என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ‘திரெளபதி’ படத்தின் மூலம் பிரபலமான மோகன் ஜி, அடுத்ததாக ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
    தமிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘திரெளபதி’. மோகன் ஜி இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தது. இயக்குனர் மோகன் ஜி, அடுத்ததாக ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி தான் இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். 

    சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் இயக்குனர் கவுதம் மேனன், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

    ருத்ர தாண்டவம் படக்குழு வெளியிட்ட போஸ்டர்

    இந்நிலையில், கே.ஜி.எப் படத்தில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா அவினாஷ், ருத்ர தாண்டவம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ருத்ர தாண்டவம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    சூர்யாவும், ஏ.ஆர்.முருகதாஸும் ஏற்கனவே ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
    அஜித்குமார் நடித்த ‘தீனா’ படத்தின் மூலம் பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர், ஏ.ஆர்.முருகதாஸ். விஜயகாந்த் நடித்த ரமணா, சூர்யா நடித்த கஜினி ஆகிய படங்கள் மூலம் மேலும் பிரபலமானார். விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கி ஹாட்ரிக் ஹிட் கொடுத்ததன் மூலம் நட்சத்திர இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

    இவர் அடுத்ததாக விஜய்யின் 65-வது படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் திடீரென அப்படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து அவர் யாருடைய படத்தை இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

    ஏ.ஆர்.முருகதாஸ்

    இந்நிலையில், நடிகர் சூர்யாவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. மேலும் இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டுள்ளாராம். இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
    தடுப்பூசி போட்டுக் கொண்ட சில வாரங்களில், சூரரைப்போற்று பட நடிகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஏற்கனவே மனோஜ் பாஜ்பாய், கார்த்திக் ஆர்யன், ரன்பீர் கபூர், அமீர் கான், மாதவன், மிலிந்த் சோமன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் பரேஷ் ராவலுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் வில்லனாக நடித்திருந்தார். 

    பரேஷ் ராவல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டபோது எடுத்த புகைப்படம்

    இதில் அதிர்ச்சி என்னவென்றால், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் இவர், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஆனால் தற்போது அதையும் மீறி அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    ‘பட்டம் போல’ படத்தின் மூலம் அறிமுகமான மாளவிகா மோகனன், பின்னர் தமிழ், கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமாகினார்.
    கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். 

    இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் ‘டி43’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதுதவிர பாலிவுட்டில் உருவாகும் வெப் தொடரில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

    மாளவிகா மோகனன்

    அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தும் மாளவிகா மோகனன், அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பச்சை நிற கவர்ச்சி உடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 
    ஓ.டி.டி. என்பது காலத்தின் கட்டாயம் என்பதால், நான் கூட ஓ.டி.டி. தளம் துவங்குவேன் என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
    நடிகர் தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி கதாநாயகனாக நடித்துள்ள ‘தண்ணி வண்டி’ என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. விழாவில் கலந்துகொண்டு இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் பேசியதாவது: ‘‘ஓ.டி.டி. என்பது காலத்தின் கட்டாயம். அடுத்த கட்டம் ஓ.டி.டி. தளம் என்பதால் நான் கூட ஓ.டி.டி. தளம் துவங்குவேன். 

    எதற்கு என்றால் சிறிய தயாரிப்பாளர்களுக்கும், புதிய இயக்குனர்களுக்கும், போராடும் படைப்பாளிகளுக்கு தேவை ஒரு தளம். அதற்கு நாங்கள் ஏற்படுத்தித் தருகிறோம் ஒரு களம். சினிமா தியேட்டர்களில் கட்டணம் அதிகமாக இருக்கிறது. கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பல காலமாக சொல்லி வருகிறேன். 

    டி.ராஜேந்தர்

    டிக்கெட் கட்டணம் ரூ.100, ரூ.150 என்று இருந்தால் ஒரு ஏழை எப்படி குடும்பத்துடன் படம் பார்க்க முடியும்? டிக்கெட் கட்டணத்தைப்போல் கேண்டீனில் உணவுப்பொருட்களின் விலையும் அதிகமாக இருக்கிறது. பாப்கார்ன் விலை ரூ.150. ஆந்திராவில் படம் ஓடுகிறது என்றால் அங்கே டிக்கெட் கட்டணம் ரூ.50, ரூ.70 தான். 

