என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல நடிகை ஒருவர் டுவிட்டரில் விஜய் - அஜித் ரசிகர்கள் இடையே மோதலை உருவாக்கி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
    விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி மோதிக்கொள்வதும், பிறகு அமைதியாகி விடுவதும் வழக்கம். இந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகை சுரேகா வாணி மீண்டும் அவர்களுக்குள் மோதலை உருவாக்கி சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவர் உத்தமபுத்திரன், தெய்வத்திருமகள், ஜில்லா, பிரம்மா, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம், மாஸ்டர் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். 

    சுரேகா வாணி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் விஜய்யின் சிறந்த ஆக்‌ஷன் படங்களை எனக்கு தெரிவியுங்கள் என்று கூறியிருந்தார். இதுவே ரசிகர்கள் மத்தியில் மோதலை கிளப்பியது. அஜித் ரசிகர்கள், விஜய் நடித்த சில படங்களின் பெயர்களை சொல்லி அவற்றைப் பாருங்கள் என்றனர். அதற்கு பதிலடியாக விஜய் ரசிகர்கள் அஜித் நடித்த படங்களை சொல்லி அவற்றைப் பாருங்கள் என்றனர். 

    சுரேகா வாணி

    இவர்கள் மோதல் வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. நடுநிலை ரசிகர்கள் இந்த பிரச்சினையில் குறுக்கிட்டு உங்களுக்கு வேறு வேலை இல்லையா?. தேவை இல்லாமல் இப்படி கேள்வி கேட்டு ரசிகர்கள் மோதலை ஏற்படுத்துகிறீர்களே? ஏன் நீங்கள் வேற்றுகிரகவாசியா? உங்களுக்கு எதுவும் தெரியாதா என்று சுரேகா வாணியை சாடினர்.
    தனக்குப் பிடித்தமான 10 திரைப்படங்கள் எவை என்பதற்கு கே.பாலசந்தர் பதில் அளித்தார்.
    தனக்குப் பிடித்தமான 10 திரைப்படங்கள் எவை என்பதற்கு கே.பாலசந்தர் பதில் அளித்தார்.

    கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என்று பல்வேறு துறைகளிலும் பாலசந்தர் பணியாற்றிய படங்கள் 125. (தமிழ் 87; தெலுங்கு 19; இந்தி 7; கன்னடம் 8; மலையாளம் 4)

    டைரக்ட் செய்தவை: படங்கள், டெலிவிஷன் தொடர்கள் உள்படமொத்தம் 100.

    "நீங்கள் இயக்கிய படங்களில், உங்களுக்கு மிகவும் பிடித்தமான 10 படங்களைச் சொல்லுங்கள்'' என்று பாலசந்தரிடம் கேட்கப்பட்டது.

    அவர் சிரித்துக்கொண்டே, "பத்துக்குள் அடக்குவது சிரமம். எனினும் சிரமப்பட்டு சொல்கிறேன்.

    1. அபூர்வ ராகங்கள், 2. பாமா விஜயம், 3. மரோசரித்ரா, 4. தண்ணீர் தண்ணீர், 5. சிந்து பைரவி, 6. வறுமையின் நிறம் சிவப்பு, 7. வானமே எல்லை, 8. புன்னகை மன்னன், 9. அச்சமில்லை அச்சமில்லை, 10. கல்கி.

    மேற்கண்டவாறு கூறிய பாலசந்தர், "படங்களின் பெயர்களைத்தான் கூறியிருக்கிறேனே தவிர, தரத்துக்கு ஏற்ப வரிசைப்படுத்தவில்லை'' என்றார்.

    "உங்களுடன் தொடர்பு இல்லாத படங்களில் உங்களை மிகவும் கவர்ந்த 10 படங்கள் எவை?'' என்று கேட்டதற்கு, பாலசந்தர் கூறியதாவது:-

    தமிழில் கல்யாணபரிசு, திரும்பிப்பார், 16 வயதினிலே, தில்லானா மோகனாம்பாள், கன்னத்தில் முத்தமிட்டால்... ஆகிய படங்கள் பிடிக்கும்.

