஜாவாக அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

இந்நிலையில் முபாசாவை கொன்று குட்டி சிம்பாவை துரத்திவிட்டு தான் ராஜாவாகி கொடூர ஆட்சி செய்கிறான் ஸ்கார். இதையடுத்து சிம்பா பெரியவனாக வளர்ந்து தனது தந்தையின் காட்டை ஸ்காரிடமிருந்து, எப்படி மீட்கிறான் என்பதுதான் கதை.
`அயர்ன் மேன்', `தி ஜங்கிள் புக்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜோன் பேவ்ரோவ் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். 25 ஆண்டுகளுக்கு முந்தைய கதை என்றாலும், தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி லைவ் ஆக்ஷன் அனிமேஷன் முறையில் கண்களுக்கு விருந்தளித்திருக்கிறார்.

இப்படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களின் பங்கு அதிகம். நவீன தொழில்நுட்பத்தை இயக்குனர் சிறப்பாக கையாண்டுள்ளார். ஆயிரக்கணக்கில் தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்படத்தில் வேலை செய்திருக்கிறார்கள் அத்தனை பேரின் உழைப்பும், திரையின் உச்ச அனுபவத்தை நமக்குத் தந்திருக்கிறது.
இப்படத்திற்கு வசனம் தான் மிகப்பெரிய பலம். முக்கியமாக அதற்கு டப்பிங் பேசிய விதம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. 'தி லயன் கிங்' படத்தின் தமிழ் வெர்ஷனில் இடம்பெறும் கேரக்டர்களுக்கு சித்தார்த், அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரவிசங்கர், ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோர் டப்பிங் கொடுத்திருக்கின்றனர்.

தனி ஒருவன் படத்தில் தனித்துவமான வில்லத்தனத்தால் மிரட்டிய அரவிந்த் சாமி, இப்படத்தின் வில்லன் கதாபாத்திரமான ஸ்காருக்கு குரல் கொடுத்திருக்கிறார். சுவாரஸ்யமானதாகவும் பல பரிணாமங்களை கொண்டதாகவும் உள்ள ஸ்கார் கதாபாத்திரத்திற்கு தனது குரலால் உயிர் கொடுத்திருக்கிறார் என்றே கூறலாம். படத்தின் ஹீரோவான சிம்பாவிற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்திருக்கிறார். காதல், நட்பு, சென்டிமெண்ட் என வெவ்வேறு உணர்வுகளை கொண்ட இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு டப்பிங் செய்து அசத்தி இருக்கிறார் சித்தார்த்.
நண்பர்களாக வரும் டிமுன் மற்றும் பும்பாவிற்கு சிங்கம் புலியும், ரோபோ சங்கரும் குரல் கொடுத்துள்ளனர். காமெடிக்கு பெயர்போன இவர்கள் இருவரும், இந்த இரு நகைச்சுவை கதாபாத்திரத்திற்கும் குரல் கொடுத்துள்ள விதம் அனைவரையும் வயிறுகுலுங்க சிரிக்க வைக்கின்றனர். தூதுவனாக வரும் சாசு கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ள மனோபாலாவும் காமெடிக்கு பஞ்சம் வைக்கவில்லை, சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக சாசு பறவை பேசினால் இவர் குரலை தவிற வேறு எந்த குரலும் பொருந்தாது என்பது போன்ற எண்ணம் தோன்றுகிறது. ஹேன்ஸ் சிம்மெரின் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘தி லயன் கிங்’ விஷுவல் கிங்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் பிரபல மலையாள நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து பேட்ட படம் இயக்குவதற்கு முன்பே தனுசுடன் இணைந்து ஒரு படம் எடுப்பதாக பேச்சுவார்த்தை சென்றது. ரஜினி படத்துக்காக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் படம் தள்ளிப்போனது. இப்போது அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.
வெளிநாடுகளை மையமாக கொண்டு தாதாக்கள் படமாக உருவாகும் இந்த படத்தில் தற்போது ஐஸ்வர்யா லட்சுமி இணைந்துள்ளார். மலையாளத்தில் இவர் கதாநாயகியாக வலம் வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்க உள்ளது. பேட்ட படத்துக்கு ஒளிப்பதிவு செய்த திருநாவுக்கரசு ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளார்.
இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளன. தனுஷ் நடிப்பில் தற்போது ஒரே நேரத்தில் இரு படங்கள் தயாராகி வருகின்றன.

துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இதில் சிநேகா, மெகரின் பிர்சாடா என இரு நாயகிகள் அவருக்கு ஜோடியாக நடிக்கின்றனர். வெற்றி மாறன் இயக்கத்தில் நான்காவது முறையாக நடிக்கும் அசுரன் படத்தின் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம்வரும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோரி கெர்யக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமேஸ்வர் எஸ்.பகத் படத்தொகுப்பை கவனிக்கிறார். இப்படம் கடந்த மாதம் 14-ந் தேதி வெளியாக இருந்தது.
இதனிடையே, கொலையுதிர்காலம் என்ற டைட்டிலுடன் படத்தை வெளியிடக்கூடாது என்று பாலாஜி குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது.

