என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் ஆண்டனி, அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், கோடியில் ஒருவன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
தற்போது பிசியான நடிகராக வலம்வரும் விஜய் ஆண்டனி, அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர மேலும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.

அதன்படி 2013-ம் ஆண்டு வெளியான விடியும் முன் படத்தை இயக்கிய பாலாஜி கே குமார், இப்படத்தை இயக்க உள்ளாராம். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, மங்காத்தா அஜித் போன்று சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நடிக்க உள்ளாராம்.
தமிழில் வீரா, தமிழ்படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா மேனன், தற்போது தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.
தமிழில் வீரா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். இதையடுத்து சிவாவுக்கு ஜோடியாக ‘தமிழ்படம் 2’ படத்தில் நடித்த இவர், கடந்தாண்டு வெளியான ‘நான் சிரித்தால்’ படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இதையடுத்து தமிழில் பட வாய்ப்பு இல்லாததால், விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வந்த ஐஸ்வர்யா மேனனுக்கு தற்போது தெலுங்கு பட வாய்ப்பு தேடி வந்துள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா மேனன் ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்தை நகினா திரிநாதராவ் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா மேனன் தவிர்த்து, ஸ்ரீலீலா என்பவரும் இன்னொரு கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு கோடை விடுமுறையில் தொடங்க உள்ளதாம்.
தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்ததால் கடந்த சில வருடங்களாக நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறாராம்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை. தற்போது அவர் ரீ-என்ட்ரிக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தலைநகரம், படிக்காதவன், மருதமலை போன்ற படங்களை இயக்கிய சுராஜ் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு நாய் சேகர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சுராஜ் இயக்கிய தலைநகரம் படத்தில் வடிவேலுவின் ‘நாய் சேகர்’ கதாபாத்திரம் மிகவும் பிரபலமானதால் இப்படத்திற்கு அதையே தலைப்பாக வைக்க உள்ளார்களாம். சுராஜ் - வடிவேலு இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் சியான் 60 படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
அட்டக்கத்தி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். பா.இரஞ்சித் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘இறுதிச்சுற்று’, ‘குக்கூ’, ‘ஜிகர்தண்டா’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘பைரவா’, ‘பரியேறும் பெருமாள்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார் சந்தோஷ் நாராயணன்.
அடுத்ததாக தனுஷின் ‘கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் சியான் 60 படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார் சந்தோஷ் நாராயணன்.
இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பறை இசை கலைஞர்கள் சுற்றி நின்று வாசிக்க, சந்தோஷ் நாராயணன் நடுவில் குத்தாட்டம் போடுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், சந்தோஷ் நாராயணனை வியந்து பாராட்டி வருகின்றனர். அதேபோல் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் ‘ஆஹா.... பின்றிங்களே ஜி’ என கமெண்ட் செய்துள்ளார்.
Post session fun with my dearest folk band for #Chiyyan60. 🥁🥁@karthiksubbarajpic.twitter.com/iZku4DMVHV
— Santhosh Narayanan (@Music_Santhosh) March 28, 2021
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் முக்கிய அப்டேட்டை பா.இரஞ்சித் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பா.இரஞ்சித். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் பற்றிய முன்னோட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆர்யா - கபிலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாயகி துஷாரா விஜயன் - மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்திலும், பசுபதி - ரங்கன் வாத்தியாராகவும், ஜான் கொக்கன் - வேம்புலியாகவும், கலையரசன் - வெற்றி செல்வனாகவும், சந்தோஷ் - ராமனாகவும், காளி வெங்கட் - கோனியாகவும் நடித்துள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.
பாரதிராஜாவுடன் சேர்ந்து நடத்திய நாடகம் இளையராஜா வர்ணித்த "மலரும் நினைவுகள்''
பாரதிராஜாவுடன் சேர்ந்து நடத்திய நாடகம் இளையராஜா வர்ணித்த "மலரும் நினைவுகள்''
சிறு வயதில் நண்பர்களாகப் பழகிய பாரதிராஜாவும், இளையராஜாவும், நாடகம் நடத்தினார்கள். இதில் பாரதிராஜாதான் "ஹீரோ''! இசை அமைப்பு இளையராஜா.
இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
"கன்னியாகுமரி மாவட்டத்தில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த நேரத்தில், பாவலரை ஏற்கனவே அறிந்திருந்த கம்ïனிஸ்டு கட்சித் தலைவர் ஜீவானந்தம் ஒரு டேப் ரிக்கார்டரை கொடுத்தார்.
"இந்த டேப் ரிக்கார்டர் உங்களிடமே இருக்கட்டும்'' என்று சொல்லி மகிழ்ச்சியுடன் கொடுத்தார். இது அவருக்கு கோவை விஞ்ஞானியும் தொழில் அதிபருமான ஜி.டி.நாயுடு கொடுத்தது என்பதையும் அறிந்து கொண்டோம்.
இந்த டேப் ரிக்கார்டர் வந்த பிறகு, எங்கள் உற்சாகம் இன்னும் அதிகமாகி விட்டது. தலைவர்களின் பேச்சையும், எங்களின் கச்சேரியையும் போட்டுப் போட்டுக் கேட்போம். கைதட்டல் ஒலி ஆரவாரத்துடன் எங்கள் கச்சேரிக்கு மக்கள் அளித்த வரவேற்பை `டேப்' வாயிலாக கேட்க நேர்ந்தபோது, உற்சாகம் அதிகமானது.
வீட்டில் அந்த டேப் ரிக்கார்டர் இருந்தபோது கிடார், புல்புல்தாரா, ஆர்மோனியம், பாங்கோ சகிதம் ஏதோவொன்றை வாசிப்பேன். அதை டேப்பில் பதிவு செய்து திரும்பக் கேட்கும்போது வேறு ஏதோ மாதிரி இருக்கும்.
இது எனக்குள் ஒரு புதிய இசைப்பரிமாணத்தை கொண்டு வந்தது. அடுத்தடுத்து இதுமாதிரி முயற்சிகளை டேப்பில் தொடர்ந்தேன்.
ஆனால், இந்த சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்லை. "தலைவர் ஜீவானந்தம் கொடுத்த டேப் ரிக்கார்டரை கட்சி ஆபீசில் ஒப்படைக்கவும்'' என்று கம்ïனிஸ்டு கட்சியிடம் இருந்து கடிதம் வந்தது. அதே வேகத்தில், டேப் ரிக்கார்டரையும் வாங்கிக்கொண்டு போய் விட்டார்கள்.
அது வீட்டில் இருந்தபோது நானும் பாஸ்கரும் "மனோகரா'', "வீரபாண்டிய கட்டபொம்மன்'' படங்களில் சிவாஜி பேசிய வசனங்களை எங்கள் ஆக்ரோஷ குரலில் பேசி பதிவு செய்து கொள்வோம். பிறகு போட்டுக் கேட்போம். இதில் பாரதிராஜாவும் அவரது நண்பர் `டெய்லர்' மணியுடன் வந்து சேர்ந்து கொள்வார். பாரதிராஜா எழுதிய வசனத்தை அவரும், `டெய்லர்' மணியும் பேசி பதிவு செய்து போட்டுக்
கேட்பார்கள்.இப்படியெல்லாம் வசனம் பேசி, வசனம் பேசி கேட்டுப் பழகியதால்தான் அவருக்கு நாடகம் போட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன்.
இதற்குப் பின்பே பழனி செட்டிப்பட்டி கோவில் திருவிழாவிலும், அல்லி நகரம் (பாரதிராஜாவின் சொந்த ஊர்) கோவில் திருவிழாவிலும் இரண்டு நாடகங்களை நடத்தினார், பாரதிராஜா.
