என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம் என கூறியுள்ளார்.
    பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த சில தினங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மன நல ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

    அந்தவகையில் நடிகை அனுஷ்கா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “எல்லோரும் நிறைவானவர்கள் என்பது இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கின்றனர். இதுதான் சரி இதுதான் தவறு என்பதும் இல்லை. வாழ்க்கையை நடத்த நாம் பிறக்கும்போதே வரைபடத்தோடு பிறக்கவில்லை. எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் சிறியவராக இருந்தாலும் அவரவர் வழிகளில் நடக்கின்றனர். 

    அனுஷ்கா

    சிலர் உதவி கேட்பார்கள். சிலர் உள்ளுக்குள் உடைந்து போவார்கள். சிலர் அழுது விடுவார்கள். சிலர் அமைதியாக இருப்பார்கள். சிலருக்கு உதவிகள் கிடைப்பது இல்லை. சிலர் அவரவர் வழியை அனுபவப்பூர்வமாக உணர்ந்து செயல்படுவார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்யவும் கனியோடு இருக்கவும் கற்றுக்கொள்வோம். விட்டுக்கொடுக்கவும் மற்றவர்கள் மீது அன்பு காட்டவும் கற்றுக்கொள்வோம். மற்றவர்கள் பேசுவதை கேட்கவும் பிறருடன் உரையாடவும் வலுவாக இருக்கவும் பலகீனமாக இருக்கவும் கற்றுக்கொள்வோம். 

    உள்ளே எப்படி உணர்கிறோமோ அதை வெளியே மற்றவர்களுக்கும் சொல்லலாம். நாம் மனிதர்கள் சிரிப்பு, கேட்க காது, நேர்மையான தொடுதல் போன்றவை வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை கொண்டு வரும். நம்மால் எல்லாவற்றையும் மாற்ற முடியாது சரி செய்யவும் முடியாது. ஆனால் ஒரு சிறிய அடி எடுத்து வைத்தாலும் பெரிய மாற்றம் வரும்.” இவ்வாறு அனுஷ்கா கூறியுள்ளார்.
    கமல் படத்தால் சுந்தர்.சி-க்கு ஏற்பட்ட நிலைமை பற்றி ரசிகருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் குஷ்பு.
    சுந்தர்.சி இயக்கத்தில் கமல்ஹாசன், மாதவன், கிரண் உள்ளிட்டோரின் நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான படம் அன்பே சிவம். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக போதிய வரவேற்பைப் பெறவில்லை. 

    இந்நிலையில் ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் கொண்ட தமிழ் படமாக அன்பே சிவம் இருப்பதாக கமல் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கருத்து பதிவிட அதற்கு பதிலளித்த குஷ்பு, படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கலாம். அப்படி நடந்திருந்தால் என் கணவர் இரண்டு வருடங்கள் வீட்டில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது” என்றார்.

    குஷ்பு ட்வீட்

    மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், வின்னர் 2001-ம் ஆண்டு படமாக்கப்பட்டு தாமதமாக வெளியானது. அன்பே சிவம் தோல்விக்கு பின்னர் சொந்தமாக கிரி படத்தை எடுக்க வேண்டிய நிலைமை வந்தது. அன்பே சிவம் 2003-ம் ஆண்டிலும், கிரி 2004-ம் வருடமும் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள். அதனால் ரொம்ப அதிக பிரசங்கம் பண்ண வேண்டாம் தம்பி. அறிவாளி நினைச்சிட்டு முட்டாளா தெரியுரிங்க ” என்று அந்த நெட்டிசனுக்கு பதிலளித்துள்ளார்.
    அய்யப்பனும் கோஷியும் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் கே.ஆர்.சச்சிதானந்தம் என்ற சச்சி. இவர் சமீபத்தில் அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தை இயக்கினார். பிருத்விராஜ், பிஜூ மேனன் நடித்திருந்த இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

    இயக்குனர் சச்சி

     இந்நிலையில் இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தத்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 48 வயதாகும் அவருக்கு திடீரென இதயத்துடிப்பில் பிரச்னை ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
    பாடலாசிரியரும் கவிஞருமான சினேகன் புதிய முயற்சியில் களம் இறங்கி இருக்கிறார்.
    கவிஞர் சினேகன் தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பலருடைய கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் புதிய முயற்சியில் களம் இறங்கி இருக்கிறார்.

     சினேகம் டாக்ஸ் என்ற புதிய யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் சினேகன். இது குறித்து அவர் கூறும்போது, உங்களின் பேரன்போடு பல்வேறு பாதைகளில் பயணித்து கொண்டிருக்கிறேன். 