    இங்கே டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பேச யாருக்கும் துணிவில்லை. மனம் இல்லை. டிக்கெட் கட்டணத்தை குறைத்தால், சின்ன படங்கள் வாழும். படம் பார்க்க 50 சதவீதம் பேர்தான் வரவேண்டும், ஆனால் ஜி.எஸ்.டி. மட்டும் முழுமையாக கொடுக்க வேண்டும் என்றால் என்ன நியாயம்?’’ இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார்.
    கே.எஸ்.ரவிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
    2020-ல் ‘லாக்கப்’, ‘கபெ.ரணசிங்கம்’, ‘முகிலன்’, ‘ஒரு பக்க கதை’ ஆகிய படங்கள் ஜீ5 தளத்தில் வெளியானது. தற்போது மதில் என்னும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    பிரபல இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்த படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். ‘மதில்’ படத்தில் மைம் கோபி, 'பிக்பாஸ்' மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, 'லொள்ளு சபா' சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

    மதில் படக்குழுவினர்

    மதில் திரைப்படம் தமிழ் நாட்டில் அடிக்கடி நிகழும் முக்கிய பிரச்சனை பற்றி பேசுகிறது. கடினமாக உழைத்து, சேமித்து அதன் மூலம் சொந்த வீடு கட்ட முயற்சிக்கும் அனைவரின் கதை இது. இப்படம் ஏப்ரல் 14 அன்று ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது.
    லெஜண்டரி பிக்சர்ஸ், வார்னர் பிரதர்ஸ் மற்றும் டோஹோ தயாரிப்பு நிறுவனங்கள் உருவாக்கியிருக்கும் 'காட்ஸில்லா vs காங்' படத்தின் விமர்சனம்.
    படம் ஆரம்பத்தில் காட்ஸில்லா, ஒரு ஆய்வு கூடத்தை தாக்குகிறது. காட்ஸில்லா ஒரு விஷயத்தை செய்தால் அதில் காரணம் இருக்கும் என்று ஒரு குழு கூறுகிறார்கள். இதை ஏற்காத மற்றொரு குழு, காட்ஸில்லா மக்களை தாக்காது. வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

    காட்ஸில்லாவின் தாக்குதலை நிறுத்த, காங்-கை அழைக்கிறார்கள். காட்ஸில்லா - காங் இரண்டும் மோதிக்கொள்கிறது. இறுதியில் காட்ஸில்லாவின் தாக்குதலை காங் நிறுத்தியதா? இருவருக்கும் நடந்த மோதல் என்ன ஆனது? காட்ஸில்லா மக்களை தாக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தில் ஆரம்பத்தில் எழும் கேள்விகளுக்கு எதிர்பாராத சில ட்விஸ்ட்களை வைத்து ஒரு ஆக்ஷன் மசாலாவை கொடுத்திருக்கிறார்கள். பிரம்மாண்டமாக இருக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. காட்ஸில்லாவும், காங்கும் மோதிக்கொள்ளும் ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டம். முதல் சண்டைக்காகச் சிறிது நேரம் நம்மைக் காக்க வைத்தாலும், நடுக்கடலில் இரண்டு ராட்சச உயிரினங்களுக்கு இடையே நிகழும் அந்த யுத்தம், தொழில்நுட்பத்தின் உச்சம்.

    பழங்குடியின குட்டிப்பெண், இந்தக் குட்டிப்பெண்ணை வளர்க்கும் நடிகை ரெபெக்கா ஹால், மில்லி பாபி பிரவுன் ஆகியோர் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். ரசிகர்கள் எதிர்பார்த்த அனைத்தையும் கொடுத்து இருக்கிறார் ஆடம் விங்கார்ட். காட்ஸில்லா, காங் காட்சிகள் தவிர மற்ற காட்சிகள் வரும் போது சற்று சோர்வை ஏற்படுத்துகிறது. 