நாடகத்தில் பாரதிராஜா நடிக்கவும் செய்தார். பாரதிராஜா மதுரை நடிகையுடன் பாடி நடிப்பதற்காக, சிவாஜி - பானுமதி நடித்த `அம்பிகாபதி' படப்பாடலான "மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே'' என்ற பாடலை தேர்ந்தெடுத்தோம். நாடகத்தில் அப்போதெல்லாம் பெரும்பாலும் சினிமாப் பாடல்களையே பயன்படுத்துவார்கள்.
அல்லி நகரத்தில் நடந்த நாடகத்தில் மதுரையில் இருந்து நடிகைகள் சீன் செட்டிங்ஸ் மேக்கப்பிற்கு அட்வான்ஸ் கொடுத்து ஒரு பள்ளிக்கூடத்திலும், அரியநாயகம் என்பவர் வீட்டிலும் ஒத்திகை பார்த்தோம். "பூட் மேக்கர் பி.ஏ'' என்பது நாடகத்தின் பெயர். எனக்குத் தெரிந்து இதுதான் பாரதிராஜாவின் முதல் நாடக அரங்கேற்றம்.
பாரதிராஜா ஹீரோவாக - செருப்பு தைக்கும் "பி.ஏ'' பட்டதாரி இளைஞராக நடித்தார். நாடகத்தில் அவர் ரோட்டில் ஷூ பாலீஷ் போடுவதாக ஒரு காட்சி. அந்தக் காட்சிக்கு ஏற்கனவே உள்ள சினிமா பாடல்களை தவிர்த்து புதிதாக ஒரு பாடல் கம்போஸ் செய்யச் சொன்னார்.
சட்டென பாட்டு பிறந்தது. `பாலீஷ் பூட் பாலிஷ்' என்று தொடங்கி, "செருப்பப்பா இது செருப்பு! சுறுசுறுப்பா எனக்கிருப்பு'' என்று ஒரு பாடலை கம்போஸ் செய்தேன்.
இந்த காலக்கட்டத்தில் பாவலர் அண்ணனுடன் இடைவிடாத கச்சேரி இருக்கும். இப்படிப் போகும் ஊர்களில் புதிய நவநாகரீகம் எங்கள் உடைகளில் வெளிப்படும். புதிதாக உடையிலும், ஹேர்ஸ்டைலிலும் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் உடனே அதற்கேற்ப நாங்கள் மாறி விடுவோம். அதாவது `லேட்டஸ்ட் பேஷன்' எது என்பதை எங்கள் ஆடை, தலைமுடி அறிவிக்கும். கவுபாய் பேண்ட், சம்மர் கிராப் போன்றவை அப்போது ஏற்பட்ட மாற்றங்கள்.
இப்படி லேட்டஸ்ட்டாக ஒரு "டீ'' சர்ட் அணிந்து நாடகத்துக்கு இசையமைத்துக் கொண்டிருந்தேன். என் `டிசர்ட்' பாரதிராஜாவை கவர்ந்திருக்க வேண்டும். ஒரு சீனில் நடிக்கும்போது மேடையில் தோன்ற எனது `டிசர்ட்'டை கழற்றித் தரும்படி கேட்டார்.
நான் இதற்கு உடன்படுவேனா? ஷர்ட்டை கழற்றிவிட்டு வெறும் பனியனோடு ஆர்மோனியம் வாசிப்பதாவது? அதுவும் மதுரை நடிகைகள்
முன்பாக?ஷர்ட்டை தருவதற்கில்லை என்று நான் மறுக்க, பாரதி விடாப்பிடியாக ஷர்ட் வேண்டும் என்று அடம் பிடிக்க, ஒரு கட்டத்தில் என் பிடிவாதத்தைவிட பாரதிராஜாவின் பிடிவாதம் அதிகமாக ஷர்ட்டை கழற்றிக் கொடுத்தேன். ஆசைப்பட்டபடியே ஒரு சீனில் என் டிஷர்ட்டை போட்டு நடித்து விட்டு வந்தார் பாரதிராஜா.