    ஆங்கிலத்தில் "ரோமன் ஹாலிடே'', "சைக்கோ'' ஆகிய படங்களும், இந்தியில் "தோ ஆங்கேன் பாராஹாத்'', "மொகல் ஏ ஆஜாம்'', "பிளாக்'' ஆகிய படங்களும் என்னைக் கவர்ந்தவை.

    இவற்றையும் நான் தரத்தின்படி வரிசைப்படுத்தவில்லை.''

    இவ்வாறு கூறினார், பாலசந்தர்.

    பாலசந்தர் டைரக்ட் செய்யும் 101-வது படம் "பொய்.'' இதை நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரிக்கிறார்.

    இந்தப் படத்தின் கேசட் வெளியீட்டு விழா கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. கேசட்டை கமலஹாசன் வெளியிட, ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். சிவகுமார், சரிதா, சுகாசினி உள்பட, பாலசந்தர் படங்களில் நடித்த அனைத்து நடிகர்-நடிகைகளும் விழாவில் கலந்து கொண்டனர்.

    திரை உலக மேதைகளில் ஏவி.மெய்யப்ப செட்டியார், ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ஆகியோரிடம் பாலசந்தர் பெருமதிப்பு வைத்திருந்தார்.

    ஏவி.எம். பற்றி அவர் குறிப்பிட்டதாவது:-

    "ஏவி.எம். அவர்களுடன் சேர்ந்து ஒரு படத்திற்கு பணிபுரியும்போது தெரிந்து கொள்ளும் விஷயங்கள் வெளியே பத்து படங்கள் செய்யும்போது கிடைக்கும் விஷயங்களுக்கு சமம் ஆகும்.

    படத்தின் `ரஷ்' போட்டுப் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, `இங்கு ஒரு பிரேமை வெட்டு' என்பார். அதனால் என்ன மாற்றம் நேரப்போகிறது என்று நம்மால் அப்போது கற்பனை பண்ண முடியாது. அவர் கூறியபடியே செய்த பிறகுதான் அதனுடைய மகத்துவம் தெரியும்.

    "மேஜர் சந்திரகாந்த்'' படம் முடிந்தபின், நாங்கள் படம் முழுவதையும் பார்த்த பிறகு, படத்தைப்பற்றி என் கருத்தை ஏவி.எம். கேட்டார். "வசூலைப் பொறுத்தவரையில்தான் பயமாக இருக்கிறது'' என்றேன்.

    "படம் எப்படி வேண்டுமானாலும் ஓடட்டும். ஆனால் ஏவி.எம். சார்பில் இப்படத்தைத் தயாரித்து வெளியிடுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்'' என்றார், ஏவி.எம்.

    படம் வெளியானதும், ஒரு பத்திரிகை "இது காசுக்காக எடுத்த படம் அல்ல; ஆசைக்காக எடுத்த படம்'' என்று எழுதியது. ஆம்; ஏவி.எம்.கருத்தையே விமர்சனம் பிரதிபலித்தது. ஆம்; அவர் கணிப்பு வென்றது.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    சொந்த முயற்சியினாலும், திறமையினாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என்ற முறையில் ஜெமினி எஸ்.எஸ்.வாசனிடம் பிரமிப்பு கலந்த மரியாதை கொண்டவர், பாலசந்தர்.

    "எஸ்.எஸ்.வாசனை முன்னோடியாகக் கொண்டு உழைக்கும் எவரும் வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள்'' என்று அடிக்கடி பலரிடம் கூறுவார்.

    நடிகர் ஜெமினிகணேசனுடன் பாலசந்தருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் விசித்திரமானவை.

    அதுபற்றி அவர் எழுதியிருப்பதாவது:-

    "1949-ம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, வேலை தேடும் படலத்தில் இறங்கினேன். முதலாவதாக வேலை கேட்டு, ஜெமினி ஸ்டூடியோவுக்கு மனு அனுப்பினேன்.

