என் மலர்
சினிமா செய்திகள்
வெற்றிமாறன் தயாரிப்பில் மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரகனி, கருணாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் சங்கத்தலைவன் படத்தின் விமர்சனம்.
மாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து வரும் ஒரு பெண்ணுக்கு விபத்து ஏற்பட்டு கை துண்டாகிறது. இந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்காமல் ஏமாற்ற நினைக்கிறார் மாரிமுத்து.
இந்நிலையில் ஊரில் நெசவுத் தொழிலாளர்களுக்காக சங்கம் வைத்து போராடும் சமுத்திரக்கனியிடம் இந்த பிரச்சனையை மறைமுகமாக எடுத்து செல்கிறார் கருணாஸ். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நஷ்ட ஈடை சமுத்திரக்கனி, முறையாக பெற்றுக் கொடுக்கிறார்.

ஒருகட்டத்தில், சமுத்திரக்கனியிடம் பிரச்சனையை கொண்டு சென்றது கருணாஸ் தான் என மாரிமுத்துவிற்கு தெரிய வருகிறது. இதனால் கோபமடையும் மாரிமுத்து, கருணாசை கொல்ல நினைக்கிறார். இதிலிருந்து கருணாஸ் தப்பித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
காமெடி கதாபாத்திரங்களில் அதிகமாக பார்க்கப்பட்ட கருணாஸ், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். காமெடி, காதல், துணிச்சல் என இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சங்கத்தலைவனாக வரும் சமுத்திரக்கனி, ஏன் போராட வேண்டும், யாருக்காக போராட வேண்டும் என்று பேசி கதாபாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார்.

சமுத்திரகனியின் மனைவியாக வரும் ரம்யா, பேச்சு மற்றும் உடல் மொழியில் கிராமத்து பெண்ணாக மாறி இருக்கிறார். குறிப்பாக கருநாசை ஊக்கப்படுத்த இவர் பேசும்போது நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். கருணாஸை காதலிப்பவராக வரும் சுனு லட்சுமி சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மாரிமுத்துவின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.
தறியுடன் என்ற நாவலை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிமாறன். முதலாளித்துவம், தொழிலாளர்கள், போராட்டம் என திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைவு. படத்தின் வசனங்கள் பிளஸ்.

ராபர்ட் சற்குணத்தின் இசையில் பாடல்கள் படத்தோடு ஒன்றியிருக்கிறது. பின்னனி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார். ஸ்ரீநிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘சங்கத் தலைவன்’ சிறந்தவன்.
18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த ஒருவாரமாக நடைபெற்றது. இந்த விழாவில் 53 நாடுகளில் இருந்து 91 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் தமிழ்ப் படங்களுக்கான போட்டியில் ‘லேபர்’, ‘கல்தா’, ‘சூரரைப் போற்று’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘மழையில் நனைகிறேன்’, ‘மை நேம் இஸ் ஆனந்தன்’, ‘காட்பாதர்’, ‘தி மஸ்கிட்டோ பிலாசபி’, ‘சீயான்கள்’, ‘சம் டே’, ‘காளிதாஸ்’, ‘க/பெ ரணசிங்கம்‘, ‘கன்னி மாடம்‘ ஆகிய 13 தமிழ் திரைப்படங்கள் பங்கேற்றன.

அவற்றில் ‘க/பெ ரணசிங்கம்’ படத்தில் அரியநாச்சி எனும் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை ஷாலினி, அஜித்துடன் எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி. பின்னர் குறுகிய காலத்தில் அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பெயர் பெற்றார். சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே அஜித்தை காதலித்து திருமணம் செய்த ஷாலினி, பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