    அதன் தொடர்ச்சியாக இதுவரை யாரும் அறியாத என்னுடைய இன்னும் பல முகங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதற்காக சினேகம் டாக்ஸ் என்ற புதிய யூடியூப் சேனலை ஜூன் 23-ம் தேதி தொடங்கி இருக்கிறேன். 

    இதில் என் படைப்புகளுக்கு பின்னாலும், அரசியல் பயணங்களுக்கு பின்னாலும், வாழ்வியலுக்கு பின்னாலும் மறைந்துகிடக்கும் ஏராளமான ரகசியங்களையும் சுவாரஸ்யங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

    இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், நல்ல தலைவர்கள் போன்றோர்களின் கருத்துக்களையும் சொல்லப்படாத வரலாறுகளையும் நம் பண்பாட்டு கூறுகளையும் மத இன மொழி பேதமின்றி பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆலோசனைகளையும் ஆதரவுகளையும் அன்பையும் வழங்குங்கள்' என்றார்.
    சிரிக்க வைத்தவரை பார்த்து பயப்பட வைத்து விட்டார்கள் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் பேட்டியளித்துள்ளார்.
    கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பெண்குயின்’. கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஜூன் மாதம் 19-ந் தேதி நேரடியாக ரிலீசாக இருக்கிறது. 

    இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக சார்லி சாப்ளின் போல் வேடமிட்ட ஒருவர் கொலைகள் செய்வது போல் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். 

    பெண்குயின் படத்தில் வரும் சார்லி சாப்ளின்

    இந்த காட்சி குறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது, சார்லி சாப்ளின் என்று சொன்னவுடன் அனைவருக்கும் சிரிப்பு காமெடி தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் இந்த படத்தில் சார்லி சாப்ளின் பார்த்தால்பயம் வரும். அதுதான் இந்தப் படத்தில் இருக்கும் பெரிய மாற்றம். 

    படப்பிடிப்பில் நானே அந்த கதாபாத்திரத்தை பார்த்து பயந்து விட்டேன். சிரிக்க வைத்தவரை பார்த்து பயப்பட வைத்து விட்டார்கள். இந்த கதாபாத்திரம் உங்களை நிச்சயமாக கவரும்' என்றார்.
    மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், சின்னத்திரை படப்பிடிப்புகள் மீண்டும் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.
    கொரோனா ஊரடங்கு காரணமாக சின்னத்திரை சீரியல்களுக்கான படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், படப்பிடிப்பு தொடங்க அரசு அனுமதிக்ககோரி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் ஆர்.கே. செல்வமணி முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தினார்.

    இதனை தொடர்ந்து நிபந்தனைகளுடன் சீரியல் படப்பிடிப்புகளை தொடங்க முதலமைச்சர் அனுமதியளித்தார். இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது. 

     தமிழக அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வரும் ஜூன் 19-ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், சீரியல்கள் வெளியாவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. 
    சுஷாந்த்சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தொழில்முறை போட்டி கோணத்தில் போலீஸ் விசாரணை செய்து வருகிறார்கள்.
    பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் நேற்று முன்தினம் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பிரதமர் மோடி உள்பட தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர். 

    பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. ஆனால் தற்கொலைக்கான காரணம் இன்னும் புரியாத புதிராக உள்ளது.

     இந்நிலையில் மகாராஷ்டிரா அரசாங்கம், தனது விசாரணையில் மருத்துவ மனச்சோர்வுடன் தொழில்முறை போட்டி தொடர்பான குற்றச்சாட்டுகளையும் ஆராயும் என்று கூறியுள்ளது.

    சுஷாந்த் சிங்

     மேலும் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ட்விட்டரில் தொழில்முறை போட்டி காரணமாக அவர் மனச்சோர்வடைந்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையில் நடிகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டாலும், தொழில்முறை போட்டி காரணமாக அவர் மருத்துவ மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.  இந்த கோணத்திலும் மும்பை காவல்துறை விசாரிக்கும் ”என்று அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.
    தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷாவின் திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
    தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் வீட்டிலேயே இருக்கும் திரிஷா, சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். விழிப்புணர்வு ஏற்படுத்துவது, டிக்டாக் வீடியோ பதிவிடுவது என சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்தார்.

    திரிஷா

    இந்த நிலையில், நடிகை திரிஷா, சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “சந்தோஷம் தான். ஆனால், இந்த நேரத்தில் என் மனதுக்கு ஒரு மறதி தேவை. டிஜிட்டல் ஒரு போதைப்பொருள். வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்துபோகும். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். விரைவில் சந்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார். 

    அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பெண்குயின் படத்தின் முன்னோட்டம்.
    கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'பெண்குயின்'. அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிரிஷ் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண் வேடத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    கீர்த்தி சுரேஷ்

    படம் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியதாவது: "கதை கேட்கும் போது எனக்கு அம்மா வேடம் பற்றி எதுவும் தோன்றவில்லை. இப்போது எல்லாரும் கேட்கும் போதுதான் அம்மா வேடம் பற்றி தோன்றுகிறது. கதை கேட்கும் போது ஏன் பண்ண கூடாது என்றுதான் மனதில் ஓடியது. நான் 10, 15 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடிக்கவில்லை. சின்ன குழந்தைக்கு தான் அம்மா வேடமாக நடித்திருக்கிறேன். 

    இப்படத்தின் இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் புதுமுக இயக்குனர். யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை. என்னிடம் கதையை 4.30 மணி நேரம் சொன்னார். கேட்டவுடன் உடனே ஒப்புக் கொண்டேன். படப்பிடிப்பு தளத்தில் நினைத்ததை முடித்து காட்டினார். 10 படங்களுக்கு ஒர்க் பண்ண அனுபவம் அவரிடம் இருக்கிறது. அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு" என கூறினார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் விவேக், இந்த மண்ணை மிதித்தவனை சென்னை கைவிடாது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. சென்னையில் 33 ஆயிரத்து 244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 19-ந் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளது. 

    இந்நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து நடிகர் விவேக் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: "எல்லோரும் கழிவிரக்கம், அச்சமுடன் சென்னையை பார்க்கிறார்கள். பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர். தலைநகர்! பல மொழி, இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை. அது மீளும்; வாழும்!" என பதிவிட்டுள்ளார்.

    கொரோனா ஊரடங்கால் சினிமா தொழில் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தை குறைத்துள்ளார்.
    கொரோனாவால் திரையுலகம் பாதித்துள்ளது. படப்பிடிப்புகள் நின்று போனதால் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு தியேட்டர்களுக்கு முன்புபோல் ரசிகர்கள் வருவார்களா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட விஜய் ஆண்டனி, ஹரீஷ் கல்யாண் உள்ளிட்ட சில நடிகர்கள் தாமாக முன்வந்து சம்பளத்தை குறைத்துள்ளனர். அந்தவகையில், நடிகை கீர்த்தி சுரேஷும் சம்பளத்தை குறைக்க முன்வந்துள்ளார். 

    கீர்த்தி சுரேஷ்

    இதுகுறித்து அவர் கூறியதாவது: நடிகர் நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என எனது தந்தை தயாரிப்பாளர் என்ற முறையில் கருத்து தெரிவித்தார். ஒரு நடிகையாக அதை நான் வரவேற்கிறேன். நான் நடிக்கும் படங்களுக்காக வாங்கும் சம்பளத்தில் இருந்து 20 முதல் 30 சதவீதம் குறைத்து கொள்வேன். நான் மட்டுமல்ல சினிமாவில் உள்ள அனைவரும் இதை செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் திரைப்படம் வருகிற 19-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங்கின் தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் பேசியுள்ளார்.
    பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுஷாந்த் சிங் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 34 வயதாகும் சுஷாந்தின் திடீர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் பேசியுள்ளதாவது: ‘ பாலிவுட் திரையுலகம் சுஷாந்தை முறையாக நடத்தவில்லை. அவருக்கு போதிய திறமை, நல்ல நடிப்பு, பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகள் கொடுத்த போதிலும், திரையுலகம் அவருக்கு முறையான அங்கீகாரத்தை கொடுக்கவில்லை. 

    சுஷாந்த் சிங், கங்கனா ரனாவத்

    அவரது முதல் திரைப்படமான கை போ சேவில் அவரது நடிப்பு ஏன் பெரிய அளவில் பேசப்படவில்லை? அவர் இறுதியாக நடித்த சிச்சோரே போன்ற ஒரு அற்புதமான படம் புறக்கணிக்கப்பட்டு, கல்லி பாய் போன்ற மோசமான படத்திற்கு அனைத்து விருதுகளும் வழங்கப்பட்டது ஏன்? 

    அதே போல் என்னுடைய படைப்புகளையும் ஆதரிக்க மறுப்பது ஏன்? சமூக வலைதளங்களில் சுஷாந்த் பற்றி தொடர்ந்து தவறான கருத்துக்களை முன்வைக்கப்பட்டு வந்தன. திறமை இல்லை என தன்னைப்பற்றி மற்றவர்கள் சொன்னதை சுஷாந்த் நம்பியது மட்டுமே அவர் செய்த மிகப்பெரிய தவறு’ என கூறியுள்ளார்.
    ×