    சில நாட்கள் கழித்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், "தங்களுக்கு தற்போது வேலை தரமுடியாத நிலையில் இருக்கிறோம். தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை இருக்கும்போது, தங்களுக்குத் தகவல் தரப்படும்'' என்று அதில் எழுதியிருந்தது. கீழே ஆர்.கணேஷ் என்று கையெழுத்து போடப்பட்டிருந்தது.

    "சந்தர்ப்பம் இல்லை'' என்கிற அந்தக் கடிதத்திலாவது மதிப்பிற்குரிய எஸ்.எஸ்.வாசன் அவர்கள் கையெழுத்து இருக்கும் என்று நினைத்து ஏமாந்தேன். என்றாலும் எனது அபிமான ஸ்டூடியோவிலிருந்து வந்த கடிதம் ஆதலால், அதை பெரும் பொக்கிஷம் போலக் கருதி பல ஆண்டுகள் பாதுகாத்து வந்தேன்.

    பல ஆண்டுகள் கழித்து அந்தக் கடிதத்தை நான் மீண்டும் எடுத்துப் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது, அதில் கையெழுத்திட்டு இருந்த ஆர்.கணேஷ்தான், பிற்காலத்தில் மிக புகழ் பெற்று விளங்கிய ஜெமினிகணேசன்!

    கமலஹாசனுக்கு அடுத்தபடியாக எனது டைரக்ஷனில் அதிக படங்களில் நடித்தவர் ஜெமினிகணேசன். எனக்கு வேலை இல்லை என்று சொன்னவருக்குத்தான் என் படங்களில் அதிக வேலை கொடுத்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    பாலசந்தர் தொடர்ந்து கூறியதாவது:-

    "கலாகேந்திரா'' பட நிறுவனம் எனது தாய் ஸ்தாபனம். துரை, கோவிந்தராஜன், கிருஷ்ணன், செல்வராஜ் நால்வரும் உரிமையாளர்கள்.

    நான் அவர்களுக்கு இயக்கி கொடுத்திருக்கும் திரைப்படங்கள் 15-க்கும் மேல். இவர்களைப்போன்ற நண்பர்கள் கிடைப்பது மிகமிகக் கடினம். நண்பர்களுக்காக உயிரையே தருவார் துரை. எனது நாடக நாட்களிலிருந்தே பி.ஆர்.கோவிந்தராஜ் எனக்குப் பக்க பலம். அந்தக் காலங்களில் என் ஓரங்க நாடகங்களில் பெண் வேஷம் போடுவார். அழகான பெண்கள் தோற்றுப் போவார்கள்.

    1991-ம் ஆண்டு எனக்கு மிகப்பெரிய இழப்பு துரை, கோவிந்தராஜ் இவர்களுடைய மரணம். ஓரிரு ஆண்டுகள் கழித்து கிருஷ்ணன் அகால மரணம் அடைந்தார்.

    எனது இன்னொரு பேரிழப்பு எனது அருமை நண்பரும், தயாரிப்பாளருமான அரங்கண்ணல் அவர்கள் மறைவு.

    என்னோடு தோளோடு தோள் நின்று என்னுடைய அலுவலக நாட்களிலிருந்தே ஏறத்தாழ நாற்பதாண்டு காலம் உற்ற நண்பனாக, சிறந்த உதவியாளராக, ஆலோசகராக மற்றும் இன்றைய தலைமுறை கலைஞர் பெருமக்களுக்கும், எனக்கும் ஒரு பாலமாக அமைந்த எனது அன்பு அனந்து அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானதுதான் தொழில் துறையில் எனக்கு ஏற்பட்ட ஒரு உச்சகட்ட இழப்பு.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டார்.
    இருகோடுகள் (1970), அபூர்வ ராகங்கள் (1974), தண்ணீர் தண்ணீர் (1982), அச்சமில்லை அச்சமில்லை (1984) ஆகிய படங்கள், சிறந்த மாநில மொழிப் படங்களுக்கான மத்திய அரசின் விருதைப் பெற்றன.