இந்நிலையில், நடிகை ஷாலினி, அஜித்துடன் எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்தப் புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு வருகிற மே 1-ந் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
அனிருத், ஏ.ஆர்.ரகுமான் பாடல்களை விட கர்ணன் படத்தில் இடம்பெற்ற ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கர்ணன் படத்தில் இடம்பெறும் ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்கிற பாடல் கடந்த பிப்.18-ந் தேதி வெளியிடப்பட்டது. பறை இசையை மையமாகக் கொண்ட கிராமியப் பாடலான இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
குறிப்பாக தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களாக இருக்கும் அனிருத், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் பாடல்களை விட இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவந்துள்ளது.
அனிருத் இசையில் காத்துவாக்குல் ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்ற ‘ரெண்டு காதல்’ எனும் பாடல் காதலர் தினத்தன்று யூடியூபில் வெளியிடப்பட்டது. இப்பாடலை 80 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதேபோல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அயலான் படத்தில் இடம்பெற்ற ‘வேற லெவல் சகோ’ எனும் பாடல் கடந்த பிப்.17-ந் தேதி வெளியிடப்பட்டது. இப்பாடலை 29 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த இரண்டு பாடல்களும் மேற்கத்திய இசை பாணியில் உருவாக்கப்பட்டிருந்தன.

