என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
    கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துருவ நட்சத்திரம். கவுதம் மேனனின் கனவு படமான இதில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017ம் ஆண்டே தொடங்கிய நிலையில், இன்னும் நிறைவடையாமல் உள்ளது. 

    துருவ நட்சத்திரம் படக்குழு

    இந்நிலையில், இப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி துருவ நட்சத்திரம் படத்தின் எஞ்சியுள்ள பணிகள் வருகிற மார்ச் மாதம் தொடங்க உள்ளதாம். தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் நடித்து வரும் விக்ரம், அடுத்த மாதம் அதன் படப்பிடிப்பு முடிந்ததும், துருவ நட்சத்திரம் படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட உள்ளாராம். இவை அனைத்தும் திட்டமிட்டபடி முடிந்தால், அடுத்த சில மாதங்களில் துருவ நட்சத்திரம் படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
    பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 40’ படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
    நடிகர் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சூரியின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த வெற்றிக் கூட்டணியில் தானும் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சூர்யாவுடன் அஞ்சான், சிங்கம் 3 போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய நடிகர் சூரி, தற்போது மூன்றாவது முறையாக அவருடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடித்துள்ள டெடி திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது.
    ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘டெடி’. இப்படத்தை டிக் டிக் டிக், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் போன்ற படங்களை இயக்கிய சக்தி சவுந்தரராஜன் இயக்கியுள்ளார். இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக அவரது மனைவி சாயிஷா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், சதீஷ், கருணாகரன், சாக்‌ஷி அகர்வால், பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். காமெடி கலந்த திகில் படமாக இது உருவாகி உள்ளது. 

    ஆர்யா

    இந்நிலையில், டெடி படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற மார்ச் 19-ந் தேதி இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் டெடி படம் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
    இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி, தன்னிடம் வந்து வலிமை குறித்து கேட்டதாக இந்திய வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. முதல் போட்டியில் தோற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இதில் இரண்டாவது போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது பவுண்டரியில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் மொயின் அலியிடமும், அடுத்த இன்னிங்சில் அதே இடத்தில் பீல்டிங் செய்த இந்திய வீரர் அஸ்வினிடமும், ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட சம்பவங்கள் அரங்கேறின. 

    இந்நிலையில், நேற்று யூடியூபில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய அஸ்வின், ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டது குறித்து பேசினார். மேலும் இங்கிலாந்து வீரர் மொயின் அலி தன்னிடம் வந்து வலிமைனா என்னனு கேட்டதாகவும் அஸ்வின் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். 

    நடிகர் அஜித்தை, ஷாலினி கட்டிப் பிடித்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி. பின்னர் குறுகிய காலத்தில் அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பெயர் பெற்றார். சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே அஜித்தை காதலித்து திருமணம் செய்த ஷாலினி, பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டார். 

    ஷாலினி, அஜித்

    இந்நிலையில், நடிகர் அஜித்தை, ஷாலினி கட்டிப் பிடித்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அஜித் - ஷாலினி தம்பதி ரொமாண்டிக் போஸ் கொடுத்தபடி இருக்கும் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அஜித் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.
    ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் பிரபலமான வாணி போஜன், மீண்டும் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.
    தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான வாணி போஜன், அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் சினிமாவுக்கு வந்தார். பேண்டசி படமான இதில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருந்தார். அந்த படத்தில் வாணி போஜன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இதையடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன.

    அசோக் செல்வன், வாணி போஜன்

    இந்நிலையில், நடிகை வாணி போஜன் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்தை அறிமுக இயக்குனர் வெங்கட் இயக்க உள்ளாராம். இவர் இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அதேபோல் இப்படத்தில் வாணி போஜனுக்கு ஜோடியாக அசோக் செல்வன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
    தமிழ் திரையுலகில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராக வலம்வரும் சில்வா, அடுத்ததாக படம் இயக்க உள்ளாராம்.
    கோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி பிரபலமானவர் சில்வா. அஜித்தின் வீரம், விஸ்வாசம், விவேகம், என்னை அறிந்தால் போன்ற படங்களில் ரசிகர்களை கவரும் வகையில் அதிரடி ஸ்டண்ட் காட்சிகளை அமைத்தது இவர்தான். அதேபோல் விஜய்யுடனும் ஜில்லா, பைரவா, மாஸ்டர் என ஏராளமான படங்களில் பணியாற்றி உள்ளார்.

