என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழில் உன்னை தேடி, நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மாளவிகா விபத்தில் சிக்கி இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக உன்னை தேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் மாளவிகா. அதனை தொடர்ந்து அவர் ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு, பேரழகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே என ஏராளமான திரைப்படங்களில் நடித்தார்.

     2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இவர் அவ்வப்போது சமூகவலைதளப்பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவார்.

    மாளவிகா

    இந்நிலையில் நடிகை மாளவிகா சைக்கிளிங் செல்லும் போது விபத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தன்னுடைய கைவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளது. நான் ஒரு போர் வீராங்கனை விரைவில் மீண்டு வருவேன் என புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
    புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகைக்கு உதவி செய்யுமாறு பிக்பாஸ் பிரபலம் மற்றும் நடிகை சனம் ஷெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    தமிழில் அங்காடி தெரு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் சிந்து. இவர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணமின்றி போராடி வருவதாக சில மாதங்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டார்.

    சிந்து

    இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி, சிந்துவின் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு, ஆரம்ப கட்ட சிகிச்சை முடிந்த நிலையில் தற்போது புற்றுநோய் மேலும் பரவியதால் அடுத்த கட்ட சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. இதனால் நண்பர்கள், ரசிகர்கள் உதவுமாறு கேட்டுள்ளார்.
    அறிமுக இயக்குனர் தாமரைச் செல்வன் இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் ‘நதி’ படத்தின் முன்னோட்டம்.
    கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடிப்பில் ஈடுபாட்டை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சாம் ஜோன்ஸ். 'ஏமாலி', 'லிசா' உள்ளிட்ட படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் ஜொலிக்க ஆயத்தமாகிவிட்டார்.

    இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் இயக்கும் “நதி” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடிப்பதோடு மட்டுமன்றி கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்படத்தை நடிகர் சாம் ஜோன்ஸ் தனது தயாரிப்பு நிறுவனம் “மாஸ் சினிமாஸ்” சார்பாக தயாரிக்கிறார்.

    “நதி” படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார்.

    சாம் ஜோன்ஸ், ஆனந்தி

    பிரபல தெலுங்கு நடிகை சுரேகவாணி, முனிஸ்காந்த், வேலா ராமமூர்த்தி, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு நிகரானது என்பதால் பிரபல இயக்குநர் ஒருவரை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    ஒளிப்பதிவாளராக எம்.எஸ்.பிரபு அவர்களும், இசையமைப்பாளராக 'கனா' படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸும் பணியாற்றுகின்றனர். “நதி” படத்தின் காட்சிகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    கோவில் கட்டும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில், நடிகை நிதி அகர்வால், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    தெலுங்கு நடிகை நிதி அகர்வால் பூமி படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள அவருக்கு தமிழகத்தில் ரசிகர்கள் கோவில் கட்டி உள்ளனர். இதுகுறித்து கேள்விப்பட்ட நடிகை நிதி அகர்வால், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: ரசிகர்கள் என் மீது பொழியும் உண்மையான மற்றும் நிபந்தனையற்ற அன்பை கண்டு மிகவும் நெகிழ்ந்து போய் உள்ளேன். எப்போதும் அவர்கள் எனக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள். எனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் நிறைய சேவை செய்து வருகிறார்கள் என்பது பாராட்டுக்குரிய விஷயம். 

    நிதி அகர்வால் வெளியிட்ட அறிக்கை

    அதேசமயம் எனக்காக கட்டப்படும் கோயிலை, ஏழைகளுக்கான தங்குமிடமாகவும், உணவளிக்கும் இடமாகவும், கல்விக் கூடமாகவும் பயன்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என நிதி அகர்வால் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள சக்ரா படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்படுவதாக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சக்ரா’. எம்.எஸ்.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

    இப்படம் பிப்.19-ந் தேதி தியேட்டர்களில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் சக்ரா படத்தை வெளியிட ஐகோர்ட்டு இடைக்காலத் தடை விதித்தது. இதனால் படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

    விஷால்

    இந்நிலையில், அந்த வழக்கின் மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது சக்ரா படத்தின் மீதான தடை நீக்கப்படுவதாக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதன்மூலம் படம் திட்டமிட்டபடி நாளை 4 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய பிரபல ஒளிப்பதிவாளர் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.
    நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப தேர்வு நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், தளபதி 65 படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே கடந்த 2012-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். தற்போது 9 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார். 

    மனோஜ் பரமஹம்சா

    தளபதி 65 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. படப்பிடிப்பை ஏப்ரல் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
    இளம் இயக்குனர்களான லோகேஷ் கனகராஜும், ஹெச்.வினோத்தும் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
    தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரஜினி, விஜய், அஜித், கமல் போன்ற உச்ச நட்சத்திரங்கள் இளம் இயக்குனர்களுடன் பணியாற்றவே விரும்புகின்றனர். 