ஆனால் இந்த இரு பாடல்களுக்கு பின் பிப்.18-ந் தேதி வெளியிடப்பட்ட ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடலை சுமார் 90 லட்சம் பேர் பார்த்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் மேற்கத்திய இசை பாடல்கள் அதிகம் வந்தாலும், கிராமிய பாடல்களுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுப்பார்கள் என்பதை ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடல் நிரூபித்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் லைக்ஸ் குவிந்து வருகிறது.
தமிழில் கவலை வேண்டாம் படம் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். கவர்ச்சியாக நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பாடம், துருவங்கள் பதினாறு, மூக்குத்தி அம்மன் படங்களிலும் நடித்து இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார்.
தற்போது வெங்கட் ராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘கடமையை செய்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வரும் யாஷிகா, சமூக வலைத்தள பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வெள்ளை நிற மார்டன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி அவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்திற்கு லைக்சும் குவிந்து வருகிறது.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' காதலர்களின் பாராட்டுக்களை குவித்தது. சிம்பு, திரிஷாவுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்தது.
அதனைத்தொடந்து சிம்பு, கவுதம் மேனன் கூட்டணியில் கடந்த 2016-ம் ஆண்டு 'அச்சம் என்பது மடமையடா' என்ற திரைப்படம் வெளியானது. இப்படமும் சூப்பர் ஹிட்டானது. இதனிடையே சிம்பு - கவுதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைய உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் அப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளார். சிம்பு - கவுதம் மேனன் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற பாடல்கள் பலவற்றை எழுதியவர்; ஓவியராக இருந்து நாடக ஆசிரியரானவர்; நாடகத்திலிருந்து சினிமா உலகுக்கு வந்தவர் அவர்தான் கவிஞர் வாலி.
எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற பாடல்கள் பலவற்றை எழுதியவர்; ஓவியராக இருந்து நாடக ஆசிரியரானவர்; நாடகத்திலிருந்து சினிமா உலகுக்கு வந்தவர் அவர்தான் கவிஞர் வாலி.
அவர் சினிமா உலகில் எளிதாகப் புகழ் பெற்று விடவில்லை. எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார்.
வாலியின் சொந்த ஊர் ஸ்ரீரங்கம். தந்தை பெயர் சீனிவாச அய்யங்கார். தாயார் பொன்னம்மாள். வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார். பிரபல ஓவியர் `மாலி' போல் புகழ் பெறவேண்டும் என்று ஆசை.
இதனால், பாபு என்ற அவருடைய பள்ளித் தோழர், "வாலி'' என்ற பெயரை சூட்டினார். இதை அறிந்த அவருடைய ஆசிரியர், "உனக்கு வால் இல்லையேடா! அப்புறம் எப்படி வாலின்னு பெயர் வெச்சுக்கிட்டே?'' என்று கேலி செய்தார்.
உடனே ஒரு துண்டு காகிதத்தை எடுத்து, "வாலில்லை என்பதால் வாலியாகக்கூடாதா? காலில்லை என்பதால் கடிகாரம் ஓடாதா?'' என்று ஒரு கவிதையை எழுதி, ஆசிரியரிடமே நீட்டினார்.
அதைப் படித்த ஆசிரியர், "பரவாயில்லையே! கவிதை கூட நன்றாக எழுதுகிறாயே!'' என்று முதுகில் தட்டிக்கொடுத்தார்.
ஓவியம் வரைவதுடன் கதை, கட்டுரை, கவிதை எழுதுவதிலும் `வாலி' ஆர்வம் கொண்டிருந்தார். பத்திரிகைகளில் வரும் கதைகளை எல்லாம் விழுந்து விழுந்து படிப்பார். பிரபல மராத்தி எழுத்தாளர் காண்டேகர் எழுதிய கதைகள் அவருக்கு மனப்பாடம்.
நண்பர்களுடன் சேர்ந்து "நேதாஜி'' என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். ஸ்ரீரங்கத்துக்கு வந்திருந்த எழுத்தாளர் "கல்கி'', அந்த கையெழுத்துப் பத்திரிகையைப் பார்த்து பாராட்டியதுடன், பத்திரிகைக்கு கதை எழுதும்படி கூறினார்.
இந்தக் காலக்கட்டத்தில், ஸ்ரீரங்கத்தில் ஏ.எஸ்.ராகவன், ஸ்ரீரங்கம் ராமகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் நரசிம்மன், பிலஹரி, சுஜாதா என்று பல எழுத்தாளர்கள் வசித்தார்கள். இவர்கள் எல்லாம் வாலிக்கு நண்பர்கள் ஆனார்கள்.
ஒரு நாள் ஸ்ரீரங்கம் ஆயிரங்கால் மண்டபத்தில், பிரபல ஓவியர் "சில்பி'' ஓவியங்கள் வரைந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். தான் வரைந்த ஓவியங்களை அவரிடம் கொண்டு போய்க் காண்பித்தார். "கும்பகோணத்திலும், சென்னையிலும் ஓவியக் கல்லூரிகள் இருக்கின்றன. அங்கு சேர்ந்து ஓவியம் பயின்றால், சிறந்த ஓவியனாக வரலாம்'' என்று சில்பி ஆலோசனை கூறினார்.
இந்த சமயத்தில், திருச்சியில் புகழ் பெற்ற கவிஞராக விளங்கிய திரிலோக சீதாராம், மகாகவி பாரதியாரின் மகள் தங்கம்மாள் பாரதியுடன் வாலியின் வீட்டுக்கு வந்தார்.
வாலி வரைந்த பாரதியாரின் படம், சுவரில் மாட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்த தங்கம்மாள் பாரதி, "அப்பா மாதிரியே இருக்கு. நன்றாக வரைந்திருக்கே'' என்று வாலியைப் பாராட்டியதுடன், "பையனை படம் வரையற துறையிலேயே விடுங்க. நன்றாக முன்னுக்கு வருவான்'' என்று வாலியின் பெற்றோரிடம் கூறினார்.
கடன் வாங்கியாவது பையனை சென்னைக்கு அனுப்பி, ஓவியம் வரைய செய்வது என்ற முடிவுக்கு வந்தார், வாலியின் தந்தை. அதன்படி, சென்னைக்கு ரெயில் ஏறினார், வாலி. எழும்பூரில் உள்ள ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார்.
சிந்தாதிரிப்பேட்டையில், ஒரு நண்பனுடன் தங்கிக்கொண்டு ஓவியக் கல்லூரிக்கு போய் வந்தார்.
ஓவியக் கல்லூரியில் ஏற்பட்ட அனுபவம் பற்றி வாலி கூறியிருப்பதாவது:-
"ஓவியக் கல்லூரியில் என்னுடைய வகுப்பில் மாடலிங் என்ற பெயரில், ஆண், பெண்கள் ஆடாது, அசையாது சிலை போல் நிற்பது உண்டு.
`மாடலிங்'காக முதன் முதலில் சந்தித்தது, இருபத்தைந்து வயதிற்குள் இளம் பருவத்தை சற்றே கடந்து நின்ற ஒரு பெண்ணைத்தான். அந்தப் பெண்ணைப் பார்த்து, அப்படியே வண்ண ஓவியமாக வரையவேண்டும்.
அந்தப்பெண் எங்களுக்கு முன்னால் வந்து நிற்க, எந்த கோணத்தில் எப்படி `போஸ்' தரவேண்டும் என்பதை ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார்.
நான், என் மேஜைக்குக் கீழே குனிந்து, ஓவியம் வரைவதற்காக வைத்திருந்த உபகரணங்களை எடுத்து மேஜை மíது வைத்து விட்டு, `மாடலிங்'காக நின்ற அந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்தேன்.
ஒரு விநாடி எனக்குத் தலை சுற்றியது. ரத்தமே உறைந்து விடுவது போல், உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு பரவியது. என் கை கால்கள் வெடவெடத்தன.
காரணம், அந்தப் பெண் முழு நிர்வாணமாக நின்று கொண்டிருந்தாள்! நிர்வாணமாகப் பெண்களை வரைவது ஓவியத்தில் ஒரு பாடமாகும்.
ஓவியக் கல்லூரியில் நான் பயின்றது "கமர்ஷியல் ஆர்ட்.'' ஓராண்டுதான் நான் படித்தேன். பிறகு அந்தப் படிப்புக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டு, ஏதோ ஓர் உந்துதலால் ஸ்ரீரங்கம் திரும்பிவிட்டேன்.
ஸ்ரீரங்கத்தில், "வாலி பப்ளிசிட்டீஸ்'' என்று சொந்தமாக ஒரு விளம்பர நிறுவனத்தை நிறுவினேன். அதுவும், வள்ளலார் கதை போல ஆயிற்று. "கடை விரித்தேன்; கொள்வார் இல்லை.''
எதிலும் நான் உருப்படாமல் போய் விடுவேனோ என்று என் தாயும், தந்தையும் என் எதிர்காலம் பற்றி மலையளவு வருத்தத்தை மனதில் தேக்கி வைத்திருந்தனர்.''
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், வாலி.