    ஏ.எல்.விஜய், சில்வா

    ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல் சில படங்களில் நடிகராகவும் அசத்தி உள்ளார் சில்வா. இந்நிலையில், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, விரைவில் இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளாராம். சில்வா இயக்க உள்ள படத்துக்கு பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் தான் கதை மற்றும் திரைக்கதை அமைக்க உள்ளாராம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள திரிஷ்யம் 2 படத்தை தியேட்டர்களில் திரையிட கேரள திரைப்பட வர்த்தக சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து 2013-ல் திரைக்கு வந்த திரிஷ்யம் படத்தின் வெற்றி அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ரூ.5 கோடி செலவில் எடுத்த இந்த படம் ரூ.75 கோடி வசூலித்தது.

    திரிஷ்யம் தமிழில் கமல்ஹாசன் நடிக்க பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. தற்போது திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் மோகன்லால், மீனா நடிக்க தயாராகி உள்ளது. இந்தப் படம் வருகிற 19-ந் தேதி ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். அதே நாளில் கேரளா முழுவதும் தியேட்டர்களிலும் திரிஷ்யம் 2 படத்தை வெளியிட முயற்சிகள் நடந்தன. 

    திரிஷ்யம் 2 பட போஸ்டர்

    இந்த நிலையில் ஓ.டி.டியில் வரும் திரிஷ்யம் 2 படத்தை தியேட்டர்களில் திரையிடமாட்டோம் என்று கேரள திரைப்பட வர்த்தக சபை அறிவித்து உள்ளது. 

    இதுகுறித்து திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் விஜயகுமார் கூறும்போது, ஓ.டி.டியில் வெளியாகும் எந்த படத்தையும் தியேட்டர்களில் திரையிட அனுமதிக்க முடியாது. இந்த விதிமுறை மோகன்லாலின் திரிஷ்யம் உள்பட அனைத்து நடிகர்கள் படங்களுக்கும் பொருந்தும்’’ என்றார்.
    கவுதம் மேனன் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ஒருவர், 40 வயதில் இரண்டாவது திருமணம் செய்து உள்ளார்.
    கவுதம் மேனன் இயக்கிய முதல் படம் மின்னலே. இப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியடைந்ததை அடுத்து இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தவர் தியா மிர்சா. இவர் கடந்த 2014-ம் ஆண்டு சாஹில் சங்கா என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

    தியா மிர்சாவின் திருமண புகைப்படம்

    இந்நிலையில், 40 வயதாகும் நடிகை தியா 2-வது திருமணம் செய்துள்ளார். மும்பையை சேர்ந்த தொழிலதிபர் வைபவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் குடும்பத்தினர் முன்னிலையில் எளிய முறையில் நடந்தது. சமூக வலைதளத்தில் திருமண புகைப்படத்தை பகிர்ந்துள்ள தியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
    அனிருத்தும், எனது மகளும் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை விளக்கம் அளித்துள்ளார்.
    தமிழில் இது என்ன மாயம் படத்தில் அறிமுகமாகி விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்த கீர்த்தி சுரேஷ் தேசிய விருதும் பெற்றார். தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். 

    சில தினங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேசும் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக இணைய தளங்களில் கிசுகிசுக்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. இருவரும் சில மாதங்களுக்கு முன்பு நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலானது. விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டது. காதல் பற்றி இருவர் தரப்பிலும் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. 

