search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தனுஷ்
    X
    தனுஷ்

    தனுசுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் பிரபல மலையாள நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து பேட்ட படம் இயக்குவதற்கு முன்பே தனுசுடன் இணைந்து ஒரு படம் எடுப்பதாக பேச்சுவார்த்தை சென்றது. ரஜினி படத்துக்காக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் படம் தள்ளிப்போனது. இப்போது அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

    வெளிநாடுகளை மையமாக கொண்டு தாதாக்கள் படமாக உருவாகும் இந்த படத்தில் தற்போது ஐஸ்வர்யா லட்சுமி இணைந்துள்ளார். மலையாளத்தில் இவர் கதாநாயகியாக வலம் வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்க உள்ளது. பேட்ட படத்துக்கு ஒளிப்பதிவு செய்த திருநாவுக்கரசு ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளார்.

    இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளன. தனுஷ் நடிப்பில் தற்போது ஒரே நேரத்தில் இரு படங்கள் தயாராகி வருகின்றன.

    ஐஸ்வர்யா லட்சுமி

    துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இதில் சிநேகா, மெகரின் பிர்சாடா என இரு நாயகிகள் அவருக்கு ஜோடியாக நடிக்கின்றனர். வெற்றி மாறன் இயக்கத்தில் நான்காவது முறையாக நடிக்கும் அசுரன் படத்தின் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
    Next Story
    ×