    அந்த வகையில் தனித்துவமான படங்களை இயக்கி, தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் இளம் இயக்குனர்களான லோகேஷ் கனகராஜும், ஹெச்.வினோத்தும் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

    மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமலின் விக்ரம் படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், அஜித்தின் வலிமை பட இயக்குனர் ஹெச்.வினோத்தை சந்தித்தது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: பல வருடங்களுக்கு பின் வினோத் அண்ணாவை சந்தித்து, அவருடன் நேரம் செலவிட்டது மகிழ்ச்சியாக இருந்தது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 
    பிரபல நடிகர் அஜித் ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டைக் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அதனை விரைவில் வெளிநாட்டில் படமாக்க உள்ளனர். இதையடுத்து அஜித் நடிக்கும் புதிய படத்தையும் வலிமை பட இயக்குனர் ஹெச் வினோத் தான் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    அஜித்

    இந்நிலையில், நடிகர் அஜித் ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மொட்டையடித்தபடி புது லுக்கில் இருக்கும் அஜித்துடன் ரசிகர்கள் மற்றும் காவல்துறையினர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சென்னை ரைபில் கிளப்பிற்கு அஜித் வந்தபோது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
    தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான மாதவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
    தமிழில் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் மாதவன். இதையடுத்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். 

    இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாறா படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகர் மாதவன் தற்போது ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

    மாதவன் டாக்டர் பட்டம் பெற்ற போது எடுத்த புகைப்படம்

    இந்நிலையில், நடிகர் மாதவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. மாதவனின் கலைச் சேவையை பாராட்டி, கோலாபூரில் உள்ள டி.ஒய். பாட்டில் பல்கலைக்கழகம் அவருக்கு இந்த டாக்டர் பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது. டாக்டர் பட்டம் பெற்ற மாதவனுக்கு ரசிகர்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    பிரபல திரைப்பட இயக்குனரான லிங்குசாமி அடுத்ததாக இயக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    ஆனந்தம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. இதையடுத்து ரன், பையா, சண்டக்கோழி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி தற்போது தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ளது. 

    படக்குழு வெளியிட்ட போஸ்டர்

    லிங்குசாமியின் ரன், சண்டக்கோழி ஆகிய படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டபோது நல்ல வரவேற்பை பெற்றன. அதனால் தற்போது அவருக்கு நேரடி தெலுங்கு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு லிங்குசாமியும், அல்லு அர்ஜுனும் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்ட ஒரு படம் அறிவிப்புடன் நின்று போனது குறிப்பிடத்தக்கது.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாம்.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இப்படத்தை ஏற்கனவே ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடந்தன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனுஷ், “தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் எனது ரசிகர்களைப் போல நானும் ‘ஜகமே தந்திரம்’ திரையரங்கில் வெளியாகும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்’’ என்று டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

    தனுஷ் ரசிகர்களும் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டினர். இதையடுத்து ‘ஜகமே தந்திரம்’ படத்தை தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்ததாக கூறப்பட்டது. 

    தனுஷ்

    ஆனால் அதே பட நிறுவனம் தயாரித்த ‘ஏலே’ படம் ஓ.டி.டி.யில் வெளியாவதால் அந்த படத்தை தியேட்டர் அதிபர்கள் திரையிட மறுத்து விட்டனர். இந்த மோதல் போக்கினால் ‘ஜகமே தந்திரம்’ படத்தையும் ஓ.டி.டி. தளத்திலேயே வெளியிட தயாரிப்பு தரப்பில் முடிவு செய்துள்ளதாகவும், வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.
    மலையாளத்தில் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இப்படத்தை தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். இதற்கான ரீமேக் உரிமையை இயக்குனர் கண்ணன் கைப்பற்றி உள்ளார். இப்படத்தை அவரே இயக்க உள்ளார். பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் காரைக்குடியில் தொடங்க உள்ளது.

    கண்ணன்

    ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும் எடுக்கப்படுவதால், தமிழ்-தெலுங்கில் புகழ்பெற்ற நடிகர், நடிகையை இதில் நடிக்க வைக்க உள்ளதாக இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் ரசிகர்களின் ரசனை மற்றும் சுவைக்கு ஏற்றார் போல் இப்படத்தை அழகாக வழங்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். பட்டுக்கோட்டை பிரபாகர் இப்படத்திற்கான வசனத்தை எழுத உள்ளார். 

    இயக்குனர் கண்ணன் ஏற்கனவே தமிழில் சேட்டை, இவன் தந்திரன், பூமராங், வந்தான் வென்றான், ஜெயம் கொண்டான், பிஸ்கோத் போன்ற படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×