இந்த தடையை நீக்க கோரி தயாரிப்பாளர் மதியழகன் மனுதாக்கல் செய்தார். காப்புரிமை இல்லாத டைட்டிலை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த உரிமை உண்டு எனக்கூறி படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற 26-ந் தேதி ரிலீசாகும் என தெரிவிகப்பட்டுள்ளது.
டிஸ்னி தயாரிப்பில் ஜான் பேவரூ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி லயன் கிங்’ படத்தின் முன்னோட்டம்.
1994 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி தயாரிப்பில் வெளியான அனிமேஷன் திரைப்படம் `தி லயன் கிங்'. இந்தப் படத்திற்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கின்றனர். 25 ஆண்டுகள் கழித்து, இந்தப் படத்தை நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி லைவ் ஆக்ஷன் அனிமேஷன் முறையில் தயாராகி வருகிறது. `அயர்ன் மேன்', `தி ஜங்கிள் புக்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜான் பேவரூ இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

பிரமாண்டமான லைவ் ஆக்ஷன் படமான `தி லயன் கிங்' படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு அரவிந்த்சாமி, சித்தார்த் ஆகியோர் குரல்கொடுக்கின்றனர். தவிர, ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகிணி, சிங்கம்புலி, மனோபாலா, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளனர். மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். வரும் ஜுலை 19 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
'ஆதித்யா வர்மா' படம் தனக்கு போராட கற்றுக்கொடுத்ததாக விக்ரம் மகன் துருவ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'ஆதித்யா வர்மா'. தற்போது இதன் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் துருவ் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவாகிவரும் ஆதித்யா வர்மா படத்தில் துருவ்க்கு ஜோடியாக பனித்தா சந்து நடிக்கிறார். பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பாலா இயக்கத்தில் உருவான வர்மா படம் கைவிடப்பட்டு இப்படம் உருவாகியுள்ள நிலையில், இது தனக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் துருவ் தெரியப்படுத்தியுள்ளார். ’ஆதித்யா வர்மா அழகான விஷயமாக உள்ளது. இது போல் என் வாழ்வில் எப்போதும் நிகழ்ந்ததில்லை. அவன்தான் எனக்கு வாழ்க்கைப் பற்றிய அர்த்தத்தை, காரணத்தை, என்னைப் பற்றிய தெளிவை, மிக முக்கியமாக எப்படி விட்டுக்கொடுக்காமல் போராடவேண்டும் என்பதையும் கற்று தந்தான்.
இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள அனைவரையும் எனது அன்பை செலுத்துகிறேன். குறிப்பாக வீடியோவில் கடைசியாக இடம்பெற்றவருக்கு, அவர் இல்லாமல் இது நடந்திருக்காது” என்று பதிவிட்டுள்ளார்.
ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கும் ஆபாச படங்களில் இனி நடிக்க மாட்டேன் என பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.
களவாணி திரைப்படம் பத்து வருடங்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் இயக்குனர் சற்குணம், நாயகன் விமல் மற்றும் நாயகி ஓவியா ஆகியோருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த வாரம் களவாணி 2 திரைப்படம் வெளியாகிறது. அதே சற்குணம், விமல், ஓவியா என்கிற கூட்டணியில் உருவாகி மீண்டும் ஒரு வெற்றியை ருசித்துள்ளது.
இந்த படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. நாயகன் விமல் பேசியதாவது:- ’இந்த படத்தின் ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் உதவிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் கேரளாவில் இன்னொரு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் அந்த நேரத்தில் இங்கே கூடவே இருந்து கவனிக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.

நல்ல கதை அமைந்தால் களவாணி 3-ம் பாகத்திலும் நடிக்க ஆவலாக இருக்கிறேன். அது இன்னும் 10 வருடம் கழித்தும் நடக்கலாம் அல்லது அடுத்த வருடமே நடந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு போன்ற ஆபாச படங்களில் இனி நடிக்க மாட்டேன். அந்த படம் படமாக்கப்பட்டதும் டைட்டில் வைக்கப்பட்டதும் எல்லாமே என் கையை மீறி நடந்த விஷயங்கள் என்பதால் அந்த படத்தில் இருந்து நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமலா பால் நடிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆடை’ படத்துக்கு தடை கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அமலா பால் நடிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஆடை. வரும் வெள்ளிக்கிழமை ரிலீசாக இருக்கும் இந்த படம் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. மேயாதமான் படத்தை தொடர்ந்து ரத்னகுமார் இயக்கும் இப்படம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. காமினி என்னும் கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்திருக்கிறார்.
படத்தின் போஸ்டரில் அமலா பால் நிர்வாணமாக தோன்றும் காட்சி வெளியானது. டீசரிலும் அமலா பாலின் நிர்வாண காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இதனால் படத்தின் டீசர், போஸ்டர்கள் வெளியானதில் இருந்தே சர்ச்சைகள் எழுந்துவந்தன. இதனால் விஜய் சேதுபதியுடன் நடித்துக் கொண்டிருந்த படத்திலிருந்து அமலா பால் நீக்கப்பட்டார்.