    பாமா விஜயம், தாமரை நெஞ்சம், எதிர்நீச்சல், அக்னிசாட்சி, வறுமையின் நிறம் சிவப்பு, புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை ஆகிய படங்கள், திரைப்படத்துறையின் பல்வேறு பிரிவுகளில் மாநில அரசின் பரிசுகளை பெற்றன.

    தமிழக அரசின் "கலைமாமணி'' விருதை 1973''-லும், "அண்ணா விருதை'' 1992-லும் பாலசந்தர் பெற்றார்.

    மத்திய அரசு 1987-ல் "பத்மஸ்ரீ'' விருது வழங்கியது.

    அழகப்பா பல்கலைக்கழகமும், சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் "டாக்டர்'' பட்டம் வழங்கி கவுரவித்தன.

    மற்றும் பிற மாநில அரசுகள், திரைப்பட அமைப்புகள், பத்திரிகைகள் வழங்கிய விருதுகளும், பரிசுகளும், பட்டங்களும் ஏராளம்.
    பிரபல ஆபாச நடிகை சன்னி லியோன், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.
    பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன். இவர் படப்பிடிப்புக்கு கேரள மாநிலம் வந்துள்ளார். கணவர் டேனியல் மற்றும் 3 வளர்ப்பு குழந்தைகளுடன் திருவனந்தபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி உள்ளார்.

    இந்நிலையில் சன்னி லியோன், கேரள வழக்கப்படி அழகான சேலை கட்டி, தலையில் மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு, தான் தங்கியுள்ள விடுதியில் தோற்றம் அளிக்கும் போட்டோவை விடுதி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    சன்னி லியோன்

    அவரது கணவர் டேனியல், வேட்டியும், குர்தாவும் அணிந்திருக்க, குழந்தைகள் டவுசர்- சட்டையில் போஸ் கொடுத்துள்ளனர்.

    சன்னி லியோன் சேலை அணிந்துள்ள போட்டோ, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்புவுடன் பிரபல நடிகை ஒருவர் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் தினத்துக்கு வெளியானது ஈஸ்வரன். அடுத்ததாக, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு, ‘ஜில்லுனு ஒரு காதல்’ கிருஷ்ணா இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘பத்து தல’ படத்தில் நடிக்கிறார்.

    இப்படங்களைத் தொடர்ந்து, கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கான முதல் கட்டப் பணிகளைத் துவங்கிவிட்டார் கெளதம் மேனன்.

    சிம்பு - திரிஷா

    சிம்பு - கெளதம் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது. முதல்கட்டமாக, சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கலாம் என்று சொல்லப்பட்டது. நயன்தாரா - சிம்பு கூட்டணியில் வல்லவன் மற்றும் இதுநம்ம ஆளு படங்கள் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் சிம்பு படத்தில் நடிக்க நயன்தாராவை படக்குழு அணுகியது. நயன்தாரா நடிக்க ஒப்புக் கொள்ளாததால் ஏற்கெனவே சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்த திரிஷாவை மீண்டும் ஜோடியாக்க பேசி வருகிறார்கள்.
    நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் நாயே பேயே டீசருக்கு தடை விதிக்க சென்சாருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
    வழக்கு எண், தனி ஒருவன், தில்லுக்கு துட்டு உள்பட 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் கோபி கிருஷ்ணா. இவர் தயாரிப்பில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நாயே பேயே. இந்த படத்தை சக்திவாசன் இயக்குகிறார். ஐஸ்வர்யா, ‘ஆடுகளம்’ முருகதாஸ், புச்சி பாபு, ரோகேஷ், கிருஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 