    அனிருத், கீர்த்தி சுரேஷ்

    இந்நிலையில் காதல் கிசுகிசுவுக்கு கீர்த்தி சுரேசின் தந்தையும், தயாரிப்பாளருமான சுரேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “கீர்த்தி சுரேசும், அனிருத்தும் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஏற்கனவே இதுபோன்ற வதந்திகள் பரவின. இப்போது 3-வது தடவையாக இந்த தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது” என்றார்.
    தனக்குப் பிடித்தமான 10 திரைப்படங்கள் எவை என்பதற்கு கே.பாலசந்தர் பதில் அளித்தார்.
    கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என்று பல்வேறு துறைகளிலும் பாலசந்தர் பணியாற்றிய படங்கள் 125. (தமிழ் 87; தெலுங்கு 19; இந்தி 7; கன்னடம் 8; மலையாளம் 4)

    டைரக்ட் செய்தவை: படங்கள், டெலிவிஷன் தொடர்கள் உள்படமொத்தம் 100.

    "நீங்கள் இயக்கிய படங்களில், உங்களுக்கு மிகவும் பிடித்தமான 10 படங்களைச் சொல்லுங்கள்'' என்று பாலசந்தரிடம் கேட்கப்பட்டது.

    அவர் சிரித்துக்கொண்டே, "பத்துக்குள் அடக்குவது சிரமம். எனினும் சிரமப்பட்டு சொல்கிறேன்.

    1. அபூர்வ ராகங்கள், 2. பாமா விஜயம், 3. மரோசரித்ரா, 4. தண்ணீர் தண்ணீர், 5. சிந்து பைரவி, 6. வறுமையின் நிறம் சிவப்பு, 7. வானமே எல்லை, 8. புன்னகை மன்னன், 9. அச்சமில்லை அச்சமில்லை, 10. கல்கி.

    மேற்கண்டவாறு கூறிய பாலசந்தர், "படங்களின் பெயர்களைத்தான் கூறியிருக்கிறேனே தவிர, தரத்துக்கு ஏற்ப வரிசைப்படுத்தவில்லை'' என்றார்.

    "உங்களுடன் தொடர்பு இல்லாத படங்களில் உங்களை மிகவும் கவர்ந்த 10 படங்கள் எவை?'' என்று கேட்டதற்கு, பாலசந்தர் கூறியதாவது:-

    தமிழில் கல்யாணபரிசு, திரும்பிப்பார், 16 வயதினிலே, தில்லானா மோகனாம்பாள், கன்னத்தில் முத்தமிட்டால்... ஆகிய படங்கள் பிடிக்கும்.

    ஆங்கிலத்தில் "ரோமன் ஹாலிடே'', "சைக்கோ'' ஆகிய படங்களும், இந்தியில் "தோ ஆங்கேன் பாராஹாத்'', "மொகல் ஏ ஆஜாம்'', "பிளாக்'' ஆகிய படங்களும் என்னைக் கவர்ந்தவை.

    இவற்றையும் நான் தரத்தின்படி வரிசைப்படுத்தவில்லை.''

    இவ்வாறு கூறினார், பாலசந்தர்.

    பாலசந்தர் டைரக்ட் செய்யும் 101-வது படம் "பொய்.'' இதை நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரிக்கிறார்.

    இந்தப் படத்தின் கேசட் வெளியீட்டு விழா கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. கேசட்டை கமலஹாசன் வெளியிட, ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். சிவகுமார், சரிதா, சுகாசினி உள்பட, பாலசந்தர் படங்களில் நடித்த அனைத்து நடிகர்-நடிகைகளும் விழாவில் கலந்து கொண்டனர்.

    திரை உலக மேதைகளில் ஏவி.மெய்யப்ப செட்டியார், ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ஆகியோரிடம் பாலசந்தர் பெருமதிப்பு வைத்திருந்தார்.

    ஏவி.எம். பற்றி அவர் குறிப்பிட்டதாவது:-

    "ஏவி.எம். அவர்களுடன் சேர்ந்து ஒரு படத்திற்கு பணிபுரியும்போது தெரிந்து கொள்ளும் விஷயங்கள் வெளியே பத்து படங்கள் செய்யும்போது கிடைக்கும் விஷயங்களுக்கு சமம் ஆகும்.

    படத்தின் `ரஷ்' போட்டுப் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, `இங்கு ஒரு பிரேமை வெட்டு' என்பார். அதனால் என்ன மாற்றம் நேரப்போகிறது என்று நம்மால் அப்போது கற்பனை பண்ண முடியாது. அவர் கூறியபடியே செய்த பிறகுதான் அதனுடைய மகத்துவம் தெரியும்.

