என் மலர்
சினிமா செய்திகள்
வி.இசட் துரை இயக்கத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடிக்கும் இருட்டு படத்தில் இருந்து 20 காட்சிகளை சென்சாரில் வெட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்க இருட்டு என்ற பெயரில் ஹாரர் படம் தயாராகி உள்ளது. வி.இசட் துரை இயக்கி உள்ளார். படம் பற்றி வி.இசட் துரை கூறியதாவது:- இது வழக்கமான பேய் படம் அல்ல. ஜின் என்ற புது படைப்பை தென் இந்திய சினிமாவில் அறிமுகப்படுத்துகிறோம். இஸ்லாமிய நூல்களில் பேசப்பட்டுள்ள விஷயம் இது. ஜின் என்ற படைப்பு எந்த உருவத்திலும் வரலாம். மனிதனை விட சக்தி வாய்ந்தது.

சாக்ஷி, தன்ஷிகா, விமலா ராமன், விடிவி.கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். பயமுறுத்தும் காட்சிகள் அதிகமாக இருந்ததால் சென்சாரில் ஏ சான்றிதழ் தான் தருவோம் என்றார்கள். 20 காட்சிகளை வெட்டி யூ/ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். அடுத்து அமீர் நடிப்பில் நாற்காலி படத்தை இயக்கி வருகிறேன். அதற்கு அடுத்து சிம்புவுடன் இணைய இருக்கிறேன். அது தொட்டி ஜெயா 2 அல்ல. வேறு ஒரு கதை. தொட்டி ஜெயா 2 கண்டிப்பாக வரும்.
நடிகை யாஷிகா ஆனந்த், கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
'இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். துருவங்கள் பதினாறு, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஓரிரு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
சமூகவலைதளத்தில் கவர்ச்சி படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ள இவர், இதற்கு ரசிகர்களின் பதிவிடும் சில அநாகரீக கருத்துக்கள் தன்னை வருத்தமடைய செய்வதாக முன்பு கூறினார்.

அப்படியிருந்தும் கவர்ச்சி போட்டோக்களை பதிவிடுவதை நிறுத்தவில்லை. தற்போது கருப்பு நிற உடையில் கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி போட்டோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கும் ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர்.
🧚♀️✨ pic.twitter.com/BXEMoanVVH
— Yashika Aannand (@iamyashikaanand) December 3, 2019
மாமங்கம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மம்மூட்டி, தமிழ்நாட்டில் மேடையில் பேச பயமாக இருப்பதாக கூறினார்.
மம்மூட்டி, இனியா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாமங்கம். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பேசியதாவது: தமிழ்நாட்டில் மேடையில் பேச பயமாக இருக்கிறது. ஏனென்றால், சினிமாவில் சரியாக தமிழ் பேசி விடுவேன். ஆனால் மேடையில் தப்புதப்பாக தான் பேசுவேன். வரலாற்று படத்தில் நடிக்கும்போது மட்டும், அதை ஒரு பணியாக எடுத்துச் செய்வேன். அப்படி இந்த படத்தில் ஒரு அங்கமாக இருப்பதே சந்தோஷம்தான்.
100 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளம் என்ற மொழியே கிடையாது. மலபார் தான் இருந்தது. பிரிட்டிஷ்காரர்கள் போனவுடன்தான் அனைத்தையும் பிரித்துச் சரி பண்ணினோம். இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என மொழிகள் உள்ளன. இப்படி மொழியைத் தாண்டி கலையை ரசிப்பதே பெரிய விஷயம்.

மொழியைத் தாண்டி பல படங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் பேசும் மொழியை தாண்டி உணர்வுபூர்வமான காட்சிகள்தான் ஒன்றிணைய வைக்கும். அந்த காட்சிகளுக்கு எல்லாம் மொழியே கிடையாது. இந்த படம் சாதாரணமான ஒரு பழிவாங்கும் கதை கிடையாது. இந்த படத்தின் தமிழ் வசனங்களை நான் கேட்டேன் என்பதற்காக இயக்குநர் ராம் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
நான் பேசுவது எல்லாமே ராம் பேசுவது போலத்தான் இருக்கும். இந்தப் படத்தில் என்னை சரியான முறையில் தமிழ் பேச வைக்க ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டார். இதை விட ‘பேரன்பு’ எளிதான படமாக இருந்தது. தமிழ்ப் படமாக இருக்க வேண்டும் என்பதாலேயே ராமை உள்ளே கொண்டு வந்தேன். ரொம்ப சந்தோஷமாகவே பண்ணிக் கொடுத்தார்’.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழில் கார்த்தி-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். ஆக்ஷன், அப்பா - மகள் சென்டிமென்ட் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதோடு, 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
இதையடுத்து கைதி படத்தின் ரீமேக் உரிமையை வாங்க பாலிவுட்டில் கடும் போட்டா போட்டி நிலவி வந்தது. இப்படத்தின் ரீமேக் உரிமையை பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பெற்றுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில், தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்ற போது அஜய் தேவ்கனை லோகேஷ் கனகராஜ் சந்தித்ததாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.காளிங்கன் இயக்கும் புதிய படத்துக்காக நடிகர் ஆரி 10 கிலோ வரை உடல் எடையை குறைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஆரி கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பு, சென்னை டி.ஆர்.கார்டனில் தொடங்கியது. இதில், ஆரி ஜோடியாக ஐதராபாத்தை சேர்ந்த பூஜிதா பொன்னாடா நடிகிறார். இவர், ‘ரங்கஸ்தலம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தவர். சி.வி.மஞ்சுநாதன் தயாரிக்கிறார். எஸ்.காளிங்கன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். இவர், ‘என்றென்றும் புன்னகை, ரிச்சி ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.