ஆணாதிக்க மனநிலையில் தயாரிப்பு நிறுவனங்கள் நடந்துகொள்வது தமிழ்த் திரையுலகிற்கு நல்லதல்ல என்ற அமலாபாலின் அறிக்கையும் பரபரப்பை ஏற்படுத்தியது. சர்ச்சைக்குரிய நிர்வாண காட்சிகளை கொண்டுள்ள போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த போஸ்டர்களை விளம்பரங்களில் பயன்படுத்தக் கூடாது எனவும் இத்தகைய படங்களை தடை செய்ய வேண்டும் என்றும் அனைத்து அரசியல் மக்கள் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா என்பவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
நிர்வாண காட்சியை பயன்படுத்தி திரைப்படத்தை விளம்பரபடுத்துவது சமுதாயத்தை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ் திரைப்பட கதாநாயகிகளில் ஒருவராக பார்க்கப்படும் அமலாபால் இது போன்ற காட்சிகள் கொண்ட திரைபடத்தில் நடித்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது.
சுவரொட்டிகளிலும் மற்றும் பிற விளம்பரங்களிலும் ஆபாச காட்சி இடம் பெறுவதற்கு தடை விதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அப்படி தடை விதிப்பதற்கு தங்களுக்கு ஏதாவது இடையூறு இருக்குமேயானால் நாங்கள் களத்தில் இறங்கி பெண்கள் பாதுகாப்பிற்காகவும், தமிழ் கலாச்சாரத்தை காப்பதற்காகவும் போராடுவதற்கு தயாராக உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா விருப்பம் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகராகி விட்ட விஜய் தேவரகொண்டா நோட்டா படத்தை தொடர்ந்து தமிழில் டியர் காம்ரேட் படம் மூலம் களம் இறங்குகிறார். இந்த பட விளம்பர நிகழ்ச்சிக்காக சென்னை வந்த அவர் அளித்த பேட்டி:
தமிழ் படத்தில் நடிக்க நிறைய கதைகள் கேட்டேன். தமிழை முழுமையாக கற்றுக்கொள்ளாமல் நேரடியான தமிழ் படத்தில் எப்படி நடிப்பது? நோட்டா படத்தில் நடிக்கும்போதே அடுத்த நாள் படப்பிடிப்புக்கான வசனங்களை முதல் நாளே வாங்கி சென்று படித்து மனப்பாடம் செய்துகொள்வேன்.

ஆமாம். நீங்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டால் உங்களுக்கு மகிழ்ச்சியாக தானே இருக்கும். அப்படித்தான் இருக்கிறது. பணம், பின்புலம் எதுவுமே இல்லாமல் சினிமாவுக்குள் நுழைந்தேன். இன்று எனது ரசிகர்களால் தான் அனைத்துமே கிடைத்துள்ளது. இப்போது அதற்கு எல்லாம் நேரமே இல்லை. சினிமாவில் நடிப்பதற்கே நேரம் போதவில்லை.
தமிழில் மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குனர்களுடன் பணியாற்ற வேண்டும் என ஆசை இருக்கிறது. ஆனால் விஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும். அவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படம் பார்த்த பின்னர் அவரது ரசிகனாகி விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
விமலுடன் தான் இணைந்த படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்களாக அமைந்துள்ளதாக இயக்குனர் சற்குணம் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சற்குணம் இயக்கிய களவாணி திரைப்படம் ஒரு எவர்க்ரீன் பொழுதுபோக்கு படம். ஒவ்வொரு முறை அந்த படத்தை பார்க்கும்போதும் மிகவும் புதிதாக பார்க்கும் உணர்வை கொடுப்பதே இதற்கு காரணம். மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த வாரம் களவாணி 2 திரைப்படம் அதே சற்குணம், விமல், ஓவியா கூட்டணியில் உருவாகி மீண்டும் ஒரு வெற்றியை ருசித்துள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர் சற்குணம் பேசியதாவது: “களவாணி போன்ற ஹிட் படத்தை கொடுத்து விட்டு அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து மக்களை திருப்திப்படுத்துவது என்பது மிகவும் சவாலான விஷயம்.. ஆனால் களவாணி 2 படத்திற்கும் மக்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கியுள்ளார்கள்.

எனக்கும் விமலுக்கும் ஒரு ராசி உண்டு. நாங்கள் இருவரும் இணைந்த களவாணி, வாகை சூடவா, விமலை வைத்து நான் தயாரித்த மஞ்சப்பை, இப்போது களவாணி 2 என அனைத்து 4 படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்து விட்டன. எங்கள் கூட்டணிக்கு தோல்வியே இல்லை.” என கூறினார்.