    "மேஜர் சந்திரகாந்த்'' படம் முடிந்தபின், நாங்கள் படம் முழுவதையும் பார்த்த பிறகு, படத்தைப்பற்றி என் கருத்தை ஏவி.எம். கேட்டார். "வசூலைப் பொறுத்தவரையில்தான் பயமாக இருக்கிறது'' என்றேன்.

    "படம் எப்படி வேண்டுமானாலும் ஓடட்டும். ஆனால் ஏவி.எம். சார்பில் இப்படத்தைத் தயாரித்து வெளியிடுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்'' என்றார், ஏவி.எம்.

    படம் வெளியானதும், ஒரு பத்திரிகை "இது காசுக்காக எடுத்த படம் அல்ல; ஆசைக்காக எடுத்த படம்'' என்று எழுதியது. ஆம்; ஏவி.எம்.கருத்தையே விமர்சனம் பிரதிபலித்தது. ஆம்; அவர் கணிப்பு வென்றது.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    சொந்த முயற்சியினாலும், திறமையினாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என்ற முறையில் ஜெமினி எஸ்.எஸ்.வாசனிடம் பிரமிப்பு கலந்த மரியாதை கொண்டவர், பாலசந்தர்.

    "எஸ்.எஸ்.வாசனை முன்னோடியாகக் கொண்டு உழைக்கும் எவரும் வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள்'' என்று அடிக்கடி பலரிடம் கூறுவார்.

    நடிகர் ஜெமினிகணேசனுடன் பாலசந்தருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் விசித்திரமானவை.

    அதுபற்றி அவர் எழுதியிருப்பதாவது:-

    "1949-ம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, வேலை தேடும் படலத்தில் இறங்கினேன். முதலாவதாக வேலை கேட்டு, ஜெமினி ஸ்டூடியோவுக்கு மனு அனுப்பினேன்.

    சில நாட்கள் கழித்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், "தங்களுக்கு தற்போது வேலை தரமுடியாத நிலையில் இருக்கிறோம். தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை இருக்கும்போது, தங்களுக்குத் தகவல் தரப்படும்'' என்று அதில் எழுதியிருந்தது. கீழே ஆர்.கணேஷ் என்று கையெழுத்து போடப்பட்டிருந்தது.

    "சந்தர்ப்பம் இல்லை'' என்கிற அந்தக் கடிதத்திலாவது மதிப்பிற்குரிய எஸ்.எஸ்.வாசன் அவர்கள் கையெழுத்து இருக்கும் என்று நினைத்து ஏமாந்தேன். என்றாலும் எனது அபிமான ஸ்டூடியோவிலிருந்து வந்த கடிதம் ஆதலால், அதை பெரும் பொக்கிஷம் போலக் கருதி பல ஆண்டுகள் பாதுகாத்து வந்தேன்.

    பல ஆண்டுகள் கழித்து அந்தக் கடிதத்தை நான் மீண்டும் எடுத்துப் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது, அதில் கையெழுத்திட்டு இருந்த ஆர்.கணேஷ்தான், பிற்காலத்தில் மிக புகழ் பெற்று விளங்கிய ஜெமினிகணேசன்!

    கமலஹாசனுக்கு அடுத்தபடியாக எனது டைரக்ஷனில் அதிக படங்களில் நடித்தவர் ஜெமினிகணேசன். எனக்கு வேலை இல்லை என்று சொன்னவருக்குத்தான் என் படங்களில் அதிக வேலை கொடுத்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    பாலசந்தர் தொடர்ந்து கூறியதாவது:-

    "கலாகேந்திரா'' பட நிறுவனம் எனது தாய் ஸ்தாபனம். துரை, கோவிந்தராஜன், கிருஷ்ணன், செல்வராஜ் நால்வரும் உரிமையாளர்கள்.

