என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படம் குறித்த வதந்திக்கு அப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’  படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

    இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

    இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவில் நடைபெற்று வந்தது. அப்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு படக்குழு நாடு திரும்பியது.

    இந்நிலையில், எஞ்சிய பகுதிகளை சென்னையில் கிரீன் மேட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படமாக்க உள்ளதாக தகவல் பரவியது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு டுவிட்டரில் பதிலளித்த அஜய் ஞானமுத்து, அவ்வாறு நடத்த சாத்தியமில்லை என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதன்முலம், கோப்ரா படக்குழு கொரோனா ஊரடங்கு முடிந்தபின் மீண்டும் ரஷ்யாவில் எஞ்சிய காட்சிகளை படமாக்கும் என தெரிகிறது.
    தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர், தான் ஒருபோதும் அப்படி நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
    ‘மேயாத மான்’ படத்தின் மூலம் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், பிரியா பவானி சங்கர். தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’, அருண் விஜய்யுடன் ‘மாபியா’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவர், ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் இவருக்கு கமல்ஹாசனின் சினேகிதி வேடம்.

    அடுத்து, விஷால் ஜோடியாக ஒரு படத்திலும், ராகவா லாரன்ஸ் ஜோடியாக இன்னொரு படத்திலும், ஹரீஸ் கல்யாண் ஜோடியாக மற்றொரு படத்திலும் நடிக்க இருக்கிறார். மீண்டும் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, ‘பொம்மை’ என்ற படத்தில் நடிக்கிறார்.

    பிரியா பவானி சங்கர்

    “தற்போதைய பட உலகில் கொஞ்சமாவது கவர்ச்சியாக நடித்தால்தான் முன்னணி கதாநாயகியாக காலம் தள்ள முடியும் என்று பேசப்படுகிறதே... நீங்கள் எப்படி?” என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பிரியா பவானி சங்கர் கூறியதாவது: “என் முகத்துக்கும், உடற்கட்டுக்கும் கவர்ச்சி வேடங்கள் செட் ஆகாது. அதனால் ஒருபோதும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். கவர்ச்சியான கதாபாத்திரங்களை கொண்ட சில புதிய பட வாய்ப்புகள் எனக்கு வந்தன. நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்”.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அந்த சவாலை ஜெயித்துக் காட்டுவது சுலபம் அல்ல என்று நடிகர் அதர்வா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
    இன்றைய இளம் கதாநாயகர்களில் முன்வரிசையில் உள்ளவர், அதர்வா. மறைந்த நடிகர் முரளியின் மகன். வாரிசு நடிகராக இருந்து ஜெயித்துக் காட்டிக் கொண்டிருப்பவர் இவர். வாரிசு நடிகராக இருப்பதில் உள்ள சவுகரியம், அசவுகரியம் பற்றி இவரிடம் கேட்டபோது, சிரித்தபடி பதில் அளித்தார்.

    “வாரிசு நடிகராக இருப்பதில் சவுகரியங்களே நிறைய இருக்கிறது. இவன், இன்னாரின் மகன் என்று அடையாளம் காட்டப்படுவோம். அதன் மூலம் சுலபமாக ரசிகர்களை சென்று அடைவோம். அப்பா இப்படி நடித்தார்... மகன் எப்படி நடிப்பாரோ? என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் இருக்கும். ஒப்பிட்டு பார்ப்பார்கள். இதுவே அசவுகரியம். நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி பெரிதாக முன்னால் நிற்கும். அந்த சவாலை ஜெயித்துக் காட்டுவது, சுலபம் அல்ல”.