இந்த படத்துக்காக கதாநாயகன் ஆரி தனது உடல் எடையை 10 கிலோ குறைத்து இருக்கிறார். படத்தை பற்றி தயாரிப்பாளர் சி.வி.மஞ்சுநாதன் கூறுகையில், “இது, ஹாலிவுட் பாணியில் தயாராகி இருக்கும் படம். கதையை டைரக்டர் சொன்னதுமே படத்தை தயாரிப்பது என்று முடிவு செய்து விட்டோம்” என்றார்.
திருமூர்த்தி பாடிய செவ்வந்தி பாடலை அனுதாபத்தால் மட்டும் கேட்க வேண்டாம் என்று இசையமைப்பாளர் டி.இமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'விஸ்வாசம்' படத்தில் இடம்பெற்ற "கண்ணான கண்ணே" என்ற பாடலை பாடி சமூக வலைதளங்களில் பிரபலமான மாற்றுத்திறனாளி இளைஞர் திருமூர்த்தியை இசையமைப்பாளர் டி.இமான் பாடகராக அறிமுகப்படுத்தி உள்ளார். நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் 'சீறு' திரைப்படத்தில், இடம்பெறும் செவ்வந்தி... என தொடங்கும் பாடலை திருமூர்த்தி பாடியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்பாடலை படக்குழு வெளியிட்டனர்.

திருமூர்த்தி பாடியுள்ள உணர்வுபூர்வமான இந்த பாடல் யூடியூபில் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக வீடியோ ஒன்றை டி.இமான் வெளியிட்டுள்ளார். அதில், அனுதாபத்தால் மட்டும் இந்த பாடலை கேட்க வேண்டாம் என்றும், பாடலும் அவருடைய குரலும் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் பகிர்ந்து, அவரை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற்று சினிமா படத்தில் நடிகை டாப்சி பன்னு நடிக்கிறார்.
மறைந்த அல்லது வாழும் பிரபலங்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் நோக்கம் மட்டுமே இருந்த வாழ்க்கை வரலாற்று சினிமா படங்கள், தற்காலத்தில் வணிக லாபம், அரசியல் நோக்கம், கொள்கைப் பரப்புரை என பல வடிவங்களில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் என அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு படங்கள் உருவாகி வருகின்றன.

அது மட்டுமல்ல, கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் டோனி, சச்சின் தெண்டுல்கர் வாழக்கை வரலாறும் சினிமாவாக தயாரிக்கப்பட்டது. அந்த வரிசையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு குறித்து தயாரிக்கப்படும் "சபாஷ் மிது" படத்தில் நடிகை டாப்சி பன்னு நடிக்க உள்ளார். "சபாஷ் மிது"வை வியாகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ரெய்ஸ் ஹெல்மர் ராகுல் தோலாகியா இயக்குகிறார். 'மிதாலி ராஜ்' ஆக டாப்சி பன்னு நடிக்க உள்ளார்.
அருவி படம் மூலம் பிரபலமான நடிகை அதிதி பாலன், தற்போது நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
அருவி படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் நடிகை அதிதி பாலன். அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் வசூலையும் வாரிக்குவித்தது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதிதி பாலனுக்கு பல பட வாய்ப்புகள் வந்தது.
ஆனால், எதையும் ஏற்காமல் மலையாள படத்தில் ஒப்பந்தம் ஆனார். நிவின் பாலி ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி பாலன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

’படவெட்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லிஜு கிருஷ்ணா என்ற புதுமுக இயக்குநர் இயக்க இருக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தலைவர் 168’ படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபல நடிகை ரஜினியுடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார்.
ரஜினி நடிப்பில் தற்போது ‘தர்பார்’ திரைப்படம் உருவாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது.
இப்படத்தை அடுத்து சிவா இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். பின்னர் பிரபல காமெடி நடிகர் சூரி இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