    நான் அவர்களுக்கு இயக்கி கொடுத்திருக்கும் திரைப்படங்கள் 15-க்கும் மேல். இவர்களைப்போன்ற நண்பர்கள் கிடைப்பது மிகமிகக் கடினம். நண்பர்களுக்காக உயிரையே தருவார் துரை. எனது நாடக நாட்களிலிருந்தே பி.ஆர்.கோவிந்தராஜ் எனக்குப் பக்க பலம். அந்தக் காலங்களில் என் ஓரங்க நாடகங்களில் பெண் வேஷம் போடுவார். அழகான பெண்கள் தோற்றுப் போவார்கள்.

    1991-ம் ஆண்டு எனக்கு மிகப்பெரிய இழப்பு துரை, கோவிந்தராஜ் இவர்களுடைய மரணம். ஓரிரு ஆண்டுகள் கழித்து கிருஷ்ணன் அகால மரணம் அடைந்தார்.

    எனது இன்னொரு பேரிழப்பு எனது அருமை நண்பரும், தயாரிப்பாளருமான அரங்கண்ணல் அவர்கள் மறைவு.

    என்னோடு தோளோடு தோள் நின்று என்னுடைய அலுவலக நாட்களிலிருந்தே ஏறத்தாழ நாற்பதாண்டு காலம் உற்ற நண்பனாக, சிறந்த உதவியாளராக, ஆலோசகராக மற்றும் இன்றைய தலைமுறை கலைஞர் பெருமக்களுக்கும், எனக்கும் ஒரு பாலமாக அமைந்த எனது அன்பு அனந்து அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானதுதான் தொழில் துறையில் எனக்கு ஏற்பட்ட ஒரு உச்சகட்ட இழப்பு.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டார்.

    இருகோடுகள் (1970), அபூர்வ ராகங்கள் (1974), தண்ணீர் தண்ணீர் (1982), அச்சமில்லை அச்சமில்லை (1984) ஆகிய படங்கள், சிறந்த மாநில மொழிப் படங்களுக்கான மத்திய அரசின் விருதைப் பெற்றன.

    பாமா விஜயம், தாமரை நெஞ்சம், எதிர்நீச்சல், அக்னிசாட்சி, வறுமையின் நிறம் சிவப்பு, புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை ஆகிய படங்கள், திரைப்படத்துறையின் பல்வேறு பிரிவுகளில் மாநில அரசின் பரிசுகளை பெற்றன.

    தமிழக அரசின் "கலைமாமணி'' விருதை 1973''-லும், "அண்ணா விருதை'' 1992-லும் பாலசந்தர் பெற்றார்.

    மத்திய அரசு 1987-ல் "பத்மஸ்ரீ'' விருது வழங்கியது.

    அழகப்பா பல்கலைக்கழகமும், சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் "டாக்டர்'' பட்டம் வழங்கி கவுரவித்தன.

    மற்றும் பிற மாநில அரசுகள், திரைப்பட அமைப்புகள், பத்திரிகைகள் வழங்கிய விருதுகளும், பரிசுகளும், பட்டங்களும் ஏராளம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் அறிக்கைக்கு கட்டுப்பட்டு அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள்.
    ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட்டைக் கேட்டு ரசிகர்கள் செய்து வரும் காரியம் எல்லை மீறி சென்றது. அதுமட்டுமின்றி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருச்செந்தூர் முருகன், பிரதமர் மோடி என பலரிடமும் வலிமை அப்டேட் கேட்டு வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகியது.

    குறிப்பாக பிரதமர் மோடியின் சென்னை வருகையின் போது ரசிகர்கள் செய்த காரியம் அஜித்தை வேதனை அடையச் செய்துள்ளது. இதனால் அஜித் தங்களுடைய ரசிகர்களை பொது இடத்தில் கண்ணியத்தை கடைபிடிக்கும் படி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அஜித் ரசிகர்கள்

    இந்நிலையில் அஜித்தின் இந்த அறிக்கைக்கு பல்வேறு ரசிகர்களும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வந்த நிலையில், "உங்களது வார்த்தைக்கு கட்டுப்படுகிறோம்" என அஜித்தின் அறிக்கையுடன் கூடிய போஸ்டர் ஒன்றை அடித்து, வெளியிட்டுள்ளனர் மதுரை ரசிகர்கள். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    ×