    ‘உங்கள் அப்பா ஒரு காதல் நாயகனாக பேசப்பட்டார். நீங்கள் எப்படி?’ என்று கேட்ட கேள்விக்கு, “அப்பாதான் என் ‘ஹீரோ’. எனக்கு காதல் கதைகளும் பிடிக்கும், விளையாட்டு தொடர்பான கதைகளும் பிடிக்கும். இரண்டும் கலந்த கதை, ரொம்ப பிடிக்கும். அப்படி ஒரு கதைதான் ‘ஈட்டி’. எனக்கு மட்டும் இல்லாமல், ரசிகர்களுக்கும் ரொம்ப பிடித்து இருந்தது. போர் சம்பந்தப்பட்ட ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது என்று அவர் கூறினார்.
    விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தில் அது இருக்காது என்று பிரபல இயக்குனர் கூறியுள்ளார்.
    விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

    வழக்கமாக விஜய்யின் சமீபத்திய படங்களில் அரசியல் காட்சிகள், வசனங்கள் இடம்பெறும். ஆனால் மாஸ்டர் படத்தில் இதுபோல் எந்த வசனமும் இருக்காது என்கிறார் இயக்குனர் ரத்னகுமார்.

    இவர் இந்த படத்துக்கு வசனம் எழுதி, லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அவர் கூறும்போது, ‘மாஸ்டர் சமூக அக்கறையுள்ள படம். அதே சமயம் அரசியல் வசனங்கள் ஏதும் இருக்காது. படத்தின் காட்சிகள் அனைத்துமே வித்தியாசமாக இருக்கும். இது அரசியல் கதை படம் கிடையாது’ என்றார்.
    மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் மஞ்சு வாரியரை சேச்சி அற்புதம் என்று பிரபல நடிகை பாராட்டியுள்ளார்.
    மலையாள சினிமாவின் முன்னணி நடிகை மஞ்சு வாரியர். நடிகர் திலீப்புடன் விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். மீண்டும் நடிக்க வந்த அவரது படங்கள் வரவேற்பை பெற்றன.

    அசுரன் படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார். அவர் நடிப்பில், மோகன்லால் ஹீரோவாக நடித்துள்ள மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்ற படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

    இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தை உருப்படியாகப் பயன்படுத்த நினைத்த நடிகை மஞ்சு வாரியர், வீணை வாசிக்கக் கற்றுள்ளார்.

    நடிகை கீர்த்தி சுரேஷ்


    வீணையை வாசித்து அவர், சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு, நீங்கள் கற்றுக்கொண்டிருக்கும் வரை தோல்வி அடையவதில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு மலையாள நடிகர், நடிகைகள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

    நடிகை கீர்த்தி சுரேஷ், ஆ, சேச்சி அற்புதம் என்று தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் ஜெயசூர்யா, நடிகை பானு உட்பட பலர் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். 
    கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வரும் கடலூர் மாவட்ட ரசிகர் மன்ற மாவட்ட தலைவரிடம் சிலம்பரசன் போனில் பேசி நலம் விசாரித்துள்ளார்.
    தமிழகத்தில் தற்போது சென்னைக்கு அடுத்தபடிய அதிகமான கொரோனா பாதிப்புகளை கொண்ட மாவட்டமாக கடலூர் இருந்து வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றிய பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு திரும்பியதால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

    இதுவரை 356 பேர் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு முன்பாகவே ஆனந்தன் என்பவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கடலூர் மாவட்ட சிம்பு நற்பணி இயக்கத்தின் மாவட்ட தலைவராக இருந்து வருகிறார்.

    இந்நிலையில் இந்த செய்தியை கேட்ட சிலம்பரசன் ஆனந்தனை போன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். மேலும் ஆனந்தன் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவதாக தெரிவித்துள்ளார்.
    ரகசிய மொழி மூலம் என்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று பாலிவுட் நடிகை ஷெர்லின் புகார் கூறியுள்ளார்.
    தமிழில், யுனிவர்சிட்டி படத்தில் நடித்தவர் ஷெர்லின் சோப்ரா. இந்தியில் காமசூத்ரா 3டி படத்தில் நடித்து பிரபலமானார். மேலும் பல இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியும் அவரை பிரபலப்படுத்தியது. பட உலகில் படுக்கைக்கு அழைக்க ரகசிய (கோட்) வார்த்தையை பயன்படுத்துகின்றனர் என்று ஷெர்லின் சோப்ரா குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் இந்தி படங்களில் நடிக்க ஆரம்பத்தில் எனது புகைப்படங்களுடன் பல பட நிறுவனங்களில் வாய்ப்பு தேடி அலைந்தேன். அப்போது என்னிடம் நள்ளிரவில் டின்னரில் சந்திப்போமா என்று கேட்பார்கள். நள்ளிரவிலா? எப்போது வரச்சொன்னீர்கள்? என்று புரியாமல் கேட்பேன். அதற்கு இரவு 11 அல்லது 12 மணிக்கு வரவேண்டும் என்பார்கள். அந்த நேரத்தில் என்னால் வர இயலாது என்று மறுத்து விட்டேன். அதன் அர்த்தம் தாமதமாகத்தான் புரிந்தது.