தற்போது இப்படத்தில் நடிகை மீனா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்குமுன் நடிகை மீனா ரஜினியுடன் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும், எஜமான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். மேலும் வீரா, முத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைய இருக்கிறார்.
தன்னுடைய நடிப்பால் பல ரசிகர்களை பெற்றிருக்கும் சத்யராஜ், தற்போது நடித்து வரும் படக்குழுவினரை டப்பிங் பேசி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
சத்யராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங் பணிகளும் தற்போது முடிந்துள்ளது. இதில் சத்யராஜ் 12 மணி நேரம் டப்பிங் பேசி பணிகளை முடித்திருக்கிறார். சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
இது குறித்து இயக்குநர் தீரன் கூறும்போது, ‘சத்யராஜுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு சினிமா மீது தீர்க்க முடியாத வேட்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடன் பணியாற்றி முடித்ததும் அவரது கடின உழைப்புக்கும், அர்பணிப்பு மிக்க நடிப்புக்கும் நான் தீவிர ரசிகனாகி விட்டேன்.

இதற்குக் காரணம் சினிமா மீது அவர் கொண்ட ஆர்வமும், தொழில் பக்தியும் மட்டுமல்ல, கலையையும் நடிப்பையும் அவர் உணர்வுபூர்வமாக பின்பற்றும் முறையும்தான். அவரது அர்ப்பணிப்பு மிக்க நடிப்பு 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்தின் மிகப் பெரிய பலமாக, படத்தைத் தாங்கி நிற்கும் தூணாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
படத்தின் டப்பிங் பணிகளையும் முழுமையாக முடித்து விட்டோம். சத்யராஜ் சார் தனது டப்பிங் பணிகளை 12 மணி நேரத்தில் முடித்து எங்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். வெகு விரைவில் டீசர் வெளியிடும் தேதியை அறிவிக்க இருக்கிறோம்’ என்றார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மூச்சுத்திணறல் காரணமாக மும்பை பிரீச் கேண்டி ஆஸ்பத்திரியில் கடந்த நவம்பர் 10-ந்தேதி அனுமதிக்கப்பட்டார்.
90 வயதான அவருக்கு நெஞ்சுப்பகுதியில் ஏற்பட்ட உணவுத்தொற்றின் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டது. நிமோனியா காய்ச்சல் பாதிப்பும் இருந்ததால் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது.
இதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையில் இப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

லதா குடும்பத்தினர் இது பற்றி கூறியிருப்பதாவது:-
“லதா மங்கேஷ்கரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து அவர் மீண்டு விட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுவிட்டார். வயது மூப்பின் காரணமாகவே அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளோம். மற்றபடி அவர் நலமுடன் உள்ளார்”.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளார்கள்.
தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டி.வி.நடிகர் ஈஸ்வர் மீது அவரது மனைவி ஜெயஸ்ரீ கமிஷனர் அலுவலகத்தில் புகார் கூறியுள்ளார்.
வம்சம் டி.வி. தொடரில் வில்லியாக நடித்து வருபவர் ஜெயஸ்ரீ. ஆபிஸ் என்ற தொடர் மூலம் பிரபலமானவர் ஈஸ்வர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருவான்மியூர் காமராஜர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், நடிகை ஜெயஸ்ரீ அடையாறு மகளிர் காவல் நிலையத்தில், தனது கணவர் ஈஸ்வர் அவரது தாயாருடன் சேர்ந்து கொண்டு கொடுமைபடுத்துவதாகவும், தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகை ஒருவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுத்தார்.
தனது நகைகள், 30 லட்சம் ரூபாய் பணத்தையும் அபகரித்துக் கொண்டு ஏமாற்றி விட்டார். குழந்தையுடன் தவித்து வருகிறேன் என்றும் புகாரில் தெரிவித்திருந்தார். ஜெயஸ்ரீ புகார் மீது வழக்கு பதிவு செய்து ஈஸ்வரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஜெயஸ்ரீ இன்று சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து கணவர் ஈஸ்வர் மீது புதிய புகார் ஒன்றை அளித்தார். கணவர் கைது செய்யப்பட்ட பிறகு தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஈஸ்வர் எனது மகளுக்கு நீண்ட காலமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அவருக்கு திருமணத்துக்கு பிறகு குடி பழக்கம் அதிகரித்தது. கஞ்சா பயன்படுத்தும் பழக்கமும் இருந்தது. சூதாட்டத்திலும் ஈடுபட்டு வந்தார். இதனால் கடன் தொல்லையும் ஏற்பட்டது. குடித்துவிட்டு வந்து என்னை தாக்குவதுடன் மகளிடமும் தவறாக நடந்துகொள்வார்.
டி.வி. நடிகை ஒருவருடன் சேர்ந்து இருக்கும்போது வீடியோ கால் செய்து பேசுவார். இதுபோன்ற செய்கைகளால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். என்னிடம் இருந்து ஈஸ்வர் அபகரித்த நகை, பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