இப்போது, எனக்கு புதுக்கவலை. இந்த டிஷர்ட்டைப் போட்டுக்கொண்டுதானே நாளை அல்லி நகர வீதிகளில் நடக்கவேண்டும். அப்படி யாராவது பார்த்தால், `இது பாரதிராஜாவின் ஷர்ட். அவர்தானே நாடகத்தில் இந்த ஷர்ட்டுடன் தோன்றினார்' என்று எண்ணி, என்னை "இரவல் சட்டைக்காரன்'' என்று நினைத்துவிட்டால் என்னாவது?
இதோ இப்போதே இது என் ஷர்ட்தான் என்று நிரூபிக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கொரு ஐடியாவும் வந்தது.

நடிகர் விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ, அடுத்ததாக ஷாருக்கான் படத்தை இயக்க உள்ளார்.
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்து வருகிறார் அட்லீ.
இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும், அதில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் அதன்பின் அந்தப்படம் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை.

சமீபத்தில் ஷாருக்கான் படத்திற்கான கதை விவாதத்தில் இயக்குனர் அட்லீ ஈடுபட்டிருக்கும் ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. இதன்மூலம் ஷாருக்கான் - அட்லீ இணையும் படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது உறுதியானது.
இந்நிலையில், இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஷாருக்கான் - அட்லீ இணையும் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. தற்போது பதான் என்ற படத்தில் நடித்து வரும் ஷாருக்கான் அதையடுத்து அட்லீ இயக்கும் படத்தில் நடிப்பார் என தெரிகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி உள்ளது. இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இது அரசியல் படமாக உருவாக உள்ளதாகவும், ராம்சரண் இப்படத்தில் முதல்வராக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது முதல்வன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் தகவல் பரவி வருகிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
ரஞ்சித் பாரிஜாதம் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’ படத்தின் முன்னோட்டம்.
மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் அடுத்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். இத்திரைப்படத்திற்கு "சம்பவம்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடன இயக்குனர் தினேஷ், மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.
நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் பங்கு பெறுகின்றனர்.

நேர்மையுடன், மனசாட்சிக்கு உட்பட்டு வாழும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நேர்மைக்குப் புறம்பாக தள்ளப்படும் போது ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி, சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தை ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக இருந்த ரஞ்சித் பாரிஜாதம் கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார்.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் சசிகுமார், எம்.ஜி.ஆர்.மகன், ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து ஈசன் படத்தை இயக்கினார். அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய சசிகுமார் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, கிடாரி, நாடோடிகள் 2 உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது எம்.ஜி.ஆர்.மகன், ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய், முந்தானை முடிச்சு 2, நாநா, கத்துக்குட்டி இயக்குனருடன் ஒரு படம், க/பெ ரணசிங்கம் இயக்குனருடன் ஒரு படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், சசிகுமார் மேலும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். அதன்படி கழுகு படத்தை இயக்கிய சத்ய சிவா இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்க உள்ளார். சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இது உருவாக உள்ளதாம். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன், தற்போது சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுப்பவர் வெற்றிமாறன். தனுஷின் பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
இவர் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படம், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து தயாராகி வருகிறது. நடிகர் விஜய்சேதுபதியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்திய பேட்டியில், நடிகர் விஜய்யை வைத்து விரைவில் படம் இயக்க உள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார். சூரி நடிக்கும் படத்தை முடித்த பின் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க உள்ள வெற்றிமாறன், அதன்பின் விஜய் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.
நடிகர் விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.
‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். ‘பலே பாண்டியா,’ ‘ராட்சசன்,’ ‘முண்டாசுப்பட்டி’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ்குடவாலாவின் மகன். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார்.
அதைத்தொடர்ந்து சில நடிகைகளுடன் இவரை இணைத்து கிசுகிசுக்கள் வெளிவந்தன. இதனிடையே, பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார். கடந்தாண்டு இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில், ஜுவாலா கட்டாவுடன் திருமணம் எப்போது என்பது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.