    நாயே பேயே படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது. எடிட்டர் மோகன், இயக்குனர்கள் பாக்யராஜ், எழில் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். படத்தின் டீசர் ஒன்று அன்றே வெளியானது. அந்த டீசரில் நாயகன் பேயை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் அதற்கு காரணமாக 90 சதவீத மனைவிகள் பேய் தானே என்று சொல்வதாகவும் வசனம் அமைந்திருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மகளிர் அமைப்புகள் இந்த வசனங்கள் பெண்களை இழிவுபடுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டீசருக்கு தடை விதிக்க சென்சாருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கழுகு படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் கிருஷ்ணா தற்போது ராயர் பரம்பரை படத்தில் நடித்துள்ளார்.
    சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மெளனகுரு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கும் படம் "ராயர் பரம்பரை". கழுகு கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட்டான மரடோனா, டூ ஸ்டேட்ஸ் படங்களின் கதாநாயகி சரண்யா நாயர் தமிழுக்கு கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

    மேலும், தெலுங்கு பட நாயகி மும்பை அனுசுலா மற்றும் மும்பை மாடல் கிருத்திகா என்ற இரு புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். மேலும், கே.ஆர்.விஜயா, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா ஆர்.என்.ஆர்.மனோகர், கஸ்தூரி, பவர் ஸ்டார், கலக்கப்போவது யாரு தங்கதுரை, மிப்பு, கல்லூரி வினோத், சரண்யா, லொல்லு சபா சேஷு, ஷாலு ஷம்மு மற்றும் பலர் நடிக்க செண்டிமென்ட் கலந்த மிகப்பெரிய காமெடி படமாக பொள்ளாச்சியில் தயாராகி உள்ளது.

    கிருஷ்ணா

    கொரோனா ஊரடங்கு காலத்திலும் சூட்டிங் ஒரே கட்டமாக பிளான் செய்யப்பட்டு டிசம்பர் தொடங்கி பொங்கலுக்கு முன் முடிக்கப்பட்டது. மிரட்டலான சண்டைக் காட்சிகளுடனும், பல லட்சம் ரூபாயில் மிகப்பெரிய செட் அமைத்து சாண்டி மாஸ்டரின் வித்தியாசமான நடனத்துடனும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு விரைவில் திரைக்கு வரவிருக்கிறது ராயர் பரம்பரை.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படத்தில் மாஸ்டர் பட நடிகர் இணைந்திருக்கிறார்.
    கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜின் கர்ணன், ஆனந்த் எல் ராயின் அத்ரங்கி ரே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள தனுஷ், அடுத்ததாக துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும்  தடம், மௌன வலை, மூக்குத்தி அம்மன் படங்களில் நடித்த ஸ்மிருதி வெங்கட் இப்படத்தில் இணைந்திருப்பதாக அறிவித்தார்கள்.

    மகேந்திரன்

    தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்த குட்டி பவானி, மாஸ்டர் மகேந்திரன் இப்படத்தில் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறித்திருக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
    தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் என புகழ் பெற்ற நடிகர் அர்ஜுன், எனக்கு அந்தளவுக்கு அறிவு இல்லை என்று கூறி இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் அர்ஜுன். இவருடைய தங்கை மகன் துருவ சார்ஜா நடிப்பில் உருவாக்கி இருக்கும் செம திமிரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

    இதில் அர்ஜுனிடம் தேசபக்தி உள்ள நீங்கள் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அர்ஜுன், சினிமாவில் ஒருநாள் முதல்வர் ஆகிவிடலாம். ஆனால் நிஜத்தில் அது போல் செய்ய முடியாது. அரசியல் வருவதற்கு நிறைய அறிவு வேண்டும். எனக்கு அந்த அளவிற்கு அறிவு இல்லை என்றார்.

    அர்ஜுன்

    மேலும் என்னுடைய தங்கை மகன் துருவ சார்ஜா, செம திமிரு படத்தில் நடித்து இருக்கிறார். எனக்கு கொடுத்த ஆதரவை அவருக்கும் தர வேண்டும் என்று கூறினார்.
    சின்னத்திரையில் பல ஷோக்களில் கலந்துக் கொண்டு பிரபலமான விஜே பப்பு, தற்போது கதையின் நாயகனாக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
    சின்னத்திரையில் பல ஷோக்களில் கலந்துக் கொண்டு பிரபலமானவர் விஜே பப்பு. இவர் தற்போது கதையின் நாயகனாக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். 