பிக்பாஸ் பிரபலங்கள் இணைந்து நடித்து வரும் புதிய படத்தில் இயக்குனரும் நடிகருமான கவுதம் மேனன் இணைந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் பிரபல டான்ஸ் மாஸ்டராக இருப்பவர் சாண்டி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். அதில் அவருக்கென தனி பாணியில் பேச்சு, நகைச்சுவை என கவனம் ஈர்த்தார். டான்ஸ் மாஸ்டரான சாண்டி, பிக் பாஸ் வெளிச்சத்தினால் நாயகனாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
3:33 (மூணு முப்பத்தி மூணு) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் முழு நீள திகில் படமாக ஒவ்வொரு காட்சியும் பயமுறுத்தும் வகையில் உருவாகியுள்ளது. சாண்டிக்கும் படத்தில் சீரியசான கதாபாத்திரம். இவருடன் பிக்பாஸ் பிரபலங்களான சரவணன், ரேஷ்மா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்நிலையில், இயக்குனரும் நடிகருமான கவுதம் மேனன் இந்த படத்தில் இணைந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாம்பூ ட்ரீஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் நம்பிக்கை சந்துரு இயக்கி வருகிறார். சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.
தொகுப்பாளினியும் பிக்பாஸ் பிரபலமும்மான அர்ச்சனாவின் தன்னுடைய வீட்டில் நடந்த விசேஷத்திற்காக பிக்பாஸ் பிரபலங்கள் ஒன்று கூடி இருக்கிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தவர் தொகுப்பாளினி அர்ச்சனா. பிக்பாஸ் வீட்டுக்குள் அன்புதான் ஜெயிக்கும் என்று தொடர்ச்சியாக கூறி வந்த அர்ச்சனா, தன்னுடைய தலைமையில் ஒரு குரூப்பை உருவாக்கி வைத்திருந்தார்.
ரியோ, நிஷா, ஜித்தன் ரமேஷ், கேபி, சோம் ஆகியோர் அதில் இடம்பெற்று இருந்தனர். அந்த குரூப்பிற்கு அன்பு கேங் என்றும் அழைத்து வந்தனர். இதைப்பார்த்த இதர போட்டியாளர்கள் அர்ச்சனா குரூப்பிஸம் செய்து வருவதாக குற்றம் சாட்டினர். நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அர்ச்சனா தான் தானாகவே இருந்ததாக விளக்கமளித்தார்.