    விமர்சனம்

    பென் செரெசின் ஒளிப்பதிவும், டாம் ஹோல்கன்போர்க்கின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘காட்ஸில்லா vs காங்’ பிரம்மாண்டம்.
    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றியை தொடந்து துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக இருக்கும் குருப் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.
    தமிழில், வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களில் நடித்தவர் துல்கர் சல்மான், மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் ஆவார். துல்கர் நடிப்பில் தற்போது குருப் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

    இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குருப் திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன், சுதீஷ், அனுபமா பரமேஸ்வரன், விஜயராகவன் சுரபி லக்‌ஷ்மி, கிரிஷ், குஞ்சன், சாதிக் மற்றும் பரத் ஆகியோர் நடித்துள்ளனர்.

    துல்கர் சல்மான்

    ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்க நிதின் கே.ஜோஷ் கதையினை எழுதியுள்ளார். திரைக்கதை மற்றும் வசனத்தை டேனியல் சயூஜ் நாயர் மற்றும் கே.எஸ்.அரவிந்த் இணைந்து எழுதியுள்ளனர். 

    பேராசிரியை நிர்மலா தேவி சம்பவத்தை கதைக்களமாக வைத்து உருவாகும் 'எங்க குலசாமி' படத்தின் முன்னோட்டம்.
    'ஆர்யா என்டர்டெய்ன்மெண்ட்' என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'எங்க குலசாமி'. பேராசிரியை நிர்மலா தேவி சம்பவத்தை கதைக்களமாக வைத்து அறிமுக இயக்குனர் விஜயகுமார் இந்தப்படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக யூடியூப் புகழ் 'ராக் ஸ்டார்' ராஜகுரு அறிமுகமாகிறார்.

    பேராசிரியையின் நயவஞ்சக பேச்சில் சிக்கி உயிரிழந்த தன் தங்கையின் மரணத்திற்கு நீதி கேட்டு சட்டத்தை ஹீரோ தன் கையிலெடுப்பதே கதையின் கரு. மருத்துவ கல்லூரி பின்னணியில் உருவாகும் இந்த கதை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது.

    ஒளிப்பதிவு : ராஜா பட்டாசார்ஜீ, இசை : சாம் டி ராஜ் இறுதிகட்ட பணிகள் முடிந்து ஏப்ரல் இறுதியில் படம் ஓடிடியில் வெளியிடப்படவுள்ளது.
    பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் காடன் படத்தின் ஒளிப்பதிவாளரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
    பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காடன். இப்படத்தில் ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இறுக்கிறார். முதல் படமே ஒருவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு அமைவது கடினம். ஆனால் ஒளிப்பதிவாளர் அசோக்குமாருக்கு முதல் படமே நல்ல பெயரை பெற்று தந்திருக்கிறது.

    விவசாய குடும்பத்தில் பிறந்த ஏ.ஆர்.அசோக்குமார், ஒளிப்பதிவு மீது உள்ள ஆர்வத்தால் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் உதவியாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவருடன் மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா, தாண்டவம், சைவம், காவியத் தலைவன் ஆகிய படங்களுக்கு உதவியாளராக ஏ.ஆர்.அசோக்குமார் பணியாற்றி இருக்கிறார்.

    மேலும், ஒளிப்பதிவாளர் சுகுமாருடன் தர்மதுரை, ஸ்கெட்ச், கும்கி 2 படங்களுக்கு உதவியாளராக ஏ.ஆர்.அசோக்குமார் பணியாற்றி இருக்கிறார். இப்படங்களில் அசோக்குமாரின் திறமையை பார்த்த இயக்குனர் பிரபு சாலமன், காடன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் வாய்ப்பை கொடுத்து இருக்கிறார்.

    அசோக் குமார்

    இப்படம் குறித்து ஏ.ஆர்.அசோக்குமார் கூறும்போது, என்னை நம்பி காடன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் வாய்ப்பை கொடுத்த இயக்குனர் பிரபு சாலமன் அவர்களுக்கும், ஈராஸ் நிறுவனத்திற்கும்  மிகப்பெரிய நன்றிகள். முதல் படமே தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாவது பெரும் மகிழ்ச்சி. நான் அறிமுக ஒளிப்பதிவாளர் என்று பார்க்காமல், நடிகர்கள் ராணா மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் என்னுடன் நட்பாக பழகியது என்னை ஆச்சரியப்படுத்தியது. மேலும் ராணா, விஷ்ணு விஷால் இருவரும் விரைவில் மீண்டும் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறினார்கள்.