    இப்படி பல நிறுவனங்களுக்கு வாய்ப்பு தேடி அலைந்தபோது இதே மாதிரி நள்ளிரவு டின்னருக்கு அழைத்தனர். அதன்பிறகு நள்ளிரவு டின்னர் என்பது படுக்கைக்கு அழைக்கும் ரகசிய மொழி என்பது புரிந்தது. உண்மை தெரிந்தபிறகு இதே ‘கோட்’ வார்த்தையை பயன்படுத்துகிறவர்களிடம், ‘உணவு கட்டுப்பாட்டில் இருக்கிறேன், காலை அல்லது மதிய உணவுக்கு வேண்டுமானால் வருகிறேன்’ என்பேன். அதன்பிறகு அவர்கள் அழைப்பது இல்லை.

    இவ்வாறு கூறினார்.
    நடிகர்கள் இயக்குனர்கள் சம்பளத்தை குறைத்துக் கொண்டு வரும் நிலையில், நடிகர் அருள்தாஸ் என் நடிப்பிற்கு சம்பளம் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
    கொரோனா ஊரடங்கு உத்தரவால் சினிமா உலகம் மிகவும் பாதிப்படைந்து உள்ளது. தயாரிப்பாளர்கள் அதிக சிரமத்தில் இருப்பதால் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துக் கொள்வதாக அறிவித்தார்கள்.

    தற்போது நடிகரும், ஒளிப்பதிவாளருமான அருள்தாஸ் 2020 ஆண்டில் என்னுடைய நடிப்பிற்கு சம்பளம் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், முதல் படமான 'நான் மகான் அல்ல' தொடங்கி இப்போதுவரை தொடர்ந்து நடிகனாக பிசியாக இருக்கிறேன். அதற்கு காரணம் எனது இயக்குனர்கள், உதவி இயக்குநர்கள் தயாரிப்பு நிர்வாகிகள் மற்றும் திரைப்படத்துறை நண்பர்கள்தான்!
    வாய்ப்புக் கொடுத்தது இயக்குனர்கள் என்றாலும், எனக்கு சம்பளம் கொடுத்தது தயாரிப்பாளர்கள் எனும் முதலாளிகள் தான்!

    இன்று வாழ்க்கையில் என் இருப்பிடம், உணவு, உடை, வாகனம் என என் வாழ்வின் அனைத்து வசதிகளையும் தந்தது அந்த முதலாளிகள் கொடுத்த பணத்தினால் தான்.

    தயாரிப்பாளர்கள் நலன் கருதி சில நடிகர்களும், இயக்குநர்களும்  அவர்களது சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை குறைத்துக் கொள்வதாக கூறியது உண்மையிலேயே இந்த நேரத்தில் பாராட்டத்தக்கது. இது ஒரு நல்ல துவக்கம்! அதேபோல என் வாழ்வை மேம்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி என்னுள்ளும் ஒலித்துக்கொண்டே இருந்தது. அதன் காரணமாக இந்த வருடம் 2020 டிசம்பர் மாதம் வரை நான் புதிதாக நடிக்கும் எல்லாப் படங்களுக்கு  சம்பளம் எதுவும் வாங்காமல் என் உழைப்பை முழுமையாக என் முதலாளிகளுக்கும் என் இயக்குனர் சகோதரர்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன்.

    நான் பலகோடிகள் சம்பாதிக்கும்  நடிகனில்லை என்றாலும், எனக்கும் தேவைகள் இருக்கிறது. ஆனாலும், அதை என்னிடம் உள்ள பொருளாதாரத்தை வைத்தும் மேலும் நண்பர்களிடம் உதவியாகப் பெற்றும் சில மாதங்கள் சமாளிக்க என்னால் முடியும்.