இந்நிலையில் அர்ச்சனாவின் தங்கை அனிதாவுக்கு வளைகாப்பு நடந்துள்ளது. இதில் ஜித்தன் ரமேஷ், சம்யுக்தா, கேபி, நிஷா, சோம், அனிதா சம்பத் உள்ளிட்ட பிக் பாஸ் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் ரசிகர்களுக்கு கடன்பட்டு இருக்கிறேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் செல்வராகவன். இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே ஆகிய படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன்.

கடந்த 23 ஆண்டுகளாக இயக்குநராக தனி அடையாளம் படைத்துவிட்ட செல்வராகவன், தற்போது நடிகராக அறிமுகமாகவுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'சாணிக் காகிதம்' படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கிறார். அதற்கான படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது.

மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து செல்வராகவனுக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்தன.
சாணிக் காகிதம் படத்தில் இன்று முதல் நடிப்பதை தொடர்ந்து, இயக்குநர் செல்வராகவன், 23 ஆண்டுகளாக திரைப்பட உருவாக்கத்தில்... இன்று முதல் நடிகராகவும்... என் ரசிகர்களுக்கு நான் கடன்பட்டு இருக்கிறேன், அவர்கள் தான் என்னை உருவாக்கியவர்கள் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் உடல்நல குறைவு காரணமாக சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு லத்திகா எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சீனிவாசன். பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவரது நடிப்பை கலாய்த்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சீனிவாசன் உடல்நல குறைவு காரணமாக சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதனையும் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொகரு பட விவகாரத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்குவதாக கூறி பிரபல நடிகர் துருவ சர்ஜா பிராமணர்களிடம் மன்னிப்பு கோரினார்.
துருவ சர்ஜா-ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கன்னடத்தில் பொகரு திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பிராமணர்களை அவமதிக்கும் காட்சிகள் இடம் பெற்று உள்ளதாகவும், அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் கர்நாடக மாநில பிராமண மேம்பாட்டு வாரியத்தினர், பெங்களூருவில் உள்ள கன்னட திரைப்பட வர்த்தக சபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து பொகரு படத்தில் இருந்து பிராமணர்களை அவமதிக்கும் காட்சிகளை நீக்குவதாக இயக்குனர் நந்தகிஷோர் அறிவித்தார். மேலும் அவர் பகிரங்க மன்னிப்பும் கோரினார்.

ஆனால் துருவ சர்ஜா இந்த விவகாரம் தொடர்பாக எதுவும் பேசாமல் அமைதி காத்து வந்தார். இந்த நிலையில் துருவ சர்ஜாவும் தனது மவுனத்தை கலைத்து உள்ளார். பொகரு பட விவகாரம் குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில் எங்கள் முழு குடும்பமும் அனுமன் பக்தர்கள். அனுமன் ஆசிர்வாதத்தால் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நாங்கள் இந்து கடவுள்களை மதிக்கிறோம். பொகரு படத்தின் மூலம் பிராமணர்களுக்கு ஏற்பட்ட வலிக்கு நான் மன்னிப்பு கோருகிறேன். இந்த படத்தின் பிராமணர்களை அவமதிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று கூறியிருந்தார்.