    காடன் படத்திற்காக தாய்லாந்து, புனே, கேரளா வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது சிறந்த அனுபவமாக இருந்தது. முழு படத்தையும் பார்த்த படக்குழுவினர், பொதுமக்கள் அனைவரும் என்னை பாராட்டியது சந்தோஷமாக இருந்தது. குறிப்பாக ராணா, விஷ்ணு விஷால், இயக்குனர் பிரபு சாலமன் ஆகியோர் பாராட்டில் மெய் சிலிர்த்து போனேன். இவர்களின் பாராட்டு இன்னும் உத்வேகத்துடன் பணியாற்ற உற்சாகப்படுத்தி இருக்கிறது.

    தற்போது, சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் சீனு ராமசாமி சகோதரர் இயக்கத்தில் திண்டுக்கல் லியோனி மகன் நடிக்கும் அழகிய கண்ணே படத்தில் பணியாற்றி வருகிறேன் என்றார்.
    மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவி உமா சேதுராமன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    நடிகர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் டாக்டர் சேதுராமன். இப்படத்தை அடுத்து வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார். பிரபல தோல் சிகிச்சை மருத்துவரான இவர், பல்வேறு திரை பிரபலங்களுக்கும் தோல் ரீதியான மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வந்தார். கடந்த வருடம் மார்ச் மாதம் டாக்டர் சேதுராமன் இயற்கை எய்தினார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இந்நிலையில் சேதுராமன் மறைந்து ஒரு வருடம் ஆனதையொட்டி அவரது மனைவி உமா சமூக வலைத்தள பக்கத்தில், “மா...அப்படிதான் நான் எப்போதும் உங்களை அன்பாக அழைத்திருக்கிறேன். இதுவரை உங்களை ஒருபோதும் பெயர் சொல்லி அழைக்கவில்லை. ஏனென்றால் எதிர்பார்ப்பில்லாமல் நீங்கள் இருப்பதற்காக நான் உங்களை நேசிக்கிறேன், மதிக்கிறேன்.

    சேதுராமன்

    என்னைச் சுற்றி இருந்தது, நீங்கள் மட்டுமே. மீட்டிங், பயணங்கள், தினசரி நோயாளி அட்டவணை, பயிற்சி அமர்வுகள், உணவு, ஓய்வு என 4 ஆண்டுகளில் நான் எப்போதும் உங்களுக்கே முன்னுரிமை அளித்தேன். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றி மட்டுமே சிந்தித்து, அவற்றைச் செய்ய எனக்கு தெரிந்த சிறிய வழிகளில் உதவினேன். நீங்கள் கனவு கண்டதை ஒருபோதும் நிறுத்தவில்லை. உங்கள் கனவுகளை நிறைவேற்ற உதவுவதற்கு நான் ஒருபோதும் மறுத்தில்லை” என்று பதிவு செய்துள்ளார்.

    தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை இலியானா, உடல் அமைப்பு குறித்த விமர்சனத்தால் வருத்தமடைந்து இருக்கிறார்.
    தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானவர் இலியானா. கேடி படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானா அளித்துள்ள பேட்டியில், “எல்லோரும் எனது உடல் அமைப்பு குறித்து விமர்சனம் செய்கிறார்கள். உடல் தோற்றத்தை வைத்து முன்பெல்லாம் இடுப்பழகி அன்று அழைத்தனர். இப்போது தோற்றம் மாறி இருப்பதால் வேறு மாதிரி விமர்சிக்கிறார்கள். இது வருத்தமாக உள்ளது. 

    இலியானா

    எனது உடல் தோற்றத்தில் எனக்கே அதிருப்தி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் விமர்சனம் செய்கிறவர்கள் என் உடம்பில் இருக்கிற அழகான விஷயங்களையும் கவனிக்க வேண்டும். எனது மூக்கு, உதடு அவ்வளவு அழகாக இருக்காது. எனது உயரமும் சரியானது இல்லை. கைகள் மிகவும் ஒல்லியாக இருக்கும். கலரும் குறைவுதான். ஆனால் அதற்காக நான் அழகாக இல்லை என்று சொல்லிவிட முடியாது. எனது உடலில் இன்னும் அழகான பகுதிகள் நிறைய உள்ளது. அதற்காக என்னை பாராட்டினால் நன்றாக இருக்கும்’' என்றார்.

    ×