    எனவே, இந்த இக்கட்டான சூழலில் நான் சார்ந்த திரையுலக முதலாளிகளுக்கு கைம்மாறாக இதைச் செய்வதில் உள்ளபடியே எனக்கு மிகுந்த மன நிறைவைத் தரும் என்று மனதார நம்புகிறேன் என்றார்.

    தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருக்கும் வட சென்னை 2 படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் வடசென்னை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் 2 ஆம் பாகம் இன்னும் தயாராகவில்லை. இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் அசுரன் படம் வெளியாகி சாதனை படைத்தது.

    வடசென்னை 2-ம் பாகத்தை 2 சீசன்களை கொண்ட வெப் தொடராக எடுக்கலாமா? என்று ஆலோசிப்பதாக வெற்றிமாறன் கூறியுள்ளார். இது வெப் தொடராக உருவானால் அதில் தனுசே நடிப்பார் என்று கூறப்படுகிறது.

    வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் பிரபல நடிகர்-நடிகைகள் பலர் அதில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழில் சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி படங்களில் நடித்து பிரபலமான பாவனா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    நடிகைகளின் டுவிட்டர், முகநூல் பக்கங்களை முடக்குவதும், அவர்கள் பெயர்களில் போலியாக கணக்குகளை உருவாக்குவதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடிகைகள் குஷ்பு, ஷோபனா, அனுபமா பரமேஸ்வரன், சுவாதி உள்ளிட்ட பலர் இதில் சிக்கினர்.

    இந்த நிலையில் நடிகை பாவனாவும் தனது பெயரில் போலி கணக்குகள் உருவாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “எனது பெயரில் போலி முகநூல் பக்கத்தை உருவாக்கி உள்ளனர். நான் முகநூலில் இணையவில்லை. எனவே ரசிகர்கள் எனது பெயரில் உள்ள போலி கணக்கை பின் தொடர வேண்டாம். இந்த போலி கணக்கு குறித்து புகார் அளியுங்கள்” என்றார். ரசிகர்களும் புகார் அளிப்பதாக அவருக்கு உறுதி அளித்துள்ளனர்.

    பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி உள்பட பல படங்களில் நடித்தவர். தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.
    பல படங்களில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி மீது கமி‌‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் மீது திருச்சி மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    புகார்


    அகில இந்திய இந்து மகாசபா மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், ‘‘நடிகர் விஜய்சேதுபதி ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கோவில்களில் கடவுள்களுக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகளை கொச்சைப்படுத்தும் வகையில் பேசி உள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்துக்களின் மனதை புண்படுத்தியிருக்கும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
    நான் விஜய்யின் தீவிரமான ரசிகை என்று நடிகை ஐஸ்வர்யா மேனன் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களிடையே கூறியிருக்கிறார்.
    தமிழ் படம் 2, வீரா போன்ற சில படங்களில் நடித்த ஐஸ்வர்யா மேனன், நான் சிரித்தால் படத்தின் மூலம் அனைவராலும் பேசப்பட்டார். தன் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் பேசிய ஐஸ்வர்யா மேனன் பல வி‌ஷயங்களை பகிர்ந்துள்ளார்.

    நீங்கள் நன்றாக யோகா செய்கிறீர்கள், தினமும் செய்வீர்களா? என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, கண்டிப்பாக தினமும் யோகா செய்வேன். நீங்களும் தினமும் யோகா செய்யுங்கள் என்றார்.

    பின்னர் தன் முதல் காதல் என அனைத்தையும் பகிர்ந்து கொண்டார். சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பொறியியல் படித்தேன், என்னுடைய முதல் க்ரஷ் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது நடந்தது இன்று நினைத்தாலும் பசுமையான நினைவாக இருக்கிறது என்றார். உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்றதற்கு நான் தீவிரமான விஜய் ரசிகை என்றார்.

    மேலும், ரசிகர்கள் அனைவரையும் வீட்டில் பாதுகாப்புடனும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
    ×