    வணக்கம் தமிழா மூவிஸ் சார்பில் 'வணக்கம் தமிழா' சாதிக் இசையமைத்து தயாரித்து இயக்கும் புதிய படத்திற்கு புரொடக்ஷன் நம்பர்-1 என்று தற்போது பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனத்தை 'ஜீவி' பட புகழ் பாபுதமிழ் எழுதுகிறார்.

    பப்பு

    அஜய் வாண்டையார், கன்னிமாடம் ஶ்ரீராம் கார்த்திக் மற்றும் விஜே பப்பு ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். இத்திரைப்படம் டார்க் ஃபேண்டஸி ஜானரில் உருவாக்கப்படவுள்ளது. 

    மார்ச் மாதத்தில் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் புதிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார். 

    இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இப்படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய, பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. மேலும் வருகிற ஏப்ரல் மாதம் 9-ந் தேதி இப்படம் தியேட்டர்களில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    கர்ணன்

    தற்போது கண்டா வரச்சொல்லுங்க என்ற முதல் பாடலை நாளை இரவு 8 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    கமலி பிரம் நடுகாவேரி படத்தை தொடர்ந்து கயல் ஆனந்தி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
    கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடிப்பில் ஈடுபாட்டை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சாம் ஜோன்ஸ். 'ஏமாலி', 'லிசா' உள்ளிட்ட படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் ஜொலிக்க ஆயத்தமாகிவிட்டார்.

    இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் இயக்கும் “நதி” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடிப்பதோடு மட்டுமன்றி கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்படத்தை நடிகர் சாம் ஜோன்ஸ் தனது தயாரிப்பு நிறுவனம் “மாஸ் சினிமாஸ்” சார்பாக தயாரிக்கிறார்.

    “நதி” படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல தெலுங்கு நடிகை சுரேகவாணி, முனிஸ்காந்த், வேலா ராமமூர்த்தி, A.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

    ஆனந்தி

    “நதி” படத்தின் காட்சிகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவை மையமாக வைத்து இயக்குனர் பரத்பாலா இயக்கத்தில் உருவாகி உள்ள அறிதுயில் படத்தின் முன்னோட்டம்.
    தமிழகத்தில் தசரா திருவிழாக்கள் மிகவும் பிரசித்திபெற்றவை. அதிலும் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா என்பது உலகளவில் பிரபலம். ஏனென்றால் பலதரப்பட்ட மக்களும் ஒன்றுகூடி, வித்தியாசமாக வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதனை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுக்க பலரும் ஒன்றுகூடுவார்கள். இந்தப் பாரம்பரியமான திருவிழாவினை முதன்முறையாக படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் பரத்பாலா.

    'அறிதுயில்' என்ற பெயரில் உருவாக்கியுள்ளார். குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவினை ஒரு கதையாகவே இதில் சொல்லியிருக்கிறார்கள். பரத்பாலாவால் உருவாக்கப்பட்ட இந்த 'அறிதுயில்' திரைப்படம் அபாரமான நவீன விளிம்பில் ஒரு பண்டைய திருவிழா பாரம்பரியத்தை படமாக்குகிறது. 

    அறிதுயில் பட போஸ்டர்

    இது குறித்து பரத்பாலா கூறும்போது, ‘“என்னை கவர்ந்தது என்னவென்றால், மக்களின் நம்பிக்கை மற்றும் அந்த ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் மூலம் அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு எவ்வாறு தீர்வுகளை கண்டுபிடிக்கிறார்கள் என்பதும் ஆகும். இயக்குநர்களுக்கு இது ஒரு சொர்க்கம் - இங்கு ஒவ்வொரு திருப்பமும் ஒரு புதிய உலகத்தைக் கொண்டுவருகிறது" என்று கூறியுள்ளார்.
    ×